Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூட்டமைப்புக்கான அமெரிக்க அழைப்பின் பின்னணி

Featured Replies

த.தே.கூட்டமைப்புக்கான அமெரிக்க அழைப்பின் பின்னணி

ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் தீவிரம் பெற்று வருகின்ற நிலையில், அவர்களை நோக்கி சர்வதேச சமூகத்தின் கதவுகள் திறக்கத் தொடங்கியுள்ளன.

அடுத்த வாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நால்வர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளப் போவது முக்கியமானதொரு திருப்புமுனையாகவே கருதப்படுகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரே அமெரிக்கா செல்லவுள்ளனர்.

இவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு சாதாரணமானதல்ல. அதுவும் முக்கியமானதொரு கட்டத்தில் இந்த அழைப்பு வந்துள்ளது.

பல தசாப்த காலமாகத் தொடரும் இனச்சிக்கலில் தமிழர்தரப்பு எதற்கும், எந்தவொரு கட்டத்திலும் இத்தகைய அழைப்பு அமெரிக்காவில் இருந்து வந்ததில்லை.

இதற்கு முன்னர் எத்தனையோ பேச்சுக்கள், சந்திப்புகள் நடத்திருக்கின்றன. இனப்பிரச்சினை தொடர்பாக, திம்புவில் வட்டமேசை மாநாடு, இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும், ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பான், தாய்லாந்து போன்றவற்றிலும் கூட இத்தகைய பேச்சுக்கள், சந்திப்புகள் நடந்துள்ளன.

ஆனால் இலங்கை இனப்பிரச்சினை சார்ந்த ஒரு சந்திப்பு அமெரிக்காவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது- அதுவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமே இதற்கு ஏற்பாடு செய்துள்ளது இதுவே முதல்முறை.

முன்னர், இந்தியாவும், சில மேற்கு ஐரோப்பிய நாடுகளுமே இதுபோன்ற சந்திப்புகளை ஒழுங்கு செய்தன. இப்போது இந்த விவகாரம் மெல்ல மெல்ல அமெரிக்காவின் கைக்கும் மாறத் தொடங்கியுள்ளது.

இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளதன் வெளிப்பாடாகவே இதனைக் கருதலாம்.

அடுத்தவாரம் அமெரிக்கா செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அங்கு இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், உதவி இராஜாங்கச் செயலர் ரொபட்ஓ பிளேக் மற்றும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச ஏற்பாடாகியுள்ளது.

இத்தகைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகப் பேசப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொபட்ஓ பிளேக் கொழும்பு வந்திருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்தநிலையில் அவசரமாகப் பேசப்பட வேண்டிய அல்லது மேலோட்டமான விவகாரங்களாக இருந்தால், அவரே பேசிவிட்டுப் போயிருந்திருப்பார்.

ஆனால் இது ஒரு ஆழமான விவகாரங்களை ஆராயும்- முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது. அதனால் தான் இதற்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் கொடுக்க முனைகிறது.

ரொபட் ஓ பிளேக் அண்மையில் கொழும்பு வரும் போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து விட்டே, அரச தரப்பினரையோ ஏனைய தரப்பினரையோ சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

இது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழர் தரப்பில் பேசக் கூடிய தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்திருப்பதன் அடையாளமாகும்.

இப்படியானதொரு அங்கீகாரத்தை பெரும் நிலப்பரப்பை தமது ஆட்சிப் பிரதேசமாக வைத்திருந்த புலிகளுக்குக் கூட அமெரிக்கா வழங்கியிருக்கவில்லை. புலிகளை பயங்கரவாத அமைப்பாகவே அமெரிக்கா கருதியது. கடைசி வரையில் புலிகள் அமைப்பின் அழிவு குறித்து அமெரிக்கா கவலைப்படவும் இல்லை.

ஆனால், ஒரு விடயம் அமெரிக்காவினால் தட்டிக் கழிக்க முடியாததாகி விட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர் தரப்பின் பேசவல்ல சக்தியாக அடையாளம் காணும் விடயமே அது.

பொதுவாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகளின் பினாமி என்று அரசாங்கம் கூறிவந்தாலும், அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.

இதற்குக் காரணம் அமெரிக்காவோ அல்லது இலங்கை அரசாங்கமோ கூட்டமைப்புடன் பேசியே ஆக வேண்டியது அவசியம் என்றாகி விட்டது. தமிழ் மக்களும் விரும்பியோ விரும்பாமலோ தமது அரசியல் தலைமையாக அவர்களை ஏற்கும் நிலை வந்துள்ளது.

இதனால் தான் ஏராளமான பிரச்சினைகள், பிளவுகள் பூசல்கள் இருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நின்று நிலைக்க முடிகிறது. தாக்குப் பிடித்து அரசியல் நடத்த முடிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, தமிழர் தரப்புக்குள்ளேயே பலத்த விமர்சனங்கள் உள்ளன. கடுமையான அதிருப்திகள் நிலவினாலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வைத்தே எந்தக் காய்களையும் நகர்த்தியாக வேண்டும் என்ற உண்மை அனைத்துத் தரப்பினராலும் உணரப்பட்டுள்ளது.

அந்தவகையில் தான் அமெரிக்காவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இனம் கண்டுள்ளது.

ஜனநாயக ரீதியாக- தேர்தல்களில் தமிழ்மக்கள் வெளிப்படுத்திய கருத்தை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் புரிந்து கொண்டுள்ளது.இதன் அடிப்படையில் தான் கூட்டமைப்பை வைத்து பேச்சுக்களை தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெறவுள்ள சந்திப்புகளில் அமெரிக்கா எதனை எதிர்பார்க்கிறது, எதனைப் பற்றிப் பேசப் போகிறது என்பதெல்லாம் தெரிய வரவில்லை.

ஆரம்பத்தில் அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசப்படும் என்ற தகவல் வெளியானது.அரசியல்தீர்வு தொடர்பாக அமெரிக்கா பேசப் போகின்ற விடயம் என்றால் அது நிச்சயம், ஏதோ ஒரு வரைபை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்தீர்வு தொடர்பாக பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே, இந்தப் பேச்சுக்களில் முன்னேற்றம் காணப்படவில்லை என்று கூட்டமைப்பு ஒதுங்கிக் கொண்டபோது, பேச்சுக்களை மீளத் தொடங்குமாறு கடும் அழுத்தங்களைக் கொடுத்த சக்திகளில் அமெரிக்காவும் ஒன்று.

ஒரு பக்கத்தில் அரசியல்தீர்வு பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெறும் சூழலில், அதுபற்றி விவாதங்கள் எழுகின்ற சூழலில் இந்த அமெரிக்கப் பயணம் நடக்கப் போவது பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்னொரு பக்கத்தில் சர்வதேச அரங்கில் இலங்கை அரசு கடும் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளது.

போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை அரசுக்கு எதிரான நகர்வுகளை மேற்குநாடுகள் மேற்கொண்டு வரும் நிலையில், அதனை முறியடிக்கும் வியூகங்களை இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது.

இலங்கை அரசு நம்பகமான போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் அல்லது சுதந்திரமான விசாரணைகளை நடத்த இணங்க வேண்டும் என்று அமெரிக்கா கடுந்தொனியில் வலியுறுத்தி வருகிறது.

கடந்தவாரம் கூட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

வெளிப்படையான, நம்பகமான விசாரணைகளை நடத்த இலங்கை அரசு தவறினால், சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்குள் செல்வது தவிர்க்க முடியாததாகி விடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி வரப் போகும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மீது தமக்கு நம்பிக்கையில்லை என்று ஏற்கனவே அமெரிக்கா கூறியிருந்தாலும், இப்போது அந்த அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாக கூறி வருகிறது.

இந்த அறிக்கை போதுமானதா என்பதை பொறுத்தே அமெரிக்காவின் அடுத்த நகர்வு அமையும்.

நல்லிணக்க ஆணைக்குழு மூலம் நம்பகமான அறிக்கை ஒன்றைப் பெறுவதற்கான அமெரிக்காவின் இன்னொரு முயற்சியாகக் கூட, தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கொண்டுள்ள உறவுகளைக் காட்டி இலங்கை அரசைப் பணிய வைக்கின்ற முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளதா என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்காவின அண்மைய நகர்வுகள் இலங்கை அரசுக்கு சார்பானதொன்றாகத் தெரியவில்லை. அத்துடன் இலங்கை விவகாரத்தில் தனியான கவனத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது அமெரிக்கா.

