Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைகளில் பைகளை தூக்கி வரவில்லை, இரு கைகளையும் தூக்கி வந்தவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி, ஸ்ரீலங்கா: வன்னியில் யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையிலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் கடும் நெருக்கடிக்குள் வாழ்ந்துவந்த இந்த மக்கள், இப்போதும் நெருக்கடிக்குள்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது.

அவர்களின் தலைக்கு மேலால் சீறிக்கொண்டு செல்லும் மோட்டார் ஷெல்களின் சத்தமும், 100 மீட்டர் தொலைவில் விழுந்து வெடிக்கும் குண்டுகளின் வெளிச்சமும் இப்போது இல்லைதான். ஆனால், வேறு விதமான நெருக்கடிகளுக்கு அவர்கள் இப்போது முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

யுத்தத்தில் அனைத்தையும் தொலைத்துவிட்டு பூச்சியத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய நெருக்கடி இது.

20111104-VIRU-3.jpg

அன்பு இல்லம் வாயிலில்..

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு என்ன தேவைகள் உள்ளன? இந்தக் கேள்விக்கு இரண்டு வெவ்வேறான பதில்கள் உள்ளன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் ஒரு பதில் உள்ளது. யுத்தம் நடந்த இடத்திலிருந்து பல்லாயிரக்கணக்காக கி.மீ. தொலைவில் வெளிநாடுகளில் ஒரு பதில் உண்டு.

வெளிநாடுகளில் போய், “யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு என்ன தேவை?” என்று கேட்டால், “இவர்களுக்கு தேவை, அரசியலமைப்புச் சட்டத்தில் தன்னாட்சி அதிகாரமும், சுயநிர்ணய உரிமையும்” என்று படுசீரியசாகக் கூறுவார்கள்.

நேரடியாக இவர்களிடம் போய், “உங்களுக்கு என்ன தேவை?” என்று கேட்டால், “அன்றாட வாழ்க்கையை நடாத்த தேவையான பொருட்களும், குடும்பத்தைக் காப்பாற்ற வேலை வாய்ப்பும்” என்பார்கள்.

இதுதான் ரியாலிட்டி.

யுத்தம் நடைபெற்றபோது, மன்னார் மாவட்டத்தில் இருந்து ஓடத் தொடங்கி, அங்கிருந்து கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடி, முள்ளிவாய்க்காலில் இரண்டாவது பிறவி பெற்றவர்கள் இவர்கள்.

யுத்தத்துக்கு முன், இவர்களிடமும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் இருந்தன. அதற்கு மேலதிகமாகவும் இருந்தது. காரணம், வன்னி மக்கள் கடும் உழைப்பாளிகள்.

20111104-VIRU-5.jpg

அன்பு இல்லத்தில் உள்ள சிறுவர்களில் ஒரு பகுதி

யுத்தம் தொடங்கி முதல் முதலாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டி வந்தபோது, ஒவ்வொரு குடும்பத்தின் பொருட்களையும் எடுத்துச் செல்ல ஒவ்வொரு ட்ராக்டர் தேவைப்பட்டது.

ஆனால், இரண்டாவது இடத்தைவிட்டு இடம்பெயரும்போது, ஒரு ஆட்டோ போதுமானதாக இருந்தது. மூன்றாவது இடத்திலிருந்து இடம்பெயரும் போது சைக்கிளில் ஏற்றிச் செல்லும் அளவில்தான் பொருட்கள் இருந்தன. முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிந்தபின் வெளியே வந்தபோது, சரணடைய தூக்கிக்கொண்டு வர இரு கைகள்தான் இருந்தன. வெறும் கைகள்! Empty Hands!!

