Jump to content

வாகைசூடவா!


Recommended Posts

வித்யாசமா யோசிச்சுகிட்டே இருக்காங்க!

ரொம்ப புடிச்சிருக்கு இந்த படம்!

Player மாத்தி மாத்தி பார்க்கணும் , இரண்டுலயும்!!

http://speakfreevoipcalls.blogspot.com/2011/10/watch-vagai-sudava-2011-tamil-movie.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vaagaisoodavaa.jpg

அஞ்சறைப் பெட்டிக்குள் துளசி செடி முளைத்த மாதிரி அப்படியொரு படம். டைட்டிலிலேயே துவங்கிவிடுகிறது டைரக்டோரியல் டச்! சித்தாள் ஒருவர் தன் தலையில் தானே கல்லடுக்கிக் கொள்ளும் அந்த காட்சியை பார்க்கவே இன்னொரு முறை தியேட்டருக்கு போகலாம்.

66 களில் நடக்கிறது கதை. மகனை அரசு வேலையில் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படும் அப்பாவுக்காக 'கிராம சேவக்' என்ற அமைப்பின் மூலம் 'கண்டெடுத்தான் காடு' கிராமத்திற்கு வாத்தியாராக போகிறார் விமல். சில மாதங்கள் வகுப்பெடுத்தால் சர்டிபிகேட்டும், கொஞ்சம் சம்பளமும் கிடைக்கும். இந்த சர்டிபிகேட் வாங்கினால் அரசு வேலை நிச்சயம். இந்த பழங்கால விதியின்படி அந்த கிராமத்திற்கு செல்லும் அவர் அங்கு சந்திக்கும் பனித்துளி காதலும், படீர் திடீர் எதிர்ப்புகளும்தான் படம்.

ஏரியல் ஷாட்டிலிருந்து எண்ணி பார்த்தால் இருபது குடிசைகளும் ஒரே ஒரு செங்கல் சூளையும்தான் காட்சி பின்னணி. ஆனால் இதற்குள் எத்தனையெத்தனை வித்தைகள் காட்டுகிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்? வல்லவர்களுக்கு வெற்று சூனியம் கூட வெனீஸ்தான்!

கொத்தடிமைகள் போல குடும்பம் குடும்பமாக கல் அறுக்கிறார்கள் செங்கல் சூளையில். 'சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல புள்ளைங்களை அனுப்பி வைங்க. பாடம் சொல்லித் தர்றேன்' என்று கெஞ்சுகிற விமலை அலட்சியமாக நோக்குகிறது அந்த ஊர்(?) எப்படியோ போராடி அவர்களுக்கு சில கணக்குகளையும், எழுத்துக்களையும் சொல்லித் தருகிறார் அவர். கணக்கு கேட்காமலே வேலை செய்யும் இந்த அடிமைகள் வாத்தியார் வந்தபின் கணக்கு கேட்பது முதலாளி பொன்வண்ணனை உறுத்துகிறது. அவரது கண்ணசைவில் அடி பின்னி எடுக்கிறார்கள் வாத்தியாரை. அடிக்கு பயந்த வாத்தியார் ஊரை விட்டு போனாரா? இவர் மீது காதல் கொண்ட அந்த ஊர் அழகி இனியாவை ஏற்றுக் கொண்டாரா? சட்டென்று மழை நின்ற மாதிரி முடிந்து போகிறது படம். குடையை மடக்கிய பின்பும் குளிர் போகாதல்லவா? அதுதான் இந்த மொத்த படமும்...

இதுவரைக்கும் எங்கேயிருந்தாரோ இந்த இனியா. இனிமேல் தமிழ்சினிமாவின் மூச்சுக்காற்றில் இவரது பெயரும் எழுதப்பட்டிருக்கும். லேசாக இமைத்தால் கூட அதிலும் ஒரு அர்த்தத்தை போட்டு அசர வைக்கிறார் மனுஷி. வாத்தியாரின் ஓலை குடிசைக்கு வெளியே இருக்கும் மூங்கிலில் அப்படியே தலைசாய்ந்து நிற்கும் ஒய்யாரமும், தன் காதலை நாசுக்காக சொல்லி புரிய வைக்க முயலும் அழகும் கண்ணை விட்டு அகலாது. தன் காதல் அவருக்கு புரிந்துவிட்டதாக நினைத்து ஒரு நடை நடக்கிறாரே, ஹைய்யோ...! இதற்கு முன்பு ஓராயிரம் முறை கேட்டிருந்தாலும், 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலை இந்த படத்தில் கேட்கும்போது நரம்பெல்லாம் சிலிர்த்துக் கொள்கிறது.

தனது உடற்கட்டை நினைத்து பிரஸ்தாபிக்கும் விமலிடம் 'பால் வருமா சார்' என்று கேட்டு கதிகலங்கடிக்கிறாள் அந்த சிறுமி. ரேடியோவுக்குள் ஆள் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதை அக்கு வேறாக்குகிறார்கள் சிறுவர்கள். தன்னை முட்டுவதற்காகவே திரியும் கிடா ஆட்டையும், வம்படியாக வகுப்புக்கு வராமல் ஏய்க்கும் சிறுவர்களையும் சமாளிக்கும் விமல், அடைகிற அத்தனை அவஸ்தைகளும் அழகான நகைச்சுவை ப்ளே கிரவுண்ட்.

