Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் நிகழும் கூத்துகள்

Featured Replies

ம்ம்ம் படிக்கிற காலத்தில் அது ஒன்றும் அவசியமான தேவை இல்லைத்தான். எனக்கு எனது ஆசிரியர் ஒரே சொல்லுறது ஞாபகம் வருது. கொம்பட்டபலா இருந்து ஒரு நாளும் படிக்க கூடாது என்பார். அப்படி இருந்து படித்தால் நமக்கு படிப்பு ஏறாதாம் கஷ்டப்பட்டு படிக்கணும் என்று சொல்லுவார்.

  • Replies 80
  • Views 13k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை வினித்.... நீங்கள் யாழ்பாணத்திற்கு கடைசியாக எப்பொழுது போனீர்கள்...?

ஏய். ஆரது மரணதண்டனையை நிப்பாட்டச் சொல்லுறது?

சுட்டுச் சுட்டுப் பழகிப்போன எங்கட கையள என்ன பூப்பறிக்கச் சொல்லிறியளோ?  

"சூடு தானண்ணை சுரணை கொண்டுவரும்." (இந்தப் பஞ்ச் வசனத்தை வேற ஒருத்தரும் பாவிக்கக்கூடாது.)

மரணதண்டனை ஒழிப்புக் கதையெல்லாம் சபைக்குதவாது. எதுக்கெடுத்தாலும் சுட்டுத்தான் பழக்கம். அதை திடீரெண்டு நிப்பாட்ட ஏலாது.

ஆனா ராசீவ் விசயத்தில எங்கட ஆக்களுக்காக மரணதண்டனை ஒழிப்புக் கோசம் போடுறதையும் இதுகளையும் சேத்து ஆராவது கேள்விகேட்டா,,,

மவனே உங்களுக்குத்தான் முதற்சூடு. கவனம்.

நல்லவன்.. இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரைப் பொறுத்த வரை ராஜீவ் ஒரு மரண தண்டனைக் கைதிதான்.. அவர் ஈழத்தில் இந்திய இராணுவத்தை ஏவிக் கொன்ற 9000 பொதுமக்களும் என்ன குற்றவாளிகளா..???! அதுக்கு என்ன தண்டனை..! மிலோசவிச் போல சதாம் போல ஏன் ராஜீவுக்கு தண்டனை கொடுக்கல்ல உலகம்..??! அதைச் செய்திருந்தா...சில சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்..!

எங்கும் கடும் சமூகக் குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது. சிறீலங்காவில் மீண்டும் மரண தண்டனை கொண்டு வரப்பட்டாயிற்று. மனித உரிமைகள் காப்புக்காக யுத்தம் செய்வதாகச் சொல்லும் அமெரிக்காவில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. ஈழத்தில் எச்சரிக்கைகளின் பின்னும் திருந்தாதுகளுக்கே மரண தண்டனை வழங்கப்படுகிறது. எச்சரிக்கை வழங்கிய பின் குற்றங்களை உணர்ந்து தவிர்த்தவர்களும் இருக்கிறார்கள் தானே..! ஒரு சில சந்தர்ப்பங்களில் சட்டத்தின் கடுமையான அமுலாக்கமில்லையேல் மனித விலங்குகளை கட்டுப்படுத்துவது கடினம்..! அதை செயற்பாட்டு ரீதியில் தான் உணரலாம். வார்த்தைகளால் சும்மா எழுதிட்டுப் போறது போல அல்ல சமூகமும் அதன் அங்கத்தவர்களும்..! அதற்காக நாங்கள் மரண தண்டனையை ஆதரிக்கின்றோம் என்பதல்ல அர்த்தம். தேவைக்கு கட்டாயத்தின் பெயரில் பாவிக்க வேண்டி இருக்கிறது. ஒரு அறிவுபூர்வமான ஒழுக்கம் கட்டுக்கோப்புள்ள ஒரு சமூகத்தில் அதன் தேவை இருக்க வாய்ப்பில்லை..என்றே சொல்லலாம்..! :wink: :P :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

96ம் ஆண்டிற்கு முன்னர் பெண்களுடன் வம்பு பண்ணும் ஆண்களை தான் அதிகம் பார்த்திருக்கின்றேன்.

(யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடம் நுளையும் போது பெண் மாணவிகளால் நடந்ததை வெளியில சொல்லேலாது)

ஆனால் இப்போ யாழ் பெண்களால் சீரழிக்கப்பட்டு வருகிறது.

சினிமாவில் வரும் அடிதடி நாயகர்கள போல் பாவனை அசய்பவர்களுடனும், பொதுமக்களால் வித்தியாசமாக பார்க்கப்படும் இளைஞர்களுடனும் தான் திரிகின்றார்கள்.

யாழில் RIO குளிர்களி நிலையத்திற்கு போனால் தெரியும்.

தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே...

கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?

ம் இதுவும் நியாயம் தானே..! பெண் என்பதற்காக மன்னிப்பது பாவம் பார்ப்பது எமது சமூக வழமை...அதை தற்போது பெண்கள் தவறாக பாவிக்க முற்பட அனுமதிக்க கூடாது. சுதந்திரம் எல்லா மனிதருக்கும் உண்டு. பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையில் ஆண்களோடு இணைந்து அவர்களுக்கு இணையாக ஒழுக்கத்தை இழக்கக் கூடாது. அப்படி செய்தால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப்படும் தண்டனை அவர்களின் குற்றங்கள் தொடர்பில் நோக்கப்படும் நோக்கு ஒரே இயல்பினதாக இருக்க வேண்டும். இருப்பினும் எந்த மனிதனும் கெட்டவனல்ல. சந்தர்ப்பம் சூழ்நிலை அவனைக் கெட்டவனாக்கிறது.தப்புக்கு தூண்டுகிறது. எனவே எல்லோருக்கும் போதிய அளவு திருந்த வழிகாட்டலும் சந்தர்ப்பமும் அளிக்க வேண்டும். தண்டனைகளை நிறை வேற்ற முன் அவை பல தடவை பரிசீலிக்கப்படவும் வேண்டும். எந்த மனிதனின் வாழ்வுரிமையையும் நினைத்த மாதிரிக்குப் பறிக்க முடியாது. அவனால் பலரின் வாழ்வுரிமை சமூகத்தின் ஒழுக்கம் பாதிக்கப்படும் என்றால் குற்றத்துக்கு தண்டனை வழங்கத்தான் வேண்டும்..அவன் திருந்தாத பட்சத்தில்..! :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களுக்கு சில சலுகைகளை செய்வதாலேயே அவர்கள் ஆண்களுக்கு தடி விட்டுக்கொண்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த சம்பவத்திலும் ஒரு ஆணும் பெண்ணும் ஈடு;பட்டிருந்தால் அங்கு பெண்ணை ஒரு விதமாகவும் ஆணை ஒரு விதமாகவுமே கையாளுவார்கள். அந்த சம்பவத்தின் தோற்றப்பாடுக்கு அவர்களின் பங்களிப்பு வீதம் எப்போதுமே உற்று நோக்கப்படுவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலை பெரிய குற்றம் 20லட்சம் கேட்கும் ஆட்களுடையது... உது அந்த காலத்தில் இருந்து நடந்துகிட்டு வாற விசயம் தானே.... மேல் மட்டத்தாகளின்ரையும் கீழ் மட்டதாகளின்ரை விசயமாக வெளி வந்து கொண்டிருந்தது....நடுத்தர ஆக்களின்ரை விசயங்கள் இப்ப சர்வசாதரணமாய் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கு.போல..... இந்தகாலம் ஆணும் பெண்ணும் புத்திசாலிகளென்று பார்த்தால் .......... ஏதோன்று தப்பிச்சு வெளியிலைவந்திட்டுது....யாழ்ப்

முதலாவது சம்பவத்தில் பெண்ணுக்கு 3 மாதம் வரும் வரை தாய் என்ன செய்து கொண்டிருந்தார். இனியும் காலம் தாமதிக்காது இரு சாராரும் கதைத்து ஒரு முடிவிற்கு வரலாம். இந்த மாணவி எப்படி அவனை திருமணத்திற்கு முந்திய உறவில் அனுமதிக்கலாம். இவருடைய அனுமதியின்றி நடைபெற்றிருந்தால் ஏன் 3 மாதம் வரை பொறுந்திருந்தார்.

