Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹசாரே போராட்டத்திற்கு அனுமதி ரத்து: டில்லி போலீசார் அதிரடி: அடுத்து என்ன நடக்கும் ?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுடில்லி: காந்தியவாதியான அன்னா ஹசாரே நாளை ( செவ்வாய்க்கிழமை) நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வழங்கிய அனுமதியை போலீசார் ரத்து செய்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஹசாரே குழுவினர் டில்லியில் நாளை அணுக வேண்டிய விஷயங்கள் குறித்து அவசரமாக ஆலோசித்து வருகின்றனர். அனுமதியை மீறும் பட்சத்தில் டில்லியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை எற்படும். இதனையடுத்து டில்லி நகர் முழுவதும் போலீசார் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அரசு நினைத்தது போல் வரைவு மச‌ோதா : ஊழல் குற்றம் புரிவோரை தண்டிக்கும் லோக்பால் மசோதாவில் மாற்றம் செய்ய வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருந்தது நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான அலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கமிட்டி அமைத்து அப்போதைக்கு இந்த பிரச்னைக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் சமூக ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள் முற்றிலும் இந்த மசோதாவில் புறக்கணிக்கப்பட்டு அரசு நினைத்தது போல் கொண்டு வந்திருக்கிறது. நடப்பு பார்லி., கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவாதத்திற்கு பின்னர் மசோதா நிறைவேற்றப்படும் . ஹசாரே குழுவினர் பரிந்துரைத்த அம்சங்கள் இல்லாமல் இந்த மசோதா முழு வடிவம் பெற்றால் எவ்வித பலனையும் தராது என்றும் இது ஒரு ஜோக்பால் என்றும் விமர்சித்தனர்.

நிபந்தனையுடன் கூடிய அனுமதி: இந்நிலையில் சுதந்திர தினநாளில் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஹசாரே அறிவித்துள்ளார். இதற்கு போலீசார் கடந்த வாரம் 22 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழங்கினர். அதாவது 16 ம் தேதி ( செவ்வாய்க்கிழமை) முல் 18 ம்தேதி வரை 72 மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க வேண்டும். ஜெய்ப்பிரகாஷ் நாராயண் பார்க்கில் நடத்திக்கொள்ளும் இந்த போராட்டத்தில் 5 ஆயிரம் பேர் வரை மட்டுமே பங்கேற்கலாம். மேலும் வாகனங்கள் அதிக அளவு வரக்கூடாது. போராட்ட பந்தல் தவிர ஏனைய இடங்களில் யாரும் கூடி நிற்க கூடாது என்றும் உள்பட 22 நிபந்தனைகள் விதித்தனர்.

இந்த நிபந்தனை ஜனநாயகத்தை கொலை செய்வது என்றும், அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது என்றும் ஹசாரே குழுவினர் கருத்து தெரிவித்திருந்தனர். பிரதமருக்கும் கடிதமும் எழுதி , நிபந்தனையையும் ஏற்க மறுத்தனர். கோர்ட் கைதுக்கு தயார் என்றும் தெரிவித்திருந்தனர்.

ஹசாரேயின் போராட்டம் நியாயமற்றது, இவரே ஒரு ஊழல்வாதி என்றும் காங்கிரஸ் தனது எதிர்ப்பை தெரிவித்தது. அமைச்சர்கள் பிரணாப், கபில்சிபல் , அம்பிகாசோனி, மற்றும் காங்.,உயர் மட்ட தலைவர்கள் ஹசாரேயை கடுமையாக விமர்சித்தனர். ஹசாரே ஒரு ஊழல்வாதி என்றும் வர்ணித்தது.

இந்நிலையில் ஹசாரேவுக்கு வழங்கிய அனுமதியை போலீசார் ரத்து செய்துள்ளனர். சட்ட மீறல்கள் நடக்கும் என்று கருதினால் போலீசார் எவ்வித முடிவும் எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் கூறியுள்ள கருத்தின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்படுவதாக டில்லி போலீசார் கூறியுள்ளனர்.

டில்லியில் பதட்டம் தொற்றிக்கொண்டது: போலீசார் அனுமதி ரத்து செய்யப்பட்டதை அடுத்து நாளை ( 16 ம் தேதி) போராட்டம் துவங்குமா அல்லது ரத்தாகுமா என்ற கேள்வி எழும்பியுள்ளது. அனுமதியை மீறி துவங்கும் பட்சத்தில் ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் டில்லியில் இன்று முதல் பதட்டம் தொற்றிக்கொண்டது.

இந்த போராட்டத்தில் பங்கேற்க சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுவர், இதனால் சட்டச்சிக்கல் ஏற்படும் என உளவுத்துறை அளித்துள்ள தகவலை அடுத்து டில்லி போலீசார் அனுமதி ரத்து முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் போலீசாரின் அனுமதி மறுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஹசாரே குழுவினர் தங்களுடைய ஆதரவாளர்கள் திட்டமிட்டபடி அனைவரும் மற்றொறு சாகீத் பார்க்கிற்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஹசாரே ஆதரவாளர்கள் போராட்டம் : வலுவான லோக்பால் மசோதா உருவாக்க வலியுறுத்தி அன்னா ஹசாரே நாளை முதல் உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தார். முதலில் அனுமதி கொடுத்திருந்த டில்லி போலீசார் அனுமதியை ரத்து செய்து விட்டனர். தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க சென்றால் தடுத்துநிறுத்துவோம் என கூறியுள்ளனர். இதனிடையே உண்ணாவிரதத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதை கண்டித்து டில்லி ஜெய்பிரகாஷ் பூங்கா முன்பு ஹசாரே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

டில்லி போலீசுக்கு ஹசாரே கண்டனம் : உண்ணாவிரதத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கு ஹசாரே குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அனுமதி ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது. போலீசார் விதித்த 22 நிபந்தனைகளில் 6 நிபந்தனைகள் சட்டவிரோதமானவை. பொது மக்கள் அனைவரும் ஷாகித் பூங்காவிற்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் என கூறியுள்ளார். இதனிடையே அர்விந்த் கெஜ்ரிவால் கூறுகையில், நாளை திட்டமிட்டபடி உண்ணாவிரதத்தை துவக்கலாம் என ஹசாரே கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். இந்த போராட்டம் ஜனநாயகத்தை காப்பதற்காக நடக்கிறது என கூறியுள்ளார்.