இப்படி வெறும் கையோடு இரண்டு வருடங்களுக்குமுன் வந்தவர்களில் பலர் இப்போது சொந்த முயற்சிகளில் ஓரளவுக்கு வாழக்கூடிய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம், குடும்பங்களில் குடும்பத் தலைவராலோ அல்லது தலைவியாலோ முன்புபோல இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது பாடுபட்டு உழைக்க முடிகிறது. ஒரு நேரமாவது உணவு உண்ண முடிகிறது. அவர்களை விடுங்கள். யுத்தத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளைின் கதியை யோசித்துப் பாருங்கள். இவர்கள் நிலைமைதான் மோசமாக உள்ளது. வன்னிப் பகுதியில் இப்படியானவர்களுக்காக ஓரிரு இடங்களில் தனியார் உதவிகளில் இயங்கும் சில இல்லங்கள் உள்ளன.

20111104-VIRU-2.jpg

மெல்பேர்னில் நடைபெற்ற கூட்டத்தில்..

யுத்தம் நடைபெற்ற வன்னியில் உள்ள முத்தையன்கட்டு (முல்லைத்தீவு மாவட்டம்) கிராமத்தில் இயங்கும் குழந்தைகள் காப்பகத்தின் பெயர் அன்பு இல்லம். சுமார் 45 குழந்தைகளுக்கு புகலிடம் அளித்திருக்கிறார்கள் இவர்கள். குழந்தைகளுக்கான தங்குமிடம், உணவு, உடைகள் என்று தொடங்கி, பள்ளிப் படிப்புக்காக அருகிலுள்ள பாடசாலைக்கு அனுப்புவதுவரை அன்பு இல்லத்தால் செய்யப்படுகின்றது.

அன்பு இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகள், வன்னி யுத்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள். யுத்தம் நடந்தபோது, யுத்தம் நடைபெற்ற இடங்களில் இருந்தவர்கள். வன்னி யுத்தத்தின்போது வந்து வீழ்ந்த எறிகணைகளுக்கு மத்தியில் அதிஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள். ஆனால், அதற்காக இவர்களை ஒரேயடியாக அதிஷ்டசாலிகள் என்று சொல்ல முடியாது. காரணம், இவர்கள் உயிர் தப்பினாலும், கண்ணெதிரே பெற்றோர்களும், குடும்பத்தவரும் கொல்லப்பட்டு வீழ்ந்ததைப் பார்த்த துரதிஷ்டசாலிகளும் இவர்கள்தான்.

வன்னியில் நடைபெற்ற யுத்தத்தை நடாத்துவதற்கு தேவையான பணத்தின் பெரும்பகுதி வந்தது வெளிநாடுகளில் இருந்துதான். ஒருவிதத்தில் சொன்னால், வெளிநாட்டுப் பணத்தில், இலங்கைக்குள் நடாத்தப்பட்ட யுத்தம் என்று அதைச் சொல்லலாம். அங்கு வெடிக்கப்பட்ட ஒவ்வொரு வெடிகுண்டிலும், ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு அழிவிலும், இழக்கப்பட்ட ஒவ்வொரு உயிரிலும் ஏதோ ஒரு வகையில் வெளிநாட்டில் இருந்து வந்த பணம் பெரிய சதவீதத்தில் இருந்தது.

20111104-VIRU-4.jpg

கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் ஒரு பகுதி

ஆனால், யுத்தத்தால் குடும்பத்தையே தொலைத்துவிட்ட இந்தக் குழந்தைகளை வாழவைப்பதற்கு இதுவரை வெளிநாட்டுப் பணம் ஏதும் பெரிதாக வந்ததில்லை.

யுத்தத்தில் உயிர்களை அழிப்பதற்கு கிடைத்த உற்சாக நிதியுதவிபோல, யுத்தத்தில் தப்பிய உயிர்களை வாழ வைப்பதற்கு நிதியுதவி அதுவரை பெரிதாகக் கிடைத்ததில்லை என்பதுதான் அதிர்ச்சியான சோகம்! யுத்தம் முடிவுக்கு வந்து 2 வருடங்களின்பின் தற்போதுதான் வெளிநாடுகளில் மனிதாபிமானம் மிக்கவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

கடந்தவாரம் (அக்டோபர் 27-ம் தேதி), ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில், இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்துக்கு வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆச்சரியமூட்டும் வகையில் இருந்தது. வன்னி, முத்தையன் கட்டில் குழந்தைகளுக்காக இயங்கும் அன்பு இல்லத்துக்கு உதவி கோருவதற்காக நடாத்தப்பட்ட கூட்டம் அது.

