Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநிர்ணய உரிமை என்பது கூட்டமைப்பின் வெற்றுக் கோஷமே – லண்டன் கூட்டத்தில் குற்றச்சாட்டு!(காணொளி)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published on September 5, 2011-5:19 am No Comments

mavai12-150x150.jpgலண்டனில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞா.சிறிதரன் மற்றும் மாவை சேனாதிராஜா கலந்து கொண்ட பொதுக் கூட்டம் ஹரோ நகரப்பகுதியில் அமைத்துள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இக் கூட்டம் தாயக மக்களின் மறுவாழ்வு தொடர்பான கலந்துரையாடல் கூட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தாயக மக்களின் அவல நிலைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரனும் மாவை சேனாதிராஜாவும் உரையாற்றி இருந்தனர் தாயக மக்களின் அவல நிலைகள், இராணுவத்தினரின் அடாவடித்தனங்கள், மற்றும் தொடரும் இன அழிப்புக்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். இக் கூட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு உரையாற்றிய மாவை சேனாதிராஜா, தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்ட தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்காக தாம் தொடர்ந்து செயற்பட்டுவருவதாக தெரிவித்ததோடு, அதற்காக தாம் தொடர்ந்து உழைக்கவிருப்பதாக தெரிவித்தார். ஒஸ்லோ உடன்படிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த மாவை, 51 நாடுகள் உதவிபுரிவதாக உறுதியளித்த உடன்படிக்கையை ஏற்று அமுல் படுத்தாதது இருந்தது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் செய்த தவறு என்று சாரப்பட கருத்து வெளியிட்டிருந்தார்.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை – தருஸ்மனின் அறிக்கை சர்ச்சை

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை தருஸ்மனின் அறிக்கை என்ற சொற்பதத்தை பாவித்து உரையாற்றிய போது, கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் குறுக்கிட்டு, இலங்கை அரச சார்பு ஊடகங்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளே தருஸ்மனின் அறிக்கை என கூறுகிறார்கள். நீங்கள் ஏன் அவர்களின் சொற் தொடரை பாவிக்கின்றீர்கள் எனக் கேட்ட போது, தருஸ்மனின் அறிக்கை உண்மையில் ஐ.நா அறிக்கை இல்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்த ஒருவர் மாவையிடம் ஜ.நா நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் எங்காவது தருஸ்மனின் அறிக்கை என்று குறிப்பிடப்படவில்லை என தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் இருத்தவர்கள் கூக்குரலிட்டுக் கத்தினர்.

பயங்கொண்ட அரசியல் தலைமைத்துவம் தமிழ் மக்களிற்கு வேண்டாம்

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் கிறிஸ் மனிதர்களுக்கு எதிராக தமிழ் மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். இராணுவம் மற்றும் பொலிசாருக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை ஒன்று திரட்டி அரசிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனவும் வெறுமனவே அறிக்கைகளை விட்டுவிட்டு இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் முன்வைக்கப்பட்டது. இதற்கு கருத்து தெரிவித்த மாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு

எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்க்குமாறு தெரிவித்தார்.

சுயநிர்ணயக் கோட்பாடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயநிர்ணயக் கோட்பாட்டை ஒரு வெற்றுக் கோஷமாகவே பயன்படுத்துவதாக குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. தேர்தல் கால விஞ்ஞாபனக்களிலும் மேடைப் பேச்சுக்களில் மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயநிர்ணயக் கோட்பாட்டு பற்றி தெரிவிப்பதாகவும் இராஜதந்திரிகள் மற்றும் பேச்சுவார்த்தை மட்டங்களில் அதைக் கைவிட்டு விட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டதோடு, அண்மையில் இந்தியாவில் நாச்சியப்பன் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட மாநாட்டில் கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமை கோட்ப்பாட்டு பிரச்சினை எழுந்த போது, சுயநிர்ணயக் கோட்பாட்டை நிராகரித்த ஆனந்தசங்கரி பக்கம் சார்ந்து கருத்து வெளியிட்டதை சுட்டிக்காட்டி கூட்டமைப்பின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த மாவை குறுகிய கால அவகாசத்தால் தமக்கு ஆராய்து ஒரு முடிவுக்கு வரமுடியாது போனதாக நழுவல் போக்கில் பதிலளித்திருந்தார்.

