Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம் இனிய புலம்பெயர் உறவுகளுக்கு யாழ் கிளிநொச்சி மண்ணிலிருந்து ஓர் அவசரமான வேண்டுகோள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம் இனிய புலம்பெயர் உறவுகளுக்கு யாழ் கிளிநொச்சி மண்ணிலிருந்து ஓர் அவசரமான வேண்டுகோள்! கூட்டமைப்பு எம்.பி.சிவஞானம் சிறீதரன்.

[Friday, 2011-07-22 09:59:27]

வரும் 23ம் நாள் யாழ் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் தேர்தல்களம் தமிழ்மக்களை பொறுத்தவரையில் சவால்களும் நெருக்கடிகளும் நிறைந்ததாக திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது. இராணுவநெருக்குவாரங்களுக்கு மத்தியில் தமிழ் தேசியத்தை நிலைநிறுத்துவதற்காக இந்த மண்ணில் துணிந்து களம் இறங்கியுள்ள த.தே.கூட்மைப்பு வேட்பாளர்கள் பற்றுறுதியோடு தேர்தல் பணியை நிறைவு செய்துள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கம் தனது முழுப்பலத்தையும் வளத்தையும் ஒருங்கிணைத்து யாழ் கிளிநொச்சி நோக்கி நகர்த்தியுள்ளதுடன் எமது தமிழ்ப் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களுக்கு சவால்விடும் வகையில் தேர்தல் பிரச்சார உத்திகளை அரச இயந்திரம் முழமையாகச்செயற்படுத்துவதனால் எமது மக்கள் உணர்வுரீதியாக இழிவுபடுத்தப்படுகின்றனர்.

நாமல்ராஜபக்ச உட்பட பல முக்கிய அமைச்சர்கள் கிளிநொச்சியில் முகாமிட்டுள்ளனர்.நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர் யுவதிகள் இங்கே கிராமம் கிராமமாக பிரச்சாரப்பவனி வருகின்றனர். அரசதரப்பால் த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் மீது மிகமோசமான மிரட்டல்கள் கடத்தல்கள் எரியுட்டல்கள் என தொடர்ச்சியான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இங்கு எதுவும் நடக்கலாம் என்ற சுழ்நிலையை நாம் எதிர்நோக்கியுள்ளோம்.

போரில் வலிசுமந்து நலிந்துபோயுள்ள எம்மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து அற்ப சொற்பசலுகைகளை காட்டி அபிவிருத்தி என்ற மாய வலை விரித்து எம்மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்ய அரசு கங்கணம்கட்டி நிற்கின்றது. தலைகீழாக நின்றேனும் இந்த தேர்தலில் எமது வாக்குகளை கொள்ளை அடித்து தன் கழுத்துக்கு வந்து விழுந்துள்ள போர் குற்ற விசாரணைகளில் இருந்து எப்படியாவது அரசு தப்பிப்பிழைக்க எத்தனிக்கின்றது.

எமது மக்கள் முன்னர் ஒருபோதும் சந்தித்திராத காட்டுக்கத்தல்கள் கூச்சல்கள் கூத்து கும்மாளங்கள் கேளிக்கைகள் ஊடான ஆரசதரப்பு பிரச்சார முனனெடுப்புகளால் மக்கள் பதகளித்து போயுள்ளனர். தேர்தல் சட்டவிதிகளுக்கு முரணாக பிரச்சாரப் பணிகள் நிறைவுற்ற போதும் ஈ.பி.டி.யும் சிங்கள கட்சிகளும் இப்போதும் பெருமெடுப்பில் பரப்புரை செய்து வருகின்றனர். இராணுவத்தின் முழுஒத்துழைப்பும் ஆசியோடும் இங்கு ஏல்லாமே நடக்கின்றது. தேர்தல் பணிகளுக்காக முந்நூறுக்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் இப்போது இங்கே கொண்டுவரப்பட்டுள்ளனர்.