அதற்கு மற்றுமொரு காரணம் ரொபட் ஓ பிளேக் என்று கருதப்படுகிறது.இவர் போரின் இறுதிக்கட்டத்தில் கொழும்பில் தூதுவராகப் பணியாற்றியவர். போரின் போது என்ன நடந்து என்பது குறித்தும், அதன் பின்னணிகள் குறித்தும் நன்றாக விபரம் அறிந்தவர்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பிளேக்கின் நகர்வுகள் அமைகின்றன.

இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான அழைப்பு அமெரிக்காவுடன் நெருக்கமான தனிப்பட்ட உறவுக்கு களமாகுமா அல்லது அரசாங்கத்தை மிரட்டுவதற்கான நகர்வா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

எந்த நோக்கத்துடன் அமெரிக்கா அழைத்திருந்தாலும் இது தமிழர் தரப்புக்கான முக்கியமான அங்கீகாரமாகவே பேசப்படுகிறது.

இந்த அங்கீகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமா என்ற சந்தேகத்தை ஒரு தரப்பினர் எழுப்பாமல் இல்லை.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க்குற்ற விவகாரத்தைக் கைகழுவி விடுமா என்ற அச்சம் பலரிடமும் உள்ளது.

அதாவது அரசியல்தீர்வு ஒன்றுக்கு பரிகாரமாக- பிரதியீடாக போர்க்குற்றச்சாட்டுகள் கைகழுவி விடப்பட்டு விடுமோ என்று பலரும் கருதுகின்றனர்.

அவ்வாறானதொரு சூழல் ஏற்பட்டால், அது சில வேளைகளில் தவிர்க்க முடியாத ஒரு இராஜதந்திர நகர்வாகவும் அமையலாம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரப்போகின்ற சூழலில், தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பு என்ன என்பதை நாடி பிடிப்பதில் தான் அமெரிக்கா ஈடுபடப் போகிறது.

போர்க்குற்ற விசாரணைகளுக்குப் பதிலீடாக அரசியல் தீர்வுக்கான உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொடுக்கஅமெரிக்கா முனையலாம்.

ஆனால் போர்க்குற்ற விசாரணைக்கான அழுத்தங்களை கைவிட்டு விடக் கூடாது என்று சில தமிழர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் தீர்வு சார்ந்த நகர்வுகள் அனைத்துலக அளவில் முனைப்படைந்துள்ள சூழலில் அமெரிக்கா எடுக்கப் போகும் முடிவும், அது வகிக்கப் போகும் பாத்திரமும் முக்கியமான இடத்தைப் பெறக் கூடும்.

அதற்கான முதற்படியாக அல்லது களமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்அமெரிக்கப் பயணம் அமையப் போகிறது.

ஒருவகையில் இது கூட்டமைப்புக்கான ஒரு இராஜதந்திரப் பரீட்சையாகவும் அமையலாம்.

கத்தி மேல் நடக்க வேண்டிய இந்தப் பயணத்தில் கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம்.

http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/29656-2011-10-19-19-20-53.html

  • தொடங்கியவர்

போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் தீர்வு சார்ந்த நகர்வுகள் அனைத்துலக அளவில் முனைப்படைந்துள்ள சூழலில் அமெரிக்கா எடுக்கப் போகும் முடிவும், அது வகிக்கப் போகும் பாத்திரமும் முக்கியமான இடத்தைப் பெறக் கூடும்.

அதற்கான முதற்படியாக அல்லது களமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்அமெரிக்கப் பயணம் அமையப் போகிறது.

ஒருவகையில் இது கூட்டமைப்புக்கான ஒரு இராஜதந்திரப் பரீட்சையாகவும் அமையலாம்.

கத்தி மேல் நடக்க வேண்டிய இந்தப் பயணத்தில் கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்தியா - சீனா என்ற அச்சாணிக்குள் மட்டுமே இருந்துவந்த சிக்கலில் அமெரிக்காவின் தலையீடு வெளிப்படையாகவே, இந்தியாவை மீறி, வந்துள்ளது. இது கூட்டமைப்புக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

உண்மையில் இந்த பரீட்சையில் அதன் பெறுபேறுகளில் எமதினத்தின் உடனடி/நீண்டகால தலைவிதியும் கூட பின்னிப்பிணைந்துள்ளது.

கருத்தில்லாத ஆய்வு.

வெறுமனே இலங்கையில் அமைதியை கொண்டுவரவோ அல்லது தமிழருக்கு ஒரு தனியான தீர்வைக்கொண்டுவரவோ அமெரிக்கா முயல்வதாக கணிப்பது சரியல்ல. அமெரிக்கா தன்னுடைய நலங்களோடு தான் தமிழர் பிரச்சனையை தீர்த்து வைக்கும். தான் எடுக்க போகும் முடிவுகளுக்கு தமிழர் தரப்பின் எதிர்ப்பை தவிர்க்கவே அமெரிக்க முயல்கிறது. இதுவரையும் தமிழர்களை எதிர்த்தே பிளேக் அலுவல்கள் செய்து வந்தவர். சிங்களவர்களை ஆதரித்து முடிவுகள் எடுத்தவர். இதனால் இந்திய மத்திய அரசுடன் மட்டும்தான் கதைத்தவர். இப்போது அமெரிக்கா தனது பாதையை மாற்றுகிறது. இலங்கையில் தனது காலை ஊன்ற முயல்கிறது. இதற்கு மத்திய அரசு உதவாது. தமிழ்நாட்டில் கிழம்பக்கூடிய எதிர்ப்புக்களை முதலீடுகள் என்ற போர்வையில் தஜா செய்து கொள்ளவே இந்தமுறை தமிழ் நாட்டிற்கும் சேர்த்து விஜயம் செய்தவர் கில்லாரி. நிச்சயமாக தனது விருப்பங்களை அமெரிக்கா த.தே.கூ மீது திணிக்கும். அதை எற்றுக்கொள்ள செய்யவே இந்த சந்திப்பு. ஆனால் அது இந்தியாவும் அமெரிக்கவும் கடந்த காலங்களில் செய்த நாசகாற காரியங்கள் மாதிரி இருக்காது. இது ராசபக்கசா பக்கம் இலகுவில் ஜீரணிக்க முடியாததாகவே இருக்கும். அதனால்தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமெரிக்காவிற்கு தேவைப்படுகிறது. இதில் அரசாங்கம் மீது குற்றங்கள் காட்டி தனியான உள்நாட்டு விசாரணைக்கு பரிந்துரைக்க பட்டிருந்தால் காலம் மேலும் இழுபடும். இதைத்தொடர்ந்து ஒழுங்கான விசாரணை உள்ளே நிகழ்த்தபட்டால், அமெரிக்கா ராசபக்சாக்களை பொறுப்பை எற்று கொண்டு பதவி விலக நிர்ப்பந்திற்கும். இது அவர்கள் தங்களைத் தாங்கள் அமெரிக்கவிடமிருந்த்து காப்பாற்றி கொள்ள கடைசிச் சந்தர்ப்பமாக இருக்கும். ரணில் இனி வர முடியாது என்பதால் சந்திரிக்கா வரலாம். சந்திரிக்கவை வைத்துக்கொண்டு அமெரிக்கா சீனாவின் அலுவல்களை சரி செய்ய முயலும். அதன்போது அதிகம் தமிழருக்கு கிடைக்க கூடியது சோல்பரி அரசியல் அமைப்பை விட சற்று கூடியதாக மட்டுமே இருக்கும். அறிக்கை ராசபக்சாகள் மீதான குற்றச்சாட்டுககளைத் தள்ளுபடி செய்து அவர்களைக் கௌரவிக்குமாயின் அமெரிக்கா சர்வதேச விசாரணையை முடுக்கும். இதன் விளைவுகளை எதிர்வு கூறுவது கடினம். அமெரிக்கா சீனாவை முழுதாக துரத்தி இலங்கையில் கால் ஊன்றலாம். தமிழருக்கும் நிரந்தர தீர்வு ஏற்படலாம்.

