Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபத் திருநாள் - தீபாவளி

Featured Replies

தீபத் திருநாள் - தீபாவளி

எல்லோருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Happy-Diwali.gif

தீபாவளி ஒரு முன்னோட்டம்.

தீபம் என்றால் ஒளிவிளக்கு, ஆவளி என்றால் வரிசை.வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே 'தீபாவளி". தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளியைப் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகிறது,

1. கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி கொண்டாடுவதாக கூறப்படுகின்றது.

2. இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.

3. பசு நெய்க்கு மாற்றாக, ஆமணக்கு விதையை விளக்கெறிக்க பெளத்தர்கள் கண்டுகொண்டு அதனை பயன்படுத்த தொடங்கிய நாளே தீபாவளி என்றும் சொல்லுவார்கள்.

4. சமண மதத்தில் கடைசியாக வந்த, 23 ஆம் திருத்தங்கர் "மகாவீரர்" நிர்வானம் (முக்தி) அடைந்த நாளே தீபாவளியாகக் கொண்டாடப் படுவதாக சமணர்கள் கருதுகின்றனர்.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் "புனித நீராடல்" என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம்,அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணையில் லட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும்,குங்குமத்தில் கெளரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதேயாகும்.

எல்லா நதிகள்,ஏரிகள்,குளங்கள்,கிணறுகளிலும்,நீர்நிலைகளிலும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம்.அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா? " என்று கேட்கிறோம்.

Diwali013.jpg

... சுட்டதில் ...

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

திராவிடர்களே... தீபாவளி கொண்டாடுங்கள்...

நமது ஆத்திக நண்பர் கேட்டார். "திராவிடனாகிய நான் தீபாவளி கொண்டாடலாமா."

"ஏன் திடீர்ன்னு இப்படி ஒரு கேள்வி. உங்களுக்கு விருப்பம் இருந்தா கொண்டாடலாம். விரும்புபவர்கள் தீபாவளி கொண்டாடலாம்.

அதை எவராலும் தடுக்க இயலாது " என்றோம். "பல வருஷங்களா தீபாவளி கொண்டாடிட்டு வர்ற என்னை - உங்க பகுத்தறிவு இப்ப ரெம்ப குழப்புது. குழப்பறது தான் பகுத்தறிவா?" என்று கேட்டார்.

"இப்போதாவது குழப்பமில்லாமல் கேள்வி கேட்டீர்களே. நடுநிலையோட, உண்மையாக எழுதும் எந்த விஷயமும் குழப்பாது. பாதிக்கு பாதி தான் சிந்திப்பேன்னு அடம் பிடிக்கிற பகுத்தறிவின் படைப்புகள், உங்களை குழப்பத்தான் செய்யும். உங்களுக்கு என்ன தெரியணும்" என்று கேட்டோம். அவர் சொன்னார். "பல கருத்துகளை மையமாக வைத்து - தீபாவளியை பகிஷ்கரிக்க அவர்கள் சொன்னாலும் - நான் மூன்றே மூன்று கேள்விகளை - அவர்களின் கருத்துகளை மையமாக வைத்து கேட்கிறேன்" என்றார்.

"அதாவது ஒரு பானை சோற்றுக்கு மூணு சோறு பதம் பார்க்கிறிங்களா. பாருங்க. உங்களை குழப்பும் கேள்வியை கேளுங்க" என்றோம். "திராவிடர்களை கொன்று, ஆரியர்கள் திராவிட இனத்தை வென்றதை தான் தீபாவளியாக கொண்டாடுகிறார்களாம். அதனால் திராவிடர்கள் தீபாவளி கொண்டாடக் கூடாது" என்கிறார்களே. அது சரியா" என்று கேட்டார். "அவர்கள் சொன்னதை முழுமையாக சொல்லுங்கள். மானமுள்ள திராவிடர்கள் தீபாவளி கொண்டாடக்கூடாதுன்னு சொன்னாங்க. அப்படி தானே" என்று கேட்டோம்.

