Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவர்- எரிக் சொல்ஹேம் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் தலைவருடன் எரிக் சொல்ஹெய்ம் நாளை சந்திப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கைக்கு வருகை தந்துள்ள நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் நாளை புதன்கிழமை சந்தித்துப் பேச உள்ளார்.

கிளிநொச்சியில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது.

இச்சந்திப்பில் சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

சிறிலங்கா அரச தலைவராக மகிந்த பதவியேற்ற பின்பு சர்வதேச சமூகத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்துகிற முதலாவது சந்திப்பு இதுவாகும்.

அதேபோன்று மகிந்த ராஜபக்ச அரச தலைவராக பதவியேற்ற பின்னர் கிளிநொச்சிக்கு எரிக் சொல்ஹெய்ம் மேற்கொள்கிற முதலாவது பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா இராணுவப் படுகொலைகள் அதிகரித்து யுத்த காலச் சூழலைப் போல் இடப்பெயர்வு அவலங்களை தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் நிலையில் நடைபெற உள்ள இச்சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கிளிநொச்சி செய்திகள் தெரிவிக்கின்றன

தகவல் மூலம்- புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தீவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 'கிளிநொச்சி சந்திப்பு'

[புதன்கிழமை, 25 சனவரி 2006, 07:24 ஈழம்] [ச.விமலராஜா]

இலங்கைத் தீவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய சந்திப்பு இன்று புதன்கிழமை கிளிநொச்சியில் நடைபெற உள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் மட்டுமின்றி சர்வதேச சமூகத்தினது கண்களும் இன்றைய கிளிநொச்சி சந்திப்பின் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றன.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 4 ஆண்டுகளாகிவிட்ட பின்பும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் எதுவித சரத்துகளையும் நிறைவேற்றாமல் பேச்சுவார்த்தைகளுக்கு வந்த சமதரப்பாகிய விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச அரசியல் சதிவலைக்குள் சிக்க வைக்கும் முயற்சிகளுக்கே சிறிலங்கா அரசாங்கங்கள் இதுவரை முன்னுரிமை கொடுத்துவந்தன.

இதன் உச்சகட்டமான சிறிலங்கா அரசாங்கத்தை கடும் போக்காளர்கள் இரு மாதங்களுக்கு முன்னதாகக் கைப்பற்றினர்.

இதையடுத்து இராணுவத்துக்கும் கடும் போக்காளர்களே நியமிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழர்களை கைது செய்து கொன்று புதைகுழியில் புதைத்த வரலாற்றுக் கொடூரமான "செம்மணி" சம்பவத்தின் காரணகர்த்தா சரத் பொன்சேகாவை சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக சிறிலங்கா அரச தலைவராகப் பொறுப்பேற்ற மகிந்த ராஜபக்ச நியமித்தார்.

சரத் பொன்சேகாவும் தனது பங்குக்கு இராணுவத்தின் கடும் போக்காளர்களைத் தேடிப் பிடித்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் தாயகப் பகுதிகளின் பொறுப்புக்கு நியமித்தார்.

இதனால் மீண்டும் யுத்தச் சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது. அப்பாவி பொதுமக்கள் காணாமல் போவதும் கொலை செய்யப்படுவதும் வழமையாக நடந்தேறத் தொடங்கின.

4 ஆண்டுகால சமாதான காலத்தில் 20 ஆண்டுகால போரினாலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய எதுவித புனரமைப்பும் கிடைக்காத நிலையில் விரக்தியின் உச்சத்தில் நின்று கொண்டு தங்களது தேசியத் தலைமையை "பொறுத்தது போதும்! பொங்கியெழு" என்று மக்கள் கட்டளையிட்டுக் கொண்டிருந்த சூழலில் கடும் போக்காளர்களின் செயற்பாடுகளும் தீவிரமடைந்தன.

இதற்கு எதிர்வினையாக எந்த ஆயுதங்களால் தாங்கள் சமாதான காலத்திலும் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வீதிகளில் வீசியெறிப்பட்டார்களோ அதே ஆயுதங்களை ஏந்தி இலங்கை வரலாற்றின் புதிய திருப்பமாக மக்கள் யுத்தம் நடந்து கொண்டிருக்கின்றது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ் மக்களுக்குமான நேரடி யுத்தம் இப்போது இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது.