அன்பான எம் புலம்பெயர் உறவுகளே! நாம் இன்று ஒரு நெருக்கடியான அரசியல் களத்தை எதிர்கொண்டு நிற்கின்றோம். எம்மக்களுக்கான நீதியையும் எதிர்கால வாழ்வையும் தீர்மானிக்கின்ற தேர்தல் களமிது. தாயகத்தில் உள்ள உங்கள் உறவுளை தொடர்புகொண்டு தமிழ்தேசியத்தை எம்மண்ணில் நிலைநிறுத்த வீட்டிற்கு வாக்களிக்க வேண்டுகோள்விடுங்கள். அரசியல் கருத்து மாறுபாடுகளுக்கு அப்பால் தமிழர்தம் தேசியத்தை நிலைநிறுத்தும் சனநாயக உரிமைக்கு சவால் விடப்பட்டுள்ளதாகவே கருதுகின்றோம்.

உரிமையோடு கேட்டுநிற்கின்றோம் .இது உங்களால்தான்முடியும். உங்களது இரத்த சொந்த பந்தங்களேர்டு வரும் இருபத்திநாலு மணிநேரத்துக்குள் அவசர தொடர்பை ஏற்படுத்தி இந்த களப்பணியை நிறைவேற்ற நீங்களும் இறங்கி சிங்கள அரசாங்கத்திற்கு தமிழன் என்றும் தன்மானம் உள்ளவன் என்பதை முரசறையுங்கள். அவசரமான எங்கள் அழைப்பிற்கு விரைந்து கைகொடுங்கள்.

-வலிதந்தாரை தோற்கடிப்போம்- எம் விதிவெல்லும் வாக்களிப்போம்-

நன்றியுடன்

சிவஞானம் சிறீதரன்

பாராளமன்ற உறுப்பினர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு.

http://www.seithy.com/breifNews.php?newsID=46918&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் மக்களைப் பற்றி தப்புக் கணக்கு போட்டதில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பங்கு இருக்கிறது. மீண்டும் சிங்கள பேரினவாதிகளின் பண இராணுவ ஜனநாயகத்தின் முன்.. தோல்விப் பயம் வந்ததும்.. புலம்பெயர் மக்களை நோக்கித் தான் ஓடி வாறீங்க. இப்படி ஒரு நிலை வரும் என்றும் புரிஞ்சு புலம்பெயர் மக்களை மதிச்சு நடந்திருக்கனும்.

சரி சரி.. இது எமக்குள் பழிவாங்கலுக்குரிய நேரம் அல்ல. பேரினவாதிகளின் ஒடுக்குமுறையை...அடக்குமுறையை.. இன அழிப்பை... தமிழர்களை அடிமையாக்கும் எண்ணத்தை.. அடியோடு வேரறுத்து இன விடுதலையை சாத்தியமாக்குவதே புலம்பெயர் மக்களின் ஒரே குறிக்கோள். நிச்சயம் அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து பாடுபடும் என்று உறுதி அளித்தால்.. புலம்பெயர் மக்கள் நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க கோருவார்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழ் மக்களைப் பற்றி தப்புக் கணக்கு போட்டதில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பங்கு இருக்கிறது. மீண்டும் சிங்கள பேரினவாதிகளின் பண இராணுவ ஜனநாயகத்தின் முன்.. தோல்விப் பயம் வந்ததும்.. புலம்பெயர் மக்களை நோக்கித் தான் ஓடி வாறீங்க. இப்படி ஒரு நிலை வரும் என்றும் புரிஞ்சு புலம்பெயர் மக்களை மதிச்சு நடந்திருக்கனும்.

