Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2050-இல் ஒருநாள், புதிய விவாதம் 'தோசா' தமிழர்களின் பாரம்பரிய

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்ற வார இறுதியில் புலம்பெயர் நகரொன்றின் தமிழ்- மன்னிக்க இந்திய உணவகமொன்றில் இரவுச்சாப்பாடுக்காக கூடியிருந்தோம். இது முழுமையான சைவ(பிராமணாள் மன்னிக்க) உணவகம். நாங்கள் நான்கு பேர். வெங்காய தோசையும், மசாலாத் தோசையும் தருமாறு விழித்திருந்தோம். உணவைப் பரிமாறிய சேவையாளர் இதோ ஆனியன் தோசா, இதோ மசாலா தோசா எனப்பரிமாறினார்.

இதன்பின்னர் வீடு திரும்பிய நான் இணைய உலா சென்றேன். இதன்பின் து}ங்கியபோது கண்ட கனா விசித்திரமாக இருந்தது.

2050 இல் ஒருநாள், யாழ் இணையக் கருத்துக்களம்:

'தோசா" தமிழர்களின் பாரம்பரிய உணவா? இல்லை தெய்வீக ஞானத்தால் தோசமுனிவரால் படைக்கப்பட்டதா?

கனல்பறந்த விவாத்தை முணுமுணுத்த என்னை 'என்னப்பா ஆச்சு உங்களுக்கு விசர் கிசர் புடிச்சுப் போட்டுதோ நடுச்சாமத்திலே தோசா... தோசை என்று பினாத்துகிறீர்கள்..."

-என்று மனையாளின் அழைப்பால்! நிசவுலகிற்கு வந்த நான் வெட்கத்துடன் உங்கள் முன்னால்

அட இது கனவு. அப்ப நிசம்?

அட சா அகதியன் நீர் இருக்க வேண்டிய இடமே வேறையப்பா. திசை மாறி இங்கு வந்திட்டீர். :roll: :)

200px-Dosa-malaysian.jpg

ரவா மசால தோசை..!

தோசை ஒரு திராவிட உணவு.. புளிச்சமாவில் செய்யுறது..! சாப்பிட்டா நித்திரை.. கனவு வரும்..! இதோ சாப்பிட்டு மனையாளுக்கு தொந்தரவு கொடுக்காம தூங்குங்கோ.. பகலிலதான் நிம்மதியில்லை என்றால் இரவில கனவிலும் மனையாளுக்கு நிம்மதியில்லை..! :wink: :)

(Dosa,Dose in Andhra state, Dosay in Karnataka state, Dhosai in Tamil Nadu state, Dosha in Kerala state. Thosai in Srilanka) is a common South Indian food which comes in many varieties, flavours and with various accompaniments.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகதியன் அண்ணாாாாா நல்ல விசயத்த சொல்லியிருக்கிறீங்கள்..............

நகைச்சுவையா எழுதியிருக்கிறியள் ...........சுருக்கமா எழுதியிருக்கிறியள்..........................

.... ஆனா அதுக்குள்ள பெரிய விளக்கத்த சொல்லியிருக்கிறியள்.................... தொடந்தும் எழுதுங்கோ

இன்ரர்நெட்டில கிடக்கிற அரைகுறையள கூகிளில தேடியே உந்த மனுசரின்ர காலம் போகுதப்பா................சுயமா என்னத்த சிந்திக்குதுகள்.................... உதுகள் பாருங்கோவன் இப்ப தோசைச தராவிடற்ற உணவெண்டுங்கள் ......தமிழன்ர எண்டுங்கள்....................தோசைய கரண்டியால இங்க வெளிநாட்டில சாப்பிடுறதால ஐரோப்பியக்காரனின்ர உணவெண்டுங்கள்...................இப்பிடி உதுக்குள்ளயும் சண்டைபிடிக்குங்கள்.................என்

இன்ரர்நெட்டில கிடக்கிற அரைகுறையள கூகிளில தேடியே உந்த மனுசரின்ர காலம் போகுதப்பா................சுயமா என்னத்த சிந்திக்குதுகள்....................

அகதியன் அண்ணாாாாா நல்ல விசயத்த சொல்லியிருக்கிறீங்கள்..............

நகைச்சுவையா எழுதியிருக்கிறியள் ...........சுருக்கமா எழுதியிருக்கிறியள்..........................

.... ஆனா அதுக்குள்ள பெரிய விளக்கத்த சொல்லியிருக்கிறியள்.................... தொடந்தும் எழுதுங்கோ

கூகிளில கிடைக்கிறது அரைகுறை என்றா இங்க சுயமா விலங்குகளால படைச்சுக் கிடக்கிறது.. 1/100000000 இந்தளவு..! :wink: :):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூகிளில கிடைக்கிறது அரைகுறை என்றா இங்க சுயமா விலங்குகளால படைச்சுக் கிடக்கிறது.. 1/100000000 இந்தளவு..! :wink: :):)

சுயவிமர்சனத்த பாராட்டுறன் அக்கா :lol:

தன்னிலை விளக்கத்த கண்டு மெய் சிலிர்த்திட்டன்...................................