போர்க்குற்ற விசாரணையை விட்டு விடுமாறு த.தே.கூ விடம் கேட்பதில் அர்த்தமில்லை. இது சிறு குழுக்களால் பல நாடுகளில் எடுக்க பட்டு வரும் முயற்சி. இதை த.தே.கூ தொடக்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை, இதுவரையில் த.தே.கூ போர்க்குற்ற விசாரணையை தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு தர தக்க விஷயமாக பார்க்கவில்லை. அது மட்டுமல்ல பிளேக் 2009-2010 களில் தமிழ் மக்கள் போர்குற்ற விசாரணையை விட்டு விட்டு அரசியல் தீர்வைத்தான் தன்னிடம் பேசிகிறார்கள் என்ற கூறிய கூற்று த.தே.கூ யை வைத்து தான் சொல்லப்பட்டது. பிளேக் புலம் பெயர் மக்கள் யதார்த்தம் இல்லாதவர்கள் என்று கூறியதும், புலத்திலிருக்கும் சில தலைவர்களை தெரிந்தெடுத்து சந்தித்ததும் அவர்களின் முன்னெடுப்பான போர்குற்ற விசாரணையை தவிடு பொடியாக்கவே. இந்த நிலையில் த.தே.கூ டிடம் போகுற்ற விசாரணையை கைவிட பேரம் பேசலாம் என்பது பொருள்ளில்லாத வாதம்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

போர்க்குற்ற விசாரணையை விட்டு விடுமாறு த.வி.கூ விடம் கேட்பதில் அர்த்தமில்லை. இது சிறு குழுக்களால் பல நாடுகளில் எடுக்க பட்டு வரும் முயற்சி. இதை த.வி.கூ தொடக்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை,இதுவரையில் த.வி.கூ போர்க்குற்ற விசாரணையை தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு தர தக்க விஷயமாக பார்க்கவில்லை. அது மட்டுமல்ல பிளேக் 2009-2010 களில் தமிழ் மக்கள் போர்குற்ற விசாரணையை விட்டு விட்டு அரசியல் தீர்வைத்தான் தன்னிடம் பேசிகிறார்கள் என்ற கூறிய கூற்று த.வி.கூ யை வைத்து தான் சொல்லப்பட்டது. பிளேக் புலம் பெயர் மக்கள் யதார்த்தம் இல்லாதவர்கள் என்று கூறியதும், புலத்திலிருக்கும் சில தலைவர்களை தெரிந்தெடுத்து சந்தித்ததும் அவர்களின் முன்னெடுப்பான போர்குற்ற விசாரணையை தவிடு பொடியாக்கவே. இந்த நிலையில் த.வி.கூ டிடம் போகுற்ற விசாரணையை கைவிட பேரம் பேசலாம் என்பது பொருள்ளில்லாத வாதம்.

ஆனால், கூட்டமைப்பு பகிரங்கமாக 'போர்குற்ற விசாரணை நடவடிக்கைகளை கைவிடுங்கள்' எனக்கூறினால், அது புலம்பெயர் மக்கள் மத்தியில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தி அவர்களை பலவீனமாக்கலாம்.

"குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க்குற்ற விவகாரத்தைக் கைகழுவி விடுமா என்ற அச்சம் பலரிடமும் உள்ளது.

அதாவது அரசியல்தீர்வு ஒன்றுக்கு பரிகாரமாக- பிரதியீடாக போர்க்குற்றச்சாட்டுகள் கைகழுவி விடப்பட்டு விடுமோ என்று பலரும் கருதுகின்றனர்.

அவ்வாறானதொரு சூழல் ஏற்பட்டால், அது சில வேளைகளில் தவிர்க்க முடியாத ஒரு இராஜதந்திர நகர்வாகவும் அமையலாம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரப்போகின்ற சூழலில், தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பு என்ன என்பதை நாடி பிடிப்பதில் தான் அமெரிக்கா ஈடுபடப் போகிறது.

போர்க்குற்ற விசாரணைகளுக்குப் பதிலீடாக அரசியல் தீர்வுக்கான உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொடுக்கஅமெரிக்கா முனையலாம்.

ஆனால் போர்க்குற்ற விசாரணைக்கான அழுத்தங்களை கைவிட்டு விடக் கூடாது என்று சில தமிழர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன."

இந்த காட்டுரை கூட்டமைப்பின் போர்குற்ற விசாரணைக்கான ஆதரவுகள் பற்றித்தான் பேசுகிறது. அப்படி ஒன்று இதுவரையில் இருக்கவில்லை. பிளேக் கூட்டமைப்பை பாவித்து புலம் பெயர் மக்களை பலவீனப்படுத்ததான் முயன்றார். இனி அந்த பாதையில் அமெரிக்கா செல்லாது. தேவையாயின் புலிகளை அடக்க எப்படி மற்றைய நாடுகளைப் பாவித்ததோ அப்படித்தான் அவர்களுடன் நேரடியாக எடுத்துகொள்ளப்பட வேண்டிய விடயமாக இது வந்து விட்டதேயல்லாமல், புலம் பெயர் மக்களை அடக்கி அடங்கிவிடாது. இந்த விசாரணை புலம் பெயர் மக்கள் கையிலிருந்து மெல்ல எழும்பிக்கொண்டிருக்கிறது. இனி திருப்பி வந்து அவர்கள் கைக்குள் அடங்குமா என்பது கேள்வி. இனி புலம் பெயர் மக்களின் எதிர்ப்போ அல்லது பலவீனமோ விசாரணையின் பாதையை அதிகம் பாதிக்காது. ஆனால் அவர்களின் ஒத்துழைப்பு, முடிவை விரைவு படுத்தும். Channel-4, அல்ஜஜீரா, கெட்ளைன்ஸ் ருடே, அம்நெஸ்டி, IGC இயவர்கள் நமக்காக தங்கள் பாதையிலிருந்து திரும்பமாட்டார்கள்.

போர்க்குற்ற விசாரணை, NGO களாலும் புலம் பெயர் தமிழ்மக்களாலும் ஆரம்பிக்கபட்டது. இதுவரையில் இது சர்வதேச சட்டங்களை தழுவி தனிப்பட்ட வழக்குகளாக முன்னெடுத்து செல்லப்படுகிறது. சரவதேச விசாரணை ஆவதற்கு அரசாங்கங்கள் முன் வரவேண்டும்.

அரசாங்கங்கள் ஐந்து நிலையில் இருக்கின்றன.

1.கனடா, பிருத்தானியா, ஆஸ்திரேலியா...- முதல் நிலை.

2.அமெரிக்கவும் மற்றைய சில ஐரோபிய நாடுகள் - இரணடாம் நிலை

3ஆர்வமில்லாத நாடுகள். பெரும்பாலானவை.

4.இந்தியா, கியுபா, ஈரான், பகிஸ்த்தான்.- இலங்கைக்கு சார்பானவை. ஐ.நா அதிகாரம் இல்லாதவை.

5.சீனா, ரூசியா - பிரச்சனையான நாடுகள்.

ஆனால் அமெரிக்காவின் நிலையையைத்தான் புலம் பெயர் மக்கள் திருப்ப பார்க்கிறர்கள். கூட்டமைப்பு இதில் சில வாக்குறுதிகளை அமெரிக்கவிற்கு கொடுத்து அதை நம் பக்கம் திருப்ப வேண்டும் என்று புலம் பெயர் மக்கள் எதிபார்க்கிறார்கள். கூட்டமைப்பு இணங்கினால் அது போனஸே.கூட்டமைப்பு இணங்காவிட்டால் அது தற்போதைய நிலையை பாதிக்காது. அமெரிக்கா திரும்புவது இலங்கை எப்படி சீனாவுடன் இனிமேலும் நடந்து கொள்ளப்போகுது என்பதிலேயே பெரிதும் தங்கியிருக்கும். இலங்கை அடம்பிடித்தால் அமெரிக்கா போர்குற்ற விசாரணையை முன் நின்று நடத்தும்.

"குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க்குற்ற விவகாரத்தைக் கைகழுவி விடுமா என்ற அச்சம் பலரிடமும் உள்ளது

அதாவது அரசியல்தீர்வு ஒன்றுக்கு பரிகாரமாக- பிரதியீடாக போர்க்குற்றச்சாட்டுகள் கைகழுவி விடப்பட்டு விடுமோ என்று பலரும் கருதுகின்றனர்.போர்க்குற்ற விசாரணைகளுக்குப் பதிலீடாக அரசியல் தீர்வுக்கான உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொடுக்கஅமெரிக்கா முனையலாம்." இது ஆசிரியரின் வலித்த கருத்தைதான் காடுகிறது.