ஹசாரே உண்ணாவிரதம்: அம்பிகா சோனி தகவல்:அன்னா ஹசாரே உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து டில்லியில் பேட்டியளித்த மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, டில்லி போலீசார் அரசியல் நெருக்கடிகளுக்கு உட்பட்டு செயல்படவில்லை. ஹசாரேவின் போராட்டம் மற்றும் நம்பிக்கை குறித்து புரியவில்லை. லோக்பால் மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்படவில்லை என கூறினார்.

ராஜ்காட்டில் அன்னா ஹசாரே:டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா சமாதிக்கு ஹசாரே வந்தார். அங்கு வருகையில் முக்கிய மான நாளுக்கு முன்னர் இங்கு பலம் மற்றும் ஊக்கம் பெற வந்துள்ளதாக கூறினார். அங்கு அன்னா ஹசாரே பிரார்த்தனை செய்தார். ஹசாரேவுடன், அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இதனிடையே திடீரென ஹசாரே ராஜ்காட்டிற்கு வந்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ள டில்லி போலீசாரும், ராஜ்காட்டிற்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அங்கு வரும் ஹசாரே ஆதரவாளர்கள் குறித்து ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

மாற்றம் தேவை, லோக்பால் தேவை-ஹசாரே: டில்லியில் மீடியாக்களுக்கு அன்னா ஹசாரே பேட்டியளித்தார். அப்போது அவர் தனது பேட்டியில், இந்தியாவில் மாற்றம் தேவை.வலுவான லோக்பால் மசோதா தேவை. பல வருடங்களாக அரசியல்வாதிகள் திட்டமிட்டு கொள்ளையடித்து வருகின்றனர். நாளை திட்டமிட்டபடி போராட்டம் தொடங்கும். இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் அமையும். இந்த போராட்டம் நீண்ட கால போராட்டமாக அமையும். பிரதமர் நேர்மையானவராக உள்ளார். அவர் கபில் சிபலின் கருத்துக்களையே கூறி வருகிறார்.இன்னும் ஊழல் தொடர்ந்து வருகிறது. அமைச்சர்களுக்கு பணம் மட்டுமே முக்கியமாக உள்ளது. ஊழல் எதிரான போராட்டம் குறித்து பிரதமர் இன்னும் கவலைப்படவில்லை. இதனை மாற்ற நாங்கள் விரும்புகிறோம். இந்த அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் 4 எம்.பி.,க்கள் ஜெயிலில் உள்ளனர். மக்கள் பிரிதிநிதிகளை தேர்ந்தெடுக்கும்போது நேர்மையானவர்களை தேர்வு செய்ய வேண்டும். எங்களது கோரிக்கைகள் குறித்து அரசிடம் விளக்க உறுதி மொழி பெற முற்பட்டோம். ஆனால் அரசு எங்களை புறக்கணித்தது. தற்போது பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதா ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. தற்போது நாடு தொழிலதிபர்களின் பிடியில் உள்ளது. மாற்றத்தை கொண்டு வர பெரும் ஆதரவு உள்ளது. நாங்கள் பார்லிமென்டை நம்புகிறோம். ஆனால் எம்.பி.,க்களை நம்பவில்லை. ஜனநாயகத்தில் மீடியா 4வது தூணாக உள்ளது. அது மக்களை பலப்படுத்த முடியும். உண்மையான சுதந்திரம் கிடைத்து விட்டோம் என எனக்கு நானே ராஜ்காட்டில் கேட்டு கொண்டேன். ஏழைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். நான்நாட்டுக்காகவே வாழ்கிறேன். நாட்டிற்காக இறக்க விரும்புகிறேன். நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய விரும்புகிறோம். நமது நாட்டின் வருமானத்தில் அதிகமான ஏற்றத்தாழ்வு உள்ளது. நாளை திட்டமிட்டபடி ஜெய்பிரகாஷ் நாராயன் பூங்காவில் போராட்டம் தொடங்கும். பல பேருக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியுள்ளது என கூறினார்.

ஹசாரே விவகாரம்: தே.ஜ., கூட்டணி நாளை ஆலோசனை : அன்னா ஹசாரேவின் காலவரையற்ற உண்ணாவிரதத்திற்கு டில்லி போலீசார் அனுமதி மறுத்தது குறித்து விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் டில்லியில் நாளை கூடி ஆலோசனை நடத்த உள்ளது. அப்போது இந்த விவகாரத்தில் தே.ஜ., எடுக்க வேண்டிய நிலை குறித்து முடிவு செய்யப்படுகிறது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=295213

ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது

டில்லியில் உண்ணாவிரதம் துவக்கவிருந்த காந்தியவாதியான அன்னா ஹசாரே இன்று காலையில் அவரது வீட்டில் இருந்து போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இவரை கைது செய்யவில்லை அப்புறப்படுத்தியிருக்கிறோம் என்று சொன்னாலும், ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு உரிமை மறுக்கும் மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் மற்றும் ஹசாரே ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் பார்லி.,யிலும் ஒலித்தது. எதிர்‌கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பீகார் முதல்வர் நிதீஷ்குமார், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங், மும்பை பாலிவுட் நடிகர்கள், டில்லி மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

http://www.alaikal.com/news/?p=79344

ஹசாரே கைது: மன்மோகன் பொம்மை எரிப்பு

ஊழலிற்கு எதிராக பலமான லோக்பால் சட்டம் தேவை என்பதை வலியுறுத்தி இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இருந்த அண்ணா ஹசாரேயைக் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையிலும் போராட்டங்கள் நடந்த வருகிறது.

சென்னை எழும்பூரில் ஊழலிற்கு எதிராக மக்கள் இயக்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தலைமை வகித்த கிருஷ்ணமூர்த்தி, அண்ணா ஹசாரே கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். லோக்பால் சட்ட வரைவில் கெஜட்டட் அலுவலரில் இருந்து பிரதமர் வரை அனைவரையும் உட்படுத்த வேண்டும் என்று கூறினார்.

