Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிந்து நின்ற ரெலோக்கள் ஒன்றிணைகின்றன! த.தே.வி.கூட்டமைப்பு கலைப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை, 25 ஜூன் 2011 10:44

பிரிந்து நின்ற ரெலோ கட்சிகளை ஒன்றிணைந்து ஒரே தலைமையின் கீழ் மீண்டும் ரெலோவின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இது குறித்த முக்கிய கலந்துரையாடல் கடந்த வாரம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் முக்கியஸ்தருமான வினோ நோதராத லிங்கம் கடந்த மாதம் லண்டனிற்கு பயணமாகியிருந்தார். அங்கு ரெலோவின் முன்னாள் உறுப்பினர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

ரெலோவின் பிரிந்து நிற்கும் ரெலோ உறுப்பினர்களை ஒன்றிணையுமாறு புலம்பெயர் ரெலோ உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையினை அடுத்து மூன்று பிரிவினரையும் ஒன்றிணைக்கும் முயற்சி நடைபெற்றிருக்கின்றது.

இதன் அடிப்படையில் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, உதயராசா தலைமையிலான ஸ்ரீ ரெலோ, சிவாஜிலிங்கம், சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உட்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கடந்தவாரம் வவுனியாவில் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றனர்.

இதன் அடிப்படையில் மூன்று கட்சிகளின் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதென முடிவெடுத்திருப்பதாக தெரியவந்திருக்கின்றது. இதன் அடிப்படையில் நாளை வவுனியாவில் ரெலோ உறுப்பினர்களுக்கான மாநாடு ஒன்று ஏற்பாடாகியிருப்பதாக வவுனியாவில் இருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதன் ஒருகட்டமாக சிவாஜிலிங்கம், சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கட்சி கலைக்கப்படலாம் என்று ரெலோ கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை உதயராசா தலைமையிலான ஸ்ரீ ரெலோ கட்சியினர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவின் நம்பிக்கைக்கு உரியவர்களாக கடந்த காலங்களில் செய்யபட்டு வந்தமையால் இந்த விடயத்தின் பின்னணி சிக்கலாக அமையலாம் என்று எதிர்வு கூறப்பட்டாலும்,தமிழரசுக்கட்சி தனியான பாதையில் பயணிப்பதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றமையால் ரெலோ தன்னை வலுப்படுத்த முற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றார் கொழும்பின் சட்டத்தரணி ஒருவர்.

நன்றி சரிதம்

http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=10477:2011-06-25-10-46-07&catid

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமே புரியல உலகத்தில .......

என்னமோ நடக்குது ........?

  • கருத்துக்கள உறவுகள்

வயது போன... கலத்திலை,

சம்பந்தனை, தனிய... விட்டுட்டு போகாதிங்கப்பா....

வயது போன... கலத்திலை,

சம்பந்தனை, தனிய... விட்டுட்டு போகாதிங்கப்பா....

ஜயோ பழைய ரெலோ ஞாபகம் வருது, வேணாம்.

ஒரே கொத்துரொட்டி கடைகளும், இந்தியனின் பளபளக்கும் புதிய ஏ.கே 47 ஆயுதங்களும் பிக்கபில் நீட்டி திரிந்து ஆள் சேர்த்த நேரம்.

நல்லது.

வயது போன... கலத்திலை,

சம்பந்தனை, தனிய... விட்டுட்டு போகாதிங்கப்பா....

இதற்கும் கூட்டமைப்புக்கும் நேரடி சம்பந்தம் இல்லை.

ஒன்றிணைவது நல்லது. சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றவர்கள் முக்கிய பொறுப்புக்களை எடுத்தால் நல்லது. அடைக்கலநாதன் மக்களை விட தனது நலன்களில் காட்டிய அக்கறை கூட.

தமிழினப் படுகொலைக் கூட்டத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்து, தமிழின விரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட டெலோவின் சிறு பிரிவை அப்படியே கைவிட்டுவிடுவது உசிதம். சொறி நாய்கள் திருந்தாது.

அதேநேரம் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் சிங்கள / அயல் நாட்டு பயங்கரவாதிகளின் பின்னணி இருந்தால் இந்த இணைந்த குழுவை தமிழ் மக்கள் கூண்டோடு நிராகரித்து விடுவார்கள். சிவாஜிலிங்கம் போன்றவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.