கூட்டத்தில் கலந்துகொண்ட எஸ்.சுந்தரமூர்த்தி, “அன்பு இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்குத் தேவையான உடைகள், கண் பார்வையற்ற குழந்தைகளுக்கு வைட்-ஸ்டிக்குகள், குண்டுவெடிப்புகளில் கால்களை இழந்த குழந்தைகளுக்கு வீல்சேர்கள், மற்றைய குழந்தைகள் பாடசாலை செல்ல சைக்கிள்கள், கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை அனுப்பி வைப்பதற்கான உதவிகளை கூட்டத்துக்கு வந்த பலரும் வழங்கியுள்ளனர்” என்றார்.

20111104-VIRU-6.jpg

அன்பு இல்லத்தில் குழந்தைகள் தங்குமிடம்

“இங்கு (ஆஸ்திரேலியாவில்) வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மாத்திரமின்றி, மனிதாபிமானம் கொண்ட அனைத்து இனத்தவரும் கலந்துகொண்டு உதவிகளை வழங்கியுள்ளனர். ஆஸ்திரேலியர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்கள் என்று மனிதாபிமான உதவி செய்வதற்கு இங்கு யாருக்கும் இனம் ஒரு தடையாக இல்லை” என்றார், கூட்ட ஏற்பாடுகளைச் செய்த இளங்கோ நவரட்ணம்.

அதை அப்படியே ஒப்புக் கொள்கிறார் பீட்டர் ஹாரிஸ். “யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்று அறிந்த பின்னரும், உதவி செய்யாத அளவுக்கு மனிதாபிமானம் அற்றவர்கள் யாரும் இருக்க முடியாது” என்றார் அவர்.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தற்போதுதான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிஜமாக என்ன நடைபெறுகின்றது என்பதைத் தெரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்கள். வெளியே காண்பிக்கப்படும் அரசியல் விவகாரங்களையும் மீறி, உள்ளே லைவ்-வாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கைப் பிரச்சினை பற்றிய தகவல்கள் இப்போதுதான் அதிகம் இவர்களை வந்தடையத் தொடங்கியுள்ளன.

வன்னியில் நடைபெற்ற யுத்தத்தை வைத்து வெளிநாடுகளில் அரசியல் செய்பவர்கள், உலகச் சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆடம்பர விருந்துகளில் கலந்துகொண்டு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன தேவை என்று பிரசங்கம் செய்து கொண்டு இருக்கின்றனர். அந்த மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை இவர்கள் பெற்றுக் கொடுக்கப் போவதாக சூளுரைக்கின்றனர்.

அவர்கள் சொல்லுவதில் உள்ள ஒரேயொரு மெசேஜை எளிமையாகச் சொல்வதென்றால் இவ்வாறு சொல்லலாம் – “கேக் தயாராகும்வரை ரொட்டி சாப்பிட வேண்டாம்!” இவர்களது கேக் தயாரிப்பு, கடந்த 40 ஆண்டுகளாக ஆரம்பக் கட்டத்தையே தாண்டவில்லை. தயாரித்து முடிக்க இன்னமும் எத்தனை வருடங்கள் எடுக்கும் என்று சொல்வதற்கில்லை.

அதற்குமுன், வன்னிக்குள் உயிர்வாழ ரொட்டி கொடுக்கப்படாவிட்டால், கேக் சாப்பிட ஆளிருக்காது!

-மெல்பேர்ன், ஆஸ்திரேலியாவிலிருந்து வெங்கட்ராமன், கிளிநொச்சி, ஸ்ரீலங்காவிலிருந்து லக்ஷ்மன் ஆகியோரின் குறிப்புகளுடன், ரிஷி

நன்றி: விறுவிறுப்பு

அன்பு இல்லத்துடனான தொடர்புகளுக்கு அவர்களது மின்னஞ்சல் முகவரியைத் தந்துதவ முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரை மிக மோசமான உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கொண்டிருக்கிறது.