'டூ நாலெட்டு' தம்பி ராமய்யாவும் அவரது கணக்கும், சிரிப்பும், 'குருவி சத்தம் கேட்குது' என்று ஓடும் குமரவேலும், 'அவரு பைத்தியம் இல்லீங்க தம்பி' என்று கிராமத்து மனம் காட்டும் நம்பிராஜனும், ஆண்டையாக கம்பீரம் காட்டும் பொன்வண்ணனும், தென்னவனும் இன்னும் இன்னும் பெயர் தெரியாத அத்தனை சிறுவர்களும் நம் மனசில் கற்களை அடுக்கி பங்களாவே கட்டுகிறார்கள். ஒரு சில காட்சிகளில் வந்தாலும், மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிக்க வைக்கிறார் கே.பாக்யராஜ்.

நடிகர், நடிகைகளை நேர்த்தியாக தேர்ந்தெடுத்த சற்குணம், அதற்கு கொஞ்சமும் குறையாமல் தொழில் நுட்ப கலைஞர்களையும் துணைக்கழைத்துக் கொண்டிருப்பது சிறப்பு. இசையமைப்பாளர் டி.ஜிப்ரானின் 'போறானே...' 'சர சர சாரக்காத்து' பாடல்கள் இனிமை. பின்னணி இசையிலும் தனித்து நிற்கிறார். ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒவ்வொரு பிரேமிலும் கூட கதையை சொல்லியிருக்கிறார். குறிப்பாக விமல் போன பின் அந்த குடிசையையே இனியா பார்த்துக் கொண்டிருக்கும்போது அமைக்கப்பட்டிருக்கும் லைட்டிங். பீரியட் பிலிம்களில் ஆர்ட் டைரக்டரின் பங்கு மிக மிக அவசியமானது. அதை உணர்ந்து நிறைவு செய்திருக்கிறார் அவரும்.

இவர்கள்தான் இப்படி போட்டி போட்டுக் கொண்டு சபாஷ் பெறுகிறார்கள் என்றால் கிராபிக்ஸ் கலைஞர்களும் சளைக்கவில்லை. ஒரு காட்சியில் இனியாவின் முகத்தில் மினுக்கட்டாம் பூச்சியை பொட்டாக வைக்க நினைத்த சற்குணத்தின் கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். குளத்தில் மிதக்கும் நிலவை அள்ளி பக்கத்தில் எறிகிறாரே விமல், அதிலும் கூட! இப்படி படம் முழுக்க ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்காத கிராபிக்ஸ்சும் கவர்கிறது.

'கமர்ஷியலா இல்லீயே....', 'மெசேஜ் சொன்னா புரியுமா நம்ம ஜனங்களுக்கு...' இப்படியெல்லாம் பேசி வம்பளப்பவர்கள் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருந்தாலே போதும். இப்படம் வாகை சூடும்!

பொத்துங்க சார் ப்ளீஸ்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Tamilcinema.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி நன்றி பகிர்வுக்கு, தொடக்கம் கொஞ்சம் பார்த்தேன் அசத்தலா இருக்கு தொடக்கமே,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி - மீன் பனை மரத்தில் ஏறுமா? என்ன வகை என்று தெரியுமா?

விதைக்கல........... அறுக்கிறாய்........விதைக்கல........ அறுக்கிறாய்.............: இதைத்தான் பலர் செய்கிறம்

நல்லதொரு படம், வித்தியாசமா எடுத்திருக்கிறார்கள், இன்னும் பாதி பாக்கலை நாளைதான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்டுரை எழுதிய ச.அருணாசலம் இன்னொரு கட்டுரையும் எழுதியுள்ளார் .ஒக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள் குழந்தைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை படுகொலை செய்ததை இஸ்ரேலிய துருப்புகள் 1200 பேர் மீதான ஹமாஸ் தாக்குதல் என்றும் அதற்கு பழிவாங்க இஸ்ரேல் பாலத்தீனிய மக்களை கொல்கின்றது என்று எழுதியவர்.
    • இது ஜப்பான முஸ்லிம் https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_916.html இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு.  Madawala News  14 hrs ago        கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .   இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது . இது மடுவலவை https://www.madawalaenews.com/2024/05/blog-post_97.html விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம் Thursday, May 16, 2024  சர்வதேசம்     கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .         இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .   இரண்டு முஸ்லிம் இணையமும் ஒரே மாதிரி எழுதி உள்ளன யாவரும் கவனிக்க இங்கு தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி குளிர் காய்பவர்கள் யார் என்று புரிந்து கொள்க . இலங்கையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் போர் முடிந்தபின் வேறு வழி கிடையாது இன்னும் எழுதலாம் வேணாம் காலையில் நிம்மதியாய் எழுந்து கோப்பி குடிக்கணும் .
    • வழக்கமாக அல்லாகு அக்பர்    இறுதி வெற்றி அல்லாவுக்கே என்றில்லாமல் இறுதி வெற்றி ஜனநாயகத்துக்கே! என்கின்றார். இந்திய மீனவர்களின் ஊடுருவல்களால் நம் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதைக்கூட கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திராணியில்லை. ரிஷாட் பதியுதீன்  நல்ல மாற்றம்.
    • பல் என்று சொல்கிறீர்கள் போலுள்ளது ....... அதை நான் ஆமோதிக்கிறேன்......!  😁
    • ஏமாற்றம் இலங்கையின் கறுப்பு பக்கம் ☹️ நான் நினைத்தேன் கடவுள் மேல் உள்ள பக்தி காரணமாக ஆண்கள் கோவிலில் ஆபாசமாக மேலே ஆடை இல்லாமல் நிற்கின்றனர், தமிழ் அரசியல்வதிகள் மற்றும் ரணில்  வாக்குகள் பெற்று கொள்வதற்காக அப்படி செய்கின்றனர்.சைக்கிளை உருட்டிக்கொண்டு கோவில் பாதையால் போன கிருபன் அய்யாவை சேட்டை கழட்ட சொன்னது பலியல் துன்புறுத்தல்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.