Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு அமெரிக்காவிற்கு பறப்பு: ஹிலாரி கிளிங்டனையும் சந்திக்கின்றார்கள்

Featured Replies

கூட்டமைப்பினருக்கு ஹிலாரி கிளிங்டன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழர்களுக்கு துரிதகதியில் காத்திரமான ஓர் அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என இந்தியாவும், அமெரிக்காவும் இராஜதந்திர ரீதியில் வலியுறுத்திவரும் நிலையில் தீர்வுப் பேச்சுக்களின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்காவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவு படுத்துவதற்காக விரைகின்றனர்..

எதிர்வரும் 25ஆம் திகதியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கொண்ட குழு அமெரிக்கா புறப்படவுள்ளது. வோஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உயர்நிலை அதிகாரிகளைச் சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் தற்போது நடத்தப்பட்டுவரும் தீர்வுப்பேச்சுகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கும் எனத் தெரிகிறது. அதேசமயம் கட்சித் தலைவர் என்ற ரீதியில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளின்டன் சந்தித்து இலங்கையில் தமிழர் அரசியல் பற்றி கேட்டறிவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தீர்வுப்பேச்சுக்களில் கூடுதல் அக்கறை செலுத்திவரும் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இந்த பேச்சுக்களின் முன்னேற்றம், தாற்பரியம் குறித்து அவ்வப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவுபடுத்தி வருகிறது.

மூலம்

Edited by உமை

இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் அரசியல் தீர்வு திட்டம்

குறித்து இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா செல்லவுள்ளனர்.

எதிர்வரும் 25ஆம் திகதியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன்,

எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கொண்ட குழு அமெரிக்கா புறப்படவுள்ளது. வோஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உயர்நிலை அதிகாரிகளைச் சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் தற்போது நடத்தப்பட்டுவரும் தீர்வுப்பேச்சுகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கும் எனத் தெரிகிறது. அதேசமயம் கட்சித் தலைவர் என்ற ரீதியில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளின்டன் சந்தித்து இலங்கையில் தமிழர் அரசியல் பற்றி கேட்டறிவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தீர்வுப்பேச்சுக்களில் கூடுதல் அக்கறை செலுத்திவரும் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இந்த பேச்சுக்களின் முன்னேற்றம், தாற்பரியம் குறித்து அவ்வப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவுபடுத்தி வருகிறது.

அதன் அடிப்படையில் இந்த அமெரிக்க விஜயமும் அமைவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக கடந்தமாதம் கொழும்பு வந்திருந்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரொபர்ட்ஓபிளேக் தமிழ்க் கூட்டமைப்பினரைச் சந்தித்தபோது தமிழர் பிரச்சினை குறித்து அவ்வப்போது அமெரிக்காவை அறிவுறுத்துமாறு வினயமாக வேண்டியிருந்ததாகவும்,

அதன் ஓர் அம்சமாகவே கூட்டமைப்பு அங்கு சென்று நிலைமைகளை விளக்குவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் கூறப்படுகிறது அமெரிக்காவுக்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூடட்டமைப்பினர் அங்கிருந்து கனடா சென்று கனேடிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் சந்திப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

http://akkinikkunchu.com/new/

நன்றி உமை.

பிளேக் ஐந்து வருடங்களுக்கு முன் தமிழ்செல்வனுக்கு மறுத்த சந்தர்ப்பத்தை இப்போ சம்பந்தருக்கு கில்லாரி வழங்க வருகிறா. போனமாதம் மழையிற்குள் நனைந்தவர்கள் எல்லோரும் ஒரு அலுவல் செய்த திருப்தியோடை சூடாய் ஒரு கோப்பி போட்டு குடியுங்கோ. நாளக்கு வருவதை நாளை பார்க்கலாம். இன்றைய அலுவல் செய்து முடிந்திருக்கிறது. திருப்தியோடு தூங்க போகலாம்.

இது ஒரு மிக நல்ல செய்தி. இந்த சந்தர்ப்பத்தை எமது தாயக மக்களின் பிரதிநிதிகள் சாதுரியமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

வாசிங்கடன் மூலம் புதுடெல்லியை கொடிய அழுத்தம் கொழும்பு மேலே கொடுக்க வைக்கப்படல் வேண்டும். ஒரு வரையறுக்கப்பட்ட கால அட்டவணைக்குள் ஒரு நியாயமான தீர்வு அமுல்படுத்தப்படல் வேண்டும்.

அமெரிக்கா செல்லும் கூட்டணியினர் வந்ததன் பின்னால் இதயசுத்தியுடன் மீண்டும் வன்னி ராச்சியம் உண்டு என்ற நிலைப்பாட்டில் தான் தங்கள் காய்களை நகர்த்த வேண்டிவரும்.ஏன் தெரியுமா?அங்கு நடைபெறப்போவது வெறும் பேச்சுவார்த்தையல்ல.அவர்களுக்கு மகா அதிசயமும் காத்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாக இந்த பிளேக் சிறிலங்காவில் இருந்த காலத்தில்தான் வன்னியில் பேரழிவு ஏற்பட்டது,

லண்டனில் ஒரு பொக்ஸ் அமேரிக்காவில் ஒரு பிளேக் இந்தியாவில் ஒரு நாராயணன் எனபல தமிழ் எதிர்ப்பு கொள்கை கொண்டவர்கள் இருக்கும் வரை இந்த நிலைதான் தொடரப்போகின்றது

அடிப்படை போராட்டக் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் தீர்விற்கான தமிழரின் தெரிவுகளை அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும்.

  • தொடங்கியவர்

இது சிங்களத்திற்கு அமெரிக்கா கொடுக்கின்ற ஒரு அழுத்தம்தான் ஆனால் ஏன் இந்த அழுத்தம் என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

குறிப்பாக இந்த பிளேக் சிறிலங்காவில் இருந்த காலத்தில்தான் வன்னியில் பேரழிவு ஏற்பட்டது,

லண்டனில் ஒரு பொக்ஸ் அமேரிக்காவில் ஒரு பிளேக் இந்தியாவில் ஒரு நாராயணன் எனபல தமிழ் எதிர்ப்பு கொள்கை கொண்டவர்கள் இருக்கும் வரை இந்த நிலைதான் தொடரப்போகின்றது

போராடிப்பெறுவது தான் விடுதலை. மனம் தளராமல் செயல்படுவோம்.

அமெரிக்கா செல்லும் கூட்டணியினர் வந்ததன் பின்னால் இதயசுத்தியுடன் மீண்டும் வன்னி ராச்சியம் உண்டு என்ற நிலைப்பாட்டில் தான் தங்கள் காய்களை நகர்த்த வேண்டிவரும்.ஏன் தெரியுமா?அங்கு நடைபெறப்போவது வெறும் பேச்சுவார்த்தையல்ல.அவர்களுக்கு மகா அதிசயமும் காத்திருக்கிறது.

அந்த அதிசயம் pleasant surprise ஆக இருந்துவிடட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் சுயநலம் நிச்சயமாக இருக்கும். சம்பந்தரின் அரசியல் சாணக்கியம் எப்படி வேலை செய்கிறது என பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.