1. வன்னிப் போர் என்பது புலம்பெயர் மக்களால் நடத்தப்பட்ட ஒன்றல்ல. 2000 கோடி ரூபாக்கு மேல்.. உள்நாட்டு வெளிநாட்டு பணங்கள்.. ஆயுதங்கள் கொண்டு சிறீலங்கா அரசால் நடத்தப்பட்ட ஒன்று.

2. இந்தப் போரில் தமிழர்கள் தங்களை காப்பாற்ற தற்காப்புத் தாக்குதல்களையே மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் மீது பல ஆயிரம் தொன்கள் குண்டுகளைக் கொட்டி உயிர்களையும் உடல்களையும் சொத்துக்களையும் நாசம் செய்தவர்கள் சிங்களவர்களும்.. அவர்களின் அரசும்.. அவர்களுக்கு உதவி நின்ற தமிழ் கூலிக்குழுக்களும்.. இந்தியா.. சீனா.. ரஷ்சியா.. அமெரிக்கா உட்பட்ட பல நாடுகளும்.

3. உண்மையில் வன்னியை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டவர்களே அதற்காக குண்டுகளைக் கொட்டி அதனை அழித்தவர்களே அதனை புனர்நிர்மானம் செய்ய வேண்டிய கடமையைக் கொண்டவர்கள். ஆனால் அவர்களோ தமிழர்களைக் கொண்டே தமிழர்களின் காயங்களுக்கு மருந்து போடக் கங்கணம் கட்டி நிற்பதன் வெளிப்பாடே இந்தக் கட்டுரை.

4. வன்னி மற்றும் வடக்குக் கிழக்கு மாகாணம் எங்கனும் சிங்களம்.. தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தை நிறுத்தி.. பல கொடுமைகளைச் செய்து வருவதோடு மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களில் தொழில் விவசாயம் செய்யக் கூட அனுமதிக்கப்படவில்லை. மீன்பிடி கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. மீன் பிடி உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. மாறாக.. சிங்கள மீனவர்களின் குடியேற்றங்களும்..அவர்களுக்கு வசதியான மீன் பிடி உபகரணங்களும்.. வழங்கப்படுகின்றன. இது போதாது என்று... கொழுத்த வருவாய் தரும் இறால் பண்ணைகளும் சிங்களவர்களால் அமைக்கப்பட்டு வருகின்றன.

5. வன்னி மக்கள் இன்று சிங்களக் குடியேற்றங்களால் தங்கள் சேனைகளை இழந்து நிற்கினறனர். படை முகாம்களுக்காக பயனுள்ள நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.. வளமான நிலங்களை மக்கள் இழந்து நிற்கின்றனர். காணிப்பதிவு என்று மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு.. அரசுடமையாக்கப்படுகின்றன. இவை மக்களின் நிரந்தர வருமானங்களுக்கான வழிமுறைகளை நிரந்தரமாகத் தடுக்கின்றன. அவை பற்றிய எந்தக் கவலையும் இந்தக் கட்டுரையில் வரவில்லை.

6. வன்னியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த தொழில்நுட்பக் கல்லூரிகள்.. படகுக்கட்டுமான தொழிற்சாலைகள்.. மற்றும் தும்புத் தொழிற்சாலைகள்.. என்று எல்லாமே புலிகளின் ஆயுதக் களஞ்சிங்களாக சித்தரிக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டு விட்டன. இவை மக்களின் சொத்துக்கள் என்பதை உணர்ந்த பின்னும் அவற்றை மீளமைத்துக் கொடுக்க சிங்கள அரசோ அதற்கு போர் செய்ய உதவியவர்களோ இன்னும் முன்வந்ததாகத் தெரியவில்லை.

