Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையுடன் நேர்மையான உறவுகளைப் பேணு விரும்புவதாக பிரித்தானியா அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடன் நேர்மையான உறவுகளைப் பேணு விரும்புவதாக பிரித்தானியா அறிவிப்பு

29 ஜூன் 2011

இலங்கையுடன் நேர்மையான உறவுகளைப் பேணு விரும்புவதாக பிரித்தானியா அறிவிப்பு

இலங்கையுடன் நேர்மையான உறவுகளைப் பேணுவதற்கு விரும்புவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏதேனும் அபிவிருத்தியை எட்ட வேண்டுமென தென் ஆசிய நாடுகளுக்கான பிரி;த்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் புருட் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து பிரித்தானியா உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

செனல்4 ஊடக ஆவணப்படம் மற்றும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகளின் மூலம் மட்டுமே மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் யதார்த்தமான விசாரணைகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

முரண்பாடுகளுக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் வழங்கப்படும் அரசியல் தீர்வுத் திட்டம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வழிகோலும் என குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் குறித்து தாம் நேரில் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் சர்வதேச தரத்தில் அமைந்திருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பிரித்தானியா தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63342/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

காசு கொடுக்காமல் எப்படி நல்லுறவு பேணப்படுவதாக அர்த்தம்.. முதலில் காசு கொடுக்கட்டம்...

-- இப்படிக்கு ராஜபக்சே

டிஸ்கி:

கொடுத்த காசுக்கு கணக்கு கேட்கபடாது.... :)

http://www.youtube.com/watch?v=VqsPqYID1X8

பிரித்தானியாவும் அமெரிக்காவும் ( நேற்றைய இராஜாங்க திணைக்கள பேட்டி) ஒருவித அவகாசம் சிங்களத்திற்கு தந்துள்ளதாக புரிகின்றது. அது உண்மையிலேயே ஒரு கால அவகாசமாக இருந்து அதன் பின்னர் அவர்கள் அடுத்தகட்டத்திற்கு நகர வேண்டும். அதற்கு தமிழர் தரப்பும் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

தொடரும் அடக்குமுறைகள் பற்றிய சனல் 4 போன்ற வீடியோக்கள் வெளிவர வேண்டும்.

செப்டெம்பர் மாதம் சிங்கள நாட்டுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு ஒரு கட்டமான அறிக்கையை வெளியிட வைக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.