Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்பாயில் இஸ்லாமியப் போராளிகள் தாக்குதல் - 21 பேர் பலி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மும்பாயில் இஸ்லாமியப் போராளிகள் தாக்குதல் - 21 பேர் பலி !

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான மும்பாயின் மூன்று வெவேறு இடங்களில் சனநடமாட்டம் அதிகமுள்ளா நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 21 பேர்வரை இதுவரை கொல்லப்பட்டிருப்பதாக அம்மாநில ஆளுனர் கூறியிருக்கிறார். மேலும் 144 பேர்வரை படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுவரை இத்தாக்குதலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில் உள்நாட்டு அமைச்சர் "தீவிரவாதிகள்தான் இத்தாக்குதலுக்குப் பொறுப்பு " என்று வாய்மொழிந்தருளியிருக்கிறார்.

ஒரு நிமிட நேர இடைவெளியில் வெடித்துள்ள இந்த மூன்று குண்டுகளும் ஒன்றில் காரிலோ அல்லது மோட்டார் உந்துருளியிலோ வைத்தே வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன.

மும்பாயின் தங்கநகை வியாபரத்திற்குப் பேர்போன பகுதியில் நடத்தப்பட்டிருக்கும் இத்தாக்குதலில் அப்பகுதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா இத்தாகுதலை வன்மையாகக் கண்டித்திருப்பதுடன் தீவிரவாதிகளி அடையாளம் கான அமெரிக்கா உதவும் என்றும் கூறியிருக்கிறார். பாக்கிஸ்த்தான் அதிபரும் தன் பங்கின்ற்கு இந்தியாவுக்கு உதவி தர முன்வருவதாகக் கூறியிருக்கிறார்.

மேலதிகத் தகவல்களுக்கு...

http://au.news.yahoo.com/world/a/-/world/9839811/three-bombs-kill-at-least-21-in-mumbai/

- இந்த தாக்குதலை, நாடு கடந்த அரசு உட்பட்ட, தமிழர் அமைப்புக்களும் கண்டிக்க வேண்டும்.

- சில ஊடகங்களில் பாகிஸ்தான் - சிறிலங்கா - சீனா என்ற முக்கோண நாடுகளே இதற்கு பின்னணியில் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துப்பட எழுதல் வேண்டும், பின்னூட்டங்கள் இடப்படல் வேண்டும்.

நிச்சயமாக....

நாடு கடந்த தமிழீழ அரசு, அண்ணன் சீமான், அண்ணன் வைகோ ஐயா நெடுமாறன் உட்பட அனைத்து தமிழின அமைப்புக்களும் மிகவும் வன்மையாக கண்டிக்க வேண்டும். ராஜ தந்திரம் என்று பெயரளவில் சொல்லிக் கொண்டிராமல் இச்சம்பவம் எமக்கான ராஜ தந்திர களமும் கூட.... என்பதை நினைவில் கொள்ள கடமைப்பட வேண்டும்.....

இந்த உணர்வு பூர்வமான விடயத்தில் எம்மால் ஆன பங்களிப்பை செய்தே ஆக வேண்டும்... இது காலத்தினால் முள்ளிவைக்காலில் உயிர் நீத்த தம்மின்னுயிரை தியாகம் செய்த மக்களுக்காக அளிக்கப்பட்ட வரமாகும்..... இதை எமக்காக சரியாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது அவாவும்... அதாவது தமிழர்கள் நாங்கள் உரிமை வேண்டி இனவாதத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய போராளிகளே! அப்பாவி மக்கள் எங்கு கொல்லப் பட்டாலும் எதிர்த்து குரல் கொடுப்போம் என்பதை உறுதியாக பதிவு செய்வது முள்ளிவாய்க்கால் பேரவலத்திட்கு நீதி வேண்டி நாம் நடாத்தும் போராட்டங்களில்இந்திய மக்களின் மனதினை வென்றெடுப்பதில் ஒரு மிக முக்கிய நிகழ்வாக அமையும்....

இந்தியாவும் காங்கிரசும் ஒன்றல்ல....

மன்மோகனும் வாஜபாயியும் ஒன்றல்ல.....

மன்மோகன் சிங் இந்தியாவின் ஒரு இழி நிலை... காங்கிரசு தமிழர்களின் சாபக்கேடு....

