Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

"குட்பாய்" லண்டன்

கலை மா(மா)மணியின் பேட்டி

நாங்கள் இன்று பேட்டி காண இருப்பது குட்பாய் லண்டன் நிகழ்சியின் ஒருங்கணைப்பாளர் கலைமா(மா)மணி, கலைக்குயில் கலைக்காக்கா கலைக்கோழி கலைக்குருவி ஸ்நேக் பாபு அவர்களை புலம் பெயர்ந்த மண்ணில் நீங்கள் செய்து வரும் கலைச்சேவைக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு பேட்டிக்குள் செல்வோம்.

வணக்கம் க............

முதலாவதாக உங்களிடம் ஒரு கேள்வி ஸ்நேக் பாபு என்பது உங்கள் சொந்தப் பெயரா?? அல்லது வடைகைக்கு வாங்கிய பெயரா? அந்தப் பெயர் வரக் காரணம் என்ன??

பதில். சொந்தப் பெயர்தான். அந்தப் பெயரை நான் பிறந்ததுமே எனக்கு நானே வைத்த பெயர். காரணம் மனிதன் கமறாவை கண்டு பிடித்து படம் எடுப்பதற்கு முன்னரேயே பாம்பு படம் எடுக்கத் தொடங்கிவிட்டது. அதைப் பார்த்துத்தான் மனிதன் கமறாவை கண்டு பிடித்து படம் எடுத்தான் பின்னர் வீடியோ கமறாவை கண்டு பிடித்து சினிமாப் படம் எடுத்து கலையை வளர்க்கத் தொடங்கினான். எனவேதான் கலை மீதும் கமறா மீதும் உள்ள பற்றினால். அதனை முதன் முதலில் மனிதனிற்கு அறிமுகப் படுத்திய பாம்பை என்னுடைய பெயரில் இணைத்து சினேக் பாபுவாகி விட்டேன்.

கேள்வி. புலம்பெயர் மண்ணில் எமது மக்கள் கலை கலாச்சாரங்களை தொடர்ந்து பேணி வருவதுக்கு நீங்கள் பெரும் பங்காற்றி வருகிறீர்கள் என்ற வகையில் இப்படியான பெரும் நிகழ்ச்சிகளை மிகுந்த பொருட் செலவின் மத்தியில் நடாத்த உங்களுக்கு எப்படி துணிவு வந்தது?

பதில்..எல்லாம் எமது புலன்பெயர்த்த மக்களின் கலைத்தாகமும் ஆதரவும்தான். எமது மக்கள் இங்கு பொழுது போக்குகள் எதுவும் இன்றி வீட்டில சும்மாதான் சுருண்டு போய் இருக்கினம். இந்தியாவில் இருந்து நடிக நடிகைமார் வருகினம் எண்டா விழுந்தடிச்சுக் கொண்டு வருங்கள்.

கேள்வி....உங்கள் நிகழ்ச்சி பற்றி...

பதில்..இந்த முறை நாங்கள் பெரிய கோல் எடுத்து செய்யிறம். நடிக நடிகைமார் டான்ஸ் ஆடுவினம் பாட்டு பாடுவினம்.பிளையிங் கிஸ் அடிப்பினம். மக்களே நீங்கள் எல்லாம் வந்து கைதட்டி விசிலடிக்க வேணும்.

கேள்வி... இந்நிகழ்வில் பெரிய சினிமா பட்டாளமே பங்கேற்பது பற்றி...

பதில்.. நான் நினைக்கிறன் நாங்க அடிச்ச நோட்டிச பார்த்து கேக்கிறீங்கள் எண்டு. அதில எல்லாரின்ட படமும்தான் இருக்கு. அதுக்காக எல்லா கும்பலையும் இழுத்துக் கொண்டு வர நாங்கள் என்ன மாங்கா மடையங்களே. கனக்க பேரின்ட படத்தை போட்டாத்தான் டிக்கட் விக்கும். . இதில ஒரு சின்ன பிரச்சனை இருக்கு.. ஒண்டு ரெண்டு விசயம் தெரிஞ்சவங்கள் கிரடிட்காரடில புக் பண்ணுவாங்கள். நிகழ்ச்சியையும் பார்த்திட்டு கிரடிட் கார்ட் கொம்பனிக்கு போன் பண்ணி எல்லாரும் வரேல்லை எண்டு சொல்லி ரீபண்ட் கேப்பாங்கள். இதால கொஞ்ச நட்டம் வரும்.

