Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனாதையாய் போன ஆதிரையும் ஆதவனும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனாதையாய் போன ஆதிரையும் ஆதவனும்

காணாமல் போனார்கள் என எண்ணிய பலர் உயிருடன் உள்ளது போல அவர்களும் இருப்பார்கள் என்றே நம்பினேன். மீண்டும் காணவிரும்புகிறவர்களுள் அவளும் ஒருத்தி. பெண்களின் வெளியீடுகளில் அவளது எழுத்துக்கள் மிகுந்த ஆழுமை செலுத்தியிருக்கின்றன. அவளது சமூகம் சார்ந்த எழுத்துக்களும் கருத்துக்களும் ஊர்பார்க்கப்போன புலம்பெயர்ந்தோர் பலருக்கு அறிமுகமானவை. இலக்கியப்பரப்பில் உச்சரிக்கப்பட்ட சிறந்த பெயர்களுள் அவளது பெயரும் ஒன்று.

தடுப்பிலிருந்து வெளியில் வருகின்ற தெரிந்த யாவரிடமும் அவளைப்பற்றிய எனது விசாரணை தொடர்ந்து கொண்டுதானிருந்தது.

அண்மையில் ஒருதோழியின் தொடர்பு கிடைத்த நேரம் அவளிடம் விசாரித்தேன். நான் தேடியவள் சரணடைய வந்தவழியில் இறந்துவிட்டாதாகச் சொன்னாள். அவளது 2குழந்தைகளும் அம்மாவை இழந்து விட்டதாகச் சொல்லித் துயருற்றாள். மிஞ்சிய அவளது குழந்தைகளை உறவுக்காரப் பெண்ணொருத்தி பராமரிப்பதாகத் தகவல் சொன்ன தோழியிடமிருந்து அவர்களுடைய தொலைபேசியிலக்கத்தைப் பெற்றுக் கொண்டேன்.

அனாதையாக்கப்பட்ட அவளது குழந்தைகளைப் பராமரிக்கும் உறவைத் தொடர்பு கொண்டேன். நான் தேடிய தோழியின் கடைசிக் கணங்களை அவள் கண்ணீரோடு சொல்லத் தொடங்கினாள்……

அக்காவும் நாங்களும் ஒண்டாத்தான் வந்தனாங்கள்….வெளிக்கிடேக்க செல்பட்டு காயத்தோடைதான் அண்ணை கூட்டிக்கொண்டு வந்தவர்…..நெரிசல் நிறைந்த சனக்கூட்டம் காயங்களும் அழுகைகளும் மயானத்தின் உறைவிடமாகிய அந்த நிலம் குருதியால் தோய்ந்து கொண்டிருந்தது.

குருதிப்போக்கு அதிகமாகி காப்பாற்றப்படாத உயிர்கள் தங்கள் கடைசிக்கணங்களை உறவுகளின் கைகளிலும் யாருமற்றுத் தனித்தும் முடித்துக் கொண்டு நிரந்தரமாய் கண்களை மூடிக்கொண்டிருந்தனர். இறப்பின் கொடுமை எத்தகைய வலிமிகுந்தது என்பதனை ஒவ்வொரு உயிரும் அனுபவித்துக் கொண்டிருந்த கொடிய நிமிடங்கள் அவை.

அவள் தனது கணவனின் கைகளில் உயிர்போகும் கடைசிக் கணங்களுக்காகப் போராடிக் கொண்டிருந்தாள். அவளது மூத்தவன் 8வயதுப்பிள்ளை ஆதவன். அம்மாவின் கடைசிக் கணங்களைப் பார்த்துக் கதறிக் கொண்டிருந்தான்….

அவளது இரண்டாவது பெண் குழந்தை 3வயது ஆதிரை…..அம்மாவின் பிரிவு அவளது வேதனை எதனையும் புரிந்து கொள்ள முடியாது விழித்துக் கொண்டிருந்தது. வலியால் துடித்தக் கொண்டிருந்தவள் தனது குழந்தைகள் இரண்டின் முன்னாலேயே இறந்து போனாள்…..

அதுவரை அவனுக்கான எல்லாமுமாய் இருந்தவள் அவனது கையிலேயே கண்களை மூடிவிட்டாள். அப்போதைக்கு இருந்த ஒரே வழி அவளது மரணித்த உடலை அனாதையாய் உருக்குலைய விடாமல் எங்காவது புதைக்க வேண்டுமென்பது தான்.

பிள்ளையளை நீங்க கொண்டு போங்கோ…..நான் இவளை எங்கினையும் புதைச்சிட்டு வாறன்…..

