Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோருவது நீதிமன்ற அவமதிப்பு: தூக்கில் போட தங்கபாலு ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thangabalu-asok-photi-1.jpg

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி நடத்தப்படும் போராட்டங்கள் நீதிமன்ற அவமதிப்பு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு,

சட்டத்தின் ஆட்சியை மதிக்கின்ற இந்தியாவில் சட்டம் வழங்கிய தீர்ப்புகளை நிறைவேற்றுவது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் கடமையாகும்.

தமிழ்நாட்டிலும் சட்டமும் நீதிமன்றமும் நீதிமன்ற தீர்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். தனி மனிதர்களுக்காக வளைந்துகொடுக்கக் கூடாது. இது இன்றைக்கு நடைமுறைக்கு வரவில்லை என்று சொன்னால், மீண்டும் கற்காலத்துக்கு தமிழ்நாட்டு மக்களை அழைத்துச் செல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். அப்பொழுது சுதந்திரம் தேவையில்லை. மக்களாட்சி தேவையில்லை. ஜனநாயகம் தேவையில்லை. நீதிமன்றமும் தேவையில்லை. காவல்துறையும் தேவையில்லை. எதுவும் தேவையில்லை. நாடாளுமன்ற - சட்டமன்ற ஜனநாயகம் இருக்காது. நீதிமன்றங்கள் இருக்காது. அரசுகள் இருக்காது. ஆட்சிகள் இருக்காது. யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம். அல்லது தனியாக தங்களுக்கென தனி ஆட்சி உருவாக்கிக் கொண்டு தாறுமாறாக எதை வேண்டுமானாலும் செய்யலாம். கொலை செய்யலாம், கொள்ளையடிக்கலாம். கேட்பதற்கு யார் இருக்கிறார்கள். நீதிமன்றங்களுக்கு எதிரான போராட்டங்கள், தமிழ்நாட்டில் கற்காலத்துக்கு கொண்டு சென்றுவிடும்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜீவ்காந்திக்கு நேர்ந்ததைப்போல், தங்கள் கட்சியின் தலைவர்களுக்கு நேர்ந்தால், கொலையாளிகளுக்கு ஆதரவாக வீதியில் வந்து போராடுவார்களா.

ராஜீவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் அவர்தம் அப்பா, அம்மா, உறவினர்கள், மனைவி மற்றும் உறவினர்கள் என்று அவர்களுக்காக அவர்கள் வாதாடுவது தனிப்பட்ட முறையில் இயல்பான ஒன்று.

அதே நிலையில் தான் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும், தோழர்களும் தங்கள் கட்சியின் தலைவர் படுகொலைக்கு காரணமானவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதற்கான தண்டனையை வழங்கப்பட்ட போது அதை வரவேற்பதும், அதை நிறைவேற்ற வேண்டுவதும் இயல்பான ஒன்று. அதில் தார்மீகமும், தர்மமும் கூட உண்டு. இவ்வாறு தங்கபாலு கூறினார்.

http://www.nakkheera...ws.aspx?N=60300

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவன் ஒரு தமிழனா ........ ? இவங்களை தமிழ்நாட்டை விட்டு ஓட ...ஓட ..துரத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ட நாய வீட்டுக்குள் விட்டா இப்புடித்தான் ஆகும்.. கொல்டிகள் குறித்து ரொம்ப தெளிவான பார்வைக்கு வந்துள்ளன் நான்.. ஒட்டகம் காலை மட்டும் வச்சுக்கிறேன் என சேக்கு கிட்ட கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக கூடராத்துக்குள் காலைவிட்டு சேக்கை வெளிய அடிச்சு விட்ட கதையாக போச்சு.. ஒக்கலிகா என்று ஏற்கனவே கன்னடன் டேரா.. ரெட்டி நாயுடு இங்கு இவர்கள் டேரா இதில் சைடில் மலையாளிகள் நாங்களும் தமிழர்கள் என்று இவனுங்க ஒரு டேரா.. இவனுங்களை எல்லாம் எவன் BC லிஸ்டில் சேர்க்க சொன்னது .. அய்யருக்கான FC லிஸ்டில் சேர்க்கவேணும் ஒழுங்கா ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்து எதாவது வரலாறு பிவியியல் என்று படிங்க .. இல்லை என்றால் ஊருக்கு போய் ஏர் ஓட்டுங்க.. இல்லையென்றால் சொந்த ஸ்டேட்டுக்கு எஸ்கேப்பு ஆகுங்கண்டா.. உங்க ஸ்டேட்ல எவனுமே மதிக்க இல்ல .. இங்க தான் இந்த வந்தாரை வாழ வைப்பம் கோவணத்தினையும் குடுப்பம் .. கீதமெல்லெல்லாம் நடக்கு

