Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தலைவர்கள் பணத்திற்காகவே ஈழத் தமிழர்களுக்கான போராட்டம் நடத்துகின்றனர்

Featured Replies

இந்திய தலைவர்கள் பணத்திற்காகவே ஈழத் தமிழர்களுக்கான போராட்டம் நடத்துகின்றனர்: பெரியார் தாசன்

ஈழத் தமிழர்களுக்காக இந்தியாவில் போராட்டம் நடத்தும் தமிழ் தலைவர்கள் பணத்திற்காகவே போராட்டம் நடத்துகின்றனர் என இந்தியாவிலிருந்து இலங்கை வந்துள்ள பெரியார் தாசன் என்றழைக்கப்படும் பேராசிரியர் அப்துல்லா தெரிவித்தார்.

இன விடுதலை, சுதந்திரம் என்றெல்லாம் பேசும் இவர்களுக்கு பணம் கிடைக்கா விட்டால் இவ்வாறு பேசமாட்டார்கள். தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களுக்கு அதிக பிரச்சினைகள் உள்ள இச்சந்தர்ப்பதில், அதை பேசாமல் இலங்கை தமிழர் விடயத்தை இந்திய தமிழ் தலைவர்கள் பேசுகின்றனர"என அவர் தெரிவித்தார். ஆரம்ப காலத்தில் ஈழத்து போரட்டத்திற்கு ஆதரவாக பிரசாரங்களை நான் மேற்கொண்டேன். 1989ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கா.சிவத்தம்பி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளேன். எனினும் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்தமையால் போரட்டத்திற்கு ஆதரவளிப்பதை தவிர்த்தேன் என அவர் கூறினார்.

இந்துவாக பிறந்த இவர், பின்னர் பௌத்த சமயத்தை தழுவினார். கடந்த வருடம் இஸ்லாத்தை தழுவிக் கொண்ட பேராசிரியர் அப்துல்லாஹ், பிரச்சாரம் மேற்கொள்ளும் பொருட்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் பேராசிரியர் அப்துல்லாஹ்வை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 1987ஆம் ஆண்டு இலங்கை வந்த இந்திய இராணுவம் சிங்கள அரசு எதை செய்ததோ அதனையே அதுவும் செய்தது. இதனால் அதிகமான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டனர். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை ஆகிய சம்பவங்கள் என்னை அதிகம் பாதித்தன. மனிதாபிமானத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்த கொடூரங்களை எவராலும் நியாயப்படுத்த முடியாது. இவ்வாறான கொடூரங்களை இழைத்தவர்களின் முடிவு நிச்சயமாக விரும்பத்தகுந்ததாக இருக்கப் போவதில்லை என தான் அப்போதே கூறினேன். அதுபோன்றே இன்று எல்லாம் நடந்து முடிந்து விட்டது.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தி பலர் பிரசாரங்கள் மேற்கொண்டனர். எனினும் நான் இந்த சம்பவங்களை வன்மையாக கண்டித்ததோடு அதனை எவராலும் நியாயப்படுத்த முடியாது எனவும் வாதிட்டு வந்தேன். தமிழகத்தின் பல அரசியல் தலைவர்களிடமும் இதுபற்றி நான் எனது அதிருப்தியை வெளியிட்டேன். ஆனால் அவர்கள் எவரும் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

இக்காலப்பகுதியில் நான் முஸ்லிம்களை பற்றி அதிகம் அறிந்தவனாகவோ அல்லது இஸ்லாத்தின் பால் ஆர்வம் கொண்டவனாகவோ இருக்கவில்லை. மனித நேயம் உள்ளவன் என்ற அடிப்படையில்தான் நான் இந்தக் கொடூரங்களை எதிர்த்து வந்தேன் என்றார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/24077-2011-07-01-12-18-41.html

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார்தாசனின் அவதாரங்கள்.

periyardasan_abdullah.jpg?w=300&h=169%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.jpgperiyar_dasan.jpg

இந்த அப்துல்லா தன்னைப் போல மற்றவர்களை நினைக்கிறான்.

அண்மையில் இஸ்லாத்தை தழுவிய இவனுக்கும் தொப்பி பிரட்டும் புத்தி வந்துவிட்டது.

இந்தப் பச்சோந்தியை யார் இலங்கைக்குக் கூப்பிட்டது? சிங்களப் பயங்கரவாதிகளா? அல்லது ஜெயராஜ் அன்ட் கோவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அறிஞன்

எதையெல்லாம் இழக்கக்கூடாதோ அத்தனையையும் இழக்கிறான்........... :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்த கொடூரங்களை எவராலும் நியாயப்படுத்த முடியாது. இவ்வாறான கொடூரங்களை இழைத்தவர்களின் முடிவு நிச்சயமாக விரும்பத்தகுந்ததாக இருக்கப் போவதில்லை என தான் அப்போதே கூறினேன். அதுபோன்றே இன்று எல்லாம் நடந்து முடிந்து விட்டது.

சிங்கள அரசு செய்த மனிதாபிமானத்துக்கு எதிரான அட்டூழியங்கள், இப்போது மெல்ல மெல்ல வெளியே வருகின்றன!

இவர்களின் முடிவு, எப்படியிருக்கும் என்று பெரியார் தாசன் எதிர்வு கூறுவாரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.