7. வன்னி மக்கள் மட்டுமன்றி வடக்குக் கிழக்கு எங்கனும் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சிங்கள அரசாலும் சர்வதேச சமூகத்தாலும் நிர்க்கதியாக விடப்பட்டுள்ள நிலையில்.. புலம்பெயர் மக்களின் சிறிய அளவிலான அந்தப் பங்களிப்பே அவர்களை இன்று கொஞ்சம் என்றாலும் நிமிர்ந்து நிற்கச் செய்துள்ளது. இந்த விடயங்கள் அப்படியே மறைக்கப்பட்டு.. போர் என்பது ஏதோ தமிழர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது என்பது போலவும்.. தமிழர்கள்.. பட்டினி கிடப்பதால்.. சுயநிர்ணய உரிமை போன்ற அரசியல் உரிமைகளை மறந்துவிட்டு பிழைப்புக்கு வழிபார்ப்பதே நன்று என்பது போலவும்.. இக்கட்டுரை சிங்கள எதிரிகளின் கொள்கை வகுப்புக்களுக்கு பாடம் எடுக்கிறது.

8. இந்தக் கட்டுரை.. மிகவும் விசமத்தனமான பிரச்சாரங்களையும்.. சிங்களப் போர்க்குற்றவாளிகளின் செயற்பாடுகளை மறைத்தும் மறைமுகமாக நியாயப்படுத்தியும் வன்னி மக்களின் துயரின் பெயரால்.. தமிழ் மக்களின் உரிமைகள் பெறப்படுவது மழுங்கட்டிக்கச் செய்யப்படவும்.. மிகவும் திட்டமிட்டு வரையப்பட்டுள்ளது.

9. நான் அறிய பல புலம்பெயர் குடும்பங்கள் தனிப்பட்ட முறையிலும்.. பொது நிறுவனங்களூடும்.. வன்னி மக்களுக்கு மாதாந்த உதவிகளை நல்கி வருகிறார்கள். பலர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பொறுப்பெடுத்து அவர்களுக்குரிய செலவுத் தொகையை அளித்தும் வருகின்றனர். ஆனால் போர் செய்த சிங்கள அரசோ.. தமிழ் மக்களின் அழிவை நியாயப்படுத்தி வருவதோடு.. தமிழ் மக்களின் அரசியல் உரிமையை மறுதலிப்பதுமின்றி.. அவர்களின் பாரம்பரிய இருப்பையே இல்லாமல் செய்ய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவி வருவதோடு.. தமிழ் மக்களுக்காக கிடைத்து வரும் உதவிகளையும் தென்பகுதி சிங்களவர்களின் வளமான வாழ்வுக்கு பயன்படுத்தி வருகிறது.

இதனை எல்லாம் கண்டுக்கவோ.. கண்டிக்கவோ திராணியற்றவர்கள்.. புலம்பெயர் மக்களை நோக்கி கூவுவதன் நோக்கத்தை மக்கள் உணர்ந்து இப்படியான கட்டுரைகளோடு உங்களை நாடி வருபவர்களினூடு.. வன்னிக்கோ.. தாயகத்திற்கோ.. உதவிகளை அளிக்காமல் இருப்பது நன்று. ஏனெனில்.. இவை சிங்கள எதிரிகளின் கைக்கூலிகள் தங்களின் அரசியல் இலாபங்களுக்காக உங்களைப் பாவிக்க போடும் உணர்ச்சி எலும்புத் துண்டுகள். மக்களே.. இவற்றில் மறந்தும்.. மயங்கி ஏமாறாது இருங்கள்.

யாழ் களம்.. இவ்வாறான செய்திகள் இடப்படுவதை கொஞ்சம் ஆராய்ந்து அனுமதிப்பது மக்கள் ஏமாற்றப்படாமல் இருக்க உதவும்.

Edited by nedukkalapoovan

இந்தக் கட்டுரை மிக மோசமான உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கொண்டிருக்கிறது..

மிகவும் உண்மை. இவ்வாறான கட்டுரைகள் ஒரே ஒரு நோக்கத்தை இலக்காக கொண்டன, அதற்கு தாயக மக்களுக்கான உதவி என்பது கவர்ச்சியான முகப்பூச்சு.