அண்ணா ஹசாரே கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரி மாணவர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கின் உருவ பொம்மையை எரித்தார்கள். பிரதமருக்கு எதிராக முழக்கம் எழுப்பினார்கள்.

http://www.alaikal.com/news/?p=79330

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் எதிர்க்கட்சிகளுக்கு, :rolleyes:

சத்தம் போடுறதை விட்டிட்டு காங்கிரஸ் ஆட்சிக்கான ஆதரவை மீளப் பெற்றுக்கொள்ளவும்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எவனா எப்படின்னா சாவுங்கப்பா.. மக்கள் தொகை குறையும்.. உண்ணாவிரதம் என்ன? அங்க அங்க குண்டு வையுங்க! .. சாவுங்க .. நல்ல நாடு வாழக வளர்க

விடுவிக்க உத்தரவு; நிபந்தனைக்கு ஹஸாரே மறுப்பு

திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அன்னா ஹாஸாரேயை விடுவிக்க இந்திய அரசு முன்வந்துள்ள நிலையில், தமது போராட்டத்திற்கு அரசு விதித்துள்ள நிபந்தனைகளை விலக்கிக்கொள்ளும் வரை சிறையிலிருந்து வெளியேறப் போவதில்லையென்று கூறியுள்ளார்.

http://www.alaikal.com/news/?p=79406

ஹசாரே ஆதரவாளர் சுட்டுக்கொலை

அண்ணா ஹசாரே ஆதரவாளரும், தகவல் அறியும் உரிமை ஆர்வலருமான ஷீலா மசூத் என்பவர் போபாலில் இன்று பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் ஷீலா மசூத்.அண்ணா ஹசாரேவின் தீவிர ஆதரவாளரான இவர், ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்டபோது, மர்ம ஆசாமி ஒருவன் அவர் மீது துப்பாக்கியால் சுட்டான்.

இதில் உடலில் குண்டுபாய்ந்து ஷீலா காரிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.alaikal.com/news/?p=79400

Edited by akootha

Corrupt, repressive and stupid

A corrupt government devoid of moral authority is ill equipped to deal rationally with legitimate public anger. By ordering the illegitimate detention of Anna Hazare before he began his fast in support of stronger anti-corruption provisions in the Lokpal Bill and the arrest of a large number of peaceful protesters in the national capital, the United Progressive Alliance government revealed its ugly, repressive face. No representative government in a democracy can deny citizens their fundamental right to dissent and peaceful protest. Insisting on unreasonable, inequitable, and suspiciously contrived conditions that everyone knows the protesters cannot accept is tantamount to denial of the democratic right. Instead of honestly dealing with the issues raised by successive corruption scandals, the UPA government chose to cover up.

http://www.thehindu....icle2362951.ece

எகிப்து, லிபியா வரிசையில் இந்திய மக்கள் எழுவார்களா.. ? இதாலியா மஃபியா கும்பலை அடித்து விரட்டுவார்களா.. ?

புதுடெல்லி : அன்னா ஹசாரேவை 7 நாட்கள் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலையில் கைது செய்யப்பட்ட அன்னா ஹசாரே டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 144 தடை உத்தரவை மீற மாட்டேன் என உத்தரவாதம் தர ஹசாரே மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து உத்தரவாதமளிக்க ஹசாரே மறுப்பு தெரிவித்ததால் அவரை திஹார் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சமூக சேவகர் அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டார். இன்று காலை காந்தி சமாதிக்கு புறப்பட தயாராக இருந்த அவரை வீட்டுக்குள் புகுந்து போலீசார் அழைத்துச் சென்றனர். ஹசாரேவின் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டதால் டெல்லியில் பதற்றம் உருவாகி உள்ளது.

.............................

................................

.................................

இந்நிலையில், டெல்லி போலீசின் மூத்த அதிகாரிகள் படை ஒன்று இன்று காலை மயூர் விஹாரில் உள்ள அன்னா ஹசாரே இல்லத்துக்கு சென்றது. வீட்டுக்கு வெளியே ஏராளமான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் ஊழலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களை தாண்டி ஹசாரேவின் இல்லத்துக்குள் நுழைந்த போலீசார், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என அவரை எச்சரித்தனர். தடையை மீறி வெளியே செல்ல முயன்றபோது அவரை போலீசார் கைது செய்தனர்.

அவரை காரில் ஏற்றி தனி இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஹசாரே ஆதரவாளர்கள், காரை சூழ்ந்து கொண்டு போலீசுக்கு எதிராக கோஷமிட்டனர். அதே நேரத்தில் ராஜ்காட்டில் ஹசாரேவுக்காக காத்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி மற்றும் மனீஷ் சிசோதியா உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை பஸ்சில் ஏற்றி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஹசாரே, தண்ணீர் கூட குடிக்க மறுத்து உண்ணாவிரதத்தை தொடர்கிறார். ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது!

அன்னா ஹசாரே கைது குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு விவாதிக்குமாறு பாஜக நோட்டீஸ் வழங்கியது. இதனையடுத்து ப.சிதம்பரம் 12 மணிக்கு இதுகுறித்து விளக்கம் அளிப்பார் என அரசு கூறியது. ஆனால் அரசின் சமாதானத்தை ஏற்க மறுத்து எம்.பி.,க்கள் தொடர்ந்து கூச்சல் குழப்பத் தில் ஈடுபட்டனர். மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். எம்பிக்களின் தொடர் ரகளையால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran...11.asp?Nid=3289

Edited by மல்லையூரான்

எகிப்து, லிபியா வரிசையில் இந்திய மக்கள் எழுவார்களா.. ? இதாலியா மஃபியா கும்பலை அடித்து விரட்டுவார்களா.. ?

இந்திய பொருளாதாரம் ஒரு பின்னடைவை சந்தித்தால் இது இன்னும் கூடுதல் சாத்தியமாகும்.

