Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழ் மக்கள் பேரவை-ஜெகத் கஸ்பர்

Featured Replies

திருமிகு ஜெகத் கஸ்பர் அவர்களுக்கு ..வணக்கம் .

தாங்கள் புதிதாக துவங்கி உள்ள " நாம் தமிழ் மக்கள் பேரவை " தொடர்பாக ..!.

நிறைய.. நிறைய.. யோசித்தே இந்தப்பெயர் வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன் .! ஏன்

"நாம் தமிழர் பேரவை ". என்று நேரடியாக இருந்தால் இன்னும் கூட அதிரடியாய் இருந்திருக்குமே ??

நீங்கள் அறியாதது இல்லை . சி.பா. ஆதித்தனார் துவங்கி பின்னர் கைவிட்ட " நாம் தமிழர் இயக்கம் " முற்றிலும்

வேறு அர்த்தத்தில் ..புதிய நோக்கத்தில் ..வீரியத்தில் திரு .சீமானால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பரிப்புடன்

முறையான ஒரு இயக்கமாக மதுரையில் பிரகடனமானது . அவர்களின் பிரதான நோக்கமும் இது வரையிலான செயல்பாடும் இலங்கை தமிழ் மக்களின் நலனை... பாதுகாப்பை ..எதிர்காலத்தையே முன்வைக்கிறது .! இதன் பொருட்டு சீமான் பலமுறை சிறைப்படவும் நேர்ந்தது . இந்த தேர்தலில் நீங்கள் மறைமுகமாக வேலை செய்தவர்களுக்கு எதிராக நேரடியாக களத்தில் நின்றனர் (ஒரிஜினல்) நாம் தமிழர் பேரவை இளைஞர்கள்..! நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றத்தில் கண்ணுக்குத் தெரியாத உப்புக்கரைசல் போல அவர்களின் உழைப்பும் உள்ளது.!

ஒரே நோக்கங்களை கூறிக்கொண்டு . அதே நோக்கங்களுடன் வெற்றிகரமாக செயல்படும் இன்னொரு இயக்கத்தின் பெயரின் சாயலில் இன்னொரு இயக்கத்தின் பெயர் சூட்டிக்கொள்வதில் கொஞ்சமும் நேர்மை இல்லை . இது சந்தையில் நன்றாக விற்பனை ஆகும் சோப்பு -குளிர் பணம் -செருப்பு போன்றவற்றின் பெயர்களில் சிறு மாற்றம் செய்து விற்பனைக்கு விடும் 'நம்பக தன்மை மோசடிக்கும்' இதற்கும் எனக்கு அதிக வித்தியாசம் தெரியவில்லை . இன்னும் எளிதாக சொல்வதென்றால் ..மன்னிக்கவும் !இதுவும் ஒரு விதத்தில் சென்னையில் தெருவுக்கு தெரு முளைக்கும் "தலைப்பாகட்டி " பிரியாணிக்கடையையே நினைவு படுத்துகிறது .!

இங்கே யாருக்கும் ..எதற்காகவும் இயக்கம் துவங்க உரிமை உள்ளது .ஒப்புக்கொள்கிறேன் .

'கோத்தபயகள்' அவர்களுக்கு துணை நின்ற இங்குள்ள 'மூத்தபயகள்' எல்லோரும் இனி 'தமிழர் நலன் காக்க '

ஒன்று படலாம் . இயக்கம் காணலாம் . ஆனால் இப்போது சுடுகாட்டில் சுண்டல் விற்க வருபவர்களை உறவுக்காரர்கள்

என்று நம்பித் தழுவி அழ தமிழ் மக்கள் எங்கும் தயாராக இல்லை !

அருள் கூர்ந்து முதல் கோணலை சரி செய்யுங்கள் ..

நாம் யார் என்பது வார்த்தைகளிலோ ...அறிக்கைகளிலோ ..இல்லை ... அது நடை முறையில் !

சாயம் வெளுக்கச் செய்யும் காலம் !

BY ;- SOWBA SOUNDARA PANDIAN

THANZ FACE BOOK

  • கருத்துக்கள உறவுகள்

5851591427_9b142621a7.jpg

ஊருக்குள் முன்னர் பஸ் ஏறும் போது பாண்டிசேரி நேர் வழி என்று போட்டு இருப்பார்கள்.. ஆனா பஸ் பெயர் பலகையை உத்து பார்த்தால் தான் தெரியும் கரப்பான் பூச்சி தன் காலால் எழுதியது போல [ con] என்று.. மொள்ளமாறிதனம் செய்வதற்கு ஒரு அளவே இல்லையாடா??

கருணா ஈழ தமிழர் விடயத்தில் இனி அக்கறை செலுத்துவதற்கு.. இது முதற்படி.. யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.. :)

டிஸ்கி:

அப்ப அல்லக்கை வீரமணி எங்கே என்று கேட்பது பிரிகிறது.. அவரு அணிமாற போறாங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

'கோத்தபயகள்' அவர்களுக்கு துணை நின்ற இங்குள்ள 'மூத்தபயகள்' எல்லோரும் இனி 'தமிழர் நலன் காக்க '

ஜெகத் கஸ்பர், இன்னும் தமிழ் நாட்டில் வியாபாரம் செய்யக் கூடிய நிலையில் தான் இருக்கின்றார் என்பது நினைக்க தமிழ் நாடு உறவுகள் எவ்வளவு நல்லவர்கள் இன்று உணரக் கூடியதாக இருக்கின்றது!

இணைப்புக்கு நன்றிகள் வீணா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.