யாழ் களம்.. இவ்வாறான செய்திகள் இடப்படுவதை கொஞ்சம் ஆராய்ந்து அனுமதிப்பது மக்கள் ஏமாற்றப்படாமல் இருக்க உதவும்.

இல்லை, கருத்துச்சுதந்திரம் நிலவட்டும். விவாதிப்போம். நாலையும் யாவரும் அறிந்து அவர்களே முடிவுகளை எடுக்கட்டும்.

Edited by akootha

KPயின் பொறுப்பில் உள்ள இந்த இல்லத்திற்கு புலம்பெயர் மக்களின் பணமா? தனது பினாமிகளின் பெயரிலுள்ள முதலீடுகளை பயன்படுத்த வேண்டியது தானே?

கட்டுரையின் நோக்கமே புலம் பெயர்ந்த மக்களை பொறுப்பு கூறுவதாக உள்ளது.

இலங்கையில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கும் பிரித்தானியப் படைத்தரப்பினருக்கும் நிதி திரட்டும் ஈழத்தமிழர்!

பிரித்தானியாவில் புகலிடம் பெற்ற இலங்கைத் தமிழர் ஒருவர் பேர்மிங்ஹாமில் இருந்து இலண்டன் வரை நடைபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் பெற்றோர்களை இழந்த சிறுவர் விடுதி ஒன்றுக்கும், பிரித்தானியப் படைத்தரப்பினருக்கும் உதவி செய்வதே இவரின் நடைபயணத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய படைத்தரப்பினாருக்கான தொண்டு நிறுவனம் ஒன்றுக்கும், செறண்டிப் சிறுவர் விடுதிக்கும் வழங்குவதற்காக 10,000 பவுண்ஸ் நிதியை சேகரிக்கும் நோக்குடன் 48 வயதான ஜொகஹானஸ் சண்முகம் ஆறு நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தமிழனாக இருந்ததால் இலங்கையில் இடம்பெற்ற போரின் போது தனது வாழ்வு ஆபத்தைச் சந்தித்ததாகக் குறிப்பிட்ட இவர், தனது வாழ்வில் நான்கு தடவைகள் உயிர் தப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். சிங்களம் பேசத் தெரிந்ததாலேயே தான் இவ்வாறு உயிர் தப்ப முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போரின் போது பெரும்பாலான தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான புகலிடமாக பிரித்தானியா எமக்கு உதவியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

தற்போது பிரித்தானியாவில் தங்கியுள்ள நாங்கள் பிரித்தானியப் படைத்தரப்பினருக்கு உதவி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கையில் தற்போதும் துன்பங்களை அனுபவித்து வரும் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கும் நாங்கள் உதவ வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ள சுதந்திரங்களை பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்கியமைக்காக இந்த நடைபயணத்தின் மூலம் நன்றி தெரிவிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்த நடைபயணம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களின் சார்பில் பிரித்தானியப் பிரதமரிடம் நன்றி தெரிவித்து பாராட்டும் கடிதம் வழங்குவதுடன் நிறைவு பெறவுள்ளது.

இவர் கடந்த ஆண்டு தனது முதலாவது நடைபயணத்தின் மூலம் 7000 பவுண்ஸ் நிதியைத் திரட்டி தேவாலயம் ஒன்றுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=f108a8a7-14ba-448b-a74e-230bded948ba

செறண்டிப் சிறுவர் விடுதிக்கும் : http://www.globalpeacesupport.com/globalpeacesupport.com/post/2011/09/02/Serendib-Children-Home.aspx

  • கருத்துக்கள உறவுகள்

This is the work of KP and Mahinda. I think Nirmalan is an agent for KP. If anyone wants to give money to these kids do it directly. Not through the War criminals who is fully responsible for the current situation of these children. The money you guys going to send will eventually will end up in Mahinda's hand. This is what KP and his coolies want !!!Be aware about these masters of manipulation.

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.