Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு மேலும் நெருக்கடி: 17 பேரைக் கொண்ற இராணுவத்தினர் எங்கே ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு மேலும் நெருக்கடி: 17 பேரைக் கொண்ற இராணுவத்தினர் எங்கே ?

Thursday, August 4, 2011, 22:55சிறீலங்கா, தமிழீழம்

4 ஓகஸ்ட் 2006 முதூர், போரின் வடுக்கல்லோடு அந்த நகரம் உறங்கிகொண்டிருக்கும் போது, அந்த நகரத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருந்த,….பட்டினிக்கெதிரான அமைப்பின் காரியால வளாகத்தில் மயான அமைதி, அந்த அமைப்பிற்கு வேலை செய்த 17 தொண்டர்கள் ஒவ்வொருத்தரும் தலையில் சுடப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடல்கள் அந்த வளாகத்திற்கு வந்த தொண்டர்களால் கண்டுபிடிக்கப்பட்ட போது,…..

உலகத்தில் உள்ள அத்தனை தொண்டு நிறுவனங்களும் இந்த கொடூரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். முதூர், திருகோணமலை முல்லைத்தீவு நகரங்களைச் சேர்த்த இந்த தொண்டர்களின் படுகொலையை கண்டு அவர்களின் உறவுகள் படு துயரத்திலும் தமிழீழ மக்களும் இந்த துயரத்தில் ஆழ்ந்தனர்.

பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் இத் தொண்டு அமைப்பின் 17 தொண்டர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக சுயாதீன விசாரணைகள் ஆரம்பமானது. விசாரணை நடத்தியவர்கள் அது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என அறிவித்தனர்.

சுடுவதற்கு பயன்படுத்திய தோட்டாக்கள் மற்றும் பிற பொருட்களை பகுப்பாய்வுசெய்த ஆணைக்குழு இதனை இலங்கை இராணுவம் செய்துள்ளது எனத் திட்டவட்டமாகக் கூறினர். ஆனால் இலங்கை அரசு அதனை மறுத்தது. தற்போது இக் கொலைகள் நடைபெற்று 5 வருடங்கள் ஆகியும் கொலைக்கு காரணமானவர்கள் இதுவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படவில்லை.

இக் கொலைகள் குறித்து இலங்கை அரசுக்கு மேலதிக அழுத்தங்களைக் கொடுக்க பி.பி.சி செய்திச் சேவை மனித உரிமை அமைபோடு இணைந்து, இது குறித்த செய்திகளை முதன்மைப் படுத்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் இக் கொலைகள் தொடர்பாக இலங்கை அரசு தொடர்ந்தும் மெளனம் காத்து வருகிறது. இக் கொலைகளைப் புரிந்த இராணுவத்தினர் சிலர் உயரதிகாரிகளாக பதவிபெற்று கடமையில் இருப்பதாகவும் தெரிவிக்கபடுகிறது.

http://www.tamilthai.com/?p=23350

அவரகளெல்லாம் உயர் பதவிகளில் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இறத்தவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடைய என்றோ ஒர் நாள் ஏதோ ஒரு வடிவில் இவர்கள் கட்டாயம் தண்டனை பெற்றே தீருவார்

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியில் விசேட காவல் பிரிவில் இருப்பார்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.