ஆகையால் இந்த மக்களின் தேசியத் தலைமையானது சர்வதேசச் சூழலுக்கு அமைய கால அவகாசம் கொடுத்து,பேச்சு மேசைக்கு அழைத்தது.

உரிய தீர்வுத் திட்டங்களை முன்வையுங்கள் என்று அழைப்பு விடுத்தது.

ஆனால் பேச்சுக்கான இடத்தையே பிரச்சனைக்குரிய விடயமாயக சிறிலங்காவின் பேரினவாதக் கடும்போக்கு அரசாங்கம் முன்வைக்கிற போது யுத்தம் தவிர்க்கப்பட முடியாதது எந்த நேரத்திலும் யுத்தம் வெடிக்கும் என்ற நிலையே ஏற்பட்டது.

இத்தகையச் சூழலில் இன்றைய கிளிநொச்சி சந்திப்பு நடைபெறுகிறது.

சிறிலங்கா அரசாங்கம் இதுவரை தெரிவித்திருந்த நிலைப்பாடுகளைத்தான் இப்போதும் இலங்கைக்கு வந்திருக்கக் கூடிய நோர்வே அமைச்சரும் சிறப்புத் தூதருமான எரிக் சொல்ஹெய்மிடம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடுகளில் நெகிழ்வுத் தன்மை இருப்பதான தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து கடும் போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில் விடுதலைப் போராட்டத்தை மீளத் தொடங்குவதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவித்த கால அவகாச ஆண்டாகிய 2006 ஆம் ஆண்டும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் நடைபெறுகிற கிளிநொச்சி சந்திப்பை நோக்கி சர்வதேச சமூகத்தின் கண்கண் அகல விரிந்து இருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வமான, தெளிவான நிலைப்பாடு இன்று எரிக் சொல்ஹெய்மிடம் விளக்கப்பட உள்ளது.

சமாதானப் பேச்சுகள் முறிவடைந்து ஆழிப்பேரலை தாக்குதல் நடந்த காலத்தில் மீளமைப்புப் பணிகள் தொடர்பாக 2005 ஆம் ஆண்டு சனவரி 22 ஆம் நாள் நோர்வே வெளிவிவகார அமைச்சராக இருந்த ஜான் பீற்றர்சன் தலைமையிலான குழு, கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்,அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் உள்ளிட்டோரைச் சந்தித்தது.

அதன் பின்னர் நிலைமைகள் இறுக்கமடைந்து யுத்த முனையில் நிற்கின்ற நிலையில் இன்றைய சந்திப்பு நடைபெறுகிறது.

இன்றைய கிளிநொச்சி சந்திப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் நோர்வே அமைச்சரும் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் ஆகியோர் சந்திக்க உள்ளனர்.

இச்சந்திப்புகளின் முடிவுகள் ஊடகவியலாளர்களிடம் விளக்கப்பட உள்ளது

தகவல் மூலம்- புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்புக்கள் இன்று வெளியாகலாம்

நோர்வே நாட்டின் இலங்கைக்கான விசேட சமாதான தூதுவரும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் நேற்று ஸ்ரீலங்காவின் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். இதன் போது போர் நிறுத்ததை வலுப்படுத்தல், மற்றும் சமாதான பேச்சு வார்ததைகளை ஆரம்பித்தல் போன்றன முக்கிய இடம்வகிந்தன. எரிக் சொல்ஹெய்ம் இன்று கிளிநொச்சி வரும்போது மகிந்தவின் முக்கிய செய்தியுடன் வருவார் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அவர் இன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் பேச்சுவார்ததை நடத்தவுள்ளார். இதனை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்தை தெரிவிப்பதற்காக அவர் மீண்டும் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்க உள்ளார்.

இச்சந்திப்புக்களின் முடிவில் இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தகவல் மூலம்- சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியத் தலைவரிடம் மகிந்த ராஜபக்சவின் விசேட செய்தியை எடுத்துச் செல்கிறார் எரிக் சொல்ஹெய்ம்

நோர்வே நாட்டின் இலங்கைக்கான சமாதான அமைச்சரும் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் இன்று கிளிநொச்சியில் சென்று தமிழீழ தேசியத் தலைவரைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இந்த சந்திப்பு முற்பகலில் நடைபெறவுள்ளது.இதற்காக எரிக் சொல்ஹெய்ம் தலைமையிலான குழுவினர் இன்று முறபகல் கிளிநொச்சிக்கு புறப்பட்டு செல்லவுள்ளனர்.