சரி சரி.. இது எமக்குள் பழிவாங்கலுக்குரிய நேரம் அல்ல. பேரினவாதிகளின் ஒடுக்குமுறையை...அடக்குமுறையை.. இன அழிப்பை... தமிழர்களை அடிமையாக்கும் எண்ணத்தை.. அடியோடு வேரறுத்து இன விடுதலையை சாத்தியமாக்குவதே புலம்பெயர் மக்களின் ஒரே குறிக்கோள். நிச்சயம் அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து பாடுபடும் என்று உறுதி அளித்தால்.. புலம்பெயர் மக்கள் நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க கோருவார்கள்.

வென்றபின்னர் அவர்களது நிலை மாறலாம். என்ன செய்வது அதுக்காக சிங்களவனை வெல்ல வைக்க முடியாதுதானே.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கேட்டுத்தான் நாம் எமது கடமையைச்செய்யவேண்டும் என்றநிலை இல்லை.

அத்துடன் கண்டிசன் போடும் நேரமா இது நெடுக்ஸ். :(

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கேட்டுத்தான் நாம் எமது கடமையைச்செய்யவேண்டும் என்றநிலை இல்லை.

அத்துடன் கண்டிசன் போடும் நேரமா இது நெடுக்ஸ். :(

வென்ற பின்னர்.. சரவணபவன் போன்றவர்கள் மகிந்தவை சந்தித்த பின் புலம்பெயர் மக்களுக்கு பாடமெடுக்கும் நிலை கடந்த காலங்களில் வந்தது. அவை மீண்டும் திரும்பக் கூடாது. புலம்பெயர் மக்களுக்கு தெரியும் தானே தாயகத்தை நோக்கி எதை எப்ப செய்யனும் என்று. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த இரண்டாண்டு ஆண்டு கால அணுகுமுறைகள் சில கவலைக்குரியதாக இருந்தன. அவை விலக்கப்பட்டு.. அவர்கள் திடமான கொள்ளைப் பற்றோடு இருக்க வேண்டும்.

சங்கரி.. சித்தார்த்தன்.. வரதராஜப் பெருமாள் போன்றோரை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளெடுத்தது பற்றி புலம்பெயர் மக்களுக்கு எதுவும் சொல்லப்படவில்லை. முன்னர் குறிப்பிட்டவர்கள் தமிழ் தேசிய கொள்கைக்கு எதிரானவர்களாக இருந்தனர். தற்போது அவர்கள் அந்த நிலையில் இருந்து மாறி இருக்கிறார்களா.. எந்த அடிப்படையில் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளெடுக்கப்பட்டுள்ளனர்.. எதிர்காலத்தில் இவர்களால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப கால கொள்கைகளுக்கு பாதகம் ஏற்படாதா என்பது குறித்து புலம்பெயர் மக்கள் அறிய வேண்டியும் இருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் அரசியல் சக்தியாக வளர்த்தெடுத்த பின் அது இந்தியா ஆளும் வர்க்கத்திற்கும் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கும் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து விட்டால்.. அதன் பின்னர் நாம் என்ன செய்வது.. திட்டிக் கொண்டே இருப்பதா..??! தீர்வு. :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வென்றபின்னர் அவர்களது நிலை மாறலாம். என்ன செய்வது அதுக்காக சிங்களவனை வெல்ல வைக்க முடியாதுதானே.

உண்மை. அதே வேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் தேசியத்தின் பாலும் தமிழீழ விடுதலையின் பாலும் பற்றுறுதியோடு இருந்து செயற்பட உறுதி எடுக்கக் கோர முடியும். புலம்பெயர் மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை எட்டக் கோர முடியும்.

புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று கூறி.. சிங்கள.. இந்திய ஆளும் வர்க்கங்களின் நிகழ்ச்சி நிரலோடு இழுபட்டுச் செல்லும் நிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைவிட வேண்டும். அதுமட்டுமன்றி தமிழ் தேசிய பற்றுறுதி கொண்டிருந்த தமிழ் தேசிய விடுதலை முன்னணியில் இடம்பெறும் தமிழ் தேசியப் பற்றாளர்களை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரி.. சித்தார்த்தன்.. வரதராஜப் பெருமாள்.. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் வர முடியும் என்றால்.. ஏன் யூனியர் குமார்பொன்னம்பலம்.. பத்மினி.. கஜேந்திரன் போன்றவர்களை உள்வாங்க முடியாது..??!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் மக்களின் கருத்துக்களை உள்வாங்க மதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய தொனிப் பொருள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களின் வெற்றிக்கு மட்டும்தான் புலம்பெயர் தமிழர் தயவு தேவை, மற்றப்படி தமது தேவையை அவர்களே பார்த்து கொள்வார்கள். அவர்களை புறக்கணித்தால் டக்கிளசு வந்து விடுவான் பின்னர் நிலமை இன்னமும் மோசமாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் வெற்றிக்கு மட்டும்தான் புலம்பெயர் தமிழர் தயவு தேவை, மற்றப்படி தமது தேவையை அவர்களே பார்த்து கொள்வார்கள். அவர்களை புறக்கணித்தால் டக்கிளசு வந்து விடுவான் பின்னர் நிலமை இன்னமும் மோசமாகிவிடும்.

டக்கிளசே அந்த மக்களின் தெரிவாகிறான் என்றால்.. அதன் பின்னர் அந்த மக்களே தான் மிச்சத்தை அனுபவிக்க வேண்டும். ஏன் அவைக்கு சுய புத்தி இல்லையா. கடந்த 35 வருசமா என்ன நடந்தது என்று தெரியாமலா இருக்கினம்..! அப்படி நடந்ததை எல்லாம் மறந்திட்டினம் என்றால்.. மீண்டும் அவர்களே வாக்குப் போட்டு அனுபவிக்கட்டும்... அதற்கு வேறு எவரும் பொறுப்பாக முடியாது.

டக்கிளசுக்கு ஏன் இவ்வளவு பயப்பிடினம் என்று புரியல்ல...! இது டக்கிளஸ் தனது சிந்தனைக்களுக்கு மக்கள் நலத்திட்டங்களுக்கு பயந்து புலிகள் தன்னைக் கொல்ல வருவதாக குற்றம் சாட்டியதற்கு அல்லவா சான்று கொடுக்கும். அவன் செய்த அநியாயங்கள் அங்கு அடித்து நொருக்கப்பட்டு விடும். டக்கிளஸ் புனிதன் ஆகிடுவான். புலிகள்.. மீண்டும் பிரகடனப்படுத்தப்படுவார்கள்.. பயங்கரவாதிகளுன்னு.

டக்கிளஸ்.. தேர்தலில் நிக்கனும். அவனை மக்கள் சுயமா உணர்ந்து தோற்கடிக்கனும். அப்ப தான்.. அவனின் ஆயுத அராஜக அரசியலுக்கு முடிவு வரும். அவனுக்கு அஞ்சி கூட்டமைப்பின் தவறுகளை ஏற்றுக் கொள்வதும் நல்லதல்ல. பின்னர் கூட்டமைப்பு செய்யும் தவறுகளை தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்துவிட்டு வாக்குக் கேட்டு மட்டும் புலம்பெயர் மக்களை அணுகி கெஞ்சி கூத்தாடும் நிலையே தோன்றும். அதுவே பின்னர் அவர்களின் அரசியலாகியும் விடும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

அதேநேரம் அவர்களது சில தற்போதைய நடவடிக்கைகள் அவர்களது இருத்தல் சம்பந்தமானது. அவற்றை வெளியில் இருந்து விமர்சித்தல் சரியாகப்படவில்லை. அத்துடன் ஒவ்வொரு தமிழனுக்குமான தேசியக்கடமையை நாம் அனுமதிக்கணும் என்பது எனது விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

அதேநேரம் அவர்களது சில தற்போதைய நடவடிக்கைகள் அவர்களது இருத்தல் சம்பந்தமானது. அவற்றை வெளியில் இருந்து விமர்சித்தல் சரியாகப்படவில்லை. அத்துடன் ஒவ்வொரு தமிழனுக்குமான தேசியக்கடமையை நாம் அனுமதிக்கணும் என்பது எனது விருப்பம்.

