Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்றி அம்மா- குறும்பட விமர்சனம்

Featured Replies

ஈழத்துத் தமிழ்ச் சினிமா என்ற ஒன்று காலவோட்ட மாற்றத்தில் காணாமற் போய் விட்ட பிற்பாடு, அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு முறை வெளியாகும் ஈழத்துக் குறும்படங்கள், ஈழத்தவர்களாலும் ஒரு சினிமாவினை எடுக்க முடியும் எனும் நம்பிக்கையினை மெய்ப்பித்து விடுகின்றன.

முழு நீளத் திரைப்படங்கள்(நீலப் படம் அல்ல) எனும் வரிசையில் இருந்து ஈழச் சினிமாவானது விலகி, இன்று அதற்கென்றோர் தள வடிவம் ஏதுமற்றிருப்பதற்கான பிரதான காரணம் ஈழத்துப் போர்ச் சூழலாகும்.

EelamCinema_54_308.jpg

ஈழப் போராட்டம் இடம் பெற்ற காலங்களில் வெளியான குறும்படங்கள், விவரணச் சித்திரங்கள், முழு நீளத் திரைப்படங்களில் பெரும்பாலானவை ஈழப் போராட்டத்தின் பிரச்சார வடிவமாக மாறிக் கொள்ள, குறும்படங்களானது ஈழச் சினிமாவிற்கான ஓர் அடையாளமாக தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள், மற்றும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் முயற்சியினால் மாற்றம் பெறுகிறது.

ஈழத்துக் குறும்படங்கள் வரிசையில் பெயர் சொல்லுமளவிற்கு சிறப்பான ஒரு கதையம்சத்தோடு புலம் பெயர் தமிழர்களால் 2009ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கும் ஒரு படம் தான் ‘நன்றி அம்மா’!

Nanri+Amma+3.jpg

மின் படிமங்களின் உருவாக்கத்தில், அனிஸ்ரன் திருநாவுக்கரசின் பின்னணி இசையில், தீபன் துரைஸ், மிஷா ரொட்னி, சுமித்திரா திருவழகன், திருவழகன் முருகுப்பிள்ளை ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் இப் படத்தினை,

அனுஜனா வதனன் அவர்கள் இயக்கியிருக்கிறார்.

இளம் வயதுக் காதலர்களாக இருக்கும் தீபன்- மிஷா ஜோடியினர் பெற்றோரிடம் அனுமதி வாங்கி மிஷாவின் பிறந்த நாளன்று சந்திக்கிறார்கள். மிஷா, ’’தம் காதலைப் பெற்றோருக்குத் தெரியப்படுத்தி திருமணத்திற்கான சம்மதத்தினை வாங்கியிருப்பதாகவும், இன்னும் ஒரு வருடத்தில் கலியாணம் என்றும் தீபனிற்கு ஒரு Surprise- பிறந்த நாளன்று இன்ப அதிர்ச்சியளிக்கிறார்.

இதற்கும் மேலாக மிஷா தன்னைத் தீபனிற்குப் பரிசளிக்க விரும்பி, தான் ஏற்கனவே புக் பண்ணி வைத்த ஹோட்டல் ரூமின் ரசீதினைக்(Entry Ticket) குடுத்து, தீபனுக்கு மேலும் இன்ப அதிர்ச்சியளிக்கிறார்.

Nanri+Amma.jpg

இவ் இடத்தில் ’’எப்படா எம் கையில் ஒரு பொண்ணு சிக்குவாள், எப்போது மேட்டரை முடிக்கலாம்’’ எனப் பல மன்மதக் குஞ்சுகள் அலையும் சமூகத்தில் இயக்குனர் அவர்கள் தீபனை வழமைக்கு மாறாக ஒரு வித்தியாசமான கோணத்தில் காட்ட முயற்சித்திருக்கிறார் என்றே கூற வேண்டும்.

‘இவ்வளவு காலமும் வெயிட் பண்ணிட்டேன்,

இன்னிம் ஒரு வருசம் தானே’ எனக் கூறி, இம் முயற்சியினைத் தள்ளிப் போடும் படி தீபன் கேட்க, மிஷாவோ, தன் காதலுக்கான பரிசு, இதனை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டும் திருமணத்திற்கு முன்பதாக பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.

இவ் உறவின் பயனாக மிஷா கர்ப்பமடைந்து விட, கருவினைக் கலைக்க மனமின்றி பெற்றோரின் சம்மதத்தினை வேண்டுவதற்காய் மிஷா தாயாருடன் போராடி, மனமிரங்கித் தேம்பியழுது சம்மதம் வாங்கும் காட்சிகளில் அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Nanri+Amma+2.jpg

திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பதாகப் பெற்றோரிடம் இருவரும் பேசித் திருமணத்தினை விரைவாக நடாத்துவதற்குரிய சம்மதத்தினையும் வாங்கி விடுகிறார்கள்.