"ஆமாம். அப்படி தான்" என்றார் ஆத்திக நண்பர். "திராவிடர்கள் - தீபாவளி கொண்டாடலாம்ன்னு நாம் தரும் பதில்களிலேயே சில கேள்விகள் வைக்கிறோம். அதற்கு உங்களின் வேறு பகுத்தறிவு தோழர்கள் - சரியாக, நேர்மையாக பதில் தந்துட்டா தீபாவளி கொண்டாடாதீங்க. அவர்கள் நேர்மையாக பதில் தராமல், தருபவையும் திருப்தியில்லாமல் இருந்தால், நாம் சொல்வது தான் சரி என்று தோன்றினால் - தீபாவளி கொண்டாடுங்க" என்றோம். "சரி. என்ன கேள்வி கேட்டீங்க"

"திராவிடர்களை கொன்று, ஆரியர்கள் திராவிட இனத்தை வென்றதை தான் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். அதனால் திராவிடர்கள் தீபாவளி கொண்டாடக் கூடாது"

"உலகத்தில் இந்து மதத்தை தவிர வேறு மதங்கள் எல்லாம் பழமையானதா என்ன. பூமிப்பந்து உருவான நாளில் இருந்து இருப்பதா? இல்லையே. இன்றைக்கிருக்கிற எந்த மதத்தின் வயதும் இரண்டாயிரத்தி ஐநூறை தாண்டவில்லை. அப்படி என்றால் அதற்கு முன் எந்தெந்த மதங்கள் இருந்தது. இப்போது இருக்கிற மதங்கள் எப்படி வந்தது. ஏற்கனவே இருக்கின்ற ஒரு மதத்தை அழித்து தான் இன்னொரு மதம் உருவானது. அதை அழிவு என்று சொல்லாமல் வேறு வேறு பெயர் சொல்கிறார்கள். நீங்க வரலாறு படித்தவர். பீரங்கி முனையிலும், வாள் முனையிலும் பரப்பப்பட்ட மதத்தை பின்பற்றுபவர்களின் மூதாதையர்கள் துப்பாக்கிகளாலும், வாள்களாலும் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளாக தானே இருப்பார்கள்.

அவர்கள் இன்று, தாங்கள் இருக்கிற மத பண்டிகைகளை தானே கொண்டாடுகிறார்கள். அவர்களிடம் பகுத்தறிவு பிரச்சாரம் எடுபடுமா? அவர்களுக்கு இன்று இருக்கிற மதம் மகிழ்ச்சியை, மனநிம்மதியை தருகிறது. அவ்வளவே. ஆரியம், போரிட்டு அழித்ததாக சொல்லப்படுவதெல்லாம் அனுமானம். அதன் அடிப்படையில் இட்டுக்கட்டு எழுதப்பட்டவை. அவரவர் விரும்பும் மதங்களை ஏற்று கொள்ளும் சுதந்திரம் இருக்கும்போது, "தடுப்பதற்கு இவர்கள் யார்" "

"அதே நேரம் அவர்கள் சொன்னது உண்மை என்று வைத்து கொண்டும் - நாம் இந்த கேள்வி கேட்டால் அதற்கு, அவர்களின் பதில் என்ன. "நாத்திகத்துக்கு பிடித்த மதமான பௌத்ததின் பயங்கரவாதம் - எம் தமிழ் சமூகத்தை ஈழத்தில் கொன்று குவித்தது. இன்னமும் தம் மதவெறி தணியாமல் - தமிழர்களின் கலாச்சாரத்தை அழித்து -பௌத்தத்தை விதைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை அதை கண்டிக்க துப்பு இல்லாமல் பௌத்தத்தை போல ஒரு சிறந்த மதமுண்டா என்று கொஞ்சமும் வெட்கம், சூடு சொரணை என்று எதுவுமில்லாமல் புளுகுகிறார்கள்.