மற்றும் இந்த பிரச்சனைக்கு அவர்களை கூப்பிட்டு ஏன் அவர்களுக்கு வீண்சிரமங்களை கொடுக்கிறீர்கள். உங்கள் பெண்ணின் தவறால் ஏற்பட்டதை நீங்களே சீர்செய்யுங்கள்.

நல்லா இருக்கு உங்கள் கதைஉங்கள் பெண்ணால் ஏற்பட்டதை நீங்களே தீர்க்கச் சொல்கிறீர்கள் ஏதோ தப்பு செய்த ஆண் தப்பே செய்யாத மாதிரி. ஏனண்ணா ஒரு பஸ்ஸில போற பெண் நான் இண்டைக்கு கெட்டுப்போகணும் என்ன கெடுத்திடு எண்டு கேட்டு கெட்டுப்போன மாதிரி அல்லவா உங்கட கருத்து இருக்கு. திருமணத்துக்கு முன் எப்படி ஒர பெண் உறவில் ஈடுபடலாம் என்று கேட்கிறீர்கள் ஏன் அப்படி அவ்வாணைப்பற்றி கேட்கவில்லை. அல்லது நீங்களும் ஒரு ஆணாக இருப்பதால் அதிலிருந்து தப்ப பார்க்கிறீர்களா. கற்பு என்பது ஆண்,பெண் இருவருக்கும் சம்பந்தப்பட்டது. அதனை ஏன் பெண்ணுடன் மட்டும் நிறுத்திப் பார்க்கிறீர்கள். உங்களின் இப்படியான பார்வைகளே இப்படியான ஆண்களை தப்பு செய்ய தூண்டுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது எப்படியோ இப்போது பாதிக்கப்பட்டுள்ளது பெண்தானே..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணோ பெண்ணோ அது பெற்றேருடைய வளர்ப்பில் தான் இருக்கிறது.

இன்று தங்கள் பெண்ணின் நிலை கண்டு பெற்றோர் அந்த ஆணை மட்டும் குறைசொல்வது பிழை.

கற்பு என்பது இரு பாலாருக்கும் பொதுவானது தான். ஆனால் ஆணின் கற்பை பற்றி அதிகம் அக்கறை காட்டாத பெண்கள் பெண்ணின் கற்பு பற்றி அதிக கவனம் எடுப்பது தவறானது.

இன்று இதில் சம்பந்தப்பட்ட ஆணை திருமணம் செய்ய எத்தனையோ பெண்கள் முன்வருவார்கள். இந்த பெண்ணை திருமணம் செய்ய எத்தனை ஆண்கள் முன்வருவார்கள்?

"சூடு தானண்ணை சுரணை கொண்டுவரும்."  

அப்ப அந்தப்பெடியனுக்கும் சூடுவைப்பம் :lol::lol:

என்னத்தைச் சொல்ல யாழ்ப்பாணம் இப்போ நவீனம் ஆகிறது. சொன்னால் நம்பமாட்டீர்கள். யாழ் பஸ் நிலய வளாகத்தில் செல்லிடப்பேசியும் சொண்டு சுழிப்புமாக எத்தனை சிறுமிகள் / இளம் பெண்கள் அலைகிறார்கள். எனது வாழ்நாளில் எமது மண்ணில் நான் இப்படிப்பட்ட கேவலங்களை முன் ஒரு போதும் கண்டதில்லை. இது அப்பட்டமான ஒரு விபச்சார நடவடிக்கை. அதுபோக யாழ் கச்சேரிக்கு அருகில் இருக்கும் ஒழுங்கையொன்று இப்பொழுது லவ் லேன் என பலராலும் அழைக்கப்படுகிறது. அங்கு சமாதான காலத்தில் எமது இளசுகள் பட்ட பாடு :oops: :oops: :oops: ஐரோப்பிய கலாச்சாரம் பிச்சை வாங்கவேண்டும். ஆணும் பெண்ணும் முடிஞ்சா பிரிச்சு பார் என பந்தயம் கட்டுமாற்போல் இறுக அணைத்தபடி இருப்பார்கள். இவற்றுக்கு ஈடாக காரைநகர் கசூர்னா கடற்கரை, வவுனியா நகரசபை பூங்கா. என்பன திகழ்ந்தன ஐயோ கலாச்சாரத்தை பேணும் பிரிவு தலைகீழாக நின்றும் அவற்றை தடுக்க முடியவில்லை. இப்பொழுதோ பொங்கியெழும் மக்கள் படை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். எங்கு பார்த்தாலும் இராணுவ மயம் அதுகும் வவுனியா நகர சபை பூங்காவை கனவுல கூட நினைச்சே இளசுகள் பார்க்கமாட்டார்கள் ஏனெனில் அதற்கு அருகில் தான் STF எனும் விசேட அதிரடிப்படையினரின் முகாம் அமைந்துள்ளது. இவற்றை விட ஊருக்குள் காதல் கசமுசாக்கள் தலைவிரித்தாடுகின்றன. முன்னர் கடித்தத்தில் நடந்த காதல்கள் எல்லாம் இப்பொழுது செல்லிடப்பேசியிலிம், மின்னஞ்சல் ஊடாகவும் மிகவும் வேகமாகவும் இரகசியமாகவும் நடை பெறுகின்றன. என்ன SMS எனும் குறுந்தகவல் அனுப்ப ஆக 2 ரூபாய்கள் தான் பின்ன யார் விடுவான் அதை ? :wink: :wink: ஏதோ எல்லாத்துக்கும் ஒரு முடிவு வராமல் விடவா போகுது. சரி சுவிஸ் பயணம் முடியட்டன் பாப்பம் :lol::lol::lol::lol:

ஏய். ஆரது மரணதண்டனையை நிப்பாட்டச் சொல்லுறது?

சுட்டுச் சுட்டுப் பழகிப்போன எங்கட கையள என்ன பூப்பறிக்கச் சொல்லிறியளோ?  

"சூடு தானண்ணை சுரணை கொண்டுவரும்." (இந்தப் பஞ்ச் வசனத்தை வேற ஒருத்தரும் பாவிக்கக்கூடாது.)

மரணதண்டனை ஒழிப்புக் கதையெல்லாம் சபைக்குதவாது. எதுக்கெடுத்தாலும் சுட்டுத்தான் பழக்கம். அதை திடீரெண்டு நிப்பாட்ட ஏலாது.

ஆனா ராசீவ் விசயத்தில எங்கட ஆக்களுக்காக மரணதண்டனை ஒழிப்புக் கோசம் போடுறதையும் இதுகளையும் சேத்து ஆராவது கேள்விகேட்டா,,,

மவனே உங்களுக்குத்தான் முதற்சூடு. கவனம்.

சரியாத்தான் கஸ்ரப்படுகிறீங்கள்.... ! அது சரி..! அரைச்ச மாவை எவ்வளவுகாலம் அரைப்பீங்கள்... மாவை மாத்தும் ஓய்... :wink:

சரியாத்தான் கஸ்ரப்படுகிறீங்கள்.... ! அது சரி..! அரைச்ச மாவை எவ்வளவுகாலம் அரைப்பீங்கள்... மாவை மாத்தும் ஓய்...

மாத்த மாட்டினம் மா புளிக்கும் வரையாம் :P :P

எப்பவும் இரண்டு அர்த்ததில தான் பேசிவினம் :P :P

மாத்த மாட்டினம்  மா புளிக்கும் வரையாம் :P  :P  

எப்பவும் இரண்டு அர்த்ததில தான் பேசிவினம் :P  :P

அந்தக்கதையைச் சிங்கப்பூரில சொல்லவேணும்... அவை சொல்லுவினம் நல்லபதில்.... எப்படி அந்த நாட்டை இவ்வளவு கட்க்கோப்பாக வைத்திருக்கினம் எண்று...! :wink:

குருவிகள் சொன்னது:

"நல்லவன்.. இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரைப் பொறுத்த வரை ராஜீவ் ஒரு மரண தண்டனைக் கைதிதான்.. அவர் ஈழத்தில் இந்திய இராணுவத்தை ஏவிக் கொன்ற 9000 பொதுமக்களும் என்ன குற்றவாளிகளா..???! அதுக்கு என்ன தண்டனை..! மிலோசவிச் போல சதாம் போல ஏன் ராஜீவுக்கு தண்டனை கொடுக்கல்ல உலகம்..??! அதைச் செய்திருந்தா...சில சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்..! "

அருமையான கேள்வி குருவிகள்- இதுக்கு பதில் சொல்ல -அவர்களுக்கு உள்ள ஒரேவழி- வழமைபோல சம்பந்தம் இல்லாமல் ஏதும் பேசுவதுதான்! 8)

  • கருத்துக்கள உறவுகள்

ஏய். ஆரது மரணதண்டனையை நிப்பாட்டச் சொல்லுறது?