கேள்வி.. இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கிற பணத்தை வைத்து சமூக சேவையளும் செய்யப் போறதாய் அறிஞ்சம் அதுபற்றி...

பதில்....இதில வாற காசில யாழ்ப்பாண கோவிலுக்கு வெள்ளை அடிக்கிறம் எண்டும் போராலை பாதிக்கப் பட்டவைக்கு உதவுறம் எண்டு போட்டிருப்பமே. இது நாங்கள் மட்டுமே போடுறம். நிகழ்ச்சியள் செய்யிற எல்லாரும்தான் போடுறாங்கள். இதல்லாம் வியாபார தந்திரங்கள்.

கேள்வி.. கலைச்சேவை எண்டு சொன்னீங்கள் இப்ப வியாபாரம் எண்டுறீங்கள்....

பதில்..தம்பி.. இது கலையோடை சேர்ந்த வியாபாரம். கூட்டி வாற நடிகைமாரை வச்சு நாங்க என்ன பண்ணுறம் எண்டு உமக்கு தெரியுமோ? அவையள் நிகழ்சி நடத்துற பத்து நாளைக்கு முதலே இங்க வருகினம். அவைக்கு எவ்வளவு டிமாண்ட் எண்டு தெரியுமோ? எத்தனை பெட்ரோல் செட் காரன்கள் பெட்ரோல் அடிக்க கியுவில நிக்கிற மாதிரி நிக்கிறாங்கள் எண்டு தெரியுமோ? இப்ப சிரிப்பு நடிகைக்கு என்ன ரேட் போகுது எண்டாவது தெரியுமோ? இதுகளை எல்லாம் எங்கட பாசையில கலைச்சேவை எண்டுதான் சொல்லுறது. உண்மையை சொன்னா காறித்து துப்புவாங்கள்.

கேள்வி..சரி எங்களுக்குத்தான் உதைப் பற்றி தெரியாது... உங்கட மனிசிக்காவது தெரியுமா?

பதில்...அது ஒரு பேய்... நடிகர் மாரை பார்க்க ஆவெண்டு போய் நிக்கும். எங்கட ஒரு பார்ட்னரின்ட மனுசி மணந்து பிடிச்சிட்டுது. அவக்கு நிகழ்ச்சி முடிய BMW X5 வேண்டி தரலாம் எண்டு சொல்லி இருக்கிறம். இப்ப அமத்திக் கொண்டு இருக்கிறா. இருந்து பாருங்கோ நிகழ்ச்சி முடிய எப்படியும் வீட்டை ரீ மோட்கேஜ் பண்ணின எங்கட பார்டனசில ரெண்டு பேராவது துாக்கில தொங்குவினம். உதெல்லாம் வேண்டிக் குடுக்க எங்க காசு மிஞ்ச போகுது? இந்தியாவில இருந்து வாறவங்களே எல்லாத்தையும் சுருட்டிக் கொண்டு போடுவாங்கள். 5 ஸ்டார் கோட்டலில தான் அவையள் நிப்பினமாம். தம்பி நான் என்ரை வாழ்க்கையில் 5 ஸ்டார் கோட்டல் கார் பார்க்குக்கு கூட போனதில்ல.

கேள்வி...காசு மிஞ்சாது எண்டுறீங்கள் அப்ப நீங்கள் என்ன மாதிரி.

