Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரிடம் முன்வைப்பார் முதல்வர்

Featured Replies

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு: பிரதமரிடம் முன்வைப்பார் முதல்வர்

முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று டில்லி செல்லும் முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை நேரில் சந்தித்து, இலங்கை பிரச்னையில் நிரந்தர தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தவுள்ளார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், கவர்னர் உரைக்குப் பின் நடந்த முதல் சட்டசபை கூட்டத்தில், இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண, அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றினார். "இலங்கைத் தமிழர்களை இரக்கமின்றி கொன்று குவித்தவர்களை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்; இக்கொடுஞ்செயல் புரிந்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானத்தையடுத்து, இலங்கை விவகாரம் சூடுபிடித்தது. இலங்கை பிரச்னையில் மத்திய அரசு விரைவு காட்டியது. இது தொடர்பாக, இலங்கை அதிபரை சந்தித்து பேச, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில், வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புத் துறை செயலர் பிரதீப் குமார் உள்ளிட்ட குழுவினரை பிரதமர் மன்மோகன் சிங், அவசரம் அவசரமாக அனுப்பி வைத்தார்.

கடந்த 9ம் தேதி மாலை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது, "முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழுமையான மறுவாழ்வு அளிக்க வேண்டும்; அவர்களுக்கு சம அதிகாரம் வழங்க வேண்டும்' என்பதை வலியுறுத்தினார்.முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பின்னர், சிவசங்கர் மேனன் தனது குழுவினருடன் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்று, அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து பேசினார். ஆனால், இந்த சந்திப்பில் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. "தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட மாட்டாது. போலீஸ், நில அதிகாரமும் வழங்க முடியாது' என அதிபர் ராஜபக்ஷே, இந்தியக் குழுவினரிடம் கூறியதாகத் தெரிகிறது.

ஆகவே, பிரதமரை முதல்வர் சந்திக்கும் போது இக்குழு தெரிவித்த முடிவுகளை ஒட்டி, இலங்கை பிரச்னையில் மத்திய அரசின் அணுகுமுறை குறித்து தெரிவிக்க வாய்ப்புகள் உள்ளன. அத்துடன், தமிழக மீனவர் தங்கள் தொழிலில் பாதிப்பின்றி செயல்பட வழி காணப்படும் என்று தெரிகிறது. கச்சத்தீவை மீட்பது குறித்த மத்திய அரசின் நிலைப்பாடும் தெரியவரும்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழ்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின்னர், முதல் முறையாக இன்று டில்லிக்குச் செல்கிறார். அங்கு, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் முதல்வர், தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி, கடும் மின்வெட்டை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம், ஏழைகளுக்கு வழங்கப்படும் 20 கிலோ இலவச அரிசி திட்டத்திற்கு கூடுதல் அரிசி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கிறார்.

தமிழகத்தில் தி.மு.க.,வுடன் அணி சேர்ந்ததால் காங்கிரசும் தேர்தலில் அடி வாங்கியிருக்கிறது என்ற கருத்து, காங்கிரஸ் தலைவர்கள் பலரிடம் இருக்கும் நேரத்தில், முதல்வர் டில்லி பயணம், அரசியலில் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தருவதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார். தொடர்ந்து தி.மு.க.,வுடன் உறவு நீடிக்கும் என்று காங்கிரஸ் தரப்பில் பதிலளித்தாலும், தமிழகத்தின் இன்றைய சூழ்நிலையை காங்கிரஸ் மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.ஆகவே, முதல்வரின் டில்லி பயணமும், பிரதமருடன் அவர் சந்தித்து பேசுவதும், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வழி காண உதவும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.முதல்வர் ஜெயலலிதா நாளை மாலையில் சென்னை திரும்புகிறார் என்று கூறப்பட்டது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=256542

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

இலங்கை விவகாரத்தில் தத்தளிக்கும் இந்தியா

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய இராஜதந்திர குழு, இலங்கையின் போக்கினால் குழப்பநிலைக்கு ஆழாகியிருப்பதாக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் -

அரசியல் அலசல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.

அரசியல் அலசல் நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கே காணலாம்.

http://www.tamilmirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/videos--audios/2010-11-25-07-01-52/23021-2011-06-13-16-27-53.html

ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒவ்வொரு போதை

இப்ப ஜெயா போதை; இந்த போதையில் நா.க.அ மீதானதும் பற்பல பேரவைகள் மீதானதுமான போதை தெளிந்த மாதிரி இருக்கு

இதுவும் கடந்து போகும் ...................

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒவ்வொரு போதை

இப்ப ஜெயா போதை; இந்த போதையில் நா.க.அ மீதானதும் பற்பல பேரவைகள் மீதானதுமான போதை தெளிந்த மாதிரி இருக்கு

இதுவும் கடந்து போகும் ...................

எமக்கு போதை தெளியும் போது உலகம் இருக்காது. :D:D

  • தொடங்கியவர்

இலங்கை போர்க்குற்றம் மீது நடவடிக்கை தேவை: ஜெ. வலியுறுத்தல்

இலங்கையின் போர்க்குற்றம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோப்பு ஒன்றை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் அளித்தார்.

பிரதமரிடம் அளிக்கப்பட்டுள்ள கோப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கை போரின் கடைசி நேரத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த மோதல் குறித்து ஊடகங்கள் சுதந்திரமாக செய்திகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படவில்லை.

பரவலான குண்டுவீச்சு மூலம் பொதுமக்கள் படுகொலை,மருத்துவமனை மற்றும் நிவாரண முகாம்கள் மீது தாக்குதல்,மனிதாபிமான உதவிகள் மறுப்பு, மனித உரிமை மீறல்கள், ஊடகம் மற்றும் அரசுக்கு எதிரான விமர்சகர்கள் மீது தாக்குதல் ஆகியவை குறித்து ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க, இப்பிரச்னையை இந்திய அரசு ஐநா சபையிடம் கொண்டுச் செல்ல வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் நிர்வாகத்தில் அவர்கள் முழுமையாக இடம்பெற வழி ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து, நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

இலங்கையில், தமிழர்கள் நீண்டகாலமாக இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். அரசியல் சட்டத்திருத்தம் மூலம் அவர்களுக்கு சமவுரிமை வழங்குவதை இலங்கை அரசு தவிர்த்து வருகிறது.

சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல் ரீதியான சமவுரிமை வழங்க வேண்டும். முகாம்களில் உள்ள தமிழர்கள் முழுமையாக அவர்களது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தப்படும் வரை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும்.இதற்கான முயற்சிகளை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கோப்பில் கூறப்பட்டுள்ளது.

http://www.alaikal.com/news/?p=73774

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.