அன்பின் எதிர்க்கட்சிகளுக்கு, :rolleyes:

சத்தம் போடுறதை விட்டிட்டு காங்கிரஸ் ஆட்சிக்கான ஆதரவை மீளப் பெற்றுக்கொள்ளவும்..! :wub:

ஹஸாரேவின் கைது, ஐ.மு.கூ அரசின் இறுதியை விரைவு செய்துள்ளது. நாளையே ஆட்சி கவிழும்

என்றில்லை. ஆனால் இந்த ஆட்சி முழுக் காலமும் நீடிப்பதில் சிரமம் ஏற்படும்.

மறு தேர்தலில் காங்கிரஸ் நிச்சயமாக மண்ணைக் கவ்வும். அதன் விளைவு பாஜகவுக்கு முழுமையான ஆதரவைத் தராது. கம்யூனிஸ்டுகளுக்கும் பெருமளவு ஆதரவு கிடைக்காது.

ஆனால் நிறைய பிராந்தியக் கட்சிகள் முன்னுக்கு வருவார்கள். பிராந்தியக் கட்சிகளின் துணையுடனான பாஜக ஆட்சி அமையலாம்.

அந்தவகையில் அ.தி.மு.க. ஆதரவு, தமிழர் பலம், முக்கியமாகலாம்.

ஹசாரே விவகாரம்:ராகுல் பிரதமர் சந்திப்பு

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளசமூக சேவகர் அன்னா ஹசாரே விவகாரம் குறித்து ராகுல் பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று மாலை சந்தித்து பேசினார். இருவரது சந்திப்பிற்கு பின்னர் அன்னாஹசாரேவை விடுதலை செய்யப்படுவது குறித்து முடிவு எடுக்கப்ப்ட்டதாக கூறப்படுகிறது.

http://www.dinamalar...l.asp?Id=295702

திகார் சிறையில் அடைக்கப்பட்ட அன்னா ஹசாரே விடுதலை

டெல்லியில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நேற்று காலை வீட்டில் இருந்து கிளம்பும் முன்பே கைது செய்யப்பட்டார். ஜாமீனில் செல்ல மறுத்ததால் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் கடும் எதிர்ப்பால் நேற்றிரவு அவர் விடுதலை செய்யப்பட்டார். ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவை மக்களவையில் மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்தது.

http://www.dinakaran...11.asp?Nid=3302

Edited by akootha

தனக்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி தரும் வரை சிறையிலிருந்து வெளியேற மறுக்கும் ஹசாரே

ஊழல் ஒழிய மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவர்கள்-கமல்ஹாசன்

அன்னா ஹஸாரே குறித்து முதல்முறையாக தமிழகத்திலிருந்து ஒரு பிரபலக் குரல் எழுந்துள்ளது. குரல் கொடுத்திருப்பவர் கமல்ஹாசன்.

நாட்டின் மீதுள்ள பற்று காரணமாகத்தான் இன்னும் நாம் லஞ்சம் ஊழலை சகித்துக் கொண்டு வாழ்கிறோம் என்றும், மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அன்னா ஹஸாரே போராட்டத்துக்கு வட இந்திய நடிகர் நடிகைகள் வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஆனால் தென்னிந்தியாவில் இதுவரை ஒருவரும் இதுபற்றி வாயே திறக்காமல் பெவிக்கால் போட்டு ஒட்டிக் கொண்டுள்ளனர். அரசியல்வாதிகள் தெளிவாகப் பேசவில்லை.திரையுலகினரும் கூட இதுகுறித்து இதுவரை எதையும் பேசாமலேயே உள்ளனர்.

இந்த நிலையில் முதல் குரலை எழுப்பியுள்ளார் நடிகர் கமல்ஹாஸன். அன்னா ஹஸாரேவின் போராட்டம் குறித்து மறைமுகமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் கூறுகையில், "மக்களிடம் வரி மூலம் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல் அடிப்படை வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணம் லஞ்சம், ஊழல் என போகிறது. ஆனாலும் நாட்டின் மீது உள்ள பற்று காரணமாக இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். என்னை மாதிரி உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒருநாள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது," என்று கூறியுள்ளார் அவர்.

http://thatstamil.oneindia.in/movies/heroes/2011/08/17-kamal-says-on-anna-hazare-protest-aid0136.html

இரண்டாம் நாளாக தொடரும் போராட்டம். காங்கிரசை சாடும் மேனகா காந்தி

  • கருத்துக்கள உறவுகள்

அன்னா போராட்டம் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் ஏன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை?

சென்னை: அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் ஆதரவு காணப்படுகிறது. அவருக்காக ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தென்னிந்தியாவில் அப்படி ஒரு எழுச்சியைக் காண முடியவில்லை. குறிப்பாக தமிழகம், கேரளாவில் அதைக் காண முடியவில்லை. இது ஏன்?

ஊழலை ஒழிக்க வேண்டும், அதற்காக வலுவான லோக்பால் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஹஸாரே குழுவினரின் கோரிக்கையாக உள்ளது. இந்தக் கோரிக்கைக்காக கடந்த சில மாதங்களாக அவர்கள் இடைவிடாமல், தீவிரமாக போராடி வருகின்றனர். எத்தனை அடக்குமுறைகள் வந்தபோதும் விடாமல் போராடி வருகின்றனர். இதனால்தான் மக்கள் மத்தியில் அவர்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

ஆனால் இந்தப் போராட்டத்துக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுவதைப் போன்ற எழுச்சி தமிழகத்திலும், கேரளாவிலும் அவ்வளவாக இல்லை. ஆந்திராவிலும் கூட பெரும் அலையைக் காண முடியவில்லை. கர்நாடகத்தில் கூடஓரளவுக்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு என்ன காரணம் என்பது புரியவில்லை.