டிஸ்கி:

ஆதலால் நான் இனி நேர்முக தேர்வுக்களுக்கு வரும் தமிழர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிப்பதாக உத்தேசித்துள்ளேன்.. இந்த பிச்சைகார பய புள்ளைகளை அதே போல வெளிநாட்டிலும் ஈழ தோழர்கள் புறக்கணிக்குக :icon_idea: :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஆதலால் நான் இனி நேர்முக தேர்வுக்களுக்கு வரும் தமிழர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிப்பதாக உத்தேசித்துள்ளேன்.. இந்த பிச்சைகார பய புள்ளைகளை அதே போல வெளிநாட்டிலும் ஈழ தோழர்கள் புறக்கணிக்குக :icon_idea: :icon_idea:

புரட்சி,

எப்பொழுதுமே எம்மவர்களை முடிந்தவுக்கு தூக்கி விடவேண்டும், முன்னேற உதவ வேண்டும்.

இங்கு கனடாவில் கூட எவ்வளவோ பேர் (தமிழர்கள் உட்பட) திறமைக்கும், தகுதிக்கும் ஏற்ப வேலைகள் செய்வதில்லை. பல நேர்முக தேர்வுகளில் நன்றாக செய்தாலும் இறுதியில் ஒரு கடிதம் வரும், "we regret to inform at this time we are unable to offer this opportunity' என.

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் உண்ணாவிரதம்!

ராஜிவ் கொலை வழக்கில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதம் இ ருக்க முடிவு செய்து இருக்கிறார்களாம். அந்த உண்ணாவிரதத்தில், ராஜிவ் கொலையின் போது இறந்து போனவர்களின் குடும்பத்தினர்களை அழைத்து வரவும் திட்டமிட்டு இருக்கிறார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

- குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

04.jpg 07.09.11 கவர் ஸ்டோரி

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை நிராகரித்துவிட்ட குடியரசுத் தலைவரை மீறி, இவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை” என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துவிட்டார். எனினும், தண்டனையை நிறுத்தக்கோரும் போராட்டங்கள் நம்பிக்கையோடு தொடர்கின்றன. மூவருக்கும் தூக்கு சரியான தண்டனையே என காங்கிரஸும் உறுதி காட்டுகிறது. தூக்கு அவசியமா, இல்லையா? ஏற்கெனவே சூடாக அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு ஒரு பக்கமும் பிரபல வழக்கறிஞர் ஏ.நடராசன் மற்றும் நளினி - பேரறிவாளனுக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோ ஆகியோர் மறுபக்கமும் வாதம் செய்கிறார்கள்.

04a.jpg

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: “இந்தியாவின் இணையற்ற தலைவர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளோரைக் காப்பாற்ற துடிக்கிறவங்க, தங்கள் குடும்பத்தினர் இப்படி கொலைசெய்யப்பட்டால், இதே நியாயத்தைப் பேசுவாங்களா? இதே கருணையைக் கடைப்பிடிப்பாங்களா? என்பதை முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும்.

பேரறிவாளன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு முழுமையா நிரூபிக்கப்படலை என்பதெல்லாம் சப்பைக்கட்டு.இவங்க குற்றமற்றவர்கள்ங்கிறதைத் தகுந்த ஆதாரங்களோடு அவரோட ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் நிரூபிச்சிருக்கலாமே. நீதித்துறை தரும் அத்தனை வாய்ப்புகளையும் கடந்த 20 வருஷமா பயன்படுத்தித் தப்பிச்சிட்டு வந்த இவங்களால் அது முடியலை.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கும்வரைதான், மக்கள் அமைதியாக வாழ முடியும்.கொலைகாரர்கள் தண்டனையே இல்லாம தப்பிக்க முடியும்ன்னா, கோர்ட் எதுக்கு? போலீஸ் ஸ்டேஷன் எதுக்கு? முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கிலேயே நீதி கிடைக்கலைன்னா, சாதாரண மக்கள் பாதிக்கப்படுறப்போ நீதியை எதிர்பார்க்க முடியுமா?