நிச்சயமாக சில நடவடிக்கைகள் தாயகத்தில் அவர்களின் இருப்புக்கு என்றால் மிச்சம் புலம்பெயர் மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய விடயங்கள். விடுதலைப்புலிகள் தாயக மக்களுக்கு நிகராக புலம்பெயர் மக்களை மதித்து.. எந்த ஒரு நடவடிக்கை குறித்தும் புலம்பெயர் மக்களோடு பகிர்ந்து கொண்டு கருத்துக் கேட்டு செயற்பட்டார்கள். ஏன் அவர்களால் முடிந்தது.. இவர்களால் முடியல்ல..???! புலம்பெயர் மக்களை நீங்க உங்க பாட்டைப் பாருங்க என்று தூக்கி எறிந்துவிட்டு.. இப்போ தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குக் கேட்டு அவர்களிடம் வாறீங்க.. அது ஏன்...??!

புலம்பெயர் மக்களின் பலத்தை தவறாக கணக்குப் போட்டதன் பின் விளைவே இது. இந்திய ஆளும் வர்க்கத்தை சிங்கள ஆளும் வர்க்கத்தை திருப்திப்படுத்த.. புலம்பெயர் மக்களை புறக்கணிக்கும் கைங்கரியத்தை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யாது என்று நம்புவோமாக. :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக சில நடவடிக்கைகள் தாயகத்தில் அவர்களின் இருப்புக்கு என்றால் மிச்சம் புலம்பெயர் மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய விடயங்கள். விடுதலைப்புலிகள் தாயக மக்களுக்கு நிகராக புலம்பெயர் மக்களை மதித்து.. எந்த ஒரு நடவடிக்கை குறித்தும் புலம்பெயர் மக்களோடு பகிர்ந்து கொண்டு கருத்துக் கேட்டு செயற்பட்டார்கள். ஏன் அவர்களால் முடிந்தது.. இவர்களால் முடியல்ல..???! புலம்பெயர் மக்களை நீங்க உங்க பாட்டைப் பாருங்க என்று தூக்கி எறிந்துவிட்டு.. இப்போ தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குக் கேட்டு அவர்களிடம் வாறீங்க.. அது ஏன்...??!

புலம்பெயர் மக்களின் பலத்தை தவறாக கணக்குப் போட்டதன் பின் விளைவே இது. இந்திய ஆளும் வர்க்கத்தை சிங்கள ஆளும் வர்க்கத்தை திருப்திப்படுத்த.. புலம்பெயர் மக்களை புறக்கணிக்கும் கைங்கரியத்தை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யாது என்று நம்புவோமாக. :(

தற்போதாவது புரிந்ததே

தற்போதாவது எம்மை நாடி வருகின்றார்களே

அரவணைப்போம்

நன்றி நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு யார் வந்தாலும் சிங்கள இனவெறியை தமிழர்கள் ஏற்றூக்கொண்டுள்ளார்கள் என்று மகிந்த உலகெங்கும் சொல்லித்திரிவான். ஆக்வே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதன் மூலம், முதலாவதாக சிங்கள பயங்கரவாதத்தி தமிழர்கள் நிராகரிக்கிறார்கள் என்று உலகிற்குக் காட்டுதல் அவசியம்.