நல்ல மதம் எப்படி படுகொலைகள் செய்யும். கண்ணுக்கு முன்னால் தன் இனத்தை அழித்த ஒரு மதத்தை கண்டிக்க துப்பு இல்லை. கண்ணுக்கு தெரியாத காலத்தில் நடந்ததை ஆதாரமாக சொல்லுவார்களாம். வேடிக்கையாக இல்லை. இவர்கள் பௌத்தத்தை ஆதரிப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள். தன்னை அழித்த, தன்னை மானப்பங்கப்படுத்திய, தன்னை சூறையாடிய பௌத்தத்தை வணங்க சொல்கிறார்களா? மானமுள்ள திராவிடனாக நீங்கள் இருந்தால், எம்தமிழ் உறவுகளை கொன்ற மதத்தை புகழாதீர்கள். பௌத்த பயங்கரவாதத்தால் இறந்து - தெய்வமான எம் தலைவர் பிரபாகரன் உங்களை மன்னிக்க மாட்டார்"

"நீங்க சொல்றது சரி. ஆனால் அதை அவர்கள் பௌத்த பயங்கரவாதமா பார்க்கவில்லையே. சிங்கள பயங்கரவாதமா தான் பார்க்கிறார்கள்" "

diwali-tamil-sarugu.jpg

அது தான் பகுத்தறிவின் சகுனித்தனம். ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் ராஜபக்சே தன் சிலைகளையா வைக்கிறான் அல்லது ஜெயவர்த்தனாவுக்கு கோவில் கட்டுகிறான்களா? புத்த சிலையை தானே வைக்கிறான். விகாரைகள் தானே உருவாக்கப்படுகிறது. மேலதிக பௌத்த பயங்கவாதத்தை பற்றி வாசிக்க இங்கே போங்க"

"அப்ப நீங்க என்ன சொல்ல வர்றிங்க. இப்போ தமிழர்களை கொன்று குவிக்கிற பௌத்தத்தை ஆதரிக்கிற அசிங்கத்தை முதலில் தூக்கி போடு. அப்புறம் ஆராய்ச்சி பண்ணலாம், பேசலாம். ஆரியம் கொன்ற திராவிடர்களை பற்றி ன்னு சொல்றிங்க. அப்படி தானே"

"ஆமா. உலகத்தில் தானா தோன்றின மதம் ஏதும் இல்லை. யாவும் தோற்றுவிக்கப்பட்டது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது மதங்களுக்கும் பொருந்தும். வீணா ஒவ்வொரு மத நம்பிக்கையாளர்களிடமும் போய் "அதை அழிச்சு இது வந்தது, இதை அழிச்சு அது வந்ததுன்னு சொல்ல வேண்டாம். நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்க வேண்டாம்."

"நீங்க சொல்வது சரி தான். ஒன்றின் அழிவில் தான் இன்னொன்று என்பது எதற்கு பொருந்துதோ இல்லையோ மதங்களுக்கு பொருந்தும். அதே நேரம், இதே மாதிரியான ஆராய்ச்சியை பிற மதங்களிடம் செய்வதில்லையே - நாத்திகம்"

"அதுக்கு தைரியம் வேணும். எல்லா மதத்தையும் ஒரே மாதிரி பார்க்கிற அறிவு வேணும். ரெண்டும் இல்லாதவங்க சொல்றது எப்படி உண்மையாகும். நமது இந்த பதில் திருப்தியாக இருந்தால் அடுத்த கேள்வி கேளுங்க" "கேட்கிறோம். தீபாவளி பண்டிகை தமிழன் பண்டிகை இல்லை. திருமலை நாயக்கர் கொண்டு வந்தது. அதனால் கொண்டாடக்கூடாதுன்னு சொல்றாங்களே"

"முதல்ல என்ன சொன்னாங்க. திராவிடர்களை ஆரியர்கள் கொன்றார்கள். அதனால் தீபாவளி வேண்டாம் என்றார்கள். இப்போது திராவிடர்கள் என்பதை மாற்றி தமிழர்கள் என்கிறார்கள். அதற்குள் திராவிடம் எங்கே? செத்து போனதா? இங்கே தான் பகுத்தறிவின் நரித்தனம் இருக்கு. திராவிடம், திராவிடம்ன்னு பேசுறாங்களே. திருமலை நாயக்கர் யாரு. திராவிட நாட்டின் ஒரு பகுதியான ஆந்திர மாநிலத்தவர் தானே. திராவிடன் மூலம் வந்த பண்டிகையை கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கக்கூடும். ஆங்கில புத்தாண்டு ஆங்கிலேயர் மூலம் வந்தது. அதனால ஆங்கில புத்தாண்டை கொண்டாடக்கூடாதுன்னு - பகுத்தறிவு சொன்னதா?