பதில்...தம்பி... நான் சைட்டில வேற பிளான் வைச்சிருக்கிறன். எண்ட பார்ட்னருகளுக்கு கூட உது தெரியாது. இந்த நிகழ்ச்சிக்கு மேளம் அடிக்க விளக்கு பிடிக்க எண்டு சொல்லி 20 பேரை இறக்கிறன். பாதி எங்கடையள் பாதி இந்தியன். தலைக்கு 10 லட்சம். ஒரு சொலிசிட்டர் என்னோட கொன்ராட்க் வேற போட்டிட்டார். அவையள் இனி முள்ளிவாய்க்காலில ஆர்மி சுட்டான்... ஓடி வந்தன் எண்டு கதை எழுதுவினம். அது அவையின்ட பிரச்சனை. நீர் உம்மட கேள்விய கேளும்.

கேள்வி. இப்ப இந்த நாடு இருக்கிற நிலமையில நிகழ்ச்சி பார்க்க சனம் வருமோ?

பதில்.. தம்பி... வேலைக்குப் போய் கஸ்டப்பட்டு உழைக்கிறவன் எல்லாம் உதில மினக்கெட மாட்டாங்கள். 3-4 எண்டு பெத்துப் போட்டு உலகத்தில உள்ள பெனிபிட் எல்லாம் எடுத்துக் கொண்டு இடைக்கிடை கள்ளவேலையும் செய்துகொண்டு வீட்டில சும்மா இருக்கிதுகளே... அதுகள் தான் அள்ளை கொள்ளையா வரும். நீர் நம்பாட்டி நான் வாசலில நிண்டு படம் எடுத்துத் தாறன். அடுத்த முறை பேப்பரில போடும்.

கேள்வி.. இந்த நிகழ்ச்சிக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தார்களா?

பதில்...உதை யார் தம்பி எதிர்க்க போறாங்கள்? காங் பொடியள்தான் பிரச்சனை படுத்துவாங்கள். அவங்களுக்கு நாங்கள் பிரீ டிக்கட் குடுத்திருக்கிறம். எல்லா காங் பொடியங்களையும் தெரியாத படியால் டிக்கட் கிடைக்காம யாரும் இருந்தால் தாராளமாக எஙகளை தொடர்பு கொள்ளலாம். பிரீ டிக்கட் நிச்சயம். குறைடன் தமிழ் கடைக்காராள் சொன்னார் உவங்களுக்கு பயந்து ஏன் பிரீ டிக்கட் குடுக்கிறாய் எண்டு. உவங்கள் எல்லாம் பயந்த பீச்சாண்டிகளாடாப்பா ரயட்ஸ் நடந்த நேரம் ஒரு நாயும் வரல்ல எல்லாம் ஓடி ஓழிச்சிட்டாங்கள். இந்த பக்கம் ஓசிச் சோடா குடிக்க மட்டும் வருங்கள் எண்டு. நான் ஏன் ரிஸ்க் எடுப்பான் எண்டு குடுக்கிறன்.

கேள்வி. உங்கடை புறோக்கிறாம் ரிக்கற்றிலை கேள்வி பதில் குலுக்கல் பரிசு வேறை குடுக்கிறதாய் அறிவிச்சிருக்கிறீங்கள் அதைப் பற்றி.

பதில். எங்கை போனாலும் எதையாவது ஓசியிலை எதிர்பாக்கிறது எங்கடை சனத்தின்ரை வழக்கம்தானே. லண்டனிலை கோயிலுக்கு போனலே அன்னதானம் இல்லையோ எண்டு கேக்கிற ஆக்கள் அதலைதான் றிக்கற்றிலை சில கேள்வியள் போட்டிருக்கிறம் அதுக்கு சரியான பதிலை சொல்லுறவைக்கு குலுக்கல் முறையிலை சில ஆறுதல் பரிசுகன் குடுப்பம்.

கேள்வி.. குலுக்கல் முறை எண்டிறியள். குலுக்கிறது யார் நீங்களா??? ஆறுதல் பரிசு என்னென்ன??

