Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

2009ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பும் இலங்கையும் கூட்டாக வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த நிறைவின் பின்னர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இந்த கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

கடந்த கால முறுகல் நிலைமைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் 66ம் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகத்தில் பான் கீ மூனை சந்தித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் குறித்த விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பான் கீ மூனின் அலுவலகம் அறிவித்துள்ளது.

http://www.globaltam...IN/article.aspx

கிழிச்சார்!

எல்லாமே 'நல்லிணக்க ஆணைக்குழுவிலும்' அதன் நம்பகத்தன்மை, மற்றும் மார்கழி வரையான காலக்கெடு - இவற்றிலேயே கூடியளவு தங்கியுள்ளது.

தமிழர் தரப்பு தொடர்ந்தும் ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆதரவை கூடுதலாக பெற முயற்சிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது நமது வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணம். இதில் நாம் சரியாக செயல்படாவிட்டால் பஸ்ஸை விட்டுவிடுவோம்.சர்வதேச சமூகம் போர்குற்றச் சாட்டை இரண்டு தரப்பிலும் வைதுள்ளது. நாம் மூன்றாவது தரப்பாக காய் நகர்தினால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியம். இந்தச் சந்தர்பத்தில் எந்த சின்னத்தைவிடவும் எமது மக்களும் அவர்களது எதிர்காலமும் முக்கியம் என்பதை நாம் உணரவேண்டிய கடைசித் தருணமிதுதான். ஏனெனில் நாம் நியாயம் கோரும் ஒரு கட்சியாக செயல்படாவிட்டால் பெரிய நாடுகளின் தீர்பில் செல்வாக்குச் செலுத்தும் வாய்ப்பை இழந்துவிடுவோம். எங்கள் ஊர்வலங்கள் நடவடிக்கைகள் சாதகமான விழைவை ஏற்படுத்த தவறினாலும் பாதகமாகிவிடக்கூடாது. மகிந்த அரசு போர்குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் புலம்பெயர்ந்த தமிழர்களை வழி நடத்துகிறார்கள் என்கிற இராசதந்திர நகர்வையே இப்போது முன்னிலைப் படுத்துகிறது. போர்குற்ற விவாதம் முடியும் வரைக்கு அவர்களது காய் நகர்த்தல்களுக்கு நாமே space உருவாக்கிக் கொடுத்துவிடக்கூடாது.

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.