Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியர்கள் எப்போதும் ஈழத்தமிழர்களுடன் தான்: யஸ்வந்த் சிங்கா

Featured Replies

சனிக்கிழமை , ஆகஸ்ட் 13, 2011

Yasvansingha%20and%20Ram%20vilas.jpg

இந்தியர்கள் எல்லோரும் உறுதியாக ஈழத் தமிழர்களை ஆதரிக்கின்றோம் என்பதை உலகுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்'' என்று கூறியுள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜஸ்வன்சிங்ஹா.

மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் புதுடில்லியில் இந்திய நாடாளுமன்றம் முன்பாக நேற்று நடத்திய, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதாக் கட்சியின் ஈழத் தமிழர் ஆதரவை வெளிப்படுத்தினார் சின்ஹா. சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டால் அதிலும் தான் கலந்துகொள்வார் என்று அவர் தெரிவித்தார்.

வைகோ தலைமையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான யஸ்வந் சின்ஹா, பீஹார் மாநிலத்தின் பலம் மிக்க கட்சியான லோக் ஜனஷக்திக் கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோரும் கலந்து கொண்டனர். "நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.வாருங்கள் எல்லோருமாகப் படகுகளில் புறப்பட்டுச் சென்று, இலங்øக விவகாரத்தில் நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று உலக நாடுகளுக்குச் சொல்வோம். ஆயுதங்கள் இன்றி இலங்கையின் மீது தாக்குதல் ஒன்றை நாம் தொடுப்போம். இந்தியர்கள் உறுதியாக ஈழத் தமிழர் களுக்கு ஆதரவளிக்கிறோம் என்பதை இந்த உலகுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின் றோம்'' என்றார் சின்ஹா.

இலங்கையில் நடந்த இனப்படு கொலைகளுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தும் வரைக்கும் இதனை நாம் விடப்போவதில்லை என்றும் சின்ஹா கூறினார். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை காரணமாகவே, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது என்று அவர் கண்டித்தார். சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்துவிடும் என்ற காரணத்தாலேயே கொழும்புக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித் திருப்பது வெட்கக்கேடானது என்றும் சின்ஹா குற்றஞ்சாட்டினார்.

Bookmark/Search this post with:

http://www.eelanatha...%AE%95%E0%AE%BE

சுயாட்சி முறை அரசியல் அமைப்பை ஏற்படுத்த பாரதியஜனதா கட்சி யை நாங்கள் வலியுறுத்தலாம்.

ஒரு நாட்டை பிரி என்று அவர்கள் சொல்ல முன் வர மாட்டார்கள்.

யதார்த்த நடைமுறை ஒன்றை இந்திய அரசியல் கட்சிகள் முன் வைக்க வேன்டியது தமிழக உணர்வாளர்களின் பொறுப்பாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுத்து இருந்து பார்ப்போம் :)

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஏதாவது எமக்கு செய்யவிரும்பியிருந்தால் இவர்கள் ஆட்சியில் இருந்தபோது அதுவும் பெர்ணாண்டோ பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது செய்திருக்கணும்.

தற்போதைய மேடைப்பேச்சுக்கள் வை.கோவின் மேடைப்பேச்சுக்கு இணையாக தாங்களும் பேசணும் என்றவகையிலேயே தெரிகிறது. :( :(

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஏதாவது எமக்கு செய்யவிரும்பியிருந்தால் இவர்கள் ஆட்சியில் இருந்தபோது அதுவும் பெர்ணாண்டோ பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது செய்திருக்கணும்.

தற்போதைய மேடைப்பேச்சுக்கள் வை.கோவின் மேடைப்பேச்சுக்கு இணையாக தாங்களும் பேசணும் என்றவகையிலேயே தெரிகிறது. :( :(

விசுகு அண்ணா.. பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்த காலங்களில் ஈழத்திற்கு உதவிகள் செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யவில்லை..! அவர்களின் காலங்களில் புலிகளின் எழுச்சியே அதற்குச் சான்று. :huh:

புலிகளின் காலத்தில் இருந்த சிக்கல்மிக்க நிலைமைகள்தான் அவர்கள் செயற்படாமைக்குக் காரணம்..! தற்போது அச்சிக்கல்கள் நீங்கிய நிலையில் அவர்களின் கருத்துக்களை வரவேற்பதே ஆரோக்கியமானதாகும்..! :rolleyes:

சில தமிழக உறவுகளின் கருத்துக்கள் தினமணியில் இருந்து :

-----------------------------------------------------------------------------------------