அப்பாவை விட்டு அகலமாட்டேனென்ற ஆதவனை…..அப்பா பின்னாலை வருவன் குஞ்சு நீங்க அன்ரியாக்களோடை போங்கோ…சமாதானப்படுத்தி ஆதவனையும் ஆதிரையையும் அவர்களோடு அனுப்பினான்.

அவள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் அவளது மரணநிகழ்வு ஊர் சூழ நிகழாமல் எங்காவது புதைத்தால் போதுமென்ற ஆதரவற்ற பிணமாய் அவளைப் புதைக்க வேண்டிய துயரத்தைச் சொல்லியழுது அவளைப் புதைக்க இடம் தேடினான்…..

நிலமை அவசரகட்டத்தை அடைந்ததை உணர்ந்தவன் தனது மனைவியைப் புதைக்கிறேன் என ஒதுங்க…. ஆதவன் , ஆதிரையைத் தனது இரு குழந்தைகளோடும் கூட்டிக்கொண்டு போனாள் அந்த உறவுக்காரப் பெண். புதுமாத்தளனின் அவளது கணவனும் பிணமாகிவிட்டான். அவளுக்காக ஆறுதல் கொடுத்துத் துணையாய் வந்தவளும் இறந்து போய்விட்டாள். எல்லாம் கனவுபோல நடந்து கொண்டிருந்தது.

000 000 000

முகாம் வாழ்க்கை முடியும் வரையும் ஆதவன் ஆதிரையைத் தேடி அவர்களது அப்பா வரவில்லை. மனைவியின் உடலைப் புதைத்துவிட்ட வருவதாகப் போனவனும் உயிரை விட்டானா…? அல்லது…..????

மீள்குடியேற்றத்தில் ஊருக்கு வந்து உறவுகளிடம் விசாரித்துப் பார்த்தும் எதுவித முடிவும் இல்லை. தனது குழந்தைகளோடு ஆதவனும் ஆதிரையும் வளர்ந்து்விட்டுப் போகட்டுமெனத் தனது குழந்தைகளோடு அவர்களை வளர்க்கிறாள் அந்த உறவு.

ஆதவனுக்கு இப்போது 10வயது. ஆதிரைக்கு இப்போது 5வயது. அம்மாவை அப்பாவைத் தேடுகிறார்கள். ஆதவன் தாயின் மரணத்தை நேரில் பார்த்தவன். அந்தவடு அவனது மனசுக்குள்ளிருந்து வெளிவருகிற நேரங்களில் இப்போதைய அம்மாவைக் கட்டி அழுவான்…..ஆனால் அப்பா எங்கோ தடுப்பில் இருப்பதாக நம்புகிறான்….ஆதிரைக்கு அம்மாவும் அப்பாவும் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லி வைத்துள்ளார்கள்.

அவள் சொன்ன துயரத்தைக் கேட்டு அழுவதா இல்லை மிஞ்சிய குழந்தைகளுக்காக அழுவதா….? தினமும் கேட்கும் துயரங்களோடு இதுவும் ஒன்றெனத் துயரங்களால் சோர்ந்து போவதா…?

ஆதவன் இங்கை வாங்கோ….அன்ரி கதைக்கிறா….அந்த உறவு எனது அனுமதியின்றி ஆதவனிடம் தொலைபேசியைக் கொடுத்தாள்.

அன்ரீ…..சுகமாயிருக்கிறியளோ…..? அன்ரீ சாப்பிட்டீங்களோ….? நூறு அன்ரி போட்டு ஆதவன் கதைகேட்டான்…ஓம் செல்லம்…..என்ற வார்த்தைகளை அவனது ஒவ்வொரு அன்ரிக்கும் சொல்லிக் கொண்டேன். அன்ரி நெடுகலும் என்னோடை கதைப்பீங்களா…..? நீங்கள் அம்மான்ரை Friendஆ…..?அப்ப என்னை நீங்கள் பாத்தனீங்களா…..? அவன் இடைவெளியின்றிக் கதைத்துக் கொண்டே போனான்.

ஆதவனை 2003இல் சிறு குழந்தையாய் பார்த்த ஞாபகம். தாயின் மடிக்குள்ளிருந்து சிரித்துக் கொண்டிருந்த குழந்தை. இன்று 10வயதுப் பிள்ளையாகிவிட்டான். குழந்தையாய் பார்த்த முகமே இப்போது மறந்து போய்விட்டது….ஆனால் அவன் நிறையவே என்னுடன் கதைத்தான்.

அன்ரீ தங்கைச்சியோடை கதைக்கிறீங்களா…? தங்கைச்சியிடம் தொலைபேசி கைமாறியது. தங்கச்சி அன்ரி கதைக்கிறா….ஆதிரை தொலைபேசியில் வந்தாள்.