"அரசியல் தீர்வுக்கான உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொடுக்கஅமெரிக்கா முனையலாம்" ஆசிரியர் நினைகுமாப்போல் SJV, ரஜிவ் விழுந்த இந்த சிங்களத்துடன் ஒப்பந்தம் கைசாத்திடும் சாக்கடைக்குள் அமிரிக்காவும் விழுமா?

Edited by மல்லையூரான்

இதில் கலந்துகொள்ளும் சம்பந்தன், சேனாதிராசா, சுரேஷ், சுமந்திரன் அனைவரும் பச்சோந்திப் போக்குள்ளவர்கள். தமிழன அழிப்புக்கு துணைபோன இந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் ஊதுகுழல்கள். சேனாதிராசா தவிர ஏனைய ஒருவரும் தமிழரின் பிரச்சனைகளை நேரடியாக இருந்து, பார்த்து அறியாதவர்கள். சுரேஷுக்கு ஓரளவு புள்ளி விபரங்கள் தெரியும். மற்றைய இவர்களும் எதுக்கும் லாயக்கற்றவர்கள்.

சம்பந்தன் ஒருவசனம் பேச 5 நிமிடம் வேண்டும். இதில் புலிகள் மீது சேறு வார 10 நிமிடம், இந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் துதிபாட 15 நிமிடம், தான் ஜனநாயகவாதி என்று மார்தட்ட 10 நிமிடம், பிரித்தானிய ராஜதந்திரிகளுடன் தனக்குள்ள நெருக்கம் (2008 சண்டை உக்கிரமாக நடக்கும் போது விஜேராம வீதியுள்ள பிரித்தானிய ராஜதந்திரி இல்லத்தில் தமிழர் பிரச்சினை கதைக்கப் போய், குடும்பத்தினருக்கு பிரித்தானிய விசா கோரிய பெருமைகள்) பேச 10 நிமிடம் தேவை. தனக்குத் தெரியாத ஆனால் பத்திரிகைகளில் வாசித்தறிந்த தமிழர் பிரச்சினைகள் ஒரு சிலதை அரைகுறையாகச் சொல்ல நேரம் கிடைக்காது. ஆவணங்கள் தயாரித்து வழங்கவும் அறிவில்லை. சரியான களிமண் குதிரை.

சுமந்திரன் சம்பந்தனின் ஊதுகுழல் என்பதைத் தவிர வேறு தகுதிகள் எதுவும் இல்லாத, அரை வேக்காட்டுச் சட்டத்தரணி. முதல் தரப் பச்சோந்தி. சம்பந்தனைப் போலவே தனது சொந்த - உறவுகளின் நலன்களுக்காக தமிழரின் உரிமைகளை அடகுவைக்கும் மனோபாவம் நிறைந்தவன். ஜே. ஆர். கொடுத்த தேநீரில் மயங்கி தமிழர் உரிமைகளை மறந்துபோன அமர்தலிங்கம் போல் சம்பந்தனும், சுமந்திரனும் இயங்கும் பழக்கதோஷம் உடையவர்கள்.

இந்த இரண்டு வெங்காயங்களுக்கும் பதிலாக கஜேந்திரன் பொன்னம்பலத்தையும், உடன் சிறீதரன் அல்லது யோகேஸ்வரன் அல்லது அரியநேந்திரனை சேர்த்துக் கொண்டிருக்கலாம். உடன் அவர்களைச் சேர்த்துக் கொள்வது கட்டாய தேவை.

எனவே இந்த சந்தர்ப்பத்தையும் கூட்டமைப்பு கோட்டை விடுவது உறுதியாகிவிட்டது.

அடுத்தது போர்க்குற்றத்தை கைவிட்டால் அரசியல் தீர்வு என்ற ஒரு மாயையை சிங்கள அரச பயங்கரவாதிகளும், இந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளும் உருவாக்க முயலுகின்றனர். சம்பந்தன், சுமந்திரன் இந்தச் சதிவலைக்கு ஏற்கனவே பயங்கரவாதி கோத்தபாயவிடம் ஆதரவு தெரிவித்தது தெரியும். இந்தச் சதிவலைக்கு துணை போபவர்கள் மிகக் கடுமையான விலையைக் கொடுக்கவேண்டி வரும். இது மரணப்பொறியே இல்லாமல் இதில் எந்த ராஜதந்திரமும் இல்லை.

போர்க்குற்றத்தின் வலுவை சிதைக்க மானம், ரோஷம், சூடு, சுரணையற்ற ஜென்மங்களே துணை போகும். ஈனப் பிறவிகளே இதை ராஜதந்திரமாகக் கருதும்.

மாறாக கூட்டமைப்பினர், போர்குற்றம் முழுமையாக சர்வதேசத்தால் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று உறுதியாகக் கோருவதுடன், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் சர்வதேச நியமங்களின் படி நட்ட ஈடுகள் வழங்கப்படவேண்டும் என்றும் கோர வேண்டும். இதுவே முறையான ராஜதந்திரம்.

நட்டஈடுகளை குறைந்த பட்சம் பின்வருமாறு அல்லது அதற்க்குக் கூடுதலாக கோரவேண்டும்.

(1) கொலை செய்யப்பட்ட ஒருவருக்கு ரூபா 50,000,000/- (ஐம்பது மில்லியன்) + உறுதியுடன் 10 ஏக்கர் காணி குடும்பத்துக்கு வழங்க வேண்டும்

(2) காணாமல் போன ஒருவருக்கு ரூபா 50,000,000/- + உறுதியுடன் 10 ஏக்கர் காணி குடும்பத்துக்கு வழங்க வேண்டும்

(3) பாலியல் இம்சை செய்யப்பட்ட ஒருவருக்கு ரூபா 10,000,000/- + உறுதியுடன் 10 ஏக்கர் காணி

(4) கைது செய்து சித்திரவதை செய்யப்பட்ட ஒருவருக்கு ரூபா 500,000/- x சிறையிலிருந்த வருடங்கள் + உறுதியுடன் 10 ஏக்கர் காணி

(5) அடித்து துன்புறுத்தப்பட்ட ஒருவருக்கு ரூபா 1,000,000/- + உறுதியுடன் 5 ஏக்கர் காணி

(6) இழந்த, அழித்த, ஆக்கிரமித்த சொத்துக்களுக்கு பத்து மடங்கு சொத்துப் பெறுமதி + உறுதியுடன் 5 ஏக்கர் காணி

(7) முழுமையாக அழிக்கப்பட்ட குடும்பங்களின் பெயரில் 5 ஏக்கர் காணி எழுதப்பட்டு அதில் சமூக மண்டபங்கள், நூலகங்கள், போன்றவை அமைக்கப்பட்டு குடும்பத்தின் ஞாபக சின்னமும் நிறுவப்பட வேண்டும்.

இவை அனைத்தும் நேட்டோ அமைப்பின் கண்காணிப்பில் சிங்கள பயங்கரவாத அரசினால் வழங்கப்படவேண்டும் என்று கூட்டமைப்புக் கோரினால் அது ராஜதந்திரம்.

அத்துடன் குறைந்த பட்சமாக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய, தனித்துவமான தேசிய இனம் என்ற அங்கீகாரத்துடன் கூடிய, முழுமையான காணி - போலிஸ் - தனி ராணுவ கடற்படைப் பிரிவுகளுடன் கூடிய ஒரு தீர்வைக் கோர வேண்டும். இது இல்லையெனின், தீர்வுக்கு 90 நாட்களின் மேல் காலம் இழுத்தடிக்கப்படுமெனின் முழுமையான சுதந்திர தமிழ் ஈழமே பொருத்தமான தீர்வு என்பதைத் தெளிவாகக் கூறவேண்டும்.

முக்கியமாக் சிங்கள அரச பயங்கரவாதிகளின் நல்லிணக்க ஆணைக்குழு மீது தமிழருக்கு எந்தவொரு நம்பிக்கையும் இல்லை என்பதை தெளிவாகக் கூறுவதுடன், அதில் உள்ள சிங்கள இனவாதிகளின் முகத் திரைகளையும் கிழிக்கவேண்டும்.