இன்னும் சொல்லப்போனா வெள்ளைக்காரனே ஆளட்டும்ன்னு வெள்ளைக்காரனுக்கு ஜால்ரா அடித்த பகுத்தறிவு அடிமைகளா - தீபாவளி பண்டிகை நாயக்கர் கொண்டு வந்தது. அதனால் கொண்டாடக்கூடாதுன்னு சொல்றது. திராவிட அரசர் திருமலை கொண்டு வந்ததை திராவிடர்கள் கொண்டாடிட்டு போறாங்க. உங்களுக்கென்ன வந்தது. தமிழர்களின் பண்டிகை பொங்கல் மட்டுமே. அதே நேரம் பல்வேறு மதங்களுக்கும் பல விதமான பண்டிகைகள் உண்டு. ஒவ்வொரு மதத்தவரிடமும் போய் - இது திருமலை நாயக்கர் கொண்டு வந்தது. அதனால் கொண்டாடதீங்க. இது வெள்ளைக்காரனால் கொண்டு வந்தது. அதனால் கொண்டாடதீங்க. இது பாபரால் கொண்டு வந்தது. அதனால் கொண்டாடதீங்கன்னு சொல்வீங்களா - சொன்னா அது, மதசார்ப்பின்மைக்கு வைக்கிற வேட்டுங்கிற அடிப்படை அறிவு கூட பகுத்தறிவுக்கு இல்லன்னு தானே அர்த்தம். என் பதில் சரிதானா?".

"சரி. ரெம்ப திருப்தியா இருக்கு. மூணு கேள்வி கேட்கலாம்னு வந்தா பேச பேச நிறைய கேட்கலாம்னு தோணுது"

"பதிவு பெரிசாயிடும். இன்னொரு சமயம் பார்த்து கொள்ளலாம். ஒரே ஒரு கேள்வி மட்டும் கேளுங்க."

"இந்துக்கள் கொண்டாடுற ஏதாவது ஒரு பண்டிகையை சுட்டிகாட்டி- அதை சமணர்கள் கொண்டாடுகிறார்களா? சீக்கியர்கள் கொண்டாடுகிறார்களா?ன்னு கேட்கிறார்களே. அது சரியா?"

"அவர்களின் வாதமே முட்டாள்தனமாக இல்லை. உங்க மகன் மட்டும் தானே உங்களை அப்பா ன்னு கூப்பிடுவான். அடுத்த வீட்டு பையன் ஏன் கூப்பிடவில்லை என்று கேட்பீங்களா? உங்கள் தேர்வை நீங்கள் தானே எழுத முடியும். ஏன் அடுத்தவன் எழுதக்கூடாதான்னு கேட்பீர்களா. பெரியாரை நீங்க தந்தைன்னு கூப்பிடறதாலே கூப்பிட விரும்பாதவனும் கூப்பிடமுடியுமா? அவன் காந்தியை தேசத்தந்தைங்கிறான். நீங்க சொல்வீங்களா மகாத்மாவை தேசத்தந்தைன்னு. விரும்புகிறவர் கொண்டாடுகிறார். விரும்பாதவர் வேற வேலை பார்க்க வேண்டியது தானே. பெரியார் சிலைக்கு ஒரு சாரார் தானே மாலை போடுகிறார்கள். போட விரும்பாதவர்கள், " நான் மாலை போடாதபோது நீ எப்படி போடலாம் "என்று கேட்டால் அது அநீதி. அவரவர்களுக்கு பிடித்ததை அவரவர்கள் செய்கிறார்கள். ஒவ்வொரு மதத்தவரிடமும் போய், "இந்த பண்டிகையை அந்த மதத்தவர் கொண்டாடலேயே. அந்த பண்டிகையை இந்த மதத்தவர் கொண்டாடலயே"என்று முட்டாள்தனமாக கேட்காதீர்கள். வாங்கி கட்டிக் கொள்ளாதீர்கள்"

