Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அளவெட்டிச் சம்பவம் பொலிஸாருக்கு அறிவிக்க முன்னர் அமெரிக்கத் தூதரத்துக்கு அறிவிக்கப்பட்டதாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அளவெட்டிச் சம்பவம் பொலிஸாருக்கு அறிவிக்க முன்னர் அமெரிக்கத் தூதரத்துக்கு அறிவிக்கப்பட்டதாம் – கோத்தபாய சீற்றம்!

Published on June 18, 2011

புலம்பெயர்ந்த புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரளுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சகல தேசப்பற்றுள்ள மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். நாடு பெற்றுக்கொண்டுள்ள வெற்றியைக் காட்டிக்கொடுத்து பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு உறுதுணை புரிவோருக்கு எதிராகவும், நாட்டை பாதுகாப்பதற்கும் மக்கள் மீண்டும் அணிதிரளவேண்டுமெனவும் அவர் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் இறைமையையும் மக்களையும் பாதுகாப்பதற்காக 30 வருட காலங்களுக்கு மேல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினரை மறந்து செயற்பட்டால் மீட்கப்பட்ட நாடு எம்மிடமிருந்து கைநழுவிப் போய்விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் எமது நாட்டைப் பிளவுபடுத்தி அதனை துண்டாட முயற் சிசெய்தனர். தற்போது சர்வதேசத்துக்கூடாக அதனை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி களை மேற்கொண்டுள்ளனர். பிரபாகரனுக்கு எதிராகப் போராடிய படையினருக்கு எதிரான வீடியோ கசட்டுக்களைத் தயாரித்து சர்வதேசத்திடம் முன்வைத்துள்ளனர். படையினரின் வெற்றி இதன்மூலம் மலினப்படுத்தப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சிறுசம்பவமொன்று பொலிஸாருக்கு அறிவிக்கப்படாமல் நேரடியாக அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முதலாவதாக அமெரிக்கத் தூதரகத்திலேயே விசாரிக்கப்பட்டும் உள்ளது என்றும் தெரிவித்தார். கட்டுநாயக்காவில் இடம் பெற்ற சம்பவங்கள் நேரடியாக ஜேர்மன் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசமெங்கும் எமதுநாடு அபகீர்த்திக்கு உள்ளாகும் வகையில் ஒரு தரப்பினர் செயற்படுகின்றனர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக சனல்-4 வீடியோ காட்சிமூலம் கூறப்படுகிறது. எனினும், கிழக்கில் பெளத்த மத தேரர்கள் கொல்லப்பட்டதையோ, நிராயுதபாணியான 600 பொலிஸாரைக் கொலை செய்ததையோ சாதாரண அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகளைக் கொலை செய்ததையோ சனல்-4 காண்பிக்கவில்லை.

இராணுவத்தளபதி அண்மையில் நடத்திய மாநாட்டுக்கு அழைப்பு விடுக் கப்பட்டிருந்தும் மேற்குலக நாடுகள் அதனை நிராகரித்துவிட்டன.

அங்கு பயங்கரவாதத்தை ஒழித்த முறை மற்றும் சிக்கல்களுக்கு பதிலளிக்கவும் நாம் தயாராகவிருந்தோம். எனினும், எம்மை குற்றஞ்சாட்டுபவர்கள் அம்மாநாட்டுக்கு சமுகமகளிக்கவில்லை. அவர்கள் புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு உதவிசெய்பவர்கள்.

இவற்றுக்கு எதிராக மீண்டும் நாம் போராடவேண்டியுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

நுகேகொட ஆனந்த சமரகோன் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்ற படைவீரர்களின் நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

http://www.saritham.com/?p=22954

Edited by கறுப்பி

த.தே.கூட்டமைப்பினர் மீது ஏதோ ஒரு பிரிவினரால் தாக்குதல் : மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க

ஏதோ ஒரு பிரிவினர் யாழ்ப்பாணத்தில் இயங்குவதாகவும் இவர்களாலேயே அளவெட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாகவும் பாதுகாப்புப் படைகளின் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸாரும் இராணுவப் பொலிஸாரும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் முடிவில் தான் அவர்கள் யார் என்பது தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை மாலை யாழ். இராணுவ சிவில் அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அளவெட்டியில் கடந்த வியாழனன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தின்போது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். இச்சம்பவம் நடைபெற்ற சமயம் தான் கொழும்பில் இருந்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தொலைபேசியூடாக தனக்கு நடந்தவற்றை கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு தொடர்பாக தாம் வருந்துவதாகவும், இனிவரும் காலங்களில் இவ்விதமான சம்பவம் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்த அவர், இலங்கை ஒரு ஜனநாயக நாடு, எவரும் அரசியல் செய்யலாம் அதற்கு இராணுவம் தடையாக இருக்காது என்றார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/23295-2011-06-18-12-52-29.html