இலங்கையில் தற்சமயம் ஏற்பட்டுள்ள போர் நிறுத்த உடன்பாட்டு மீதான அச்சம் தொடர்பிலேயே இன்றைய பேச்சுவார்த்தையின் போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்த சந்திப்பின் போது எரிக்சொல்ஹெய்ம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கையளித்த விசேட செய்தியை வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் கையளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொழும்பு திரும்பும் எரிக்சொல்ஹெய்ம் மீண்டும் ஜனாதிபதியை சந்தித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவுள்ளார்.

நோர்வே அமைச்சருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது போர் நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கம் மற்றும் சமாதான முனைப்புகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

தகவல் மூலம்-பதிவு.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தரின் யோசனைகளுடன் சொல்ஹெய்ம் இன்று தேசியத் தலைவரைச் சந்திக்கிறார்.

நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும் சிறப்புத் தூதுவருமான எரிச்சொல்ஹெய்ம் இன்று கிளிநொச்சி செல்கின்றார். அங்குதேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேற்று அலரி மாளிகையில் சொல்ஹெய்ம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்களில் தற்போதைய நெருக்கடி நிலை, நேரடிப் பேச்சுக்களை நடத்தவது தொடர்பிலான நாடு குறித்த சிறிலங்கா அரசின் நிலைப்பாடு போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

எனினும் விடுதலைப்புலிகளின் விருப்பம் போன்று ஒஸ்லோவில் பேச்சுக்களை நடாத்தவதற்கு மகிந்த ராஜபக் விரும்பவில்லை என்றும், இதனை சொல்ஹெய்மிடம் தெளிவு படுத்தியுள்ளதாகவும், தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் இருவரும் நடத்திய பேச்சுக்கள் தொடர்பான விபரங்க ளை சிறிலங்கா அரசு உத்தியோக பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. மகிந்த ராஜபக் தெரிவித் திருக்கும் யோசனையுடன் செல்லும் சொல்ஹெய்ம் அவர்கள் தேசியத் தலைவரிடம் அவற்றைத் தெரிவிப்பார். இதன் பின்னர் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு மற்றும் யோச னை தொடர்பாக கொழும்பு திரும்பியவுடன் சொல்ஹெய்ம் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கவுள்ளார்.

தேசியத் தலைவருடனான சந்திப்பின் போது மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட உயர்மட்டத்த லைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சொல்ஹெய்முடன் நோர்வேயின் சிறிலங்காவுக்கான தூதுவர் கான்ஸ் பிறஸ்கர் மற்றும் தூதரக அதிகாரிகளும் செல்லவுள்ளனர். இதேவேளை அண்மைக் காலமாக தமிழர் தாயகப் பகுதியில் படையினர் மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான படுகொலை, மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டமை, திருமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை, புங்குடுதீவில் தர்சினி என்ற இளம் பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் அரசியலில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் சந்திப்பிற்காக சொல்ஹெய்ம் வன்னியை சென்றடைந்தார்.

நோர்வேயின் அமைச்சரும் இலங்கைக்கான விசேட தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் வன்னியை வந்தடைந்துள்ளார். இன்று காலை 11மணியளவில் ஸ்ரீலங்கா வான்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சி சந்திரன் விளையாட்டு மைதானத்தை சென்றடைந்த எரிக் சொல்ஹெய்ம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைச் சந்திப்பதற்காக சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தப்போகும் இச்சந்திப்பின் போது. இலங்கையி;ல் தற்சமயம் ஏற்பட்டுள்ள போர் நிறுத்த உடன்பாடு மீதான அச்சம் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்த சந்திப்பின் போது எரிக் சொல்ஹெய்ம் நேற்று மஹிந்த ராஜபக்ச கையளித்த விசேட செய்தியையும் மேதகு வே.பிரபாகரன் அவர்களிடம் கையளிப்பார்.

தகவல் மூலம்- சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சியில் எரிக்சொல்ஹெய்ம்

[புதன்கிழமை, 25 சனவரி 2006, 12:22 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திப்பதற்காக நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் இன்று புதன்கிழமை காலை கிளிநொச்சி வருகை தந்துள்ளார்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து சிறிலங்கா விமானப் படையின் உலங்குவானூர்தி மூலம் இன்று காலை 10.30 மணிக்கு கிளிநொச்சி சந்திரன் விளையாட்டரங்கை எரிக் சொல்ஹெய்ம் வந்தடைந்தார்.

