Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

No Aryan Invasion---New and recent genetic proof.

Featured Replies

யாரும் எனக்குக் கட்டுப்படுவதாக நான் எங்கும் கூறவில்லை, நான் சொல்லாததை எழுதி அதற்கு விளக்கம் அளிப்பது கருத்துத் திரிப்பு அல்லது மோசடி.

களத்தில் பல காலமாக கருத்தியல் வன்முறயில் ஈடுபட்டு வருவது நீர் , நான் அல்ல.உமது தனி நபர் தாக்குதலால் களத்தில் இருந்து பலர் விலகி உள்ளனர்.உமது கருத்தாடல் பாணி என்பது தலைபோடு கருத்துக்களை முன்வைக்காது ,கருத்தாளன் மேலான தனி நபர் தாக்குதல் ஆகும். கருத்துக்களைத் திரித்து கூறாத கருதுக்களைக் கூறி அவற்றிற்கு விளக்கம் எழுதுவது, சம்பந்தம் இல்லாத விடயங்களைக் கொண்டு வந்து விவாத்ததைத் திசை திருப்புவது பின்னர் அவற்றை தனி நபர் தாகுதல்களாக மாற்றி தலைப்பை பூட வைப்பது.உமது கருத்தாடலால் பூட்டப்பட்ட தலைப்புக்கள் அதற்கு சான்று பகிரும். நீர் எனக்கு எதிராக எவ்வளவு தனி நபர் தாக்குதல்களை நடாத்தி உள்ளீர்.உமது இந்த தாக்குதலால் விலகிச் சென்ற எழுத்தாளர்கள் உணர்வாளர்கள் பலர்.மேலும் உமது இந்தக் கருதியல் வன்முறயால் என்ன செய்து கொண்டிருகிறீர் என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்க வேணும் என்று நினைக்கிறேன்.

அதற்கு முதலில் உமது கருத்தியல் தளத்தின் அடிப்படைகள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.

இவை எல்லாம் உமது யாழ்க் கள கருத்துக்களின் அடிப்படையிலேயே எடுக்கப் பட்டன மற்றப் படி உமது தனிப்பட்ட விபரங்களின் அடிப்படயில் அல்ல.அதற்கான தேவையும் எனக்கில்லை.

உமது கருத்தியல் தளத்தின் அடிப்படைகள் என்ன?

நான் ஒரு பார்ப்பனன் ஆகவே இங்கே தமிழரின் கலைய பார்ப்பனர் உருமாற்றினர் என்று ஒருவர் கூறுவாராகில் அவருக்கு எதிராக என்ன எதிர்த் தாக்குதலை மேற்கொள்ள வேண்டும், அதற்கான எல்லா வழிமுறைகளையும் பாவிக்க வேண்டும் .இணயத்தில் இருந்து எங்கெல்லாம் தேடி இதை இல்லை என்று நிருபீக்கலாம் என்று கூகிழ் தேடற் பொறியில் பார்க்க வேண்டும்.இவ்வாறு ஏன் செயற்படுகிரீர்? நீர் முதலில் உம்மை ஒரு பார்ப்பனனராகவே கருதிகிறீர்,தமிழராக அல்ல.மேலும் ஆரியர்-திராவிடர் என்கின்ற நிலை வரும் போது நான் ஒரு பார்ப்பனர் நான் ஒரு ஆரியர் .ஆகவே வரலாற்று ரீதியாக ஆரியர் வெளியில் இருந்து வந்தவர்கள் அவர்கள் இங்கே வந்த ஆக்கிரமிப்பாளர் என்கின்ற வராலாற்று உண்மையை மறுதலித்து எழுத வேண்டும் என்ற நோக்கில் ,இந்துதுவ வாதிகளினால் நடத்தப் படும் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்ப்பதற்காக அவர்களுடன் இணைகிறீர்.

இவ்வளவையும் சொல்லிக் கொண்டு தமிழர் ஆல் இவை ஒன்றுமே முடியாது என்று சொல்லிக் கொண்டு , நான் ஒரு ஈழத் தமிழன்,ஈழத் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரளவாளன் என்று சொல்லுகிறீர்.

எது ஏன்?அதற்குக் காரணம் இன்று ஈழத் தமிழரின் தேசியம் என்பது அசைக்க முடியாத ஒரு அரசியற் சக்தியாக பலம் பெற்று இருப்பதே.ஆனால் அந்த ஈழத் தமிழ் தேசியம் என்பது என்ன? அதன் அரசியற் அடிப்படைகள் எங்கிருந்து வருகின்றன அதன் கருத்தியல் இயங்கு தளம் தான் என்ன?

நாம் முதலில் தமிழர் ,எமது பண்டய வரலாறு தமிழ் நாட்டுடன், தமிழ் அரசர்களான சேர சோழ பாண்டியருடன் பின்னிப் பிணைந்தது.ஆகவே தமிழ் நட்டின் வரலாற்றையும் எமது வரலாற்றையும் இரு வேறு வரலாறுகளாகப் பிரிக்க முடியாது.அடிப்படையில் நாம் ஒரே அடியில் இருந்தே வருகிறோம் .அந்த அடி எது , அது திராவிடர் என்னும் அடியே ஆகும்.

