Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு விதித்த காலக்கெடுவை ஏற்க சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு!

Featured Replies

கூட்டமைப்பு விதித்த காலக்கெடுவை ஏற்க சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு! -

பேச்சுவார்த்தை தொடருமா?

சிறிலங்கா அரசாங்கத்துடன் நேற்று (04.08.11) இடம்பெற்ற பத்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் காத்திரமான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படாததைத் தொடர்ந்து கடும் அதிருப்தி கொண்ட நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து இரு வாரங்களுக்குள் சிறிலங்கா அரசாங்கம் தமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.

இக்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சிறிலங்கா அரசாங்கம் எழுத்து மூலமான பதிலை வழங்காது விட்டால், பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக நேரிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையை ஏற்றுக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இது குறித்து இப்பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா அரசாங்கத் தரப்பின் செயலாளராக கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைபபின் அணுகுமுறை விடுதலைப் புலிகளின் பாணியை ஒத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெறவுள்ள அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்காக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட திகதியை ஏற்றுக் கொள்ள கூட்டமைப்பு மறுத்து விட்டதாகவும் இவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றும்படி காலக்கெடு விதித்துள்ளதாகவும், இக்காலக்கெடுவுக்குள் அந்நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டாலே பேச்சுவார்த்தைகளை தொடர முடியும் என கூட்டமைப்பு கூறியுள்ளதாகவும் சஜின் வாஸ் குணவர்த்தனவால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிமுறை நிர்வாகக் கட்டமைப்பு, மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் ஒதுக்கப்படும் துறைகள், வரி மற்றும் நிதி அதிகாரங்களின் பகிர்வு ஆகியன தொடர்பான பதிலை 10 நாட்களுக்குள் சிறிலங்கா அரச தரப்பு எழுத்து மூலம் வழங்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இவை குறித்து ஆராய்ந்தே முடிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனத் தாம் கருதவில்லை என்றும், ஏனைய தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் காலக்கெடு பேச்சுவார்த்தைகளில் சாதகமான பெறுபேறுகளை அடைவதற்குரிய ஆக்கபூர்வமான செயற்பாடாக அமையும் எனத் தாம் கருதவில்லை என்றும் சஜின் வாஸ் குணவர்த்தனவால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் இரு வாரங்களுக்குள் எடுக்காது விட்டால், கடந்த எட்டு மாதங்களாக இவ்விரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடையும் நிலைக்கு உட்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறிலங்கா அரசாங்கத்துடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி எனும் வகையில் சர்வதேச சமூகத்துக்கு ஒரு வெளித்தோற்றத்தை ஏற்படுத்த இப்பேச்சுவார்த்தையை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அம்மக்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள், உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், வடக்குக் கிழக்கில் செயற்படும் ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை களைதல் மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சினை ஆகியன குறித்து சிறிலஙடகா அரசாங்கத்துடன் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஆராயப்பட்டு வந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால், சிறிலங்கா அரசாங்கத்துடன் இதுவரை இடம்பெற்று வந்த பத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் இவ்விகாரங்கள் தொடர்பில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இப்பேச்சுவார்த்தைகளின் போது சிறிலங்கா அரசாங்கத்திடம் சமர்ப்பித்த யோசனைகள் தொடர்பாக இதுவரை எவ்விதமான பதிலும் வழங்கப்படவில்லை என இவ்வறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான விவகாரத்தில் எவ்விதமான ஆரோக்கியமான விவாதங்களையும் மேற்கொள்ள முடியவில்லை எனவும், இத்தகைய சூழலில் பேச்சுவார்த்தை என்ற பேரில் 'ஏமாற்று வழிமுறையை' தொடர வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

சமஸ்டி அமைப்பின் கட்டமைப்பு, மத்திய - மாகாண அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகியன குறித்து சிறிலங்கா அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இன்னும் இரு வாரங்களில் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்விகாரங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் பதில் கிடைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை தொடர முடியும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வறிக்கையில் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={ED5D5900-FF69-4E7D-8A93-CC4A5BE4C8A1}

  • தொடங்கியவர்

விடுதலைப் புலிகளைப் போன்று நடந்து கொள்கிறது கூட்டமைப்பு

விடுதலைப் புலிகள் இயக்கம் போன்று நடந்து கொள்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று அரசு குற்றஞ்சாட்டி உள்ளது. நேற் றைய 10ஆவது சுற்றுப் பேச்சுக்களைத் தொடர்ந்து அரச பேச்சுக் குழுவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுஜின் வாஸ் குணவர்த்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அடுத்த சுற்றுப் பேச்சுக்கான திகதியைத் தீர்மானிக்க கூட்டமைப்பு மறுத்து விட்டது. அரசியல் தீர்வு தொடர்பான 3 கோரிக்கைகளுக்கு அரசு 10 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது. கூட்டமைப்பு குறிப்பட்ட 3 விடயங்கள் குறித்தும் விவாதிப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்தது. சம்பந்தப்பட்ட எல்லோரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்திலேயே நேர்மையான நீடித்திருக்கக்கூடிய தீர்வு ஒன்றை எட்ட முடியும்.