இதை நிச்சயம் இந்தியர்கள் மட்டுமல்ல சர்வதேசமே உணரும் தருணம் நெருங்கும் காலமிது...

அதுமட்டுமல்ல இந்த பூமிப் பந்தில் சமீப காலமாக அதிகமான ஜனநாயக ரீதியிலான தொடர் போராட்டங்கள் நடாத்துவது தமிழர்களே....களம் தமிழ்நாடே - இது மக்களின் கூடுதலான விழிப்புணர்வை அல்லது ஒரு இணைத்துக் கெதிரான அதிக பட்ச அடக்குமுறையையே எடுத்து இயம்புகிறது..... இந்தியா நீங்கலாக சர்வதேசமும் இவை அனைத்தையும் கண்ணுறுகிறது.....

நாம் எமது இலக்கை இலகுவாக எட்ட....

1 இந்தியாவை இலங்கைக்கெதிராக முழுவதுமாக திருப்புவது.....

அல்லது

2 .சிங்களத்திற்குள் ஊடுருவுவது.....

3 சர்வதேச ராச தந்திர உறவுகளை பலப்படுத்துவது.... இவை இரண்டும் சம தளத்தில் இயங்க வேண்டும்.....

தமிழ் அரசியல்வாதிகள் இதைக் கண்துடைப்புக்காகக் கண்டிப்பது எல்லாம் சரி தான்.

ஆனால் ஈழ மண்ணில் இலட்சக் கணக்கான மக்களைப் பறிகொடுத்து நிற்கும் ஈழத்தமிழர் அதற்குக் காரணமான காட்டுமிராண்டிகள் மண்ணில் இதுபோன்று இன்னும் இலட்சக் கணக்கான சம்பவங்கள் நடக்காதா என ஏங்குகிறார்கள் என்பதுதான் யதார்த்தம். திட்டமிட்டு இனப்படுகொலை செய்யும் கொலைகாரக் கும்பல்கள் மீது யாரும் மனிதாபிமானம் பார்ப்பதில்லை, இரக்கம் கொள்வதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரவமுதன்.

இந்தியாவும் காங்கிரஸும் ஒன்றல்ல. இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டிலிருக்கும் தமிழனுக்கே எமது போராட்டம் பற்றிய விழிப்புணர்வு இதுவரையிலும் சரியாகப் போய்ச் சேரவில்லை. அப்படியிருக்கும் போது வட இந்தியன் நிலை பற்றிக் கேட்க வேண்டாம். இந்திய ஊடகங்களை கைய்யில் வைத்திருக்கும் ஜாம்பவான்கள் அரசியல் பின்புலம் உள்ளவர்கள். மக்கள் எதைக் கேட்க வேண்டும், எதைக் கேட்கக் கூடாது என்று தீர்மானிப்பவர்கள் இவர்கள்தான். காலம் காலமாக ஈழத்தமிழனின் போராட்டம் இந்தியாவுக்கு எதிரானது என்கிற மாயையை இந்த ஊடக ஜாம்பவான்கள்தாம் இந்திய மக்களிடையே உருவாக்கியிருக்கிறார்கள். அந்த மாயையிலிருந்து விடுபடுவது கடிணம். இடையே வந்த ராஜீவ் கொலை அதை இன்னும் கடிணமாக்கியிருக்கிறது. இந்திய நடுத்தர வர்க்கம் எதிர்பார்த்திருந்த "புதிய இந்தியாவின் வழிநடத்துனர், ராஜீவ்" அவர்களின் கொலை நிச்சயம் எமக்கெதிரான அலையை அங்கே ஏற்படுத்தியிருக்கிறது. தமிழரின் தாய்நாடான தமிழகத்திலேயே எமக்கெதிரான அலை அடித்ததென்றால், வட இந்தியா பற்றிக் கேட்கவே வேண்டாம்.

முள்ளிவாய்க்கால் என்பது ராஜீவின் கொலைக்கான பழிவாங்கல் நடவடிக்கையே. இது இந்திய நாட்டினால் அல்லாது காங்கிரஸின் தலமைப்பீடத்தினால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு கொலைக்களம், இதற்கும் இந்திய மக்களுக்கும் தொடர்பில்லை.