இருப்பினும், ஆரம்பத்திலிருந்தே அன்னா ஹஸாரேவின் போராட்டம் ஏதோ வட இந்தியர்களின் போராட்டம் போலவே காட்சி அளித்து வருகிறது, பார்க்கப்பட்டு வருகிறது. இது ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

அன்னா ஹஸாரே குழுவினரின் போராட்டம் குறித்து இரு விதமான கருத்துக்கள் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகின்றன. ஹஸாரேவின் போராட்டத்தை தீவிரமாக ஆதரிப்போர் ஒருபக்கமும் இருக்கும் நிலையில், அவரை கடுமையாக விமர்சிப்போரும் கணிசமாக உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

அன்னா ஹஸாரே குழுவில் இடம் பெற்றுள்ள முக்கியஸ்தர்கள் பலரும் வட இந்தியர்களே அல்லது அன்னா சார்ந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். தென்னிந்தியர் என்று பார்த்தால் சந்தோஷ் ஹெக்டே மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளார். இருப்பினும் அவரும் கூட ஆரம்பத்தில் இருந்ததைப் போல இப்போது தீவிரமாக அவர்களுடன் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவதில்லை.

தென்னிந்தியாவில் ஏராளமான புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலர்கள், காந்தியவாதிகள் உள்ள போதிலும் அவர்களையும் தங்களுடன் இணைத்து செயல்பட, தென்னிந்தியாவிலும் பேரெழுச்சியை உருவாக்க அன்னா ஹஸாரே குழு தவறி விட்டதோ என்று தோன்றுகிறது.

தேசிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவகையில் போராடக் கூடியவர்கள் தென்னிந்தியர்கள் என்பது கடந்த காலங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்தியாவின் பிற பகுதிகளை விட தமிழகத்தில்தான் மிகப் பெரிய அளவில் நடந்தது.அதனால் நேருவே பணிய நேர்ந்தது என்பது வரலாறு.

அதேபோல பல்வேறு தேசியப் பிரச்சினைகளில் தென்னிந்தியர்கள், பிற இந்தியர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதை பலமுறை நிரூபித்துள்ளனர். ஆனால் இந்தமுறை அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு தென்னிந்தியாவில் பேரெழுச்சியைக் காண முடியவில்லை என்பதே உண்மை.

தென்னிந்தியர்களின் இந்த அமைதிக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் புரியாத போராட்டமாக அன்னாவின் போராட்டத்தை தென்னிந்திய மக்கள் பார்க்கிறார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.

இதுவே கார்கில் போரின்போது இந்தியாவின் எந்தப் பகுதியையும் விட தென்னிந்தியாதான் குறிப்பாக தமிழகம்தான் அதிகம் கொதித்தது, கொந்தளித்தது, குமுறியது. கார்கில் போர் வீரர்களுக்காக நிதி திரட்டியபோது தமிழக மக்கள்தான் மிகப் பெரிய அளவில் அள்ளிக் கொடுத்து தேச பக்தியை வெளிப்படுத்தினர். கார்கில் போர் அவர்களுக்குப் புரிந்தது. அன்னாவின் ஊழலுக்கு எதிரான போர் தமிழக மக்களுக்கு புரியாமல் போனதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்பது புரியவில்லை.

அதேசமயம் அன்னா ஹஸாரே குழுவினர் யாருமே ஆங்கிலத்தில் பேசுவதில்லை.மாறாக சுத்தமான, இந்தியில்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியில் பேசுவதில் தவறில்லை. ஆனால் அவர்கள் பேசுவது அனைவருக்கும், குறிப்பாக தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இந்தி தெரியாதவர்களுக்கும் புரியும் வகையி்ல இருந்திருந்தால் ஒருவேளை எழுச்சி அதிக அளவில் இருந்திருக்கலாமோ என்னவோ.

அன்னா ஹஸாரேவின் போராட்டம் மக்களிடையே மேலும் நெருக்கமாக சென்றடைய இந்த பாஷைப் பிரச்சினையும் ஒரு காரணமோ என்னவோ தெரியவில்லை. முழுக்க முழுக்க இந்தியிலேயே தலைவர்கள் பேசி வருவதால் இதை இந்திக்காரப் பிரச்சினையாக தமிழக மக்கள் கருத வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில் இந்தியாவில் மிகப் பெரிய எழுச்சிய அன்னாவின் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் நடமாடும் காந்தி என்று அன்னாவைக் கூறும் அவரது ஆதரவாளர்கள், காந்தியைப் போலவே நாடு முழுவதும் சென்றடையும் வகையில் தனது கருத்துக்ளுக்கு நாடு தழுவிய ஆதரவைப் பெறத் தவறி விட்டார் அன்னா என்பதும் மறுக்க முடியாத உண்மை.

டிஸ்கி:

தமிழகத்தில் ஏன் பொங்கி பிளிறவில்லியாம் இது ஏ.கே கானின் கவலை.. லாஜிக்கு ஈசி எங்க சாவுக்கு நீங்க கண்டுக்கல .. உங்க சாவுக்கு நாங்க கண்டுக்கல இதெப்படி இருக்கு...

thumb_smileyvault-cute-big-smiley-animated-060.gifthumb_smileyvault-cute-big-smiley-animated-060.gif

புரட்சி,

ஊழலில் பெரும்பான்மை பணம். தேசிய பணம், தமிழக அரசியல்வாதிகளிடம் உள்ளது. ஒருவேளை வட இந்தியர்களுக்கு தமிழர்கள் பண விடயத்தில் புத்திசாலிகள் என்ற கோபமா? :blink:

எதுவானாலும் சீமான் போன்ற தலைவர்கள் இல்லை என்றால் தமிழகம் தான் கடைசிவரை இந்திய மாதாவுடன் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட நோக்கம் அதுவல்ல சீமானுக்கு முந்திய வைக்கொவின்ட ஆருயிர் ந்ண்பர் செஞ்சி ராமசந்திரன் இன்று 7 ஊரு ஏரிக்கு கீழ் சொத்துகளை வாங்கி இருக்கார்.. இப்ப வெளியாள வந்துவிடவில்லையா? நாளை சீமான் அரசியலுக்கு வந்தாலும் இதேதான் .. அவருக்கு விசுவாசமானவர்கள் அந்து போட்டு போவார்கள் .. இந்த கணக்கை எல்லாம் விசுவாசமாக நம்பி இனி ஜனநாய்க போராட்டத்தினை ஆரம்பித்தால் அதொ கதிதான் ஜனநாய்கம் வேறு .. பணம் பணம்.. நம்மிடம் இருந்து யாரையும் விட்டு வெளியே செல்ல அனுமதிக்க கூடாது பணம் பண்ம் .. ரைட்டு... பலது உங்களுக்கு பிரியும்... :) :)

அன்னா போராட்டத்தை அமெரிக்கா தூண்டி விடுகிறது-காங். புகார், அமெரிக்கா மறுப்பு

அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு பின் அமெரிக்கா இருக்கிறதோ என்ற காங்கிரஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. அன்னாவின் போராட்டம் டெல்லியில் தொடங்குவதற்கு முன்பே இந்தியாவுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறியது அமெரிக்கா. இதற்கு இந்தியா கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்தது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிப்பது தேவையற்ற வேலை என்று இந்தியா கூறியிருந்தது.