பதில்.. நான் குலுக்கினால் ஆர் தம்பி பாப்பாங்கள். குலுக்கப் போவது நமீதா.. பரிசு ஆறுதல் பரிசுதானே அதாலை பரிசு விழுந்தவையளிட்டை விலாசத்தை வாங்கி வைச்சிட்டு ஆறுதலாய் அனுப்புறம் எண்டு சொல்லி விடுவம்.

நன்றிகள். உங்கள் கடுமையான கவைச் சேவைகளிற்கு மத்தியிலும். இதுவரை எமக்காக நேரம் ஒதுக்கி பொறுமையாகப் பதில் அளித்த மா(மா)மணிக்கு எங்கள் சிரம் தாள்ந்த நன்றிகள்.

_________

றிக்கற்றின் பின்னால் உள்ள சில கேள்விகள்.

நடிகை ராதிகாவுக்கு சரத்குமார் எத்தனையாவது புருசன்

1. முதலாவது

2. முப்பதாவது

3. ஆருக்குத் தெரியும்

ஒரே நேரத்தில் நூறு பேரை அடிக்கும் பலமுள்ள கீரோ.

1) ரஜனிகாந்

2) விஜயகாந்

3) இரண்டு பேரும்.

ரகிகர்களே பதில் சொல்ல தயாராகுங்கள் பரிசுகளை அள்ளுங்கள்.

நன்றி பருப்பு இணையம்...

பெட்டிச் செய்தி

பிறந்த போதே பேசிய குழந்தை

ஹரோ பகுதியில் வாழும் கல்பனா என்னும் தமிழ் பெண்ணுக்கு அண்மையில் ஒரு குழந்தை பிறந்நது. அது அவட வயிதுக்க இருந்து வெளிய வரும்போதே "அவன்ட சோத்தில நஞ்சை வை.", "இவண்ட காரின்ட பிரேக்கை புடுங்கி விடு.", " அக்காட புருசன கூட்டிட்டு ஒடு." என்று பேசிக் கொண்டே பிறந்திச்சுதாம். இதைப் பற்றி கல்பனாவிடம் கேட்ட போது வழமையா எல்லாருக்கும் பிள்ளை பிறக்கும் போது அது "அம்மா" என்று சொல்லிக் கொண்டு தான் வெளிய வருமாம். எனது குழந்தை இவ்வளவு அழகாக தமிழ் பேசியது என்றால் அதுக்கு “திருமதி செல்வம்” தான் காரணம். அவருக்கு தான் நிரம்ப கடமைப்பட்டிருப்பதாக ஆனந்தக் கண்ணீர் மல்க கூறினார்.

Edited by Saniyan

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆருக்கோ இழுத்து வைச்சு குத்தினமாதிரி கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆட்களுக்கு நேரடியாக யாரோடும் போராடி ஜெயிக்க தெரியாது...எழுத்தில் கூட தனிப்பட்ட ரீதியில் அவர்களது எதிரிகளது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தே எழுதுவார்கள்[எழுதுகிறார்கள்]...இணையத்தில் நக்கலடித்து எழுதி விட்டு தாங்களே தங்கள் மனைவி,பிள்ளைகளுடன் நடிக,நடிகைகளை பார்க்க முன்னுக்கு நிற்பார்கள்.

இங்கு வாறவர்களை உங்கள் பக்கம் மாற்றப் பாருங்கள்.எடுத்தேன்,கவித்தேன் என இனி மேலும் உங்கள் வேலையைக் காட்ட வேண்டாம்...லண்ட‌னின் இருக்கும் புலம் பெயர் மக்களை இந்த நிகழ்ச்சிக்கு போக முடியாமல் செய்யுங்கள் பார்ப்போம்...அவர்கள் சீரியல் பார்ப்பதைக் கூட‌ உங்களால் தடுக்க முடியவில்லை

இதை எழுதியவருக்கு இந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துபவர்களுட‌ன் போட்டியாக இருக்கும்.தன் இயலாமை இப்படி எழுத்தில் காட்டி உள்ளார் என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகாவ இந்த வாட்டி கண்டிப்பா பாக்கணும்ணு சொல்லி ரதி அக்கா தான் முதலாவதா டிக்கெட் வாங்கி இருக்காவம்......

