Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.

Posted by: on Sep 5, 2011

ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.

தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.

நிரூபிக்கப்பட்ட உண்மை

நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.

வலி நிவாரணி

தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.

எப்படி செய்வது ஆயில் புல்லிங்

காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.

விடியற்காலையே சிறந்தது

உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.

நாளொன்றுக்கு மூன்று முறை

எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.

ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.

http://www.tamilkathir.com/news/5306/58//d,full_article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ எண்ணெய் வெறும் வயிற்றில் காலையில்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.

எனக்கு பக்கெண்டு பொலிடோல் தான் ஞாபகத்துக்கு வந்து கொஞ்சநேரம் சிப்பிலியாட்டிட்டுது....இருந்தாலும் நன்றிகள்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி பகிர்வுக்கு, நல்லெண்ணை உடம்புக்கு நல்லதுதானே கொப்பளித்து பார்ப்பம்,

என்ன யாரவது கேள்விகேட்டால் அந்த நேரம் அவர்கள் முகம் வெள்ளயாகிவிடும் அல்லது, எங்கள் கன்னம் பழுக்கும் (வாய்க்குள் எண்ணைவிட்டு கதைத்து பாருங்கள்...)

  • கருத்துக்கள உறவுகள்

சின்னனில இரவில எழும்பி தண்ணி எண்டு நினைச்சு நலெண்ணை குடிச்ச ஞாபகம் வருது..! :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி பகிர்வுக்கு, நல்லெண்ணை உடம்புக்கு நல்லதுதானே கொப்பளித்து பார்ப்பம்,

என்ன யாரவது கேள்விகேட்டால் அந்த நேரம் அவர்கள் முகம் வெள்ளயாகிவிடும் அல்லது, எங்கள் கன்னம் பழுக்கும் (வாய்க்குள் எண்ணைவிட்டு கதைத்து பாருங்கள்...)

தப்பு கண்ணா தப்பு. நம்ம முகம் அப்படி மாறாதே!

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஜோடி, ஆன இப்ப கீரியும் பாம்பும் மாதிரி,

இது நினைச்சு நினைச்சு சிரிச்ச பகிடி, சுண்டல் நன்றி பகிர்வுக்கு,

கறுப்பி நாளை விடிய இருந்து இதை செய்து பார்க்கப்போறன், பார்ப்பம் முன் விளைவா பின் விளைவா என்று

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உடையார் அண்ணா செய்து பாத்தநீங்களோ?.....இப்பிடியே யாழ்ழ இனைக்கிறத எல்லாம் செய்து பாக்க வெளிக்கிட்டிங்க என்டா பிறகு உங்கள உங்க வீட்டுகாற அம்மா கலைக்க போறா எதுக்கும் கவணம்..................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஜோடி, ஆன இப்ப கீரியும் பாம்பும் மாதிரி,

இது நினைச்சு நினைச்சு சிரிச்ச பகிடி, சுண்டல் நன்றி பகிர்வுக்கு,

கறுப்பி நாளை விடிய இருந்து இதை செய்து பார்க்கப்போறன், பார்ப்பம் முன் விளைவா பின் விளைவா என்று

வாழ்த்துகள்.

நிலைமை எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்.

நிலைமை எப்படி?

நிலைமை கட்டுப்பாட்டுக்குள்.

வெந்தயமே ஊறப் போட்டு முளை வர விடிய சப்பிடுறனான், நல்லெண்ணை ஒன்றும் செய்யாது, எனக்கு தெரிந்த அன்ரி கன காலம இதை செய்கிறவா, அவ இன்னும் இழமையா இருக்கா (வயது 50க்கு மேல்), அப்ப இதை சீரியசா எடுக்கலை, நீங்கள் இணைச்ச பின்தான் யோசிச்சன் என்றும் மார்க்கண்டேயனாக இருக்க இதை செய்து பார்த்தால் என்ன என்று, என்ன காரில் வேலைக்கு வரும் போது பக்தி பாட்டை முனு முனுக்காமல் இதை செய்ய வேண்டியதுதான், நன்றி கறுப்பி இணைப்பிற்கு.

