Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத்தமிழர் ஒருவருக்கு பிரெஞ்சு அரசாங்கம் "செவாலியர்" பட்டம் வழங்கி கௌரவப்படுத்தவுள்ளது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Wednesday, 2011-06-22 11:23:18]

யாழ் பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த நாகநாதன் வேலுப்பிள்ளை அவர்களுக்கு கௌரவப் பட்டம் வழங்க பிரெஞ்சு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு "செவாலியர்" என்னும் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்தப் பட்டம் பிரெஞ்சு நாட்டுத் தேசிய திறமைப் பட்டியலில் இடம் பெறுகின்றது.

இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சு அரசாங்க சேவையில் திரு. வேலுப்பிள்ளை பம்பாயில் அமைந்த தூதரக அலுவலகத்தில் வர்த்தக சேவையில் சட்ட ஆலோசகராக பணிபுரிந்தார். சட்டத்தரணியான அவர் பாரிஸில் சர்வதேசப் பொருளாதார உறவுகள் என்னும் துறையில் பட்டப்பின் கற்கைநெறியில் தகைமை பெற்றார். இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை விருத்தி செய்யவும் இந்தியாவில் முதலீடு செய்யவும் விழைந்த பிரெஞ்சுக் கம்பெனிகளுக்கு அவர் சர்வதேச வர்த்தக நெறிகளுக்கு அமைய சட்டஆலோசனைகளை வழங்கினார்.

பிரெஞ்சு மொழியில் பாண்டித்தியம் பெற்றவரான அவர் பிரெஞ்சு அரசாங்கத்துக்காக பல நூல்களை பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார். நானூற்று பன்னிரெண்டு பக்கங்கள் கொண்ட இந்தியாவில் முதலீடு செய்தல் தொடர்பான அவரது நூல் பிரெஞ்சுக் கம்பெனிகள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது. வெளிநாட்டு முதலீடு ஏற்றுமதி - இறக்குமதி என்னும் விடயங்கள் பற்றிய பிரெஞ்சுமொழி நூல்களுள் இந்த நூல் கணணிவழி விற்பனை நிறுவனமான "அமேசன்" நிறுவனத்தின் சிறந்த விற்பனைப்பட்டியலில் நீண்டகாலம் தொடர்ச்சியாக முதல் நூறு இடங்களுள் ஓர் இடத்தைப் பெற்று வந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட இந்த நூல் 2010ஆம் ஆண்டில் மாற்றீடு செய்யப்பட்டபின்னரும்இ புதிய நூலுடன் இந்த நூலும் முதல் நூறு இடங்களுள் இன்றும் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்தல் வர்த்தகம் செய்தல் என்னும் விடயங்கள் தொடர்பில் அவர் பாரிஸில் பல கலந்துரையாடல்களிலும் கூட்டங்களிலும் பங்குபற்றி பிரெஞ்சுமொழியில் உரைகள் நிகழ்த்தியுள்ளார்.

அவரது இச்சேவைகளைப் பாராட்டுமுகமாக பிரெஞ்சு அரசாங்கம் "செவாலியர்" என்னும் விருதை அவருக்கு வழங்கவுள்ளது. இந்த விருது வழங்கும் வைபவம் கொழும்பில் ஜூன் மாதம் 27ஆந் தேதி மாலை நடைபெறவுள்ளது.

தாய்மொழியான தமிழுடன் திரு. வேலுப்பிள்ளை ஆங்கிலம் பிரெஞ்சு சிங்களம் இந்தி என்னும் மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவராவார்.

திரு. வேலுப்பிள்ளை பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. வே.நாகநாதன் திருமதி. ஈஸ்வரி நாகநாதன் அவர்களின் புதல்வர் ஆவார். காலஞ்சென்ற திரு. நாகநாதன் பருத்தித்துறை நகர சபையின் துணை முதல்வராக இருந்தவர் என்பதும் நாகர்கோவிலில்.

http://www.seithy.com/breifNews.php?newsID=45273&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் பிரெஞ்சுக்காரனை பாராட்ட வேண்டும்.

செவாலியர் விருது பெற்றதன் மூலம், ஈழத்தமிழனின் மணி மகுடத்தில், புதிய வைரக் கல்லை அணிவித்த.....

நாகநாதன் வேலுப்பிள்ளை அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த பாராட்டுக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

நாகநாதன் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வாழ்த்துக்கள்..! ஆத்தியடியை கொழும்பு - 7 எண்டு சொல்லுறது சரிதான் போலக்கிடக்கு..!! :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாகநாதன் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வாழ்த்துக்கள்..! ஆத்தியடியை கொழும்பு - 7 எண்டு சொல்லுறது சரிதான் போலக்கிடக்கு..!! :rolleyes::lol:

இசைக்கலைஞன் ஆத்தியடிப் பக்கமோ..... :D

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் ஆத்தியடிப் பக்கமோ..... :D

:wub: :wub: :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாகநாதன் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வாழ்த்துக்கள்......!

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.