தற்போது அன்னாவின் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாமோ என்ற சந்தேகத்தை காங்கிரஸ் கிளப்பியுள்ளது. அமெரிக்கா எதற்காக இந்தியாவில் நடக்கும் ஒரு போராட்டத்திற்கு ஆதரவாகப் பேச வேண்டும். அப்படி என்றால் இதற்கு பின் அமெரிக்கா இருக்கிறதோ என்று காங்கிரஸ் சந்தேகிக்கிறது.

இந்தியாவை சீர்குலைக்க சதி செய்யும் மறைமுக சக்தி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா என்று வெளிப்படையாகத் தெரிவிக்காமல் சூசகமாகத் தெரிவித்துள்ளது காங்கிரஸ்.

நாடாளுமன்றத்தில் வரைவு லோக்பால் மசோதாவை திணிப்பதன் மூலம் அன்னா குழுவினர் அரசையே பிளாக்மெயில் செய்கின்றனர். நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் எதையும் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

அன்னா ஹஸாரே ஒரு தனி ஆள். அவருக்கு எந்த அமைப்பும் கூட இல்லை. அப்படி இருக்கையில் இந்த இயக்கம் எப்படி தோன்றியது, வளர்ந்தது? கைது செய்யப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ செய்தியை இணையதளம் மற்றும் தொலைபேசி வாயிலாக உலகம் முழுவதும் பரப்பியது யார்?

இந்தியாவில் உள்ள எந்த ஒரு இயக்கத்தைப் பற்றியும் பேசாத அமெரிக்கா தற்போது முதன்முறையாக அன்னாவின் இயக்கத்தைப் பற்றி பேசியுள்ளது. நாம் தான் மற்றவர்களுக்கு ஜனநாயகப் பாதையைக் காட்டுகிறோம். ஆனால் அமெரிக்கா நமக்கே ஜனநாயகத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் தான் என்ன? இதனால் தான் சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.

இந்தியாவை சீர்குலைக்க முயற்சிக்கவில்லை: அமெரிக்கா

அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு பின்னணியில் இருப்பதாகவும், இந்தியாவை சீர்குலைக்க முயல்வதாகவும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலேண்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்தியாவில் இருந்து வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. எந்த அடிப்படையில் இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயல்வதாக தகவல்கள் வெளியாகின்றன என்பதே தெரியவில்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிடவேயில்லை என்று அமெரிக்கா ஏற்கனவே அறிக்கை வெளிட்டுள்ளது.

நாங்கள் கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறோம். இந்த விஷயத்தில் அனைத்து நாடுகளையும், கட்சிகளையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். அமைதியான போராட்டத்தையும், எதிர்ப்பையும் அனுமதிக்கும் பொறுப்பு அனைத்து ஜனநாயக அரசுகளுக்கும் உள்ளது. அதே நேரம் மக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றார் .

http://www.alaikal.com/news/?p=79495

Edited by akootha

ராம் லீலா மைதானத்தில் ஹசாரே நாளை முதல் உண்ணாவிரதம்

சிறையிலிருந்து ஹசாரே நாளை தான் வெளியே வருவார் என்பதால்,டெல்லி ராம் லீலா மைதானத்தில் நாளை முதல்தான் ஹசாரே தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திகார் சிறையில் அண்ணா ஹசாரேவை பரிசோதித்த டாக்டர்கள் குழுவினர் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர்.

எனினும் 15 நாட்கள் உண்ணாவிரதம் நடத்த உள்ள ராம்லீலா மைதானம் இன்னும் முழுமையாக தயார் செய்யப்படாததால், சிறையில் இருந்து நாளை தான் அவர் வெளியே வருவார் என்று ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ராம்லீலா மைதானத்தின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஹசாரவிடம் பேசினேன். அவர் நாளை தான் ராம்லீலா மைதானத்துக்கு வருவார்.

ராம்லீலா மைதானத்தை டெல்லி மாநகராட்சி தயார் செய்து எங்களிடம் ஒப்படைக்கும். அதன்பின் நாங்கள் மேடை உள்ளிட்டவற்றை தயார் செய்வோம்.அதெல்லாம் தயார் செய்து முடித்த பின்னரே ஹசாரே திகாரில் இருந்து புறப்படுவார் என்று அவர் மேலும் கூறினார்.

http://tamil.webduni...110818055_1.htm

Edited by akootha

ராம் லீலா மைதானத்தில் ஹசாரே நாளை முதல் உண்ணாவிரதம்

சிறையிலிருந்து ஹசாரே நாளை தான் வெளியே வருவார் என்பதால்,டெல்லி ராம் லீலா மைதானத்தில் நாளை முதல்தான் ஹசாரே தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திகார் சிறையில் அண்ணா ஹசாரேவை பரிசோதித்த டாக்டர்கள் குழுவினர் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர்.

எனினும் 15 நாட்கள் உண்ணாவிரதம் நடத்த உள்ள ராம்லீலா மைதானம் இன்னும் முழுமையாக தயார் செய்யப்படாததால், சிறையில் இருந்து நாளை தான் அவர் வெளியே வருவார் என்று ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ராம்லீலா மைதானத்தின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஹசாரவிடம் பேசினேன். அவர் நாளை தான் ராம்லீலா மைதானத்துக்கு வருவார்.