ரதி அக்கா ராதிகாட்ட கேக்க இருக்கும் முதல் கேள்வி....நீங்க நல்ல நல்ல சாறி எல்லாம் உடுக்கிறிங்க எங்க வாங்கிறனிங்கன்னு......நானும் லண்டன்ல உடுத்து வெள்ளையல எ;ல்லாம் கிறங்கடிக்க போறன் எண்டு..............

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ரதி அக்காவுக்கு ரிக்கட் வாங்கிக் கொடுத்ததே சுண்டல் தம்பி தானே

  • கருத்துக்கள உறவுகள்

இதல்லாம் பப்ளிக்கா சொல்லி கொண்டு மத்த பொண்ணுங்க கோவிச்சுக்க போறாங்க...சரி சரி டிக்கெட் வாங்கி தந்ததோட விட்டிங்களே......மிச்சத்த சொல்லிடாதிங்க......

  • கருத்துக்கள உறவுகள்

சனியன் சகடைக்கு, நக்கில மட்டும் சனியல்ல உடம்பு முழுக்க சனிதான் போல, யாரை இப்படு குத்திறியள்

சனியனண்ணா சனியனண்ணா....

இதபத்தி ஒண்ணுமே பெரிசா சொல்ல தோணல...நேக்கு !

‘ஒண்ணே ஒண்ணுமட்டும் சிறிசா.. கைக்கு அடக்கமா ...கேட்க

தோணுது......

அது எப்டி யாழ்ல இணைஞ்சி ... ஆல்மொஸ்ட் ......9 இயர்ஸ்க்கு அப்புறமும் ......

முழுசா 210 கருத்துக்களை கூட தாண்டலை நீங்க?

ஒரே டென்ஷனப்பா... டென்ஷன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

சனியனண்ணா சனியனண்ணா....

இதபத்தி ஒண்ணுமே பெரிசா சொல்ல தோணல...நேக்கு !

‘ஒண்ணே ஒண்ணுமட்டும் சிறிசா.. கைக்கு அடக்கமா ...கேட்க

தோணுது......

அது எப்டி யாழ்ல இணைஞ்சி ... ஆல்மொஸ்ட் ......9 இயர்ஸ்க்கு அப்புறமும் ......

முழுசா 210 கருத்துக்களை கூட தாண்டலை நீங்க?

ஒரே டென்ஷனப்பா... டென்ஷன்! :)

என்ன அறிவிலி, சனி 7 1/2 வருடத்திற்கு ஒருக்காதான் பாச்சு பிடிக்கும், இப்ப லண்டனுக்கு பிடிச்சிருக்கு... இனி..

எங்கட ஆட்களுக்கு நேரடியாக யாரோடும் போராடி ஜெயிக்க தெரியாது...எழுத்தில் கூட தனிப்பட்ட ரீதியில் அவர்களது எதிரிகளது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தே எழுதுவார்கள்[எழுதுகிறார்கள்]...இணையத்தில் நக்கலடித்து எழுதி விட்டு தாங்களே தங்கள் மனைவி,பிள்ளைகளுடன் நடிக,நடிகைகளை பார்க்க முன்னுக்கு நிற்பார்கள்.

இங்கு வாறவர்களை உங்கள் பக்கம் மாற்றப் பாருங்கள்.எடுத்தேன்,கவித்தேன் என இனி மேலும் உங்கள் வேலையைக் காட்ட வேண்டாம்...லண்ட‌னின் இருக்கும் புலம் பெயர் மக்களை இந்த நிகழ்ச்சிக்கு போக முடியாமல் செய்யுங்கள் பார்ப்போம்...அவர்கள் சீரியல் பார்ப்பதைக் கூட‌ உங்களால் தடுக்க முடியவில்லை

இதை எழுதியவருக்கு இந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துபவர்களுட‌ன் போட்டியாக இருக்கும்.தன் இயலாமை இப்படி எழுத்தில் காட்டி உள்ளார் என நினைக்கிறேன்

வணக்கம் ரதி அக்கா!!