அற்புதமான ஒரு செயல். திரு வைகோ அவர்களே உங்களால தான் இதை செய்யமுடியும். இதுதான் மிகவும் தேவையான ஒரு முயற்சி . இதற்கு தமிழ் நாட்டில் பதவி சுகம் தேடி பணம் சேர்க்க நினைக்கும் முக்கிய இரு கட்ச்சிகள் கை கொடுத்தால் அன்றிலிருந்து தமிழ் ஈழ விடுதலையை நோக்கிய பயணம் விரைவு படும்..நமக்கும் இந்திய அமைப்பின் மேல் மேலும் பாசமும் பற்றும் வளரும். ராம் விலாஸ் பசவண் மற்றும் யஷ்வந்த் சின்ஹா விற்கும் மிக நன்றி. திரு.வைகோ சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் நடத்திய மாநாட்டில் அன்றைய உள்துறை அமைச்சாரான திரு.அத்வானி மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் கலந்து சிறப்பித்தனர் . பெரும் கூட்டம் அது. துரோகிளால் உடைத்திராத ம.தி.மு.க அன்று இருந்ததது . தி மு காவில் இன்று அத்துரோகிகள் உள்ளார்கள். (தொடரும்)

By P .Padmanaabhan

8/13/2011 5:12:00 AM

தமிழ் ஈழம் அமைவது என்பதும் அதற்குரிய முயற்சிகளும் எவ்வளவு கடின செயல்கள் என்பதும் எத்தனை தடைகளை உடிக்கவேண்டி இருக்கும் என்பதையும் இன்று தமிழகத்தின் மேற்கு பகுதியில் வெளியாகும் மூன்று ஆங்கிலசெய்தி ஏடுகளிலும் ஒரு வரி கூட வெளிஆகவில்லை! ஒரு ஆங்கில நாளேட்டின் வலைத்தள பதிப்ஊயளும் தேடினேன். இல்லை.வலைத்தள பதிப்புகளின் இதற் செய்தி ஏடுகளிலும் ( தினமலர் தவிர்த்து ) செய்தி எதுவும் நான் காண முடியவில்லை! அவ்வளவு தூரம் தமிழ் ஈழமும் திரு.வைகோ-வும் இவ்வேடுகளுக்கு தவிக்கபட வேண்டியவை. செய்திகளை தமிழ் பேசும் மக்கள் படித்துவிடக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம்! எனவே நாம் ஒவ்வருவரும் அவரவர் சூழ்நிலைகளில் நிறைய தமழ் ஈழ மக்களுக்கும் தமிழ் ஈழ தமிழர்களுக்கும் செய்ய வேண்டும்.

By P .Padmanaabhan

8/13/2011 4:42:00 PM

நீங்கள் கிணற்றுக்குள் இருந்து கொண்டு கூச்சல் போடுகிறீர்கள் ஒரு பருப்பும் வேகாது !!! பெ.ரெங்கநாதன், கொல்கத்தா

By பெ.ரெங்கநாதன்

8/13/2011 4:39:00 PM

ஏய் ....சொரணை கெட்டத் தமிழா நீ டெல்லிக்குப் போவதை நிறுத்தடா !....எதிரியின் வாசல் படியினை நாம் மிதிக்கலாம் ! ஆனால் துரோகியின் வாசற்ப் படியினை நாம் மிதிக்கக் கூடாது ! அமெரிக்காவிடம் மனு கொடு !....சீனாவிற்கு தந்தி கொடு !!....பாகிஸ்தானிற்கு வேண்டுகோள் விடு !! நிச்சயம் ஒரு நன்மை கிடைக்கும் !! உன் கண்ணீரை இரககமற்ற இந்திய தேசத்திடம் காட்டாதே !!! வாழ்க தமிழ் இனம் !!! @ rajasji

By rajasji

தமிழ்நாடு, தமிழ்மண் தமிழர்களுக்கே என்ற உங்கள் உயர்ந்த பண்பு மேலும் வேரூன்றி வளர வாழ்த்துக்கள் வைகோ ஐயா.. உங்களைப்போல் தமிழுணர்வு கொண்ட சமூக நோக்காளர் ஏன் முதலமைச்சராகி தமிழ்நாட்டை ஒரு வல்லரசு தனித்தமிழ் நாடாக மாற்றக்கூடாது??? அதற்கும் முயற்சி செய்யுங்கள்.. எங்களைப்போல் இளைஞர்கள் உங்களுக்கு துணையாக நிற்போம்.. இது உறுதி....

By கதிரவன் தங்கராஜ்

8/13/2011 11:21:00 AM

  • கருத்துக்கள உறவுகள்

என்னும் நம்புவதற்கு நாம் என்ன அடிமுட்டாள்களா? என்னைபொறுத்தவரை இந்தியாவை ஒருபோதும் நம்பத்தயாரில்லை நம்பி ஏமாந்தது போதும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.