அம்மா…..! அம்மா….! சுகமாயிருக்கிறீங்களே…? நான் ஆதிரை…. அது அம்மா இல்லை அன்ரி…..என ஆதவன் பின்னால் சொல்வது கேட்டது. ஆனால் அவள் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவளது செல்லக்குரலால் அடிக்கொரு முறை அம்மா அம்மாவெனச் சொல்லிக் கொண்டிருந்தாள்……தனக்கான தேவைகள் என சட்டை , புத்தகம் , கொப்பி , பென்சில் , சப்பாத்து என ஒரு நீளமான பட்டிலயைச் சொன்னாள்.

பிள்ளைக்கு எல்லாம் வாங்கியனுப்பிறன் என்னம்மாச்சி…..ஓ…..

அம்மா சாப்பிட்டீங்களா….?

ஆதிரை ஓயாமல் கதைத்துக் கொண்டிருந்தாள். சரி ஆதிரை அம்மாக்கு காசு கனக்கப்போகும் திரும்பியும் அம்மா கதைப்பா தாங்கோ என தொலைபேசியை அந்த உறவுக்காரப்பெண் வாங்கினாள்.

அக்கா உங்களுக்கும் காசு போகும் கனநேரம் கதைச்சிட்டியள்…..ஏதாவது இந்தப்பிள்ளையளுக்குச் செய்யேலுமெண்டாச் செய்யுங்கோக்கா….இப்பத்தைய சாப்பாடு செலவுகளை ஓரளவுக்க என்னாலை குடுக்கேலும்….என்ரை இவர் முந்தி வேலை செய்தவர் அதிலையிருந்து எனக்கு மாதம் 10ஆயிரம் வருது….அது காணாதுதான் ஆனால் சமாளிக்கிறேன் நானும் ஏதும் நடந்த இல்லாமப் போயிட்டா இதுகள் தனிச்சிடுங்கள்…..இவை ரெண்டுபேரின்ரை எதிர்காலத்துக்கும் ஏதாவதொரு சேமிப்புக்கான வழி செய்து தந்தீங்களெண்டா பிற்காலம் பிள்ளையள் படிக்க உதவும்……இப்ப என்ரை பிள்ளையளுக்குக் குடுக்கிறதில இவைக்கும் குடுக்கிறன்….இவைக்கு கல்வியைக் குடுக்கிறதுக்கான உதவியொண்டு செய்தீங்களெண்டா காணும்…..அவள் அதிகம் எதிர்பார்புகள் இல்லாமல் அந்தக் குழந்தைகளுக்கான உதவியைத் தான் வேண்டிக் கொண்டாள்.

000 000 000

ஆதிரையுடன் பேசியதன் பின்னிருந்து இந்த வினாடி வரை அவளது ஞாபகமாகவே இருக்கிறது. அம்மா வெளிநாட்டில் வாழ்வதாக நம்பும் ஆதிரையின் நம்பிக்கையை உண்மையாக்க அவளது அம்மாவை எங்கிருந்து சிருஸ்டிக்க முடியும்….?

16.06.2011

kannerai varavaththu vidana

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குழந்தைகளுக்கு உதவுமாறு கருணையுள்ளம் கொண்டவர்களிடம் வேண்டுகிறேன்.

இந்த குழந்தைகளுக்கு உதவ யாரை தொடர்பு கொள்ள வேண்டும் விபரம் தாருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த குழந்தைகளுக்கு உதவ யாரை தொடர்பு கொள்ள வேண்டும் விபரம் தாருங்கள்

ஆதிபன் உங்கள் மின்னஞ்சலை தனிடமடலில் போடுங்கோ விபரங்கள் தருகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த குழந்தைகளுக்கு உதவ யாரை தொடர்பு கொள்ள வேண்டும் விபரம் தாருங்கள்

ஆதிபன்,

உங்கள் மின்னஞ்சல் கிடைப்பதற்கு 3மணித்தியாலங்கள் முன்னராக கட்டார் நாட்டிலிருந்து ஒரு உறவு மேற்படி பிள்ளைகளுக்கும் அந்தப்பிள்ளைகளைப் பராமரிக்கிற உறவின் பிள்ளைகளுக்கும் 1லட்சரூபா வைப்பிலிட முன்வந்து அதற்கான உதவியையும் அனுப்பியுள்ளார். மற்றும் ஒருவர் இருபிள்ளைகளுக்கும் 200€ அனுப்பியிருக்கிறார்.

இப்பிள்ளைகள் போன்ற நிலமையில் பல பிள்ளைகள் இருக்கிறார்கள். அப்படியான வேறு குழந்தைகளுக்கு உதவவீர்களாயின் விபரம் தருகிறேன். உங்கள் பதிலை தனிமடலிடுங்கள்.

உங்கள் எழுத்து மூலம் அவர்களுக்கு உதவி கிடைத்தது சந்தோசம்.