ஆகவே பிரித்தானிய வருகையின் பின் இரு வேறு நாடுகளில் நிலை கொண்ட ஈழத் தமிழரும் இந்தியத் தமிழருக்குமான தமிழ்த் தேசிய அடிப்படை என்பது பல் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று மூலாதாரங்களில் இருந்தே வருகிறது.

ஆரியர்-திராவிடர் என்னும் கருத்தியலை மறுப்பதன் மூலம் அதைச் சிதைப்பதன் மூலம் நீர் தமிழ்த் தேசியத்தின் வரலாற்று மூலாதாரங்களைத் திருக்க விரும்புகிறீர்,இதன் நோக்கம் தான் என்ன?

ஈழத்திலே இப்போது ஆரியர் திராவிடர் என்னும் முரண் இல்லைத் தான் ஆனால் ஆரியரின் எச்சமான சாதியம் இருக்கிறது .அது சிங்களத் தமிழ் முரணால் அமிழ்ந்துள்ளது ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தில் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமும் இணைந்துள்ளது.இங்கே வருகிறது உமது அடுத்த சாதிய அனுதாபதின் பாற்பட்ட திரிப்பு.இனப் பிரச்சினை கூர்ப்படய முன் நிகழ்ந்த சாதியப் போரட்டங்களை நீர் மறுதலித்துள்ளீர்.அத்தோடு பார்ப்பனீயம் சாதிய வேறுபாடுகளுக்கு அடிப்படை அற்றது என்று வாதிட்டுளீர்.ஆகவே இங்கே நீர் வரலாற்று ரீதியாக நிகழ்த்தப் பட்ட நிகழ்ந்து கொண்டிருகிற அடக்குமுறைகளை இல்லை என்று நிறுவி, தமிழர்கள் அடக்கப்படக் கூடியவர்கள் அவர்களை அடக்கக் கூடிய திறமை சாலிகள் பார்ப்பனர், என்று உமது சாதீயச் செருக்கை வெளிக்காட்டி உள்ளீர் .

ஆனல் இதற்கு எதிர்மறையாக தமிழ்த் தேசியம் என்ன கூறுகிறது அது சாதிய வேறு பாடுகள் அற்ற தேசியத்தை உருவாக்க விரும்புகிறது அது நீங்கள் நாங்கள் என்ற வேறுபாட்டை மறுதலிக்கிறது.தமிழரில் ஒரு பிரிவினரே பார்ப்பனர் என்கின்ற உமது கருத்தியலை நிராகரிக்கிறது. சாதியம் அற்று எல்லோரும் தமிழரே என்பதையே கூறி நிற்கிறது. நீர் அந்த வேறு பாடுகளைத் தொடர்ந்தும் பேண முயற்ச்சிகிறீர்.பார்ப்பனத்த

  • Replies 128
  • Views 17.8k
  • Created
  • Last Reply

வெல்டன்...! கம்மோன் இன்னொரு ரவுண்டு..! ராஜாதிராஜாவின் கட்டுரை உறுதிப்படுத்தப்பட்டால் அது நிச்சயம் பலரின் அடிப்படை ஆதாரங்களையே தகர்க்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே அது யதார்த்தப் புறநிலைகளைக் கடந்து எதிர்க்கப்படுகிறது இங்கு..என்ற உண்மை அவரவர் வாயாலேயே வந்திருக்கிறது. இதுதான் இங்கு நாம் காட்ட முனைந்ததும்..! கமோன்..தொடர்ந்து எழுதுங்கோ..உங்கள் வேசங்கள் உங்களாலேலே களையப்படட்டும்..! :wink: :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் உண்மையாகிவிடமுடியாது. தென் கொரிய விஞ்ஞானி மனிதரைக் "குளோனிங்" செய்தேன் என்று பல கட்டுரைகள் படைத்தார். என்னவாயிற்று?

மேலும் 5000 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஆரியர் வருகையை எவரும் தனியே ஜீனோமை வைத்து மட்டும் மறுதலிக்கமுடியாது. சமூக, பண்பாட்டு, கலாச்சார, மொழி மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. இலகுவான முறையில் எளிமையான தரவுகளைக் கொண்டு எதையும் நிறுவமுடியாது. புள்ளிவிபரவியல் என்பதே uncertainity பற்றிய கணித ஆராய்ச்சி. இதை வைத்து எதையும் certain என்று சொல்லமுடியாது.

உ.ம். MMR குழந்தைகளுக்கு autism ஏற்படுத்தும் என்று கூறியது.

ராஜாதிராஜ மற்றும் குருவியார் இட்ட புனைகதைகள் எல்லாமே அம்பலப்படுத்தப்பட்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி நடந்த கலந்துரைஆடலின் பின் கலிபோனிய பாடவிதனக் குழுவினரால் எடுக்கப் பட்டு விட்டன.இந்த வேலையைச் செய்த இந்துதுவக் குழுவினர் அடயாளம் காட்டப் பட்டு இவர்களின் மோசடி அமெரிக்க பதிரிகைகளில் இப்போது வரத் துவங்கி உள்ளது.இதற்கான ஆதாரங்கள் எல்லாம் கிழே உள்ள இணைப்பில் உள்ளன.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=9111

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.