குறித்த கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளித் தொகுப்பை இங்கே காணலாம்.

http://youtu.be/WgwbWB5Rv54

http://youtu.be/bIyDtqfP7ms

http://www.saritham.com/?p=33326

போனால் அடிப்பாங்கள் நொறுக்குவாங்கள் என்று பலர் வெளினாட்டில் இருக்கினம். ஏன் நடாளுமன்ற உறுப்பினர்களும் கனபேர் அப்படித்தான் இருந்தவை.

அங்க தேர்தலில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு ஏதோ தமிழர்கள் ஒருமித்து நிற்கின்ரார்கள் சிங்கலத்திர்கு எதிராக நிற்கின்றார்கள் என்று கூட்டமைப்பு காட்டிக்கொண்டு இருக்குது.

சரி அடுத்த தேர்தலிற்கு பயம் இல்லாத தலைமைகள் ஒன்று திரண்டு பணி செய்ய வாழ்த்துக்கள். ஆனால் பயம் இல்லாதவர்கள் தேர்தல் கிட்ட போய் எனக்கு எம். பி. பதவி தாங்கோ என்று கேட்கமுன்னர் இப்பவே போய் பணிகளை ஆரம்பிப்பது நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்குள் உள்ள மொறன்பாடுகளை முதலில் களையவேண்டும்.

தருஸ்மனின் அறிக்கை உண்மையில் ஐ.நா அறிக்கை இல்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்த ஒருவர் மாவையிடம் ஜ.நா நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் எங்காவது தருஸ்மனின் அறிக்கை என்று குறிப்பிடப்படவில்லை என தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் இருத்தவர்கள் கூக்குரலிட்டுக் கத்தினர்.

இந்திய அரசாங்கம் உண்மையில் இவர்களையும் மாற்றி விட்டதா????

கவனம் ஐ நா வின் போர்க்குற்ற அறிக்கை பொய் என்றும் விடு புலிகளே

போர் குற்றவாளிகள் என்றும் கூறுவார்கள்???????

தருஸ்மனின் அறிக்கை உண்மையில் ஐ.நா அறிக்கை இல்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இதுபோன்றுதான் சிங்கள அரசியல் வாதிகள் எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள் எனக்கு ஒருவிடயம் புரிகின்றது மாவையும் சிங்கள அரசியல் வாதிகளின் கைப்பொம்மையா ?

... இங்கு இணைக்கப்பட்ட இத்தலைப்பு செய்தியின் உண்மைத்தன்மை என்ன???? ....

... இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்ட பின்னணியில் உள்ள சில மர்மங்களை அவிழ்க்க முயலுங்கள்??? ... அதனை விட்டு புளிச்சல்/அவிச்சல்களை விட்டு தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டு .... ^_^

இங்கு உரையாற்றிய மாவை சேனாதிராஜா, தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்ட தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்காக தாம் தொடர்ந்து செயற்பட்டுவருவதாக தெரிவித்ததோடு ....????,

கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமை கோட்ப்பாட்டு பிரச்சினை எழுந்த போது, சுயநிர்ணயக் கோட்பாட்டை நிராகரித்த ஆனந்தசங்கரி பக்கம் சார்ந்து கருத்து வெளியிட்டதை சுட்டிக்காட்டி கூட்டமைப்பின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த மாவை குறுகிய கால அவகாசத்தால் தமக்கு ஆராய்து ஒரு முடிவுக்கு வரமுடியாது போனதாக நழுவல் போக்கில் பதிலளித்திருந்தார்.

சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்காக தாம் தொடர்ந்து செயற்பட்டுவருவதாக தெரிவித்த மாவை சேனாதிராஜா போன்றவர்கள் முதலில் சுயநிர்ணய உரிமை கோட்பாடு என்றால் என்ன என்பதைத் தாங்கள் விளங்கவேண்டும்.

இவ்வளவு காலம் வீரகேசரியை மட்டும் வாசித்து அரசியல் செய்பவர்கள் "ஆராய்து ஒரு முடிவுக்கு வரமுடியாது போனதாக" கூறுவதையிட்டு ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தமிழ் தலைமைகளின் இழிநிலை இதுகள் தான். இதுகள் பேச்சுவார்த்தை நடத்தி என்னத்தை பெற்றுத்தரப் போகுதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.