எரிக் சொல்ஹெய்முடன் சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கரும் கிளிநொச்சி வருகை தந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் எரிக் சொல்ஹெய்மை வரவேற்றனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான சந்திப்பில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ வன்முறைகள் மற்றும் அட்டூழியங்கள், இந்த வன்முறைகளுக்கான மக்களின் எதிர்வினை, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளை சிறிலங்கா அரசாங்கம் 4 ஆண்டுகளாக செயற்படுத்தாமல் இருப்பது, சீர்குலைவில் இருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கான பேச்சுகளை நடத்துகிற இடம் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன

தகவல் மூலம்- புதினம்.கொம்

ஜெனிவாவில் பேச்சு என்று ஊடகங்களில் கதை உலாவுகின்றதே.

ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகள் இணக்கம்

இலங்கை யுத்த நிறுத்த அமைதிப் பேச்சுகளை ஜெனீவாவில் நடத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி சென்ற இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இதைத் தெரிவித்தார்.

http://www.eelampage.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனிவாவில் பேச்சு நடத்துவதற்கு விடுதலைப் புலிகள் இணக்கம் - அன்ரன் பாலசிங்கம்

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் - ஸ்ரீலங்கா அரசிற்குமிடையிலான பேச்சு வார்த்தைகளை சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் நடத்துவதற்கு விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக, இன்று தேசியத் தலைவர் அவர்களிற்கும் நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அடுத்தமாத நடுப்பகுதியில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும், இந்த பேச்சுக்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மாத்திரமே அமையும் எனத் தெரிவித்துள்ள அன்ரன் பாலசிங்கம் அவர்கள், தமிழர் தாயகத்தில், இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் மக்கள் மீது படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் நிறுத்தப்பட்ட பின்னரே ஏனைய விடயங்கள் தொடர்பான பேச்சுக்கள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில்....

தகவல் மூலம்- சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் சுவிற்சலாந்தில் பேசுவதற்கு விட்டுக் கொடுப்புடன் தயார்: தேசியத் தலைவர் எரிக் சோல்ஹெய்மிடம் தெரிவிப்பு!

விடுதலைப்புலிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையை செம்மையாக அமுல்படுத்துவது தொடர்பாக பேசுவதற்கு தயாரெனவும் அந்தப் பேச்சுவார்த்தைகளை சுவிற்சலாந்தில் நடத்துவதற்கு விட்டுக் கொடுப்புடன் செயற்படுவதாகவும் அறிவித்துள்ளனர். இன்று நோர்வேயின் சமாதானத்துக்கான தூதுவரும் அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சோல்ஹெய்ம் அவர்களை நேரில் சந்தித்துப் பேசிய தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இந்த நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

நோர்வே தூதுவருடனான சந்திப்பின் முடிவில் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்திய அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் சமாதான இலட்சியத்தில் என்றும் பற்றுறுதி கொண்டவர்கள் என்பதை தலைவர் இச்சந்திப்பில் விளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுவிற்சலாந்தில் பேச்சுக்களை நடத்துவதற்கு இயல்பான சூழ்நிலையை சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஏற்படுத்த வேண்டும் எனவும் இராணுவத்தினதும் அதன் ஒட்டுப்படைகளினதும் படுகொலைகள், அட்டூழியங்கள் நிறுத்தப்பட்ட வேண்டும் எனவும் விடுதலைப்புலிகள் இதில் கேட்டுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகள் தரப்பில் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், கட்டளைத் தளபதி கேணல் ஜெயம், மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளர் இளந்திரையன் ஆகியோரும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களும் கலந்து கொள்வார்கள் என்று அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு

ஜெனீவாவில் பேச்சு: பிரபாகரன்- எரிக் சொல்ஹெய்ம் சந்திப்பு முடிவில் அறிவிப்பு! பேச்சுக் குழுவையும் அறிவித்தனர் புலிகள்!!

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் பெப்ரவரியில் சுவிஸ் தலைநகர் ஜெனீவாவில் நடைபெறும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பேச்சுகளில் பங்கேற்கும் குழுவினரையும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

கிளிநொச்சி சென்ற இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசினார்.