இப்போதுதான் ஈழத்தில் நடந்த கொலைக்களத்தினை இந்தியர்கள் பார்க்கிறார்கள். இது ஒரு ஆரம்பம் மட்டும்தான். இன்னும் நிறையவே செய்யவேண்டியிருக்கு. தமிழகத்து உணர்வாளர்களினால் சிறுகச் சிறுக கட்டப்பட்டு வரும் எமக்கான ஆதரவு வட்டத்தை எமது நடவடிக்கைகள் குழப்ப வேண்டாம்.

காங்கிரஸ் தலமைத்துவத்தையும், இந்திய மக்களையும் வேறுபிரித்து அறிவோம். அதனூடாக எமது பிரச்சாரத்தை முன்னெடுப்போம். ஒட்டுமொத்த இந்தியாவையும் பகைப்பது எமக்கு நண்மை பயக்கப்போவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெக்கான் கெரல்டு எனும் இந்திய இணையத்தளத்தில் இத்தாக்குதல் பற்றிய வாசகர்களின் கருத்துக்களில் அனல் பறக்கிரது. நானும் என்பாட்டிற்கு இந்திய மக்களுக்கு ஆதரவாகவும், சிங்கள - பாக்கிஸ்த்தானிய கூட்டுக்கு எதிராகவும் கருத்துக்களை முன்வைத்து வருகிறேன். இடையிடையே முள்ளிவாய்க்கால் அவலத்தையும் ஒப்பிட்டு வருகிறேன். தணிக்கை செய்யவில்லை கருத்துக்களை ஆகவே நீங்களும் எழுதுங்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்கள்தான் எமக்கு அவசியம்.

இதோ அந்த இணைய முகவரி.

http://www.deccanherald.com/content/175982/three-blasts-mumbai-21-killed.html :)

இது இந்தியாவின் அரசியல் சாணக்கியத்தில் இருக்கும் குறைபாடு. தமிழர்கள் மிகவும் அவசியமான பங்குதாரர்கள் இந்த பயங்கரவாதத்தை எதிர்க்க. இதை இந்திரா காந்தி அறிந்திருந்தார். தற்கால சுயநலத்தலைவர்கள் தமிழர்களை பயங்கரவாதிகளாக வருணித்து இந்தியாவின் தலை மீது மண்ணை வாரி இறைத்திருகிறார்கள்.

கடந்ததடவை இது நடந்தவுடன் நாராயணனுக்கும், சிதம்பரத்திற்கும் பதவியை விலக வைத்து பிறகு வேறு பதவி கொடுத்தார்கள். ஆனால் கொள்கை வகுப்பாளர்கள் சோனியா-சிங்க் கதிரையை இருக்கமாகப்பற்றிகொண்டிருந்தார்கள். இந்த எய்தவனிருக்க அம்பை நோகும் நாடகம் பாகிஸ்தானை எள்ளளவும் பாதிக்கவில்லை. இது திரும்ப திரும்ப நடக்கப்போகுது. இதனால் தமிழனின் போராட்டம் புறம்தள்ளப்பட போகிறது.

பாகிஸ்தான் இந்திராகாந்தியிடம் நல்லாய் வாங்கிகட்டியது. அது இந்த நூறாண்டில் இந்தியாவை மறக்கபோவதில்லை. இது மேலைநாட்டுக்கார சோனியாவுக்கோ, பாகிஸ்தானுடன் ஒத்துபோகும் சீக்கியரான மனமோகன் சிங்குக்கோ பெரியவிடயமில்லை. அவர்கள் இதை கம்பளத்தின் கீழ் கூட்டி தள்ளி விட்டு தமிழரை ஒருகை பார்ப்பதில் வளங்களை செலவிட்டவர்கள். இப்போது தெளிவாய்த்தெரிகிறது காங்கிரசு இருக்கும்வரை இந்திய மண்ணில் பாகிஸ்தான் வாணவேடிக்கை காட்டுவது வழமையாகபோகிறதென்று.

Edited by மல்லையூரான்

இப்போ இது மாநில இறையான்மை ... இதில் தலையிட முடியாது என்று காரணம் கூறுவார்கள்....

Edited by விஜயகுமார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.