மேலதிக நியாயமான கோரிக்கைகளால் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டுமே தவிர, தமிழினப் படுகொலையாலர்களின் மீதுள்ள அழுத்தம் குறைய உதவக் கூடாது. அவ்வாறு யாராவது உதவினால் மிகக் கடுமையான விலையைக் கொடுக்கவேண்டி வரும்.

இதுவே தாயகத்தில் வாழும் பாதிக்கப்பட்ட பெரும்பாலான தமிழரின் இதயக் குரலாகும்.

காணிநிலம் வேண்டும் அமெரிக்கா காணிநிலம் வேண்டும்

சிறிலங்கா அரசு தமிழர் கேட்பதைத் தரப் போவதில்லை.கூட்டமைப்பு தமிழருக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் வரை.

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் மேற்குலகின் நிலை என்ன. சீனச் சார்பாக சிறிலங்கா சாய்வதை நிப்பாடுவதற்காக போர்க் குற்றம் என்பதை பாவிக்கிறார்கள், அத்தோடு தமிழருக்குப் பெயரளவில் ஒரு தீர்வு, அதைத் தமிழர் தரப்பான கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.இதில் கூட்டமைப்பு எவ்வளவுக்கு தொலை நோக்கில் செயற்படும் என்பதிலேயே தமிழரின் எதிர்காலம் தங்கி இருக்கிறது

கூட்டமைப்பினர் இதனைச் சரியாகப் புரிந்து , அமெரிக்கப் பேச்சுவார்த்தையில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.இதன் பின்னர் சிறிலங்கா அரசை வழிக்குக் கொண்டுவர மேற்குலகம் தனது நடவடிக்கைகளைத் தொடங்கும்.இதனை நோக்கியே இந்தப் பேச்சுவார்த்தைகளைக் கூட்டமைப்பு பாவிக்க வேண்டும்.

அங்கிருப்பவர்கள் விருப்பிற்கும் எமது விருப்புக்கும் இடையில் ஒரு இடைவெளி உள்ளது ,கூட்டமைப்பு அதைத்தான் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது .

செய்யாத குற்றத்திற்கு என்னை போலிஸ் பிடித்தால் முதலில் நான் வெளியே வருவதற்கான அலுவல்களைத்தான் பார்ப்பேன்,பின்பு தான் நியாயம்,நீதி,சூ பண்ணுவது எல்லாம்.

அங்கிருப்பவர்களின் விருப்பு என்ன என்பதை அங்கிருப்பவர்கள் சொல்லிக் கொண்டு தான் வருகிறார்கள்.சம்பந்தனும் மற்றைய கூட்டமைப்பு எம்பிக்களும் மக்கள் முன் அதனையே சொல்லி வாக்கும் கேட்டவர்கள் அதில் இருந்து அவர்கள் பிறளமாட்டார்கள் என்று நம்புவோம்.அங்கிருப்பவர்களுக்கும் இங்கிருப்பவர்களுக்கும் எந்தஇ டைவெளியும் இல்லை.இடைவெளி இருப்பதாக இங்கிருக்கும் சில சூனியங்களே சொல்லிக் கொண்டு புலம்புகின்றன. அன்று புலிகள் அங்கிருந்து சொன்னதைத் தான் மக்களும் இன்று சொல்கிறார்கள் ,அதனைத் தான் கூட்டமைப்பும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லி உள்ளது. அதனால் தான் மகிந்த பிரபாகரனுக்குக் கொடுக்காததை கூட்டமைப்புக் கொடுக்க முடியாது என்று சொல்லி வருகிறார். நான் மேலே எழுதியது கூட்டமைப்பு, எந்த அமெரிக்க அழுத்ததிற்க்கும் உட்படாது தமிழரின் நலங்களை தூர நோக்கில் சிந்தித்து கிடைக்கும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன் படுத்த வேண்டும் என்பதே.

சில சூனியங்கள் எதை எழுதினாலும் , தமது வயித்தெரிச்சலைக் கொட்ட முனைகின்றன, வக்கணையில் எரிந்து சாம்பலாகும் மட்டும் புலம்பிக் கொண்டிருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கலந்துகொள்ளும் சம்பந்தன், சேனாதிராசா, சுரேஷ், சுமந்திரன் அனைவரும் பச்சோந்திப் போக்குள்ளவர்கள். தமிழன அழிப்புக்கு துணைபோன இந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் ஊதுகுழல்கள். சேனாதிராசா தவிர ஏனைய ஒருவரும் தமிழரின் பிரச்சனைகளை நேரடியாக இருந்து, பார்த்து அறியாதவர்கள். சுரேஷுக்கு ஓரளவு புள்ளி விபரங்கள் தெரியும். மற்றைய இவர்களும் எதுக்கும் லாயக்கற்றவர்கள்.

சம்பந்தன் ஒருவசனம் பேச 5 நிமிடம் வேண்டும். இதில் புலிகள் மீது சேறு வார 10 நிமிடம், இந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் துதிபாட 15 நிமிடம், தான் ஜனநாயகவாதி என்று மார்தட்ட 10 நிமிடம், பிரித்தானிய ராஜதந்திரிகளுடன் தனக்குள்ள நெருக்கம் (2008 சண்டை உக்கிரமாக நடக்கும் போது விஜேராம வீதியுள்ள பிரித்தானிய ராஜதந்திரி இல்லத்தில் தமிழர் பிரச்சினை கதைக்கப் போய், குடும்பத்தினருக்கு பிரித்தானிய விசா கோரிய பெருமைகள்) பேச 10 நிமிடம் தேவை. தனக்குத் தெரியாத ஆனால் பத்திரிகைகளில் வாசித்தறிந்த தமிழர் பிரச்சினைகள் ஒரு சிலதை அரைகுறையாகச் சொல்ல நேரம் கிடைக்காது. ஆவணங்கள் தயாரித்து வழங்கவும் அறிவில்லை. சரியான களிமண் குதிரை.

சுமந்திரன் சம்பந்தனின் ஊதுகுழல் என்பதைத் தவிர வேறு தகுதிகள் எதுவும் இல்லாத, அரை வேக்காட்டுச் சட்டத்தரணி. முதல் தரப் பச்சோந்தி. சம்பந்தனைப் போலவே தனது சொந்த - உறவுகளின் நலன்களுக்காக தமிழரின் உரிமைகளை அடகுவைக்கும் மனோபாவம் நிறைந்தவன். ஜே. ஆர். கொடுத்த தேநீரில் மயங்கி தமிழர் உரிமைகளை மறந்துபோன அமர்தலிங்கம் போல் சம்பந்தனும், சுமந்திரனும் இயங்கும் பழக்கதோஷம் உடையவர்கள்.

இந்த இரண்டு வெங்காயங்களுக்கும் பதிலாக கஜேந்திரன் பொன்னம்பலத்தையும், உடன் சிறீதரன் அல்லது யோகேஸ்வரன் அல்லது அரியநேந்திரனை சேர்த்துக் கொண்டிருக்கலாம். உடன் அவர்களைச் சேர்த்துக் கொள்வது கட்டாய தேவை.

எனவே இந்த சந்தர்ப்பத்தையும் கூட்டமைப்பு கோட்டை விடுவது உறுதியாகிவிட்டது.

அடுத்தது போர்க்குற்றத்தை கைவிட்டால் அரசியல் தீர்வு என்ற ஒரு மாயையை சிங்கள அரச பயங்கரவாதிகளும், இந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளும் உருவாக்க முயலுகின்றனர். சம்பந்தன், சுமந்திரன் இந்தச் சதிவலைக்கு ஏற்கனவே பயங்கரவாதி கோத்தபாயவிடம் ஆதரவு தெரிவித்தது தெரியும். இந்தச் சதிவலைக்கு துணை போபவர்கள் மிகக் கடுமையான விலையைக் கொடுக்கவேண்டி வரும். இது மரணப்பொறியே இல்லாமல் இதில் எந்த ராஜதந்திரமும் இல்லை.

போர்க்குற்றத்தின் வலுவை சிதைக்க மானம், ரோஷம், சூடு, சுரணையற்ற ஜென்மங்களே துணை போகும். ஈனப் பிறவிகளே இதை ராஜதந்திரமாகக் கருதும்.