உங்கள் கருத்துக்கள் நியாயம் தான். நீங்கள் குறிப்பிட்டபடி எங்கட ஆட்களுக்கு நேரடியாக யாரோடும் போராடி ஜெயிக்க தெரியாது என்றால் இப்பிடிக் குத்திக் குத்திக் காட்டித் தானே மற்றவையளுக்கு சுட்டிக்காட்ட முடியும்...... இவ்வாக்கம் அண்மையில் வெளிவந்த பேப்பர் ஒன்றில் தான் எனக்கு வாசிக்கக்கிடைத்தது. அப்படியானால் அப்பேப்பர் காரர்கள் இந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துபவர்களுட‌ன் போட்டியாக இருப்பார்களென்று நினைக்கிறீர்களா?

அப்படியே இக் குறிப்பிட்ட பத்திரிகை போட்டியாக இருந்துவிட்டுப் போகட்டும்...

தமிழ் செய்தி இணையத்தளங்கள், மற்றும் செய்திப் பத்திரிகைகள் இவ் நிகழ்ச்சிக்கு தாயக மக்களை என்ன வகையில் போகாமல் தடுக்கலாம் என்று சொல்வீர்களா? (இவ்வாறான "குட்பாய்" லண்டன் Type ஆக்கங்களை எழுதுவதை விடுத்து)

Edited by darmaraj

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரதி அக்கா!!

உங்கள் கருத்துக்கள் நியாயம் தான். நீங்கள் குறிப்பிட்டபடி எங்கட ஆட்களுக்கு நேரடியாக யாரோடும் போராடி ஜெயிக்க தெரியாது என்றால் இப்பிடிக் குத்திக் குத்திக் காட்டித் தானே மற்றவையளுக்கு சுட்டிக்காட்ட முடியும்...... இவ்வாக்கம் அண்மையில் வெளிவந்த பேப்பர் ஒன்றில் தான் எனக்கு வாசிக்கக்கிடைத்தது. அப்படியானால் அப்பேப்பர் காரர்கள் இந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துபவர்களுட‌ன் போட்டியாக இருப்பார்களென்று நினைக்கிறீர்களா?

அப்படியே இக் குறிப்பிட்ட பத்திரிகை போட்டியாக இருந்துவிட்டுப் போகட்டும்...

தமிழ் செய்தி இணையத்தளங்கள், மற்றும் செய்திப் பத்திரிகைகள் இவ் நிகழ்ச்சிக்கு தாயக மக்களை என்ன வகையில் போகாமல் தடுக்கலாம் என்று சொல்வீர்களா? (இவ்வாறான "குட்பாய்" லண்டன் Type ஆக்கங்களை எழுதுவதை விடுத்து)

ஏன் அவர்களை போக விடாமல் தடுக்க வேண்டும்?...இங்கத்தைய வாழ்க்கை முறை சிக்கலானது வேலை,பிள்ளைகளது படிப்பு என்று எங்கட ஆட்கள் பிசியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்...அவர்களும் வாழ்க்கையில் கொஞ்சத்தை அனுபவிக்கட்டுமே!...இப்படி எல்லாத்திற்கும் தடை போடக் கூடாது...இப்படி இவர்கள் நிகழ்ச்சிக்கு போவதால் அவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள் என நினைக்கக் கூடாது[இவர்கள் தான் தேசியத்திற்கு அதிகமாக பங்களிப்பு செய்பவர்களாக இருப்பார்கள்]...நாங்கள் அந்த நிகழ்ச்சி பார்க்காதே!,அங்கே போகாதே! என தடை போட்டால் அவர்களுக்கு வெறுப்பு தான் வரும்...தானாக உணர்ந்து போகாமல் விட்டால் வரவேற்கலாம்...தற்போது தான் அவ் மூவரது தூக்கும் நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளதே பிறகு என்ன பிரச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்

குட்பாய் லண்டன்ல குத்து பாட்டும் போடுவினமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.