ரெண்டாவதாக சிங்களப் பயங்கரவாதிகளும், அவர்களது அடிமை தமிழ் வேட்டை நாய்களும் தாயகத்தில் கண்மண்தெரியாமல் துள்ளுவார்கள்,

இது ரெண்டு காரணங்களும் போது நாம் ஏன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் இதிலுள்ள சின்ன நெருடல் என்னவென்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் உள்வாங்கப்பட்டுள்ள சங்கரி, சித்தாத்தன், வரதராஜப்பெருமாள் போன்ற ஆசாமிகள் பற்றிய அனுபவம் தான். இவர்கள் எப்போழுதுமே தமிழினக்கொலையை ஆதரித்தே வந்திருக்கிறார்கள், அதற்கு உதவியும் செய்திருக்கிறார்கள். தேர்தலில் வென்றபின் மகிந்தவுக்குப் பின்னால் வாலாட்டிக் கொண்டுபோய் நின்றால் கிழிஞ்சமாதிரித்தான்.

சங்கரி, சித்தாத்தன், வரதராஜப்பெருமாள் போன்ற ஆசாமிகள் பற்றிய அனுபவம் தான். இவர்கள் எப்போழுதுமே தமிழினக்கொலையை ஆதரித்தே வந்திருக்கிறார்கள், அதற்கு உதவியும் செய்திருக்கிறார்கள். தேர்தலில் வென்றபின் மகிந்தவுக்குப் பின்னால் வாலாட்டிக் கொண்டுபோய் நின்றால் கிழிஞ்சமாதிரித்தான்.

ஏன், ... அடைக்கலநாதன், பிராமசந்திரன், .. போன்றோர்களை விட்டு விட்டீர்கள்??? .... இவர்கள் அன்று செய்யாததா???? இவர்கள் சில காலத்துக்கு முன் சேர்ந்தார்கள்!! அவர்கள் தற்போது சேர்ந்திருக்கிறார்கள் ...!! ... இணைபவர்கள் நிரந்தரமாக மக்களுக்காக இணைந்தால் சரி!!

... செய்ய வேண்டியவற்றை புலத்தில் செய்யுங்கள், அவர்களை தற்போதைக்காவது பேசாமல் விடுவதே சிறந்தது, ... அங்கிருக்கும் நிலைமைகளை கருத்தில் கொண்டு!!!

... இந்த சிறிதரன் உட்பட ஏனைய பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் அச்சுறுத்தலின் மத்தியில் ... இந்த உயிர் அச்சுறுத்தல்கள் நிலத்தில் மட்டுமல்ல, புலத்தில் இருந்தும்!!! ... பாவம் ... மயிரிளையில் உயிர் தப்பியவராம்!!!

Edited by Nellaiyan

ஏன், ... அடைக்கலநாதன், பிராமசந்திரன், .. போன்றோர்களை விட்டு விட்டீர்கள்??? .... இவர்கள் அன்று செய்யாததா???? இவர்கள் சில காலத்துக்கு முன் சேர்ந்தார்கள்!! அவர்கள் தற்போது சேர்ந்திருக்கிறார்கள் ...!! ... இணைபவர்கள் நிரந்தரமாக மக்களுக்காக இனைந்தால் சரி!!

... செய்ய வேண்டியவற்றை புலத்தில் செய்யுங்கள், அவர்களை தற்போதைக்காவது பேசாமல் விடுவதே சிறந்தது, ... அங்கிருக்கும் நிலைமைகளை கருத்தில் கொண்டு!!!

... இந்த சிறிதரன் உட்பட ஏனைய பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் அச்சுறுத்தலின் மத்தியில் ... இந்த உயிர் அச்சுறுத்தல்கள் நிலத்தில் மட்டுமல்ல, புலத்தில் இருந்தும்!!! ... பாவம் ... மாயிரிளையில் உயிர் தப்பியவராம்!!!

போராட்டக் அமைப்பான புலிகள் தேர்தலில் ரனிலை வெல்லவிடாது மகிந்தாவை வெற்றி பெற செய்தது போல் ஏதும் ராஜதந்திரம் நாங்களும் இங்கு இருந்து செய்யல்லாமா?