மாறாக கூட்டமைப்பினர், போர்குற்றம் முழுமையாக சர்வதேசத்தால் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று உறுதியாகக் கோருவதுடன், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் சர்வதேச நியமங்களின் படி நட்ட ஈடுகள் வழங்கப்படவேண்டும் என்றும் கோர வேண்டும். இதுவே முறையான ராஜதந்திரம்.

நட்டஈடுகளை குறைந்த பட்சம் பின்வருமாறு அல்லது அதற்க்குக் கூடுதலாக கோரவேண்டும்.

(1) கொலை செய்யப்பட்ட ஒருவருக்கு ரூபா 50,000,000/- (ஐம்பது மில்லியன்) + உறுதியுடன் 10 ஏக்கர் காணி குடும்பத்துக்கு வழங்க வேண்டும்

(2) காணாமல் போன ஒருவருக்கு ரூபா 50,000,000/- + உறுதியுடன் 10 ஏக்கர் காணி குடும்பத்துக்கு வழங்க வேண்டும்

(3) பாலியல் இம்சை செய்யப்பட்ட ஒருவருக்கு ரூபா 10,000,000/- + உறுதியுடன் 10 ஏக்கர் காணி

(4) கைது செய்து சித்திரவதை செய்யப்பட்ட ஒருவருக்கு ரூபா 500,000/- x சிறையிலிருந்த வருடங்கள் + உறுதியுடன் 10 ஏக்கர் காணி

(5) அடித்து துன்புறுத்தப்பட்ட ஒருவருக்கு ரூபா 1,000,000/- + உறுதியுடன் 5 ஏக்கர் காணி

(6) இழந்த, அழித்த, ஆக்கிரமித்த சொத்துக்களுக்கு பத்து மடங்கு சொத்துப் பெறுமதி + உறுதியுடன் 5 ஏக்கர் காணி

(7) முழுமையாக அழிக்கப்பட்ட குடும்பங்களின் பெயரில் 5 ஏக்கர் காணி எழுதப்பட்டு அதில் சமூக மண்டபங்கள், நூலகங்கள், போன்றவை அமைக்கப்பட்டு குடும்பத்தின் ஞாபக சின்னமும் நிறுவப்பட வேண்டும்.

இவை அனைத்தும் நேட்டோ அமைப்பின் கண்காணிப்பில் சிங்கள பயங்கரவாத அரசினால் வழங்கப்படவேண்டும் என்று கூட்டமைப்புக் கோரினால் அது ராஜதந்திரம்.

அத்துடன் குறைந்த பட்சமாக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய, தனித்துவமான தேசிய இனம் என்ற அங்கீகாரத்துடன் கூடிய, முழுமையான காணி - போலிஸ் - தனி ராணுவ கடற்படைப் பிரிவுகளுடன் கூடிய ஒரு தீர்வைக் கோர வேண்டும். இது இல்லையெனின், தீர்வுக்கு 90 நாட்களின் மேல் காலம் இழுத்தடிக்கப்படுமெனின் முழுமையான சுதந்திர தமிழ் ஈழமே பொருத்தமான தீர்வு என்பதைத் தெளிவாகக் கூறவேண்டும்.

முக்கியமாக் சிங்கள அரச பயங்கரவாதிகளின் நல்லிணக்க ஆணைக்குழு மீது தமிழருக்கு எந்தவொரு நம்பிக்கையும் இல்லை என்பதை தெளிவாகக் கூறுவதுடன், அதில் உள்ள சிங்கள இனவாதிகளின் முகத் திரைகளையும் கிழிக்கவேண்டும்.

மேலதிக நியாயமான கோரிக்கைகளால் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டுமே தவிர, தமிழினப் படுகொலையாலர்களின் மீதுள்ள அழுத்தம் குறைய உதவக் கூடாது. அவ்வாறு யாராவது உதவினால் மிகக் கடுமையான விலையைக் கொடுக்கவேண்டி வரும்.

இதுவே தாயகத்தில் வாழும் பாதிக்கப்பட்ட பெரும்பாலான தமிழரின் இதயக் குரலாகும்.

இந்தளவு துணிவு சம்பந்தனுக்கு இருந்தால் பிறகென்ன?. புலிகள் என்றால் துணிந்து கேட்டிருப்பார்கள்.மகித்தவோடு பேசும் போதே 10 சுற்று பேச்சு வார்த்தை நடாத்தி ஒரு முடிவில்லாமல் போய் விட்டது.இனி அமெரிக்கா சொல்லி மகித்த கேட்பதாவது?????

சீனாவின் பிரசன்னத்தை அடுத்து இலங்கையில் தமிழரின் பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு இலங்கையில் காலடி வைக்க அமெரிக்கா முயல்கிறது.புலிகளை அழித்தால் எல்லாம் முடிந்து விடும் என நினைத்த மேற்குலகுக்கும்,இந்தியாவுக்கும் "பிள்ளையார் பிடிக்க குரங்கானது போல்" சீனா திடுதிப்பென இலங்கையில் புகும் என எதிர்பார்க்கவில்லை. இப்போ குறிப்பாக இந்தியா முள் மேல் பட்ட சீலையாக என்ன செய்வது என முழிக்கிறார்கள்.

ஆக தமிழர் பிரச்சனையை வைத்து தமது காய்களை நகர்த்த அமெரிக்கா முயல்கிறது.புலிகளுடனான பேச்சுவார்த்தையில் நடுநிலைமை வகிப்பதாக கூறிய அமெரிக்கா புலிகளை அமெரிக்காவுக்குள் நுழைய விடாமல் பண்னியது, கனேடிய மாணவர்களை புலிகளுக்கு ஆயுதம் வாங்கியதாக குற்றம் சாட்டி பல காலம் அவர்களை சிறையில் தள்ளியது (அமெரிக்க உளவு துறையின் தாற்பரியங்கள்), ஆனையிறவை புலிகளால் அழிக்க முடியாது என தமிழ் மக்களுக்கு சொன்னவர்கள்,இலங்கை அரசுக்கு இராணுவ ஆலோசனைகளை வழங்கியவர்கள்,வன்னியில் நடந்த போரில் புலிகளை காப்பாற்ற வேண்டாம் தமிழ் மக்களையாவது காப்ப்பாற்ற உலக வல்லரசு என இருந்து காப்பாற்ற முற்படாதவர்கள் இப்போ திடீரென தமிழர் மேல் கரிசனை உடையவர்களாக மாறினார்கள்.நிச்சயமாக சுயநலம் தான்.

"அங்கிருப்பவர்கள் விருப்பிற்கும் எமது விருப்புக்கும் இடையில் ஒரு இடைவெளி உள்ளது ,கூட்டமைப்பு அதைத்தான் பிரதிபலித்து கொண்டிருக்கின்றது .

செய்யாத குற்றத்திற்கு என்னை போலிஸ் பிடித்தால் முதலில் நான் வெளியே வருவதற்கான அலுவல்களைத்தான் பார்ப்பேன்,பின்பு தான் நியாயம்,நீதி,சூ பண்ணுவது எல்லாம்."

அரிசுன்:

அந்த இரண்டு விருப்பங்களுமென்ன?

அதில் என்ன இடைவெளி?

அந்த இடைவெளியை ஆராய்வது எதை திருப்தி செய்யும்?

நீங்கள் இதில் கூற முயற்சித்து குழம்பிபோன கருத்துகளுக்கு எற்கனவே நிறைய பதில்கள் காட்டுரை ஆசிரியரிடமிருந்தும், உங்களுக்கு முதல் கருத்தெழுதிய அகுத, எனது, ஆரவமுதனிதும் கருத்துகளிலும் காணப்படுகின்றன. நீங்கள் அவற்றை தற்செயலாக கவனிக்காதிருந்திருந்தால் நான் இன்னோரு முறை தொகுக்க பார்க்கிறேன்.

“அங்கிருப்பவர்கள் விருப்பிற்கும் எமது விருப்புக்கும்” விருப்பம் என்று நீங்கள் இங்கே கூற வந்த விடயம் தாயகத்து மக்களின் தேவைகளையும், புலம் பெயர் மக்களின் தேவைகளையும் என்று நினைக்கிறேன். இந்த இரண்டு மனித நிலைகளையும் ஆங்கிலத்தில் need என்றும் wish என்றும் அழைப்பார்கள். இங்கே இருப்பது ஒரே ஒரு அவசிய தேவை. ஈழத்தமிழரின் சுதந்திரம். இதை விருப்பம் என்றனிலைக்கு குறைத்து வைத்தால், அதில் பல விருப்பங்களையும், பலரது விருப்பங்களையும், அவற்றை நிறைவேற்றும் போது எழக்கூடிய தேர்வுகளையும்(choices) விவாதத்தில் உள்ளடக்கவேண்டிவரும். இந்த சொற்பிரயோகம்தான், இங்கே பலர் தங்கள் தனித்தனி விருப்பங்களை நிறைவேற்ற முயல்வதாக உணரவைத்து, உங்களை இப்படி ஒரு குழப்பத்தில் ஆழ்த்தியது.