"மிகச்சரி. பூமியை பாயாக சுருட்டமுடியுமானு நக்கல் பண்றாங்க. புராணகதைகள் எல்லா மதத்திலும் உண்டு. ஆனா பயந்தாங்கொள்ளி பகுத்தறிவு எங்களை மட்டுமே விமர்சிக்குது. இதுல இருந்தே அவர்களின் நேர்மை விளங்குது. பண்டிகைகளுக்கு ஏழைகளால் செலவு பண்ண முடியல. அதனால் பண்டிகை தேவை இல்லை"ன்னு சொல்றாங்களே. சரியா"

"அதெப்படி சரியாகும். பாதிக்குபாதி சிந்திக்கிற பகுத்தறிவு சொல்வது எப்படி சரியாகும். உயிரோட இருப்பதனால் தானே உனக்கு சோறு வேண்டி இருக்கிறது. கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. உழைக்க வேண்டி இருக்கிறது. அதனால் நீ செத்து விடு என்று யாரும் யாரையாவது பார்த்து கேட்க முடியுமா?அப்படி ஒருவன் கேட்டால் - அவனை என்னவென்று சொல்வீர்கள்"

"முட்டாள் என்பேன். பண்டிகைகள் உழைத்து நாலு காசு சேர்க்க வேண்டும்" என்கிற உத்வேகத்தை கொடுத்தால் அதனால் தப்பென்ன இருக்கக்கூடும். முன்பே ஒரு முறை சொன்னீங்களே. இப்ப பண்டிகை வேணாங்கிற மாதிரி ஒரு சமயம் கல்யாணம் வேணாம்னார் பெரும்புள்ளி. கல்யாணம் பண்ணினா குழந்தை பிறக்கும். பிறகு சம்பாதிக்கணும். எப்படியாவது சம்பாதிக்க தோணும். அதுக்கு ஊழல் பண்ண தோன்றும். அப்புறம் திகார் சிறைக்கு போகணும். அந்த இம்சைக்கு தான் கல்யாணம் வேணாம்னார்.. இப்ப பண்டிகையும் வேணாங்கிறார். கல்யாணம் பண்ணினா ஜெயிலுக்கு போவான். பண்டிகை கொண்டாடினா கடன்காரன் ஆவான் என்பது அவர்களின் பகுத்தறிவு போலும். இது ஒரு விதமான மூடநம்பிக்கை தானே" " என்றார் நண்பர். "உண்மை தான். புரிந்து கொண்டீர்கள். எப்போதும் சொல்வதையே இப்போதும் சொல்கிறேன். தீபாவளி தவறு என்றால் எல்லாமே தவறு தான். ஆனால் நம் பகுத்தறிவு எல்லாவற்றிலும் - அநியாத்தை, ஊழலை, குண்டு வெடிப்பை என்று எதையும் தட்டி கேட்க நேரும்போது - முதலில் குலம், கோத்ரம், சாதி, மதம் பார்க்கும். அதே வேலையை தான் பண்டிகைகளை விமர்சிப்பதிலும் பாதிக்கு பாதி சிந்திக்கிற பகுத்தறிவு செய்துள்ளது. இதை புரிந்து கொள்ளாமல் நீங்களும்..." என்று இழுத்தோம்.

"முட்டாள்தனமா வந்து கேள்வி கேட்கறேனா? நா இப்ப தெளிவா இருக்கேன். அப்ப கிளம்பறேன்" என்றார். "எங்க"

"தீபாவளி டிரஸ் வாங்க தான். யார் யார் பேச்சையோ கேட்டு குழந்தைகளுக்கு கூட புதுத்துணி எடுக்கல. புது உடை அணிந்ததும் மழலைகள் அடைகிற மகிழ்ச்சி-அதை பார்க்கும் போது நமக்கு ஏற்படுகிற சந்தோஷம்-பகுத்தறிவு பங்காளிகளின் முறைகேடு தொகை 1,73,000 ஆயிரம் கோடி கிடைச்சாலும் கிடைக்காதே. என்றைக்கு மதங்களை பாரபட்சம் இன்றி விமர்சிக்க பகுத்தறிவு பழகுதோ-அப்ப சொல்லட்டும் தீபாவளி கொண்டாடாதேன்னு"என்றார்

