Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் உள்ளிட்ட மேலும் 5 மொழிகளில் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை

Featured Replies

தமிழ் உள்ளிட்ட மேலும் 5 மொழிகளில் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை

இணையதள தேடுதல் எந்திரமான கூகுளின் மொழிபெயர்ப்பு சேவையில் தமிழ் உள்ளிட்ட மேலும் 5 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.

பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் லட்சக்கணக்கான இணையதள வாசகர்கள் பலனடைவார்கள் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேசத்தில் 5 கோடி பேர் இந்த 5 மொழிகளைப் பயன்படுத்துகின்றனர். 2009 ல் 11 மொழிகளில் தொடங்கப்பட்ட கூகுள் மொழிபெயர்ப்பு சேவை தற்போது 63 மொழிகளாக உயர்ந்துள்ளது என கூகுள் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஆஷிஷ் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=56480

  • தொடங்கியவர்

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 32 மொழிகள் உள்ளது. கூகுள் இணையமானது சில குறிப்பிட்ட உலக மொழிகளை மொழிபெயர்ப்புச் செய்யும் கருவியை உருவாக்கி இருந்தது. உதாரணமாக ஆங்கிலத்தில் நாம் எழுதுவதுவதை கூகுள் கருவி உடனடியாக பிரெஞ்சு, டச், ஸ்பானிய என்று சுமார் 58 உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யவல்லது. அதேபோல பிறமொழிகளையும் ஆங்கிலத்திற்கு மாற்றவல்லது. ஆனால் தற்போது நீங்கள் தமிழ் யூனிக்கோட்டில் அடிக்கும் சொல்லை அது ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பது மட்டுமல்லாது, பந்தியாக இருக்கும் வசனங்களையும் அது மாற்றுகிறது.

அதாவது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கோ இல்லை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கோ இனி நாம் சுலபமாக மொழிபெயர்க்கலாம். ஆங்கில இணையம் ஒன்றில் நீங்கள் ஒரு செய்தியை வாசிக்கிறீர்கள், விளங்கவில்லை என்றால் அச் செய்தியை அப்படியே காப்பி பண்ணி கூகுள் மொழிபெயர்ப்பில் இட்டால் உடனடியாக அது அதனை தமிழுக்கு மாற்றிக் காட்டுகிறது. இருப்பினும் தற்போது கூகுள் இதனை ஒரு பரீட்சாத்தமகவே விட்டுள்ளது. பல லட்சம் தமிழர்கள் இதனைப் பாவிக்க ஆரம்பிக்கும்போது, சில ஆங்கிலச் சொற்களுக்கும், சில தமிழ் சொற்களுக்கு சரியான அர்த்தங்களை அவர்கள் எழுதுவார்கள். அதை திருத்தும் வசதிகளும் இருக்கிறது. திருத்தப்படும் வசனங்களும் சொற்களும் நாளடைவில் பெருகி ஒரு நேர்த்தியை அல்லது முழுமையைப் பெறும்.

திருத்தும் வசனங்களும் சொற்களும் சேமிக்கப்படுவதால், இன்னும் சில காலத்தில் கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பு பூரணமன நிலைபெற்ற கருவியாக உருமாற உள்ளது. அதற்கு நீங்களும் உதவலாம். உதாரணமாக ஈழத் தமிழர்கள் பாவிக்கும் பல சொற்களுக்கு அங்கே அர்த்தம் கிடையாது. கூடுதலாக தமிழ் நாட்டில் இருப்பவர்கள் தாம் வழக்கமாகப் பாவிக்கும் சொற்களை இடுகைசெய்கின்றனர். எனவே பண்டைய தமிழ் மாறாது.. பிறமொழிக் கலப்புகள் இல்லாத ஈழத் தமிழர்கள் தமது சொற்களை இட்டு அதற்கான அர்த்தத்தை கூகுள் கருவியில் சேமிக்கவேண்டும் என அதிர்வு இணையம் வேண்டி நிற்கிறது. உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருந்தாலும் கூகுளானது 63 மொழிகளையே பாவனையில் வைத்துள்ளது.

அதில் தமிழும் அடங்கும் என்பது பெருமைக்குரிய விடையமாகும். தமிழீழத்துக்காகப் போராடும் நாம்.. தமிழுக்காவும் போராடவேண்டும். எமது மொழிபோல உலகில் வேறு எந்த மொழியும் கிடையாது என்பதே உண்மையாகும் !

(athirvu)

http://translate.google.com/#auto|ta|

1. நிச்சயம் தமிழ் வாழ, வளர இது பங்களிப்பு செய்யும். புலம்பெயர் தலைமுறைக்கும் இது உதவும்

2. பரீட்சிப்பதற்காக, ஆங்கிலத்திலுள்ள ஒரு வசனத்தை தமிழுக்கு மொழிபெயர்ப்பதற்கான கட்டளையை கொடுத்தபொது அம்மொழிபெயர்ப்பு துல்லியமாக இல்லாவிட்டாலும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்ததது. ஆனால், அதே கூகுள் மொழிபெயர்த்துத் தந்த அதே தமிழ் வசனத்தை மீண்டும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து பார்த்தபோது அது வந்த பெறுபேற்றுக்கும் அசல் ஆங்கில வசனத்திற்கும் இடையிலான முரண்பாடு பயங்கரமானதாக இருந்தது.

எவ்வாறெனினும் தமிழ்பேசும் மக்களுக்கும் உலகின் ஏனைய பிரதான மொழிபேசுவோருக்கும் இடையிலான தொடர்பாடலில் கூகுள் மொழிபெயர்ப்பு சேவையும் அதை பின்பற்றி வரக்கூடிய இத்தகைய இணைய மொழிபெயர்ப்புச் சேவைகளும் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

ஆர்.சேதுராமன்

  • கருத்துக்கள உறவுகள்

தூயதமிழில் மொழிபெயர்க்கவில்லை.

எனினும் இந்தக் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை பலருக்கு உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.