இரண்டாவது பிரச்சணை நீங்கள் இரண்டு வேறு வேறு தேவை இருப்பதாக உணர்ந்தவர் இரண்டையும் ஒரு தடவை உங்கள் வரவிலக்கணத்தில் இங்கே போட்டிருந்தீர்களாயின் உங்கள் நினைவுகளை மற்றவர்கள் அநுமானிக்க வேண்டியதேவை வராது. உங்கள் கருத்துக்கு கருத்தெழுதும் ஒருவர் தாயகமக்களின் தேவை தாயகசுதந்திரமாய் இருக்க, புலம் பெயர் மக்கள் இற்றை வரைக்கும் தாயக சுதந்திரமல்லாத வேறு ஒன்றுக்காக போராடி வந்திருக்கிறர்கள் என்று நீங்கள் கூறுவதாக வைத்து கொள்ள வேண்டி வரும். இந்த அபத்தமான அநுமானத்தை உண்மைப்படுத்த வேண்டுமாயின் ஒன்று: தயக மக்கள் சணக்கியம் நிறைந்த குலம், சுதந்திரத்திற்கு போராடுகிறது, ஆனால் முட்டாள் தனமான புலம் பெயர்குலம் வேறு எதற்கோ போராடுகிறார்கள். என்று கொள்ள வேண்டிவரும். இதைபற்றி புலம் பெயர் மக்கள் அதிகமாக அலட்டிகொள்ளவிட்டாலும் இரண்டாவதில் கட்டாயமாக அவர்களை சீண்டும் உங்கள் இயல்பு வெளிக்காட்டப்படும். நீங்கள் கண்டுபிடித்த தேவைகளை எழுத்தில் போடாததின் குழப்பம் இங்கேதான் ஆரம்பிக்கிறது. நீங்கள் காட்டிய உதாரணமாகிய பொலிசில் பிடிபட்டவன் வெளியேற தவிக்கும் காட்சியை வைத்து பார்த்தால் இங்கே சாணக்கிய பேதத்திற்கு இடமில்லை. இது உணர்வு பூர்வமான உதாரணம். தாயக மக்களின் தேவை இதுவரையும் சிங்களப்பிடியிலிருந்து விடுவிக்க முயல்வதாய் இருக்க புலம் பெயர் மக்களின் தேவை வேறாய் இருந்தால் அது நிச்சயம்மாக சுயநலமானதாகத்தான் இருக்க முடியும். அநாவசியமாக புலம் பெயர் மக்கள் எல்லோரையும் கருணா, பிள்ளையான், டக்கிளஸ் மாதிரி சுயநலமிகளாக தாழ்த்தினால் அது அவர்கள் உங்கள் கருத்தை கழித்து வைக்கத்தான் செய்யும். நீங்கள் உங்கள் கருத்தை மட்டும் எல்லோரும் கழித்துவைத்து விடடும் என்று நினைத்து எழுதவில்லை என்பதால் இங்கே நீங்கள் நினைத்ததை எழுத முடியாமல் தவிக்கிறீர்கள் என்று எடுத்து கொள்வதுதான் ஆரோக்கியம்.

அந்த அனுமானத்தை இன்னும் நியாய படுத்துவது நீங்கள் காட்ட முயற்சிக்கும் உதாரணமான. செய்யாத குற்றத்திற்கு பொலிசால் கைது செய்யபடும் அப்பாவியின் நிலை. உங்கள் அனுமானப்படி (குறைந்தது இந்தவிடையத்திலாவது ஒருவருடன் ஒருவர் தொடர்பில்லாத- ஒத்து போகவேண்டிய தேவையில்லாத தாயக, புலம் பெயர் மக்கள்) இருவர், தொடர்பாக ஒரு உதாரணத்தை நீங்கள் எடுத்திருந்தால், அது இருவர் நிலையையும் விளங்கவைக்க வேண்டும். அது ஒருவர் நிலையை பற்றித்தான் பேசுமாயின் அதனால் புலம் பெயர் மக்களின் தேவையை தாயக மக்களின் தேவையுடன் ஒப்பிட இயலாததாகி இந்த இடத்திற்கு பொருத்தமற்றதாக, ஆராய முன்னே கழித்து வைக்கப்பட வேண்டிய உதாரணமாகிவிடும். எனவே உதாரணத்தின் பிழையை இன்னூமொருதடவை மன்னித்து இது இருவரையும் பேதம் பிரித்து காட்டும் என்று வைத்துகொண்டு மேலே சென்றால், ஒருவன் செய்யாத குற்றத்திற்கு பொலிசினால் கைது செய்ய பட்டிருக்கிறான் என்றால் மற்றவனை இயல்பாக பேதம் பிரித்து காட்ட செய்த குற்றத்திற்கு பொலிசால் கைது செய்ய பட்டிருக்கிறான் என்று வைத்து கொள்ள இந்த உதாரணத்தில் முடியாது. பிழையை மேலும் ஒருதடவை மன்னித்து, உதாரணத்தை மேலே கொண்டு செலவதானால், தாயக - புலம் பெயர் மக்களுக்களுக்கிடையில் இருப்பதாக காட்ட கூடிய பேதங்களை விளக்க வந்த உதாரணத்தை அதன் மிக முக்கிய அம்சமான பேதத்தை கழித்துவைத்து விட்டு, தாய மக்களுக்கும் புலம் பெயர் மக்களுக்கும் இடையில் ஒரு பரிவு என்ற புது உறவைப்புகுத்தி மேலே கொண்டு போகலாம். அப்போது புதிய நிலைமை இப்படியிருக்கும்: செய்யாத குற்றத்திற்கு தாயக மகன் கைது செய்யப்பட பரிவு கொண்ட நல்ல உள்ளம் கொணட ஒரு வழிபோக்கன் உதவ வருகிறான். இந்த நல்ல வழிப்போக்கன் தான் அரிசுன்னின் கனவிலும் நினைவிலும் சிம்ம சொர்பனமாக காட்சிதரும் புலம் பெயர் மகன். எது எதுவாக இருந்தாலும், செய்த குற்றத்திற்கோ செய்யாத குற்றத்திற்கோ ஒருவர் பொலிசால் கைது செய்யப்பட்டால் பிணை எடுத்து வெளியே வருவதுதான் ஒரே வழி. அப்போது எதற்கு நினைப்போர் நெஞ்சை நெகிழவைக்கும் பெரிய அடை மொழி “செய்யாத குற்றத்திற்கு” இங்கே வர வேண்டும்? மேலும் இந்த இடத்தில் அரிசுனின் பரம எதிரி, அந்த நல்ல உள்ளம் படைத்த வழிப்போக்கனான புலம் பெயர் மகன், கைதியை பிணை எடுக்க உதவுவதை விட வேறு என்ன முயற்சிகளை எடுக்கலாம்? இந்த உதாரணம் அதற்கு பதிலளிக்க தயாராக இல்லை.

உதாரணம் திரும்பவும் எதையுமே விளங்கவைக்காமல் உடைந்து போவதை தவிர்க்க, இந்த வலிய வந்து உதவ வந்த நல்ல வழிப்போக்கனை பாத்திரமாத்தி பிரச்சனைக்குரிய பொலிசுடன் தர்க்கமாட போகும் ஒரு பேர்வழியாக சித்தரிக்கலாம். ஆனால் இந்த கடைசி நிலை தன்னும் அரிசுன் சொல்லவருவதை சொல்லுமா?

