Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாவட்ட மக்களின் நிலைமைகளை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பேன்

Featured Replies

யாழ். மாவட்ட மக்களின் துயரங்களை உரிய அதிகாரிகள் மூலம் சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பேன் என்று தெற்காசிய விவகா ரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ பிளேக் நேற்று யாழ்ப்பாணத்தில் கூறினார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த இவர் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை யாழ். கோவில் வீதியிலுள்ள அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கூறினார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் யாழ். மாவட்டத்தில் மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள், துயரங்கள், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை, மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு என்பவற்றை விரிவாக எடுத்துக் கூறினர்.

பிரதிநிதிகள் யாழ். மாவட்டத்தின் இன்றைய நிலைமை பற்றி விளக்கி கூறுகையில் நாம் எமது பிரதேசத்தில் கலாசாரம், மொழி என்பவற்றின் உரிமைகளை பாதுகாத்து வாழவும் எம்மை நாம் ஆள்வதற்கான கட்டமைப்புமே எமக்குத் தேவை.

எமது மண்ணில் இருந்து எதுவும் செய்யமுடியாத நிலை உள்ளது. போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் எமது போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எமது மண்ணில் நாம் இருந்தும் கூட எதுவும் செய்ய முடியாதுள்ளது. பேசுவதற்கு கூட முடியா துள்ளது. எம்மை நாம் ஆள்வதற்குரிய கட்டமைப்பு எமக்குத் தேவை. எமது பிரதேசத்தின் கலாசாரம், மொழி, உரிமைகளை பாதுகாத்து வாழவும் எமக்கான உரிமைகள் தேவை.

தற்போதும் கூட நிம்மதியற்ற வாழ்க்கையே வாழ வேண்டியுள்ளது. கிறீஸ் பூதம், மர்ம மனித தாக்குதல்கள், நடமாட்டங்கள் உளவியல் ரீதியான யுத்தத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்தத் தாக்குதலால் இயல்பு வாழ்க்கையை நடத்துவதற்குத் தடையாக உள்ளது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இயல்பு வாழ்க்கை நடைபெ றுகின்றது எனவும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப் பட்டுள்ளார்கள் எனவும் பிரசாரம் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் இன்னமும் முகாம்களுக்குள்ளும் தகர கொட்டகைகளுக்குள்ளும் வாழ்வாதாரம், பாதுகாப்பு அற்ற முறையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கான வீடமைப்பு வேலை வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்படவில்லை.

உயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னமும் தொடர்கிறது. தமிழ் மக்களது நிலங்கள் சூறையாடப்படுகின்றன. குறிப்பாக தென்னிலங்கை நிறுவனங்களுக்கு தொழில் முயற்சிக்காக அவை வழங்கப் பட்டு பின்னர் குடியமர்தலுக்கான திட்டமாகவே காணப்படுகிறது. பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அதிகளவான குடும்பங்கள் பெண் தலைமைத்துவத்தைக் கொண்டே உள்ளன. இவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் பற்றாக்குறையாக உள்ளன.

கடற்றொழில் முறைகள் பல தடவைகள் மாற்றம் செய்யப்பட் டுள்ளமையால் கடற்றொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் வாழ்வாதாரம் அற்ற நிலையிலுள்ளன. இத்தகைய துன்பங்களின் மத்தியில் எதுவும் செய்யமுடியாத நிலையில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவற்றை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றனர்.

யாழ். குடாநாட்டில் மக்கள் ஏன் சொந்த இடங்களில் முழுமையாக மீள்குடியேற்றப்படவில்லை என யாழ். மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபிணி வரதலிங்கத்திடம் அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலர் கேள்வி எழுப்பியுள்ளார். விசேடமாக மீள்குடியேற்றம் தொடர்பாக கவனம் செலுத்திய பிளேக் மீள்குடியேற்றம் செய்யப்படாமைக்கான காரணங்களை விரிவாக கேட்டறிந்துள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

வீரகேசரி இணையம் 9/14/2011 12:28:00 PM

http://www.virakesar...asp?key_c=33818

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில் போய் என்ன செய்வீர்கள் என்று தெரியும்

ஆனால் அடிக்கடி இப்படி வந்தாவது போங்கள்

அந்த கணங்களிலாவது

அம்மக்கள் சில தொந்தரவுகள் அகன்று சந்தோசமாக இருக்கட்டும்

to: "Blake, Robert O" <BlakeR2@state.gov>

Hon. Robert Blake

Assistant Secretary,

SOUTH AND CENTRAL ASIAN AFFAIRS.

Sri Lanka: Grateful for your visit

Thank You for taking the time to visit Jaffna and hear first hand from the people.

Since the end of the war in May 2009, Tamils have been fighting an uphill battle to win mormalcy. And we hope with the help of US and other nations, Tamils will soon enjoy freedom and rights too.

Thanks

Yours sincerely

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.