இயல்பு நிலையைத் தோற்றுவிக்காவிட்டால் பேச்சுவார்த்தையே நடக்காது: அன்ரன் பாலசிங்கம்

எரிக் சொல்ஹெய்மின் சந்திப்புக்குப் பின்னர் கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களிடம் பாலசிங்கம் கூறியதாவது:

தலைவர் பிரபாகரன் அவர்கள் இன்றைய சந்திப்பில் இயக்கத்தின் நிலைப்பாட்டை எடுத்து விளக்கினார். விடுதலைப் புலிகள் அன்றும் சரி இன்றும் சரி சமாதான இலட்சியத்தில் பற்றுறுதி கொண்டவர்களாக உள்ளனர். கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் தலை தூக்கியுள்ளன.

குறிப்பாக அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக படுகொலைகள், இராணுவ அட்டூழியங்கள் நடைபெற்று வருகின்றன.

போர் நிறுத்த உடன்பாட்டு விதிகள் செம்மையாக பேணப்படாத காரணத்தால் இந்த வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. போர் நிறுத்த உடன்பாட்டைச் செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயாராக உள்ளோம்.

இதுவரை காலமும் புலிகள்தான் பேச்சுவார்த்தையை நோர்வேயில் நடத்த வேண்டும் என்று கடுமையான நிலைப்பாடுடன் இருக்கிறார்கள் என்ற கருத்து நிலவி வந்தது.

ஐரோப்பாவில் நோர்வே கேட்டுக்கொண்டதற்கமைய ஐரோப்பிய நாடு ஒன்றான சுவிற்சர்லாந்தில் பேச்சுக்களை நடத்துவதற்கு இணங்கியுள்ளோம், முடிவெடுத்துள்ளோம் என்று தலைவர் தெரிவித்தார்.

ஆனால் தலைவர் அடுத்ததாக கூறினார்.... பேச்சுவார்த்தைகளானது முதல் கட்டமாக போர் நிறுத்த விதிகளின் அமுலாக்கம் பற்றியதாகவே அமைய வேண்டும் தவிர வேறு எது பற்றியும் பேசுவதற்கு நாம் தயாராக இல்லை என்றார்.

இன்று தமிழர் தாயகத்தில் நிலவும் பாராதூரமான பிரச்சினைகளுக்குக் காரணம் போர் நிறுத்தம் செம்மையாகக் கடைப்பிடிக்கப்படாமைதான். போர் நிறுத்த உடன்பாடு செம்மையாக கடைப்பிடிக்காமைக்கு புலிகள் காரணம் அல்ல. அரச படைகளும், படைகளுக்கு முண்டு கொடுத்து துணையாக நிற்கும் ஒட்டுப்படைகளும் தான் காரணம்.

ஆகவே பேச்சுவார்த்தைகள் விரைவாக நடைபெற வேண்டும். அதற்கு நாம் ஒத்துழைக்க தயாராக உள்ளோம். சுவிற்சலாந்தில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும் தயாராவுள்ளோம். ஆனால் அதற்கு முன்பாக எங்கள் மக்கள் இராணுவ பயங்கரவாதத்திற்கு பயந்து தமிழர் தாயகத்தில் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள். மக்களுக்கு முதலில் அமைதியான, நிம்மதியான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அதற்குப் பின்புதான் பேச்சு ஒழுங்காக நடத்த முடியும். சமாதான சூழலுக்கு ஏதுவான ஒரு புறநிலையை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. அரசாங்கம் நினைத்தால், சிறிலங்கா அரச தலைவர் நினைத்தால் அரச படைகளுக்கு கடும் உத்தரவுகளை வழங்கி ஒட்டுப் படைகளின் அட்டூழியங்களை நிறுத்தி, கொலைகளை நிறுத்தி ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்க முடியும் என தலைவர் வலியுறுத்தினார்.

பேச்சுவார்த்தைகளுக்கு வரத் தயாராகவுள்ளோம். வெகு சீக்கிரத்தில் பேச்சுக்களில் பங்கு பற்ற தயாராகவுள்ளோம். ஆனால் உடனடியாக அப்பாவி தமிழ் மக்களுக்கெதிராக ஏவிவிடப்படும் அரச பயங்கரவாத வன்முறைகள் உடனே நிறுத்தப்படவேண்டும். ஒரு சுமூகமான நல்லெண்ண புறநிலை உருவாக்கப்படவேண்டும். இது அரசின் கையில்தான் உள்ளது என்றும் எமது தலைவர் கூறினார்.