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில்  போராளிகள் ஒருகாலத்தின் மாவீரர்கள் அவர்களது குழந்தைகள் இன்று தாயகத்தில் ஏதோவொரு திக்கில் வறுமையோடும் வாழ வசதிகளற்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அத்தகையதொரு நிலமையில் இந்தக் கதையில் வரும் குழந்தைகளையும் தேடிக்கண்டுபிடித்தேன். கடந்த வருட இறுதியில் இப்பிள்ளைகளை தன் குழந்தைகளாக பராமரிக்கும் தாய் தொடர்பு கொண்டு பிள்ளைகளுக்கான புதுவருடத் தொடக்கத்துக்கான பாடசாலை உபகரணங்கள் வாங்க உதவி கேட்டிருந்தா. கேட்ட தொகையை அனுப்பி பிள்ளைகளும் பாடசாலைக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.

பொங்கள் வருடம் தீபாவழி நாட்களில் மறக்காமல் அவர்களது குழந்தையெழுத்துக்களால் வாழ்த்து அட்டை வரும்.
 இன்று தபாலில் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்தோடு காலாண்டு பரீட்சை பெறுபேறுகளையும் அனுப்பியிருந்தார்கள். எல்லாப்பாடங்களிலும் 90,94 புள்ளிகள் எடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து படிப்போம் என்றும் எழுதியிருக்கிறார்கள். அம்மாவாக இந்தக் குழந்தைகளின் மகிழ்வை இங்கே பகிர்கிறேன்.

 

 

ஒரு காலத்தில்  போராளிகள் ஒருகாலத்தின் மாவீரர்கள் அவர்களது குழந்தைகள் இன்று தாயகத்தில் ஏதோவொரு திக்கில் வறுமையோடும் வாழ வசதிகளற்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அத்தகையதொரு நிலமையில் இந்தக் கதையில் வரும் குழந்தைகளையும் தேடிக்கண்டுபிடித்தேன். கடந்த வருட இறுதியில் இப்பிள்ளைகளை தன் குழந்தைகளாக பராமரிக்கும் தாய் தொடர்பு கொண்டு பிள்ளைகளுக்கான புதுவருடத் தொடக்கத்துக்கான பாடசாலை உபகரணங்கள் வாங்க உதவி கேட்டிருந்தா. கேட்ட தொகையை அனுப்பி பிள்ளைகளும் பாடசாலைக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.

பொங்கள் வருடம் தீபாவழி நாட்களில் மறக்காமல் அவர்களது குழந்தையெழுத்துக்களால் வாழ்த்து அட்டை வரும்.

 இன்று தபாலில் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்தோடு காலாண்டு பரீட்சை பெறுபேறுகளையும் அனுப்பியிருந்தார்கள். எல்லாப்பாடங்களிலும் 90,94 புள்ளிகள் எடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து படிப்போம் என்றும் எழுதியிருக்கிறார்கள். அம்மாவாக இந்தக் குழந்தைகளின் மகிழ்வை இங்கே பகிர்கிறேன்.

 

மனசு நிறைகின்றது.

 

வெறுமனே காசு அனுப்புவதை விட அவர்களுக்கு தொலைபேசி, இடைக்கிடை கதைக்கும் போதும், அவர்களின் படிப்பை பற்றி விசாரிக்கும் போதும் தன்னம்பிக்கையும், அன்பும் பெருகுவதை அவதானித்துள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனசு நிறைகின்றது.

 

வெறுமனே காசு அனுப்புவதை விட அவர்களுக்கு தொலைபேசி, இடைக்கிடை கதைக்கும் போதும், அவர்களின் படிப்பை பற்றி விசாரிக்கும் போதும் தன்னம்பிக்கையும், அன்பும் பெருகுவதை அவதானித்துள்ளேன்.

 

உண்மைதான் நிழலி. அவர்களுடன் பேசுவதே பெரிய ஆறுதல் பிள்ளைகளுக்கு.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நேர்த்தியான எழுத்துநடை சாந்தி. மனம் தான் கனத்துப் போகிறது. இப்படி எத்தைபேர் உள்ளனரோ???

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 மனம் தான் கனத்துப் போகிறது. இப்படி எத்தைபேர் உள்ளனரோ???

 

இத்தகைய நிலமையில் நூற்றுக்கணக்கில் பிள்ளைகள் இருக்கிறார்கள். 20ம் திகதியும் நிலா, அசோக் என்று 2 பிள்ளைகள் இரு பிள்ளைகளும் சகோதரிகளின் பிள்ளைகள் தாய் தந்தை மாவீரர்கள் சித்தியின் அணைப்பில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பொருளாதார ஆதாரம் எதுவுமில்லை.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.