:(:)

பணம்கொடுத்து வேட்பாளர்களை விலைக்கு வாங்க அரசு முயற்சி; ஜனாதிபதியின் மகனே நேரடியாக களத்தில் என்கிறது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி வேட்பாளர்களைப் பணம் கொடுத்து வாங்க அரச தரப்பு முயற்சிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

"கூட்டமைப்பின் கரைச்சிப் பிரதேச வேட்பாளர் 4 பேரை பலவந்தமாக அழைத்துச் சென்ற, நாமல் ராஜபக்ஷ போட்டியில் இருந்து விலகுமாறும் அதற்காக லட்சம் லட்சமாக பணம் கொடுப்பதாகவும் "மிரட்டி உள்ளார்'' என்றார் சிறீதரன்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளுக்குத் தேர்தல் நடக்கிறது. பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் உதய சூரியன் சின்னத்திலும் கரைச்சி பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திலும் கூட்டமைப்பு போட்டி இடுகின்றது.

இதில் கரைச்சி பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களான மாரியப்பன், சுகந்தன், பொன்னையா இராமலிங்கம், இராமசாமி வடிவேல், சின்னையா சுப்பையா போன்றோரே பல வந்தமாக நாமலிடம் அழைத்துச்செல்லப்பட்டார்கள் என்று முறையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அரசியல் கட்சிகளுடனான கூட்டத்தில் வேட்பாளர்கள் தமக்கு நடந்தவற்றை விளக்கினார்கள்."திடீரென என்னிடம் வந்த நான்கைந்து பேர் என்னைப் பலவந்தமாக நாமலிடம் அழைத்துச் போனார்கள். அங்கு சென்றதும் இவர்கள் என்னைக் கடத்தி வந்திருக்கிறார்கள் என்று நாமலிடம் முறையிட்டேன். அவர்கள் தெரியாமல் செய்துவிட்டார்கள் என்றார்'' எனக் கூறினார் வேட்பாளர் சுப்பையா.கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்குத் தனக்கு 5 லட்சம் ரூபா தருவதற்கு தயார் என்று நாமல் கூறினார் எனவும் அவர் தெரிவித்தார்.அரசுடன் சேர்ந்து கொண்டால் இன்னும் அதிக பணம் தருவதாக நாமல் வாக்குறுதி அளித்தார் என்றும் அவர்

குறிப்பிட்டார்.வேட்பாளர்களை நாமலுடன் வைத்து ஒளிப் படங்கள் எடுதுள்ளார்கள். அவற்றை ஆதாரமாகக் காட்டி கூட்டமைப்பு வேட்பாளர்கள் அரசுடன் சேர விருப்பம் என்பது போன்ற பொய்ப் பிரச்சாரங்களில் அரச ஊடகங்கள் மூலம் ஈடுபடப்போகிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது என்றார் நாடாளு மன்ற உறுப்பினர் சிறீதரன்.

http://onlineuthayan.com/News_More.php?id=47363442022406154

தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளின் இப்படியான அறிக்கை வெகு சாதாரணம்.

தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகலுக்கு தேவை வாக்கு மட்டுமே? அது எப்படிவந்தால் என்ன.

இதற்கு போய் கொளகை விளக்கங்கள்,புத்திமதிகள் வேறு.

சில கேள்விகள்.

1. யார் இந்த புலம் பெயர் மக்கள்?

2.இவர்களில் நாடு எது? இவர்களின் மொழி எது?. இவர்களுக்கு உறவினர்கள் யார்? ஈழநாட்டை விட்டு வெளீயேறிய அகதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?.

3.இவர்கள் யாருக்காக பாடுபடுகிறார்கள்?.

4. இவர்கள் தமது விடுதலைக்கு தாம் உழைக்க விரும்புகிறார்களா?.

இலங்கை இந்தியாவிற்கு காட்டிய தண்ணியைப்பற்றி இதுவரையில் எந்த காங்கிரஸ் அரசியல் வாதியும் வெளியே பேசியதில்லை. ஏன்?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.