:wink: :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் என்னவோ புூனைக் குட்டி சொல்லுவது மாதிரி தோசையைப் பற்றி கூகிலில் ஒன்றும் கிடைக்காதால் தான் விவாதம் சூடு பிடிக்கவில்லை போலக் கிடக்குது :wink: :P

தோசையை கண்டுபிடித்தவர்கள் பார்ப்பனர்கள் தான் என்று சொல்லாமல் இருந்தால் சரி.....

எனக்கும் என்னவோ புூனைக் குட்டி சொல்லுவது மாதிரி தோசையைப் பற்றி கூகிலில் ஒன்றும் கிடைக்காதால் தான் விவாதம் சூடு பிடிக்கவில்லை போலக் கிடக்குது :wink: :P

கூகிளில இருக்கு நிறையத் தோசை.. அது சரி கூகிள் என்ன கேட்டது..நீங்கள் ஏன் அதோட மோதுறீங்கள்..அது வலையெங்கும் சிதறிக் கிடக்கும் தகவல்களைத் திரட்டித் தருகுது. மாடிப்படிகள் ஏறி இறங்காம மணித்தியாலங்கள் செலவு செய்து பக்கங்களைப் புரட்டிட்டு இருக்காம இலகுவாக விடயங்களைக் கொண்டு வர உதவுது அதுமட்டுமல்லாம தனிநபர்கள் கற்பனைகளை மிகக் குறுகிய காலத்தில் ஆதாரங்களோட மறுதலிக்க உதவுது. உலகில் அதிகம் பேரால் பாவிகப்படும் தேடற்பொறி கூகிள்...! அதுமட்டுமன்றி பல நவீன வசதிகளையும் கூகிள் செய்து கொடுத்திருக்கிறது..! :wink: :P

சுயவிமர்சனத்த பாராட்டுறன் அக்கா :lol:

தன்னிலை விளக்கத்த கண்டு மெய் சிலிர்த்திட்டன்...................................

:wink: :lol::lol:

விலங்குக்கும் பறவைகும் இதுதன் வித்தியாசம்..! :wink: :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கூகிளில இருக்கு நிறையத் தோசை.. அது சரி கூகிள் என்ன கேட்டது..நீங்கள் ஏன் அதோட மோதுறீங்கள்..அது வலையெங்கும் சிதறிக் கிடக்கும் தகவல்களைத் திரட்டித் தருகுது. மாடிப்படிகள் ஏறி இறங்காம மணித்தியாலங்கள் செலவு செய்து பக்கங்களைப் புரட்டிட்டு இருக்காம இலகுவாக விடயங்களைக் கொண்டு வர உதவுது அதுமட்டுமல்லாம தனிநபர்கள் கற்பனைகளை மிகக் குறுகிய காலத்தில் ஆதாரங்களோட மறுதலிக்க உதவுது. உலகில் அதிகம் பேரால் பாவிகப்படும் தேடற்பொறி கூகிள்...! அதுமட்டுமன்றி பல நவீன வசதிகளையும் கூகிள் செய்து கொடுத்திருக்கிறது..! :wink: :P

இப்படி கண்டபாட்டுக் உளறாதிங்க. காரணம் பிறகு சொல்கின்றேன். :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை இணைக்கும்போது சூடான பரிமாறல்கள் இருக்குமென்று நினைத்தேன். ஆனால் அப்படியாக ஒன்றும் நடக்கவில்லை.

சென்ற ஆண்டு இறுதியில் ஐபிசி வானொலியில் சிறப்பு விருந்தினராக மொழியிலாளராகத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட கல்வியாளர் ஒருவர் தோசை பற்றி கூறியது என்னை அதிர்வுறச் செய்திருந்தது. தேவை கருதி அக்கருத்தை இதில் இணைக்கிறேன்.

வேர்ச் சொற்கள் பற்றி விபரித்த இவர் தன்னை பன்மொழி ஆற்றலாளராக வெளிப்படுத்தியிருந்தார்.

உதாரணமாக பிஸ்கற் என்பதை பிரெஞ்சு மொழியில் பிஸ், குவி எனப்பிரித்து பிஸ்- இரண்டு குவி-சூடாக்கல் அதாவது இருபக்கமும் சூடாக்குவது எனப் பொருள் என்றார்.

இதன்பின் தோசை எப்படி வந்தது தெரியுமா?என்று கேட்டுவிட்டு விளக்கினார்.

தோ- இரண்டு, சூடான சட்டியில் மாவை இடும் போது என்ன ஓசை வரும் 'சை' ஆக இருபக்கமும் சுடும் ஈரலிப்பான மாவிலானது தோசை என விளக்கினார்.

அன்று இதைக்கேட்டு யாருக்குச் சொல்லி அழுவதென அசந்துபோன பலரில் நானும் ஒருவன். இதற்கான மறுதலிப்புகளை இதுவரை நான் பார்க்கவில்லை. இனியாவது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.