ராம்லீலா மைதானத்தை டெல்லி மாநகராட்சி தயார் செய்து எங்களிடம் ஒப்படைக்கும். அதன்பின் நாங்கள் மேடை உள்ளிட்டவற்றை தயார் செய்வோம்.அதெல்லாம் தயார் செய்து முடித்த பின்னரே ஹசாரே திகாரில் இருந்து புறப்படுவார் என்று அவர் மேலும் கூறினார்.

http://tamil.webduni...110818055_1.htm

இவ்வளவு வல்லமையுள்ளவர்கள் இதுவரையில் காங்கிரஸ் ஈழதமிழருக்கெதிராக போர்குற்ற நடவடிகைகளில் ஈடுபட்டதை பற்றி ஒருவார்த்தை கூற தயாராக இல்லை.

ஆர் குத்தியும் அரிசியாகட்டும். விழுத்தேக்கை காங்கிரசை வேரோடை விழுத்தவேண்டும். அது போதும் எங்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வல்லமையுள்ளவர்கள் இதுவரையில் காங்கிரஸ் ஈழதமிழருக்கெதிராக போர்குற்ற நடவடிகைகளில் ஈடுபட்டதை பற்றி ஒருவார்த்தை கூற தயாராக இல்லை.

ஆர் குத்தியும் அரிசியாகட்டும். விழுத்தேக்கை காங்கிரசை வேரோடை விழுத்தவேண்டும். அது போதும் எங்களுக்கு.

ஹாசாரேயின் உண்ணா விரதத்தோடை....

காங்கிரஸ் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட வேண்டும்.

ஜன் லோக்பாலுக்கு இறுதிகெடுவை நிர்ணயித்தார் ஹசாரே

வலுவான ஜன் லோக்பால் மசோதா, இந்த மாதம் 30ம் தேதிக்குள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

தலைநகர் டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ள அன்னா ஹசாரே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசிற்கு, பார்லிமென்டிலும், <உயர்நிலைக்குழுவிலும் இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கான போதிய அளவு மெஜாரிட்டி உள்ளது. நாட்டின் தூண்களாகிய தாங்கள் லஞ்சம் கொடுக்காதீர்கள் மற்றும் வாங்காதீர்கள். இது ஒன்றே, நாட்டிலிருந்து ஊழலை ஒழிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

அதேபோல், லஞ்சம் பெறும் (ஊழல் செய்யும்) அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் வரை, நான் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பேன். இதையே, எனது வாழ்வின் குறிக்கோளாக நான் வைத்துள்ளேன். எனது கடைசி மூச்சு உள்ளவரை, நான் இந்த மசோதாவிற்காக போராடிக் கொண்டிருப்பேன். தன் தலைமையிலான குழு, இந்த ஜன்லோக்பால் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்வதற்காக, இந்த மாதம் 30ம் தேதியை கெடுவாக நிர்ணயித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=297483

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இல்லை என்றாலும் விடாதீங்க : இளைஞர்களுக்கு அன்னா ஹசாரே அழைப்பு

திகார் சிறையைவிட்டு வெளியில் வந்த அன்னா ஹசாரேவுக்கு, கொட்டும் மழையில் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்பு அளித்தனர். ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தி, ராம்லீலா மைதானத்தில் அவர் துவக்கியுள்ள உண்ணாவிரதத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். ""நான் உயிரோடு இல்லாமல் போனாலும் கூட, போராட்டத்தை இளைஞர்கள் தொடர வேண்டும்,'' என, அன்னா பேசியதைக் கேட்டு கூட்டத்தினர் ஆர்ப்பரித்தனர்.

காந்தி சமாதியில் மழைக்காக ஓடிய ஹசாரே : காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்த வந்த ஹசாரே, தான் அணிந்து இருந்த காந்தி குல்லா மற்றும் சால்வையை அகற்றிவிட்டு, ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தினார். பின், ராஜ்காட் வாசலை நோக்கி அவர் செல்ல முயன்ற போது, மழை சற்றே வலுத்தது. உடனே சற்று தூரம் ஓடினார். சிறையில் மூன்று நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்தாலும், அவர் எவ்வித சோர்வும் அடையாமல் இருக்கிறார் என்பதை பார்த்து ஆதரவாளர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

http://www.dinamalar...l.asp?Id=297604

'உண்ணா நோன்பு காலவரையின்றி தொடரும்'- ஹஸாரே

சிவில் சமூகத்தால் தயாரிக்கப்பட்ட மக்கள் லோக்பால் மசோதாவை சட்டமாக்கும் வரை, தான் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அண்ணா ஹஸாரே தெரிவித்துள்ளார்.

தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அண்ணா ஹஸாரே, இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டதைத் துவக்கியிருக்கிறார்.

http://www.bbc.co.uk...refasting.shtml

Edited by akootha

லோக்பால்: 'இறங்கிவருகிறார்' மன்மோகன் சிங்

இந்த நாட்டின் கஜானாவுக்கு கொள்ளைக்காரர்களால் ஆபத்து வரவில்லை. அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களால்தான் அதற்கு ஆபத்து வந்துள்ளது. " அன்னா ஹஸாரே

இந்தியாவில் சிவில் உரிமைகள் ஆர்வலர் அன்னா ஹஸாரேவுக்கு எதிரான தனது நிலைபாட்டை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சற்று தணித்துக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

லோக்பால் விவகாரத்தில் இரு தரப்பிலும் விட்டுக் கொடுப்பதற்கு நிறைய விஷயங்கள் இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

லோக்பால் தொடர்பில் சமரசம் ஏற்படுவதற்கு நிறைய சந்தர்ப்பம் இருக்கவே செய்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

லோக்பால் என்று சொல்லப்படுகின்ற ஊழல் ஒழிப்பு நடைமுறைக்கான சட்ட மசோதா வலுப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி அன்னா ஹஸாரே உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஹஸாரே துவங்குவதற்கு முன்னால் அவரை இந்திய அரசு கைது செய்ததைக் கண்டித்து பல ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.