"மிக சரியாக சொல்லிட்டீங்க" என்றோம்.

http://oosssai.blogspot.com/2011/10/blog-post_24.html

  • கருத்துக்கள உறவுகள்

தன்மீது நம்பிக்கை வைத்த பக்தர்களைக் கைவிடாமல் அவர்களின் துயர்துடைக்க

ஆண்டவன் அசுரனைக் கொன்ற தினம்.

மக்களுக்கு ஒளிவீசிய நாள்

எல்லோருக்கும் தீபாவளித் திரு நாள் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

007.jpg

தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

87 ல் தீபாவளியின் போது இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களின் உடலங்கள் எரிக்கப்பட்ட போது அந்தப்பிண வாசனையுடன் பொழுதினைப் போக்கினேன். 90 ம் ஆண்டு தீபாவளியின் போது பதுங்கு குழியில் முழு நாளும் இருந்து பொழுதினைப் போக்கினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் ஒளிமயம் பெருகட்டும் – தீபாவளி சிறப்புக் கட்டுரை

October 26th, 2011 10:52 AM0 Comments

deepavali-140x140.jpg

உலகெங்கும் வாழும் இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். தீபாவளி பண்டிகை தொடர்பான சிறப்புக் கட்டுரை இங்கே உங்களுக்காக தரப்படுகிறது.

தீபாவளி என்பதனை தீபம் + ஆவளி =தீபாவளி என பிரித்து பார்க்கலாம். இதன் படி தீபம் என்பது ஒளியையும் ஆவளி என்பது அணிவரிசையையும் குறிக்கும்.

எனவே தீபாவளி என்பது விளக்கை வரிசையாக ஏற்றி வைத்து இருளை நீக்கி தீப ஒளியை எங்கும் பரவச் செய்வது என பொருட்படும்.

ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முன்தினம் தீபாவளி தினம் கொண்டாடப்படகிறது.

இந்துக்கள் ஏனைய எந்தவொரு நற்காரிய தினத்தன்று அல்லது விசேட தினங்களில் தலையில் எண்ணெய் தேய்த்து நீராட மாட்டார்கள்.

ஆனால் தீபாவளி தினத்தன்று மட்டும் தலைக்கு எண்ணெய் தேய்த்து நீராடுவர். தீபாவளியன்று நீரில் கங்கையும், எண்ணெயில் மகாலட்சுமியும் குடியிருப்பதாக நம்பப்படுகிறது.

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் கங்கை மற்றும் லட்சுமியின் அனுக்கிரகத்தைப் பெறமுடியும் என நம்புகின்றனர்.

இதனால் தான் தீபாவளியன்று மேற்கொள்ளும் எண்ணெய்க் குளியலை கங்கா ஸ்நானம் என இந்துக்கள் அழைக்கின்றனர்.

deepavali.jpg

தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள் பற்றி பல புராணக் கதைகள் உள்ளன. மக்களுக்கு கொடுமை செய்த நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நாள் தீபாவளி என்பர்.

இராமர் வனவாசத்தின் பின்னர் அளோத்தியை சென்றடைந்த தினமாக தீபாவளியை கொண்டாடுவதாகவும் ஒரு காரணம் கூறப்படுகின்றது.

சக்தியின் கேதார கௌரி விரதம் மடிவுற்று சிவன் சக்திக்கு தனது உடலின் அரைவாசிப் பகுதியை கொடுத்து அரத்த நாரீஸ்வர வடிவம் எடுத்ததும் தீபாவளி அன்றே.

இந்துக்கள் மட்டுமன்றி ஜெயின் மதத்தவர்களும், சீக்கியர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

http://www.vanakkamnet.com/deepavali-wis/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.