என்ன உடையார் அண்ணா செய்து பாத்தநீங்களோ?.....இப்பிடியே யாழ்ழ இனைக்கிறத எல்லாம் செய்து பாக்க வெளிக்கிட்டிங்க என்டா பிறகு உங்கள உங்க வீட்டுகாற அம்மா கலைக்க போறா எதுக்கும் கவணம்..................

அவா வாய் திறக்க மாட்ட போன வருடம்தான் கனக்க செலவழிச்சுப் போட்ட Herbalife products (http://www.herbalife.com/global) வாங்கி, இந்த எண்ணைக்கு ஒன்றும் சொல்லமாட்டா, சனியன் கெரில போன நல்லது என்று ஊக்கப்படுத்துவா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த எண்ணைக்கு ஒன்றும் சொல்லமாட்டா, சனியன் கெரில போன நல்லது என்று ஊக்கப்படுத்துவா

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிலைமை கட்டுப்பாட்டுக்குள்.

வெந்தயமே ஊறப் போட்டு முளை வர விடிய சப்பிடுறனான், நல்லெண்ணை ஒன்றும் செய்யாது, எனக்கு தெரிந்த அன்ரி கன காலம இதை செய்கிறவா, அவ இன்னும் இழமையா இருக்கா (வயது 50க்கு மேல்), அப்ப இதை சீரியசா எடுக்கலை, நீங்கள் இணைச்ச பின்தான் யோசிச்சன் என்றும் மார்க்கண்டேயனாக இருக்க இதை செய்து பார்த்தால் என்ன என்று, என்ன காரில் வேலைக்கு வரும் போது பக்தி பாட்டை முனு முனுக்காமல் இதை செய்ய வேண்டியதுதான், நன்றி கறுப்பி இணைப்பிற்கு.

அவா வாய் திறக்க மாட்ட போன வருடம்தான் கனக்க செலவழிச்சுப் போட்ட Herbalife products (http://www.herbalife.com/global) வாங்கி, இந்த எண்ணைக்கு ஒன்றும் சொல்லமாட்டா, சனியன் கெரில போன நல்லது என்று ஊக்கப்படுத்துவா

நானும் 2,3 நாள் வெந்தயத்தை இரவு ஊற வைத்து அடுத்த நாள் காலையில் சாப்பிட்டனான் அடுத்த நாள் எழும்ப முடியாத அளவு நித்திரை :) ...உடையாருக்கு அப்பிடி இருக்கவில்லையோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் 2,3 நாள் வெந்தயத்தை இரவு ஊற வைத்து அடுத்த நாள் காலையில் சாப்பிட்டனான் அடுத்த நாள் எழும்ப முடியாத அளவு நித்திரை :) ...உடையாருக்கு அப்பிடி இருக்கவில்லையோ

கனவும் வந்ததா ரதி :D

  • கருத்துக்கள உறவுகள்

அடையார் அண்ணா சீ உடையார் அண்ணா நீங்கள் கார் ஒடிக்கொண்டு எண்ணெயை வாய்குள்ள வைச்சிட்டு போகேக்க போலீஸ் மறிச்சு Breath டெஸ்ட் எடுக்கனும்னு சொன்னா என்ன நடக்கும்னு நினைச்சு பாத்தன் என்னால முடியல்ல......................

  • கருத்துக்கள உறவுகள்

கனவும் வந்ததா ரதி :D

ஓம் ஆனால் கனவில் நீங்கள் வரேல்ல :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜாக்கி சான் வந்தவராக்கும்.....

  • கருத்துக்கள உறவுகள்

நானும் 2,3 நாள் வெந்தயத்தை இரவு ஊற வைத்து அடுத்த நாள் காலையில் சாப்பிட்டனான் அடுத்த நாள் எழும்ப முடியாத அளவு நித்திரை :) ...உடையாருக்கு அப்பிடி இருக்கவில்லையோ

இல்லை ரதி, இப்படி சாப்பிட்டா கொஞ்சம் கஷ்டம்தான். இரவு கை பிடியளவு ஊறவிட்டு, அடுத்தநாள் விடிய ஊறின தண்ணியை மட்டும் குடித்துபோட்டு,

ஊறின வெந்தையைதை அடுத்ததாள் விடிய முளை வந்திருக்கும், அதை சாப்பிட்டா ருசியாக இருக்கும் (இரண்டு நாள் வைத்த இன்னும் நல்லது), வெறும் வயிற்றில் சாப்பிட்டாதான் நல்லது,