நான் ராஜிவ் காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசி. எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்ட அநியாயமான இழப்புக்குக் காரணமானவங்களுக்குத் தக்க தண்டனை வாங்கித்தர என்றைக்கும் போராடுவேன்’’ என்று கொந்தளிப்போடு முடித்துக்கொண்டார் தங்கபாலு.

04b.jpg

சென்னை உயர்நீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் ஏ. நடராஜன் (கிரிமினல்): ‘‘உலகத்தில் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ரஷ்யா உட்பட 140 நாடுகளில் தூக்கு தண்டனை அறவே ஒழிக்கப்பட்டாகி விட்டது. ‘குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை அவர்களை சீர்திருத்தும் நோக்கத்தில் அமைய வேண்டும்’ என்றே அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்பது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. இருந்தாலும், கடந்த ஆண்டுகளில் மரண தண்டனைகளின் விகிதாச்சாரம் இந்தியாவிலும் குறைந்து வருகிறது. 1975லிருந்து 1991வரை சுமார் 40 குற்றவாளிகளுக்கு இந்தியாவில் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு இரண்டு பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மரணத்தின் விளிம்பில் ஒவ்வொரு நாளும் உடல் அளவிலும், மனதளவிலும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். மரண தண்டனை கொடுக்கப்பட்ட அன்றே அ வர்களுக்கு சாகும் நாள் நிர்ணயம் செய்து விட்டதால் அந்தக் குற்றவாளிக்கு வாழும் நாள் நரகம்தான்.

தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள், ‘ஏற்கெனவே 20 ஆண்டுகள் சிறை வாழ்க்கை அனுபவித்துவிட்ட இந்த மூவருக்கும் கருணை அடிப்படையில் தூக்கு தண்டனை நிறைவேற்றக் கூடாது’ என்றே குரல் எழுப்பி வருகிறார்கள். இது வாழும் மனித உரிமையை காயப்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில்தான். மேலை நாடுகளில் இதை மனதில் வைத்துதான் மரண தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளனர். அதனைப் பின்பற்றி இந்தியாவிலும் கொண்டுவர வேண்டும்.’’

04c.jpg

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோ: ‘‘பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் ராஜிவ்காந்தி கொலைக்கும் நேரடியாக சம்பந்தம் கிடையாது. எனவே, இவர்களுக்குத் தூக்கு தண்டனை கொடுக்கக்கூடாது என்பதுதான் எங்கள் தரப்பு. சாந்தன், சிவராசன் சொல்லும் வேலைகளைச் செய்து வந்தார். சிவராசன், ராஜிவ்காந்தி கொலையுடன் சம்பந்தப்பட்ட வேலைகள் எதனையும் இவருக்குக் கொடுக்கவில்லை. பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வது ஆகிய வேலைகளை மட்டும்தான் இவருக்கு சிவராசன் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள தலைமைச் செயலகம், வேலூர் கோட்டை போன்ற முக்கியமான கட்டடங்கள் அமைப்பில் ஈழத்தில் அமைக்கவிருக்கும் தங்கள் நாட்டிலும் கட்டடங்கள் கட்ட புலிகள் விரும்பினார்கள். இதற்காக அந்தந்த இடங்களை புகைப்படம் எடுக்கும் வேலை முருகனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. நளினி வீட்டில் தங்கியிருந்த போது இவருக்கும் நளினிக்கும் காதல் ஏற்பட்டது.

தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் வரும் விடுதலைப் புலிகள் சம்பந்தமான செய்திகளைச் சேகரித்து பேபி சுப்பிரமணியத்துக்கு அனுப்பும் வேலை பேரறிவாளனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. நளினி வீட்டில் தங்கியிருக்கும் போது இவருக்கும் சிவராசனுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. அந்தத் தொடர்பில் அவர் கேட்டுக்கொண்டதற்காக அவருக்கு மோட்டார் சைக்கிளும் பேட்டரியும் பேரறிவாளன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இவ்வளவுதான் இவர்கள் செய்துள்ளது. மற்றபடி ராஜிவ்காந்தி கொலை சதிச் செயலில் இவர்கள் நேரடியாக ஈடுபடவில்லை. கொலைச் சம்பவம் நடந்த இடத்திலும் இவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவேதான் இவர்களுக்குத் தூக்கு தண்டனை கொடுக்கக்கூடாது எனச் சொல்கிறோம்.’’

- டால்மேன்

- ஆனந்த் செல்லையா

-குமுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.