முன்பும் இப்படிப் பல பேச்சுக்கள் நடைபெற்றன. பேச்சுக்கள் இடையில் முறிந்தமைக்கான காரணம் என்னவெனில், அப்பாவி தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்திய தாக்குதல்கள். இதன் காரணமாகத்தான் திம்பு பேச்சுவார்த்தை தொடக்கம் கடைசிப் பேச்சுவார்த்தைகள் வரைக்கும் பல பேச்சுவார்த்தைகள் முறிந்தன. ஆகவே பேச்சுவார்த்தைகள் முன்னேற்றகரமாக நடைபெற வேண்டுமாகயிருந்தால் அரச படைகள் ஒழுக்கமாக, கட்டுப்பாடாக வைக்கப்பட வேண்டும்.

கூலிப்படைகளின் அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் போர் நிறுத்த விதிகளைச் செம்மையாக நடைமுறைப்படுத்துவது பற்றி நாம் முதல் கட்டப் பேச்சுகளில் கலந்துகொள்ள தயாராக உள்ளோம்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளும் பாலசிங்கம் பதில்களும்:

கேள்வி: பேச்சுக்கான புறநிலையை உருவாக்க எவ்வளவு காலம் எடுக்கும்?

பதில்: பேச்சுக்களில் பங்குபற்ற இப்போதும் தயார். இன்றும் தயார். ஆனால் நல்ல சூழ்நிலையிருக்க வேண்டும். நாளை நாங்கள் ஜெனீவாக்குச் செல்ல, கூலிப்பட்டாளங்கள் எமது மக்களை படுகொலை செய்ய அமைதியில்லாத சூழ்நிலை இங்கு நிலவ நாம் பேசமுடியாது. நாங்கள் பேச்சுக்களில் ஈடுபடுவதாகயிருந்தால் எமது மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழவேண்டும். அது தான் முதலாவது முக்கியமான விடயம்.

கேள்வி: புறச்சூழ்நிலை உருவாக்கப்பட்டால்தான் நேரடி பேச்சு இடம்பெறும் எனக் கூறுகிறீர்களா?

பதில்: நிபந்தனையாக விதிக்கவில்லை. அதாவது சமாதானப் பேச்சுக்கு சமதானச் சூழலை உருவாக்குங்கள் என்பதைத்தான் கூறுகிறோம்.

கேள்வி: அரச தரப்பிடமிருந்து ஏதாவது செய்தி எடுத்து வரப்பட்டதா?

பதில்: அரசாங்கம் தொடர்ந்து செய்திகளை அனுப்பி வருகிறது. அரசாங்கம் சமாதான கரங்களை நீட்டிக்கொண்டே கொலைகளுக்கும் அனுமதித்து வருகிறது. திருகோணமலையில் பத்திரிகையாளர் கொல்லப்படுகின்றார். யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்படுகின்றார். இன்னொரு பக்கம் மகிந்த ராஐபக்ச சமாதானக் கரங்களை நீட்டுகிறார். பத்திரிகைக்கு உருக்கமான அறிக்கை விடுகின்றார். சொன்னால் சொன்னதாக இருக்க வேண்டும். நடைமுறையில் காட்டவேண்டும். அறிக்கைளை விட்டு எமது மக்களை ஏமாற்ற முடியாது.

கேள்வி: அரசுக்கும், புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை எப்போது ஆரம்பமாகும்?

பதில்: முதலில் பேச்சுக்கு இணங்கியுள்ளோம். சீக்கிரமாக பேச்சுக்களை நடத்துமாறும் கோரியுள்ளோம். எரிக் சொல்ஹெய்மிடம் அரசிற்கு அனுப்பியுள்ள செய்தி, புலிகள் பேச்சுக்கு தயார். அதேவேளையில் உடனடியாக இடத்திற்கும் தயார். அரச படைகளின் அடாவடித்தனங்கள் நடக்கக்கூடாது. எங்கள் மக்களுக்கு எந்த துன்புறுத்தல்களும் நடக்கக்கூடாது. தேடுதல் என்று மக்களை வேட்டையாட அனுமதிக்க முடியாது. இரவு நேரங்களில் வீடுகளில் தட்டக் கூடாது.

