Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவை சந்திக்கு இழுப்பதில் கனேடியப் பிரதமர் உறுதி – கனேடிய ஊடகம் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

stephen%20harper%20canada%20president.jpg

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் என்று கனேடியப் பிரதமர் கொடுத்து வரும் அழுத்தங்களால் இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் பிளவுகள் ஏற்படலாம் என்று கனேடிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 28ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரை அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில், கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர், இந்த விவகாரத்தை எழுப்பவுள்ளார்.

சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் தமக்குத் திருப்தி தராது போனால் 2013இல் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொமன்வெல்த் மாநாட்டில், இதுதொடர்பாகக் கலந்துரையாடப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும்,, பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் தனது நிலைப்பாட்டை அங்கு தெளிவுபடுத்துவார் என்றும் கனேடியப் பிரதமரின் தொடர்பாடல்களுக்கான இணைப் பணிப்பாளர் அன்ரூ மக் டௌகல் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

கனேடிய ஊடகம் ஒன்றில் ஒரு மாதத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றில், பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படுத்திய நிலைப்பாட்டில் இருந்து தடுமாறவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிதிருந்த கனேடியப் பிரதமர், மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகளுக்கு சிறிலங்கா இடமளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

“ மனிதஉரிமை நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை ஏனைய தலைவர்களும் எடுக்க வேண்டும்.

நான் பிரதமாக இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது போனாலும் ஏனைய தலைவர்கள் இந்த நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் பொருத்தமான நடவடிக்கை எடுக்க சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்“ என்றும் கனேடியப் பிரதமர் ஹாபர் கூறியிருந்தார்.

“இது கனேடியப் பிரதமரின் கருத்து. ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதும் 54 நாடுகள் அங்கம் வகிக்கும் கொமன்வெல்த் அமைப்பின் பணியே.

இந்த விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இதனை மதிக்க வேண்டியது சிறிலங்காவைப் பொறுத்த விடயம் என்று கனேடியப் பிரதமர் கூறியுள்ளார். இதுபற்றி அவுஸ்ரேலியாவில் கலந்துரையாடப்படும்“ என்று கனேடியப் பிரதமரின் தொடர்பாடல்களுக்கான இணைப் பணிப்பாளர் அன்ரூ மக் டௌகல் மேலும் கூறியுள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் குறித்து கொமன்வெல்த்தில் கலந்துரையாடத் தேவையில்லை என்று தமது நாடு கருதுவதாக கனடாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் சித்ராங்கனி வாகீஸ்வரா கூறியுள்ளார்.

பேர்த்தில் பிளவுகளை உருவாக்க தாம் விரும்பவில்லை என்றும், கனடாவும் அதையே விரும்பும் என்று கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டிலேயே 20013இல் சிறிலங்காவில் கொமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுப்பதை சிறிலங்கா விரும்பவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றதான குற்றச்சாட்டையும் சிறிலங்கா தூதுவர் நிராகரித்துள்ளார்.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமில்லாத- அபாண்டமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கனடாவின் தேசிய ஜனநாயக் கட்சியின் வெளிவிவகாரப் பிரிவைச் சேர்ந்த ஹெலன் லவென்டியர், சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்றே தமது கட்சி கருதுவதாக கூறியுள்ளார்.

கனேடியப் பிரதமர் பேர்த் மாநாட்டில் இதுபற்றி கலந்துரையாடுவார் என்று நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொமன்வெல்த் தென்னாபிரிக்கா விவகாரத்தில் கையாண்டது போன்று இந்த விடயத்திலும் முக்கியமான பங்கை வகிக்க முடியும் என்றும் ஹெலன் லவென்டியர் கூறியுள்ளார்.

http://www.eeladhesa...ndex.php?option

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா,கனடா ஆகிய நாடுகள் ஒரே நேர்கோட்டில் செயற்படுகின்றன.கனடா இதற்கு தலைமை தாங்குவதாக தெரிகிறது.சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் இல்லாத நிலையில் சிறிலங்காவுக்காக பேச யாரும் இருப்பதாக் தெரியவில்லை.

'காமன்வெல்த்' - இதில் இந்தியா - பாகிஸ்தான் குரல் கொடுக்கலாம். ஆனால், இது நல்ல இடம், சிங்களத்தை அதன் ஆதரவு சக்திகளை காயப்படுத்த. அதன் விளைவுகள் அடுத்த ஐ.நா. மனித உரிமை தொடரில் ஒலிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா,கனடா ஆகிய நாடுகள் ஒரே நேர்கோட்டில் செயற்படுகின்றன.கனடா இதற்கு தலைமை தாங்குவதாக தெரிகிறது.சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் இல்லாத நிலையில் சிறிலங்காவுக்காக பேச யாரும் இருப்பதாக் தெரியவில்லை.

அப்ப ................ இந்தியா சிறிலங்காவின் பக்கம் பேசாதா ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ................ இந்தியா சிறிலங்காவின் பக்கம் பேசாதா ?

ஹி ஹி, இந்தியா மதில் மேல் பூனை என்பதை சொல்லவும் வேண்டுமா?

ஹி ஹி, இந்தியா மதில் மேல் பூனை என்பதை சொல்லவும் வேண்டுமா?

மதில் மேல் பூனை என்றால் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பக்கம் பாயும். ஆனால் இந்தியா வைக்கல் பட்டடை நாய் போன்று எந்தவொரு பிரயோசனமும் இல்லாத நாடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.