இலங்கை அரசென்ற பொலிஸ்காரன் கைதி குற்றம் செய்யாதவன் என்று ஒத்து கொண்டு வெளியே விடுவதாக கூறி மூன்று முறை சிறைக்கதவைத் திறந்தவன், கைதி பொலிஸ்ரேசனை விட்டு வெளியேற முன்னர் மூன்று முறையும் திரும்பவும் அடைத்து விட்டான். உதவ போன வழிப்போக்கன் பொறுமையிழந்து நீ குற்றம் செய்யாதவனை கைது செய்கிறாய். உன்மீது நான் பொய்கைது குற்றம் சுமத்தி வழக்கு தொடரபோகிறேன் என்று கூறி விட்டு வழக்கறிஞனை கூப்பிடுகிறான். அந்த பொலிஸ்காரனைத் தெரிந்து கொண்டு அங்கே தன்னால் எதுவும் உதவ முடியாதெனவும் தெரிந்து கொண்டு வேடிக்கை மட்டும் பார்க்க வந்த இன்னுமொருவர் அந்த நல்ல வழிப்போகனைப்பார்த்து "வழக்கறிஞன் எதற்கு; கைதி கஸ்டபட்டு எப்படியோ தன்னைத்தான் விடுவித்து கொள்வான்; நீ சும்ம இருய்யா" என்றால் எப்படி?

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

நல்ல தெளிவான விளக்கம் மல்லையூரான்.

"வழக்கறிஞன் எதற்கு; கைதி கஸ்டபட்டு எப்படியோ தன்னைத்தான் விடுவித்து கொள்வான்; நீ சும்ம இருய்யா" என்றால் எப்படி?

நோர்வே உட்பட்ட சிலர் வழக்கறிஞன் என்ற போர்வையில் வந்தும் இன்னும் சிலர் ஆயுதங்களை அள்ளிக்கொடுத்தும் தான் ஒரு இன அழிப்புக்கு துணை போனார்கள்.

இன்று தாயக மக்களின் நிலையை மேம்படுத்த அதே வழக்கறிஞன்தான் தேவைப்படுகிறான். அதை கூட்டமைப்பு தனியாக செய்யமுடியாது. புலம்பெயர் சமூகம் தான் வழிசமைக்க முடியும்.

சோத்துக்கு போராடிய ஒரு இயக்கத்தின் ஆஸ்தான ஆலோசகர், ஒரு முக்கிய தூணின் செயல் இப்படித்தான் இருக்கும் என்பதில் வியப்படைய முடியாது.

ஒரேடியா அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்காமல், ஆடிக்கொருக்க அமாவசைக்கொருக்க விருப்பத்துடன் சுயரூபத்தை வெளிப்படுத்துவது தெரிகிறது.

செய்யாத குற்றத்திற்கு என்னை போலிஸ் பிடித்தால் முதலில் நான் வெளியே வருவதற்கான அலுவல்களைத்தான் பார்ப்பேன், பின்பு தான் நியாயம், நீதி, சூ பண்ணுவது எல்லாம்.

சோத்துக்கு போராடிய ஒரு இயக்கத்தின் ஆஸ்தான ஆலோசகர், ஒரு முக்கிய தூணின் செயல் இப்படித்தான் இருக்கும் என்பதில் வியப்படைய முடியாது.

ஒரேடியா அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்காமல், ஆடிக்கொருக்க அமாவசைக்கொருக்க விருப்பத்துடன் சுயரூபத்தை வெளிப்படுத்துவது தெரிகிறது.

இந்தளவு துணிவு சம்பந்தனுக்கு இருந்தால் பிறகென்ன?. புலிகள் என்றால் துணிந்து கேட்டிருப்பார்கள்.மகித்தவோடு பேசும் போதே 10 சுற்று பேச்சு வார்த்தை நடாத்தி ஒரு முடிவில்லாமல் போய் விட்டது.இனி அமெரிக்கா சொல்லி மகித்த கேட்பதாவது?????

சீனாவின் பிரசன்னத்தை அடுத்து இலங்கையில் தமிழரின் பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு இலங்கையில் காலடி வைக்க அமெரிக்கா முயல்கிறது.புலிகளை அழித்தால் எல்லாம் முடிந்து விடும் என நினைத்த மேற்குலகுக்கும்,இந்தியாவுக்கும் "பிள்ளையார் பிடிக்க குரங்கானது போல்" சீனா திடுதிப்பென இலங்கையில் புகும் என எதிர்பார்க்கவில்லை. இப்போ குறிப்பாக இந்தியா முள் மேல் பட்ட சீலையாக என்ன செய்வது என முழிக்கிறார்கள்.

ஆக தமிழர் பிரச்சனையை வைத்து தமது காய்களை நகர்த்த அமெரிக்கா முயல்கிறது.புலிகளுடனான பேச்சுவார்த்தையில் நடுநிலைமை வகிப்பதாக கூறிய அமெரிக்கா புலிகளை அமெரிக்காவுக்குள் நுழைய விடாமல் பண்னியது, கனேடிய மாணவர்களை புலிகளுக்கு ஆயுதம் வாங்கியதாக குற்றம் சாட்டி பல காலம் அவர்களை சிறையில் தள்ளியது (அமெரிக்க உளவு துறையின் தாற்பரியங்கள்), ஆனையிறவை புலிகளால் அழிக்க முடியாது என தமிழ் மக்களுக்கு சொன்னவர்கள்,இலங்கை அரசுக்கு இராணுவ ஆலோசனைகளை வழங்கியவர்கள்,வன்னியில் நடந்த போரில் புலிகளை காப்பாற்ற வேண்டாம் தமிழ் மக்களையாவது காப்ப்பாற்ற உலக வல்லரசு என இருந்து காப்பாற்ற முற்படாதவர்கள் இப்போ திடீரென தமிழர் மேல் கரிசனை உடையவர்களாக மாறினார்கள்.நிச்சயமாக சுயநலம் தான்.

நுணாவிலன் அவர்களே! என்னுடைய கருத்தை பொறுமையாக இரண்டு தடவைகள் மீண்டும் வாசியுங்கள். நான் அழுத்திக் கூறவருவது என்னவென்று தெரியும். இங்கு பிற நாடுகளின் சுயநலம், அவர்களின் தமிழர் அக்கறை பற்றிக் கதைக்கவில்லை. அவர்கள் மேல் நம்பிக்கை வை என்றும் சொல்ல வரவில்லை.

40 வருடங்களாக அரசியலில் எதையுமே சாதிக்க லாயக்கற்றவர்கள் கடந்தகாலம் போல் ராஜதந்திரம் என்ற போர்வையில், மதிமயங்கி தமிழினத்தை அழித்தவர்களுக்கு, தமிழின அழிப்புக்கு துணைபோகாது இருக்க சில அரசியல் அரிவரிப் பாடங்களை குறிப்பிட்டுள்ளேன்.

சம்பந்தர் வைக்கும் தீர்வு என்ன ?

புலம் பெயர்ந்தவர் வைக்கும் தீர்வு என்ன ? இரண்டும் ஒன்றா ?

புலம்பெயர்நதவர்கள் சொல் கேட்டு தானும் அழிந்து,இயக்கத்தையும் அழித்து நாப்பதினாயிரம் அப்பாவிகளையும் பலி கொடுத்தது சம்பந்தருக்கு தெரியும் .

கூட்டமைப்பின் உசுப்பேத்தல் தான் பல வருடங்களுக்கு முன்பு தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தது.(இரத்தப்பொட்டாம்.கேள்விப்பட்டிருப்பீர்கள்)

நுணாவிலன் அவர்களே! என்னுடைய கருத்தை பொறுமையாக இரண்டு தடவைகள் மீண்டும் வாசியுங்கள். நான் அழுத்திக் கூறவருவது என்னவென்று தெரியும். இங்கு பிற நாடுகளின் சுயநலம், அவர்களின் தமிழர் அக்கறை பற்றிக் கதைக்கவில்லை. அவர்கள் மேல் நம்பிக்கை வை என்றும் சொல்ல வரவில்லை.

40 வருடங்களாக அரசியலில் எதையுமே சாதிக்க லாயக்கற்றவர்கள் கடந்தகாலம் போல் ராஜதந்திரம் என்ற போர்வையில், மதிமயங்கி தமிழினத்தை அழித்தவர்களுக்கு, தமிழின அழிப்புக்கு துணைபோகாது இருக்க சில அரசியல் அரிவரிப் பாடங்களை குறிப்பிட்டுள்ளேன்.

நல்லது. உங்களின் கருத்தை நான் நிராகரிக்கவில்லை.உங்கள் கருத்தோடு சில எனது கருத்துக்களையும் அடுக்கினேன். அவ்வளவு தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.