சுட்டுச் சுட்டுப் பழகிப்போன எங்கட கையள என்ன பூப்பறிக்கச் சொல்லிறியளோ?  

"சூடு தானண்ணை சுரணை கொண்டுவரும்." (இந்தப் பஞ்ச் வசனத்தை வேற ஒருத்தரும் பாவிக்கக்கூடாது.)

மரணதண்டனை ஒழிப்புக் கதையெல்லாம் சபைக்குதவாது. எதுக்கெடுத்தாலும் சுட்டுத்தான் பழக்கம். அதை திடீரெண்டு நிப்பாட்ட ஏலாது.

ஆனா ராசீவ் விசயத்தில எங்கட ஆக்களுக்காக மரணதண்டனை ஒழிப்புக் கோசம் போடுறதையும் இதுகளையும் சேத்து ஆராவது கேள்விகேட்டா,,,

மவனே உங்களுக்குத்தான் முதற்சூடு. கவனம்.

ஓமோம் நல்லவன். ஆனால் என்னுமொரு பழக்கத்தையும் விட்டுவிட்டீர்களே எங்கள் வீட்டு ஆக்கள் செத்தால் எமக்கு கண்ணீர் வராது என்ற விடயத்தை.

மற்றது இதுக்குள்ள ஏன் சம்பந்தமில்லாமல் கதைக்கின்றீர்கள். அது தான் பழக்காமாகப் போச்சோ!!

  • கருத்துக்கள உறவுகள்

ம் இதுவும் நியாயம் தானே..! பெண் என்பதற்காக மன்னிப்பது பாவம் பார்ப்பது எமது சமூக வழமை...அதை தற்போது பெண்கள் தவறாக பாவிக்க முற்பட அனுமதிக்க கூடாது. சுதந்திரம் எல்லா மனிதருக்கும் உண்டு. பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையில் ஆண்களோடு இணைந்து அவர்களுக்கு இணையாக ஒழுக்கத்தை இழக்கக் கூடாது. அப்படி செய்தால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப்படும் தண்டனை அவர்களின் குற்றங்கள் தொடர்பில் நோக்கப்படும் நோக்கு ஒரே இயல்பினதாக இருக்க வேண்டும். இருப்பினும் எந்த மனிதனும் கெட்டவனல்ல. சந்தர்ப்பம் சூழ்நிலை அவனைக் கெட்டவனாக்கிறது.தப்புக்கு தூண்டுகிறது. எனவே எல்லோருக்கும் போதிய அளவு திருந்த வழிகாட்டலும் சந்தர்ப்பமும் அளிக்க வேண்டும். தண்டனைகளை நிறை வேற்ற முன் அவை பல தடவை பரிசீலிக்கப்படவும் வேண்டும். எந்த மனிதனின் வாழ்வுரிமையையும் நினைத்த மாதிரிக்குப் பறிக்க முடியாது. அவனால் பலரின் வாழ்வுரிமை சமூகத்தின் ஒழுக்கம் பாதிக்கப்படும் என்றால் குற்றத்துக்கு தண்டனை வழங்கத்தான் வேண்டும்..அவன் திருந்தாத பட்சத்தில்..!   :idea:

என்ன இது பெண்கள் மட்டும் ஒழுக்கத்தை இழக்க கூடாது என்ற மாதிரிக் கதைக்கின்றீர்கள். யார் செய்தாலும் குற்றவாளி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே றோட்டில் நின்று பெண்களைக் கேலி செய்வதோ, அல்லது உடலை வர்ணனை செய்வது எல்லாம் ஆண்களுக்கு வழங்கப்பட்ட சம உரிமைகள் என்றும் சொல்லுங்கோ! அப்ப தான் ஜனநாயகத்தை காப்பாற்றிய மாதிரி இருக்கும்.