உண்ணாவிரதப் போராட்டம் தடுக்கப்படாது என்று அரசாங்கத்தின் உத்தரவாதம் பெற்ற பின்னர் சிறையிலிருந்து வெளிவந்த அன்னா ஹஸாரே புதுதில்லியின் ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.

தங்களது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாதவரை போராட்டம் தொடரும் என்று அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார்.

"நாம் சொல்கிறமாதிரியான ஒரு லோக்பால் மசோதா உருவாக்கப்படாதவரை நாம் தொடர்ந்து போராடுவோம். இந்த நாட்டின் கஜானாவுக்கு கொள்ளைக்காரர்களால் ஆபத்து வரவில்லை. அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களால்தான் அதற்கு ஆபத்து வந்துள்ளது. நாட்டின் கஜானாவில் உள்ள செல்வம் எல்லாம் மக்களுடையது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது." என்று அன்னா ஹஸாரே கூறினார்.

ஹஸாரே உண்ணாவிரதம் இருக்கின்ற மைதானத்தில் தொடர்ந்து பெருமளவானோர் கூடிவருகின்றனர்.

http://www.bbc.co.uk...ownlokpal.shtml

Edited by akootha

அண்ணா ஹஸாரேவை மக்கள் ஏன் பின்தொடர்கிறார்கள்?

தர்க்கரீதியாக ஜன்லோக்பால் மசோதாவைப் பார்க்கும்போது என் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மெலிதான அரசு என்ற என் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது ஜன்லோக்பால் முன்வைக்கும் மாதிரி. இப்போதுள்ள அரசின் சில அமைப்புகளை வலிமைப்படுத்துவதன்மூலம் ஊழலைக் குறைக்கமுடியும் என்பதே என் கருத்து.

ஆனால் அண்ணா ஹஸாரேவை மக்கள் ஏன் கூட்டம் கூட்டமாகப் பின்தொடர்கிறார்கள்? யார் இவர்கள்?

என் நண்பர் சமீபத்தில் தில்லி சென்றிருக்கிறார். அப்போது அண்ணா ஹஸாரே உண்ணாவிரதக் கூட்டத்தில் பங்கெடுக்க கிழக்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்திருந்த மூவரை பேருந்தில் பார்த்திருக்கிறார். அவர்கள் அரசு வேலை பார்ப்பவர்கள்.

“அண்ணா ஹஸாரே, ஜன் லோக்பால் என்கிறாரே, இதெல்லாம் உங்களுக்குப் புரிகிறதா?”

“இல்லை. அதெல்லாம் எங்களுக்கு அவ்வளவாகப் புரியாது.”

“அப்படியென்றால் எதற்காக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறீர்கள்?”

“உங்களுக்குத் தெரியாது... என் தாயும் தந்தையும் விபத்தில் இறந்து அந்த உடல்களை வாங்க நான் எவ்வளவு லஞ்சம் கொடுக்கவேண்டிவந்தது, எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருந்தது என்று. நீங்கள் எல்லாம் பையில் காசைப் போட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்பி உங்கள் வேலைகளைச் செய்துகொள்பவர்கள். உங்களுக்குத் தெரியாது நாங்கள் தினம் தினம் படும் கஷ்டம். அண்ணா ஹஸாரே எங்களுக்காகப் போராடுகிறார். அதனால் லஞ்சம் தீர்ந்துவிடுமா என்றால் தெரியாது. ஆனால் ஒருவேளை தீர்ந்துவிட்டால்? அதனால்தான் வந்திருக்கிறோம். எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை. எனக்குச் சம்பளமே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவருடன் இருப்போம். மேலும் இன்னொரு விஷயம். அவர் நல்லவர்."

இந்த ஒரு பதிலில் கிட்டத்தட்ட எல்லாமே அடங்கிவிட்டது என்று நினைக்கிறேன். பொட்டில் அறைந்தாற்போல இருந்தது எனக்கு. அண்ணா ஹஸாரேயால் லஞ்சம், ஊழல் எல்லாம் முற்றிலுமாக ஒரே நொடியில் தீர்ந்துவிடும் என்று பொதுமக்கள், அதுவும் அடிமட்ட மக்கள், நினைக்கவில்லை. ஆனால் அவர்மூலமாக ஊழல் ஒழியக்கூடும் என்ற நம்பிக்கையை ஓர் ஓரத்தில் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையே நிராசையாக இருக்கும்போது ஏன் அவர்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கக்கூடாது?

அதனால்தான் இந்த அளவுக்கு வரலாறு காணாத கூட்டம் அவர்பின் வருகிறது. இது நிச்சயம் பிரியாணியும் சாராயமும் வாங்கிக்கொடுத்து கட்சிகள் சேர்க்கும் கூட்டமல்ல. தானாகச் சேரும் கூட்டம். கூடவே லாப்டாப் வைத்திருக்கும் நவீன இளைஞர்களும் இருக்கிறார்கள்; அதுவும் தொலைக்காட்சி கேமராவைக் கண்டுவிட்டால் முன்னால் துருத்திக்கொண்டு வந்து நிற்கிறார்கள், வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள் என்பது முற்றிலும் வேறு விஷயம். அதைப் புறந்தள்ளுவோம்.

ஆனாலும் என் மனம் ஜன்லோக்பாலை ஏற்க மறுக்கிறது. அதே நேரம், காங்கிரஸ் கட்சியினர்போலோ அல்லது வினவு குழுவினர்போலோ அண்ணா ஹஸாரேமீது சேறை வாரி இறைக்கமாட்டேன். அவர்மீது அளவுகடந்த மதிப்பு உள்ளது. மிகவும் அப்பாவியாகத் தெரிகிறார் அவர். அவரது கூட்டணியினரும் அரசுடன் மோதும் போக்கை மட்டுமே கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. என் பயம் எல்லாம் அவரையே தங்கள் நாயகராக, தங்கள் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரு தீர்ப்பாக நம்பியிருக்கும் அடிமட்ட மக்களை நினைத்துத்தான்.

அவர்களது நம்பிக்கை நாசமாகாமல் இருக்கவேண்டும்.

http://thoughtsintamil.blogspot.com/

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.