திருமணத்திற்கு முன்பதாக ஒரு ஆடவன் Bachelor Party கொடுக்க வேண்டும் எனும் நியதிக்கமைவாக தீபன் பச்லர் பார்ட்டிக்கு ஒழுங்கு செய்கிறார். இந்த பச்லர் பார்ட்டியில் அளவுக்கதிகாம குடித்து விட்டுப் போதையில் வாகனம் ஓட்டி விபத்திற்குள்ளாகித் தீபன் இறந்து கொள்ள, மிஷா அவனின் நினைவுகளோடு தனித்திருந்து ஒரு குழந்தையினைப் பெற்று வளர்ப்பதினை உணர்ச்சிகளின் வெளிப்பாட்டோடும், ஈழத்துப் பேச்சு மொழியோடும் காட்சிப்படுத்தும் படம் தான் இந்த நன்றி அம்மா!

’’அன்பே என் காதல் சொல்கின்ற வார்த்தை நீயா

அன்பே ஓர் காதல் பிள்ளையின் தாயும் நீயா

நிஜங்களாய் வந்த கனவுகள்

எந்தன் நினைவினில் நீளுதே என அற்புதமான கவி வரிகள் நிறைந்த பாடலினைத் துண்டு துண்டாக வெட்டிப் படத்தில் சேர்த்திருப்பது சலிப்பினை உருவாக்குகிறது.

அனிஸ்ரன் திருநாவுக்கரசின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக இருந்தாலும், அடிக்கடி சினிமாப் பாடல் மெட்டுக்களைப் படத்தில் சேர்த்து, ஈழத்து இசைக் கலைஞர்களின் இசைக்கு இப்போதும் பஞ்சம் இருக்கிறது என்பதனை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர்

அனுஜனா வதனின் கதையில் உருவான இப் படமானது, பிரான்ஸ் நாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் காரணத்தால், பிரெஞ்ச் வசனங்கள் வந்து போகும் காட்சிகளில் தமிழ் உப தலைப்பு விளக்கங்களோடு காட்சிப்படுத்தப்பட்டிருப்பது படத்தின் நகர்விற்குப் பக்க பலமாக அமைந்து கொள்கிறது.

I.V. ஜனாவின் வசங்கள், அப்படியே ஈழத்துப் பேச்சு வழக்கினைத் திரையில் கொண்டு வருகிறது, மிஷாவின் குரலில் புலம் பெயர்த டமிழ் உச்சரிப்பு இருந்தாலும், அவர் பேசும் வசனங்கள் கதை நிகழ் களத்திற்கேற்றாற் போல பிரதேசச் சாயலுடன் எழுதப்ப்பட்டிருக்கிறது. மாப்பு, மருமோன், மச்சி, பிள்ளை எனும் சொற்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.

மயூரனின் ஒளிப்பதிவானது; காட்சிகளில் உயிர்ப்பினை ஏற்படுத்தி, கதை நிகழ் களத்தினுள் எம்மையெல்லாம் கூட்டிச் செல்கிறது.

23 நிமிடங்கள் கொண்ட இப் படத்தில் இன்றைய இளைஞர்கள் பலரும், தமது வாழ்க்கையின் நகர்வுகளை அவதானத்துடன் முன்வைக்க வேண்டும் எனும் விடயம் காட்சி விளக்கத்தினூடாக முன் வைக்கப்பட்டிருக்கிறது.

நன்றி அம்மா- திருமணத்திற்கு முன்னரான உடலுறவின் பரிசினை மகிழ்ச்சியோடு ஏற்றுத் தனிமையில் வாழும் பெண்ணின் உள்ளத்து உணர்விற்குச் சான்றாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

டிஸ்கி: 19.12.2010 அன்று பிரான்ஸ் பாரிஸில் இடம் பெற்ற Nallur Stain short film Festival இல் Best screen play & best actress விருதுகள் இப் படத்திற்கு கிடைத்திருக்கிறது.

விமர்சனப் பகிர்வு:

http://www.thamilnat...og-post_23.html

நிரூபன் செல்வராஜா.

Edited by Nirupans

  • கருத்துக்கள உறவுகள்

மகளின் வாழ்வுக்காக, தனது அபிலாசைகளை விட்டுக் கொடுக்கும் அம்மா!

ஆனாலும் எங்கோ வலிக்கின்றது, இளைய தலைமுறையின் துணிச்சலை நினைக்க!

விமரிசனம் அருமை, நிரூபன்!

  • தொடங்கியவர்

மகளின் வாழ்வுக்காக, தனது அபிலாசைகளை விட்டுக் கொடுக்கும் அம்மா!

ஆனாலும் எங்கோ வலிக்கின்றது, இளைய தலைமுறையின் துணிச்சலை நினைக்க!

விமரிசனம் அருமை, நிரூபன்!

ஆமாம்

காலங்களின் மாற்றத்தோடு எம் இளைய தலைமுறையும் மாறிவிட்டது புங்கையூரான்.

தங்களின் கருத்துக்களுக்கு நன்றி சகோதரம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நாவலர்விருதுக்கும் இக்குறும்படம் வந்தபோது பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

நடிப்பு

கதை

என எனக்கு படம் பலவகையிலும் பிடித்திருந்தது

சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச்சென்றது

  • தொடங்கியவர்

நண்பர்கள் இருவரினதும் கருத்துக்களுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.