அப்பாவி தமிழ் மக்களைக் கொலை செய்து கொண்டிருந்தால் நாம் பேச்சுக்களில் கலந்து கொள்ள முடியாது. எப்படி பேசுவது? எவ்வளவு காலத்திற்குப் பொறுப்பது? கடைசியாக சர்வதேச சமூகத்திற்கு தலைவர் நல்லெண்ண சமிக்கை விடுகின்றார். நாங்கள் கடும்போக்காளர்கள் அல்லர். யுத்த வெறியாளர்கள் அல்லர். ஒரு இறுதி சந்தர்ப்பமாக பேசுவதற்கு தயாராகவுள்ளோம். மக்கள் அவதிப்படுகின்றனர். எம்மால் எமது படைகளை அனுப்பி சிங்கள இராணுவத்தை அழித்து துவைத்து விடலாம். சர்வதேச உலகம் இன்னொரு முறை பேசும்படி சொல்கின்றது.

கேள்வி: பேச்சுவார்த்தைக்கு சென்றால் அரசியல் போராளிகள் சிறிலங்கா இராணுவப் பகுதிகளுக்கு செல்வார்களா?

பதில்: முக்கியமான விடயம். போர் நிறுத்த உடன்பாட்டின் படி எமது போராளிகள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் சென்று அரசியல் பணி புரிவது முக்கியமான நிபந்தனை. ஆகவே, இந்தப் பேச்சுவார்த்தைகளில் அதுவும் முக்கியமாக எடுக்கப்படும். எமது போராளிகள் மீண்டும் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் சென்று அரசியல் பணிகளைச் செய்ய வேண்டும். அகதிகளாக வந்திருக்கின்ற மக்கள் கூட திரும்பி தங்கள் இடத்துக்கு சென்று இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். இப்படி பல விடயங்கள் பேச்சுவார்த்தையில் பேசப்பட வேண்டும்.

கேள்வி: அரசு இயல்பு நிலையை ஏற்படுத்த முன்வரும் என்று நினைக்கின்றீர்களா?

பதில்: முன்வரவேண்டும். இல்லாவிட்டால் பேச்சுவார்த்தையே நடைபெறாது. போர் நெருக்கடியைத் தணித்து இயல்பு வாழ்வை ஏற்படுத்த வேண்டும்.

கேள்வி: அரசு முன்வாராது விட்டால் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில்: முன்வராது விட்டால் பின்னர் நீங்கள் வந்து கேட்க நான் சொல்வேன். இப்ப சொல்லமாட்டேன்.

கேள்வி: இன்றும் கூட மக்கள் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையில் இருந்தும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை உடனடியாக நிறுத்த ஏதாவது அழுத்தம் கொடுத்திருக்கின்றீர்களா?

பதில்: இடப்பெயர்வை நிறுத்துவதற்குத்தான் தலைவர் விட்டுக் கொடுத்து - நாம் நோர்வேயில் பேசவேண்டும் என இறுக்கமாக நின்றோம். நோர்வேயை இருதரப்பினரும் நம்பிக்கை வைத்து அனுசரணையாளர்களாக ஏற்றுக்கொண்டோம். ஏன் நோர்வேயில் பேச்சு நடத்த அரசு விரும்பவில்லை? விடுதலைப் புலிகளை ஐரோப்பாவில் இருந்து ஓரம்கட்டி ஒதுக்குவதற்கு தான் என்பது எமக்கு தெரியும். ஆனால், எங்கள் மக்கள் அவலநிலைக்கு ஆளாகி இடம்பெயர்ந்துகொண்டிருக்கின

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ நீதிமன்றின் விளக்க மறியலில் உள்ள ஸ்ரீலங்கா காவல்துறையினரில் ஒருவரை விடுவிக்க தேசியத் தலைவர் பணிப்பு

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் தமிழீழ நீதிமன்றத்தின்; தடுப்புக் காவலில் உள்ள மூன்று ஸ்ரீ லங்கா காவல்துறையினரில் ஒருவரை நல்லெண்ண முயற்சியாக விடுவிப்பதற்கான பணிப்பினை வழங்கியுள்ளார்.

அபிவிருத்தி அமைச்சரும், அமைதி முயற்சிகளின் முக்கிய பங்காளருமாகிய எரிக்சொல்ஹெய்ம் அவர்களின் வேண்டுகோளிக்கமைய தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இவ் உத்தரவினை வழங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் மூலம்- சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.