அளவெட்டி சம்பவம்

சரி கூட்டம்போட அனுமதி பெறவில்லை என்றே வைத்துகொண்டால் அதற்காக மக்களையும் பாராளமன்ற உறுப்பினர்களையும் அவர்களின் பாதுகாவலர்களையும் கருணை வழி புத்தன் பிள்ளைகள் ஏன் தாக்கவேண்டும்?

எமக்கு கற்று தர யாருக்கும் தகுதி இல்லை நாங்கள் கருணை கடவுளை முழுமுதல் கடவுளாக கொண்டு வாழும் புத்த சமய நாட்டினர் அன்பும் கருணையும் எங்கள்தர்மம் தார்மீக மந்திரம் என்று ராஜபட்சே முன்பு சொன்னதற்கும் அளவெட்டி சம்பவத்துக்கும் என்ன தொடர்பு என்று பட்சே சொல்லுவாரா?

இதுதான் இலங்கை சிங்கள ஆட்சியலாளர்களாக இருக்கும் மாண்புமிகு பெரிய மனிதர்கள் தமிழர்களுக்கு தரும் கருணை வழிச்சம தருமமா?

ஒரு கூட்டம் போட தமிழர்கள் தலைமைகள் அனுமதி பெறவில்லை என்றால் அதற்கு சிங்கள அரசு படைகளை கொண்டு மாறுவேடத்தில் தமிழர்களை தாக்கும் என்றால் தமிழர்களுக்கு சிங்கள அரசால் ஏது பாதுகாப்பு ?

தமிழர்களை அடிமைகளாக சிங்கள அரசு வைத்திருப்பதற்கு தமிழர்கள் ஒத்து வராத பட்சத்தில் இப்படி தாக்குதலுக்கு உள்ளாவதை உலக ஓட்டுனர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது பெருத்த வருத்தம். உணர்வுக்கும் வியாபாரத்துக்கும் இடையில் நடக்கும் தமிழர்கள் பிரச்சினையில் வியாபார அரசியலாளர்கள் உணர்வுள்ள தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழர்களை விழுங்கிவிட துடிக்கும் நரி தந்திரமே சுத்தமான உணர்வுள்ள தமிழர்கள் கொலைபடவும் அடிவாங்கவும் காரணமாகின்றது யார் எப்படி போனாலும் பரவாயில்லை நான் வாழும்மட்டும் எல்லா வசதிகளுடனும் வாழ்ந்து செத்தால் போதும் என்று நினைக்கும் கொசுவிலும் கேடுகெட்ட மனித வடிவுள்ள மனிதர்களாலே தமிழ்க்குலம் இரத்தமும் சோகமும் சிந்தி சிங்களவர்களுக்கு பணிய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை தமிழ் மொழிக்குடம்பத்துள் பிறந்ததை தவிர தமிழ் உணர்வுக்கும் நீதிக்கும் நேர்மைக்கும் எதிராக செயலாற்றும் அறிவில் சீழ் பிடித்த சில தமிழர்களே இனத்தின் தாழ்வுக்கு காரணமாய் இருப்பது வெட்கி வேதனைப்படவைக்கும் கொடுமையாகும்.

எங்கே தமிழர்களுக்கு என்று தன்மானத்துடன் வாழ வழி வந்தால் சிங்களவனிடம் தமக்கு எலும்புத்துண்டு கிடைக்காமல் போய்விடும் என்ற கவலை வியாபார அரசியலாளர்களுக்கு, அதனால் எப்பொழுதும் தமிழர்களை அடிபணி பவர்களாக சிங்களவர்களுக்கு காட்ட வேண்டிய நிலை அவர்களுக்கு சுடவும் தாக்கவும் தயக்கம் காட்டார்கள் தமது விருப்பு நிறைவேறவில்லை என்றால்இ இவ்வண்ணம் நோக்கின் தமிழர்களின் பிரதான தடங்கல் கல்லாக கிடப்பவர்கள் வியாபார அரசியல் செய்வோரே.