ஐயோ அப்படி அர்த்தத்தில சொல்லேல்ல.. (ஒழுக்கம் எல்லோருக்கும் பொது..கற்புக் கூட ஒரு வாழ்வியல் ஒழுக்கம் தான்..என்பது எங்கள் நோக்கு..!) பெண்களும் ஆண்களுக்கு இணையா ஒழுக்கத்தை இழக்க முற்பட்டால்..ஆண்களைப் போலவே தண்டனையையும் செய்த குற்றத்துக்கான நோக்கலையும் சந்திக்க வேண்டும் என்றுதான் சொல்லிருக்கம்..! :P :idea:

பெண்களும் ஆண்களுக்கு இணையா ஒழுக்கத்தை இழக்க முற்பட்டால்..ஆண்களைப் போலவே தண்டனையையும் செய்த குற்றத்துக்கான நோக்கலையும் சந்திக்க வேண்டும்

இது நடைமுறைக்கு சாத்தியமானதா..........? சமுதாயத்தால் பெண்கள் இன்னும் பரிதாபத்துக்குரியவர்களாகவு

இது நடைமுறைக்கு சாத்தியமானதா..........? சமுதாயத்தால் பெண்கள் இன்னும் பரிதாபத்துக்குரியவர்களாகவு

  • கருத்துக்கள உறவுகள்

இது நடைமுறைக்கு சாத்தியமானதா..........? சமுதாயத்தால் பெண்கள் இன்னும் பரிதாபத்துக்குரியவர்களாகவு

மேற்கோள்:

ஏன் முகத்தார். ஆண்கள் தப்புச் செய்தால் வயசுக் கோளாறு என்றும், பெண்கள் தப்புச் செய்தால் பிரச்சனையாகக் கிளப்புவதையும் பார்க்கின்றோமே.

இதில் ஆண்களைக் குற்றவாளியாக்க சமுதாயம் மறுப்பதேன்? அவர்களைக் குற்றவாளியாகக் கணி;த்தாக வேண்டும்.

எல்லா உணர்வுகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமனாகதான் இருக்கு. ஆனால்- கலாச்சாரம் என்ற கட்டுப்பாட்டின் மேலுள்ள போர்வையின் நுனியை ஆண் எப்போதும் தன் பிடியிலேயே வைச்சுக்கொண்டு எல்லாம் செய்கிறான்.

எக்குத்தப்பா மாட்டுப்படவேண்டிவந்தால்-

இழுத்து தன்னை போர்த்திக்கொண்டு சமூகத்தின் பார்வயிலிருந்து ஒளிந்து கொள்கிறான் -துணைபோன பெண்ணை மட்டும் அம்போன்னு நடுத்தெருவில் விட்டு-சமூகத்தின் வசைபாடலுக்கு உள்ளாக்கி-தானும் அவர்களுடன் சேர்ந்து அவளை திட்டிதீர்த்துவிடுகிறான் -!

இதை சுருக்கமா யோசிச்சா-ஆணாதிக்கம்-பெண்ணடிமைத்தனம்!

இந்த இடத்தில் கொஞ்ச நாளைக்கு முன் பரபரப்பா விவாதிக்கப்பட்ட - குஷ்புவின் கருத்துதான் ஞாபகத்துக்கு வருகிறது! -மாற்றத்துக்கு இன்னும் உட்படாத எங்கட வாழ்வியல் முறைக்கு- குஷ்புவின் கருத்து-சமூகசீர்கேட்டை ஊக்குவிக்கும்தான்.... - என் நோக்கம் -அந்த கருத்துக்கு வக்காலத்து வாங்க வருவதில்லை-!

காதலால்- தன்னிலை மறந்து -உடற்சேர்க்கையில் ஈடுபடுபவர்களை தடுக்க என்ன சட்டமா போடமுடியும்-?ஆனால்- அந்த அவசரங்களின் பின்விளைவுகளால்-சமூகத்தில் அவமானங்களை எதிர்கொண்டு-இணையதளங்கள் வரை இப்பிடி விமர்சனபொருளாய் ஆகிவிடும் பெண்களுக்கு- குஷ்புவின் கருத்தில் ஏதோ ஒரு செய்தி இருப்பதாகவே உணர்கிறேன் -!

இதன்மூலம்-தப்புக்கு வழிசொல்லுறன் எண்டு அர்த்தம் இல்ல-தப்பு செய்தே ஆவேன் என்று அடம்பிடிப்பவர்கள்-ஆககுறைந்தது-முன்னெச்சரிக்கையாக ஆவது இருக்கலாம்-! :roll: 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.