கூட்டமைப்பு முன்வைத்துள்ள மூன்று விடயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. நாட்டின் தேசியப்

பிரச்சினை தொடர்பாக அரசின் பிரதான கட்சியான சுதந்திரக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் இது பற்றியே பேசப்பட்டு வருகின்றது. இந்த முக்கிய பரச்சினைகள் தொடர்பாகப் பரந்தளவிலான கலந்துரையாடல்களை நடத்தாமல் இப்போது உடனடியாகத் தீர்மானம் ஒன்றுக்கு வருவது சாத்தியமில்லை.

இத்தகைய ஒரு நிபந்தனையை கூட்டமைப்பு விதிக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. இது விடுதலைப் புலிகளின் நடவடிக்கையைப் போன்று உள்ளது. மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு படிப்படியான அணுகுமுறையைக் கொண்ட நடவடிக்கை மூலமே சாதகமான பெறுபேறு ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்தகைய ஒரு இலக்கை அடைவதற்கே அரசு முயற்சிக்கிறது. அதற்காக கடந்த பல மாதங்களாக பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்களுடன் அரசு கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.

எந்த ஒரு சமூகத்தையும் சுதந்திரக் கட்சி மட்டும் பரதிநித்துவப்படுத் தவில்லை. அதுபோலவே கூட்டமைப்பும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி அல்ல. இத்தகைய ஒரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் இருந்து விலகிக் கொண்டதால் அரசு இனி, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஆராயும். எல்லா மக்களதும் பிரதிநிதிகளும், அரசமைப்பல் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புக் குறித்த தமது சிந்தனையுடன் கூடி விவாதிக்கக் கூடிய ஒரு இடமாக, மன்றமாக தெரிவுக் குழுவே அமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று அரசு எதிர்பார்க்கிறது

http://www.alaikal.com/news/?p=78157

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பையும் அதன் கொடியையும் தடை செய்ய வேண்டும்.கூட்டமைப்பினர் பிரிவினையைத் தூண்டும் பயங்கரவாதிகள் என்று சிறிலங்கா உலக நாடுகளுக்குச் சொன்னாலும் ஆச்சரியமில்லை.

மாபுளிக்கிறது அப்பத்துக்கு நல்லதுதானே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளைப் போன்று நடந்து கொள்கிறது கூட்டமைப்பு

http://www.alaikal.com/news/?p=78157

Tamil People gave the mandate to LTTE through their approval for an armed struggle....

Tamil People gave the mandate to TNA through their votes for a political struggle....

SL Government is blaming "Tamil people are behaving like Tamil People" ?!?!?!?!?!?!

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் இயக்கம் போன்று நடந்து கொள்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.

மொத்தத்தில் தமிழருக்கு எந்த ஒரு அரசியல் தீர்வையும் வழங்க சிங்களவன் தயாரில்லை என்பதையே உணர்த்துகின்றது.

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்

விடுதலைப் புலிகளைப் போன்ற நிபந்தனைகளை விதிக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்தது.

இலங்கை அரசாங்கத்துடனான பேச்சில் இருந்து விலகி இரண்டுவார காலக்கெடு வழங்கியமை தொடர்பாக கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சார்பில் பேச்சில் கலந்து கொண்ட சஜின்வாஸ் குணவாத்தன ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் உண்மைக்கு மாறானதெனவும், பேச்சில் இருந்து விலகியமை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை சிங்கள, ஆங்கில ஊடகங்களில் வெளியிடப்படவில்லையெனவும் மாவை சேனாதிராஜா குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக எமது கொழும்பு செய்தியாளரிடம் கருத்து வெளியிட்ட அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளைப் போன்ற நிபந்தனைகள் எவற்றையும் முன்வைக்கவில்லையெனக் கூறினார்.

அரசாங்கம் வேண்டுமென்றே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை கொச்சைப்படுகிறதெனவும், யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் சென்று விட்ட பின்னரும் வடக்கு கிழக்கில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர்கள் யாழ்ப்பாணத்துக்கு போவதும், ஜனாதிபதி தமிழில் பேசுவதும்தான் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்று அரசாங்கம் சர்வதேசத்துக்கு காண்பிப்பதாகவும், ஆனால், அரசியல் உரிமைதான் அவசியமென்பதை தமிழ் மக்கள் உள்ளுராட்சி தேர்தலில் நிரூபித்து விட்டதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

இந்த நிலையில் மீண்டும் மீண்டும் இனவாத கருத்துக்களை தூண்டி தமிழ் மக்களை ஆத்திரமடையச் செய்ய வேண்டாமென மாவை சேனாதிராஜா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8857

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.