எல்லா நாடுகளிலும் நம்முடன் ஒட்டி இருந்து துரோகமான அலுவல்கள் பார்க்கும் இந்த மனிதர்கள் பெரும் நோய்பரப்பும் கொடிய கிருமிகளிலும் கொடியவர்களே யாராலும் நல்வழிக்கு இவர்களை இழுக்க முடியாது தமது கெட்ட கொள்கைகளில் இருந்து சற்றும் மாறார் தமக்குரிய பாதுகாப்புகளையும் ஒழுங்காக செய்துகொண்டு தமிழர்களின் பொது எதிரிகளுக்கு சார்பாக விசுவாசத்துடன் உழைக்கும் கரிய கிருமிகள். தக்க தருணங்களில் நமது அன்பு மக்கள் இவர்களை அடையாளம் கண்டு கொள்ளல் வேண்டும்.

எத்தனை இலட்சம் தமிழ் மக்களை கொன்றாலும் சிங்கள அரசியலாளர்களுக்கு ஆதிக்க வெறி தீராது எலும்புத்துண்டுகளுக்கு பலியாகும் தமிழ்க்கிருமிகள் இருக்கும் போது அவர்கள் திமிர் நீளவே செய்யும் ஆயினும் மாறுதல் ஒன்று வந்தே தீரும் ஒருநாள்இ ஏனென்றால் மாறுதல் ஒன்றே இறப்பில்லாதது அதை யாரும் கொலை செய்யமுடியாது.

.

ஊடக தகவல்களிலிருந்து

எழுதியவர்

எழுத்தாளர்

ம . இரமேசு.

http://www.alaikal.com/news/?p=74169

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அளவெட்டிச் சம்பவம் பொலிஸாருக்கு அறிவிக்க முன்னர் அமெரிக்கத் தூதரத்துக்கு அறிவிக்கப்பட்டதாம் – கோத்தபாய சீற்றம்!

KMC1TEXT.JPG

அவமானப்பட்ட அயல்நாட்டு பயங்கரவாதிகளின் கூத்தமைப்புத் தாசர்களே, சிங்கள பயங்கரவாதிகளையும், அதுகளுக்கு உதவும் அயல் நாட்டு பயங்கரவாதிகளையும் ஆபத்தான கணங்களில் நம்பவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

இது நல்ல சகுனம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊர்ல நான் இல்;லாம போனது தான் பிரச்சனையே.....

நான் மட்டும் அங்க இருந்திருந்தா.....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம ஊர்ல நான் இல்;லாம போனது தான் பிரச்சனையே.....

நான் மட்டும் அங்க இருந்திருந்தா.....................

கூட்டத்தில் சுண்டல் விக்கிற சாட்டில், வீடியோ எடுத்து ஆதார பூர்வமாக் நிருபித்து இருப்பீர்களா, கூட்டமைபுக்கு யாரவது வீடீயோகமரா அல்லது வீடீயோ கை தொலை பேசியாவது வங்கி கொடுங்கள் தயவு செய்து.

  • கருத்துக்கள உறவுகள்

அடிச்ச அடில கூத்தனிக்கு கையில மொபைல் இருந்ததே மறந்து போய் இருக்கும் நீங்க வேற...

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊர்ல நான் இல்;லாம போனது தான் பிரச்சனையே.....

நான் மட்டும் அங்க இருந்திருந்தா.....................

துண்டைக்காணோம், துணியக்காணோம் என்று ஓடி இருப்பீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

heheh இப்பிடலாம் பப்ளிக்கா சொல்லபடாது கந்தப்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊர்ல நான் இல்;லாம போனது தான் பிரச்சனையே.....

நான் மட்டும் அங்க இருந்திருந்தா.....................

கோத்தபாயாவுக்கு சுண்டல் கொடுத்தே கொன்றிருப்பீர்கள் என்கிறீர்களா? :D

கூட்டத்தில் சுண்டல் விக்கிற சாட்டில், வீடியோ எடுத்து ஆதார பூர்வமாக் நிருபித்து இருப்பீர்களா, கூட்டமைபுக்கு யாரவது வீடீயோகமரா அல்லது வீடீயோ கை தொலை பேசியாவது வங்கி கொடுங்கள் தயவு செய்து.

கூட்டமைப்பை தாக்கியவர்கள் சிலது வேளை கைத்தொலைபேசியில் எடுத்திருப்பார்கள் யாராவது தெரிந்தவர்கள் காசை கொடுத்து கேட்டுப்பார்க்கலாம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.