வயிறு நல்ல குளிர்மையா இருக்கும்,

கிழமையில் இரண்டு தாரம் சாப்பிட்டா நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

அடையார் அண்ணா சீ உடையார் அண்ணா நீங்கள் கார் ஒடிக்கொண்டு எண்ணெயை வாய்குள்ள வைச்சிட்டு போகேக்க போலீஸ் மறிச்சு Breath டெஸ்ட் எடுக்கனும்னு சொன்னா என்ன நடக்கும்னு நினைச்சு பாத்தன் என்னால முடியல்ல......................

ஹி...ஹி...ஹி...ஹி..........கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா, விடிய சோதனை செய்ய மாட்டாங்கள், site க்கு போனதான் கஷ்டம், அங்கு பஸ் ஏற முதல் Breath டெஸ்ட் செய்வார்கள்.....

அடையார் - நாங்கள் வீட்டுக் கதவை 6pm என்றா அடைச்சு போடுவம், இணையவனை ஒரு கை பார்க்கிறன் பிரான்ஸ் வரும்போது

ஊர்ல, சின்னன்ல சனிக்கிழமை எண்ணைத்தோயள் நாள். உடம்பு முழுக்க நல்லெண்ண் பூசிக்கொண்டு வாய்குள்ளையும் கொஞ்சம் நல்லெண்ணை விட்டுக் கொப்பளிச்சுக்கொண்டு நிக்க வேணும். தலையில எண்ணைய தப்பி விடுவினம். தலை எண்ணை உருகி கண்ணுக்குள்ள போய் எரியும். அடிக்கடி இமைக்குகிட்ட வளிச்சு விட வேணும். மத்தியானம் ஒரு கிடாரத்தில சுடுதண்ணி கொதிக்க வைப்பினம். ஒரு சட்டியில அரப்பு, சீயாக்காய், தேசிக்காய் போட்டு அவிப்பினம். எல்லாத்தையும் தலையிலையும் உடம்பிலையும் பூசித் தோய வேண்டியது தான். இரண்டு நாளைக்கு உடம்பு எண்ணை போகாம பாண்டல் மாதிரி ஒட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஈசன், இது நல்ல ஒரு குளியல் ஊரில்,

கறையன் புற்று மண் குளியல் செய்து இருக்கிறிர்களா,

கறையான் புற்றுமண் எடுத்து கழிமாதிரி குழைத்து உடம்பு முழுக்க பூசி (UB மட்டும் போட்டிருக்கனும்), 1 மணித்தியாலம் ஊறவிட்டு குளிச்சு பாருங்க, என்ன ஒரு புத்துணரச்சி, உடம்ப தடவி பார்த்தா என்ன ஒரு மினுமினுப்பு பள பள என்று, சோப் தேவையில்லை,

வயலில் தண்ணிவிட்டுவிட்டு பெடியலா கும்மாள அடிச்சி குளிக்கும் போது ஊர் பெண்டுகள் குடிக்க தண்ணி கூட எடுக்க வரமாட்டினம்.

கறையான் புற்று மண் குளியல் இன்னும் எடுக்கேல்ல.

ஆனால் கடற்கரையில சில நேரம் கருப்பான கனிய மண் இருக்கும். அத உடம்பெல்லாம் பூசி குளிச்சிருக்கிறோம். அதில கதிர்விச்சு மூலகங்களும் இருக்கலாம். அதனால் தான் என்னவோ எங்களுக்கு கொஞ்சம் எனர்ஜி அதிகம். ஸ்பைடர்மான் மாதிரி. :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விளையாட்டு இது? ஆட்டோட விளையாடலாம் மாட்டோட விளையாடலாம் மனுஷாலோட விளையாடலாமோ? கறையான் மண்ணில தப்பி தவறி கறையான் இருந்து கடிக்க கூடாத இடத்தில கடிச்சிட்டா என்ட கடவுளே...............

  • கருத்துக்கள உறவுகள்

கறையான் கடிக்கிறதை யோசிக்கிறிங்க, நாங்க கறையான் புத்தென்று பாம்பு புத்தை வெட்டினாங்கள், நல்ல காலம் பாம்பில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.