Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

7ஆம் அறிவு படம் வந்த பின் போதிதர்மனின் விக்கிபிடியா

Featured Replies

நான் கேட்கிறேன் என தப்பாய் நினைக்காதீங்கோ போதிவர்மா தமிழன் தானே தமிழ் நாட்டில் இருந்து தமிழ்ர்களுக்கு தன்னுடைய கலைகளை பழக்காமல் ஏன் சீனா போனார்?

இதில் என்ன? அகத்தியரும் வீரமா முனிவரும் வேறு நாடுகளிருந்து வந்து ஆக்கிவைத்த தமிழால்த்தனே நாங்கள் எல்லோரும் தமிழர்களானோம்.

(நான் நிணைக்கிறேன் ஒரு சபையில் ஒட்டகூத்தர் இருந்தால், அந்த சபையை விட்டு கம்பரும் புகழேந்தியிம் வேறு நாடுகளுக்கு போய்விடுவார்களாக்கும்)

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

சில விசமிகள் மாற்றங்களை செய்தாலும் ஆதாரங்களை அழிக்கமுடியாது, சீனர்களால் எழுதப்பட்ட புத்தகங்களில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள் , என்னால் மாற்றங்களை செய்யமுடியாமல் இருப்பதால் இவ் பக்கத்தை பல ஆதாரங்களுடன் எழுதியவர்களுக்கு மேலும் ஆதாரங்கள் அனுப்பியுள்ளேன் , நிச்சியம் சரியான தகவல்களுடன் இப்பக்கம் மாற்றப்ப்டும் என்று நம்புகின்றேன் , அகூதாவின் முயற்சிக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

நான் கேட்கிறேன் என தப்பாய் நினைக்காதீங்கோ போதிவர்மா தமிழன் தானே தமிழ் நாட்டில் இருந்து தமிழ்ர்களுக்கு தன்னுடைய கலைகளை பழக்காமல் ஏன் சீனா போனார்?

ஒரு சீன புத்த குரு ஒருவர் கேட்டுக்கொண்டதுக்கு அமைய அவர் சீனா சென்றார் , இவர் கடைசி மகன் என்பதால் அரச விதிப்படி நாட்டை ஆட்சி செய்யமுடியாததால் இவரை சிங்க வர்மன் தேர்ந்தெடுத்தார் , புத்தமதத்துக்கு புத்துயிர் கொடுக்க அவர் கற்ற தற்காப்பு கலை, தியானம் ,சித்த வைத்தியத்தையும் மதத்துடன் சேர்த்து போதித்ததால் இலகுவாக புத்தமதத்துக்கு புத்துயிர் இவரால் கொடுக்கமுடிந்தது , மேலும் வரலாற்றை படிக்க சீனர்கள் எழுதிய புத்தகங்களை படியுங்கள் , இலவசமாக இணையத்தில் Bodhidharma’s Teaching Author : Ven. Eshin Godfrey, Ven. Guren Martin

Ven. Sik Yin Tak, Susan Kong

LinKokCollection_book5.jpg

http://www.buddhistdoor.com/download/data.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்காகத் துடிப்போடு முயற்சிக்கும் அகூதா, கரி இருவருக்கும் பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்.

http://ta.indli.com/v/587765

தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்

---------------------------------------------------

Film: Master of Zen 達摩祖師(1994)

Country: Hong Kong

Circuit: Mandarin-Rex

Genre: Historical Drama

Rating: II (Hong Kong)

Theatrical Run: 02/26/1994 - 03/23/1994

Director : Brandy Yuen Jan-Yeung

Edited by Queen

  • தொடங்கியவர்

நன்றி திரைப்பட இணைப்புக்கு , விக்கியில் நாம் அனுப்பிய புத்தகத்தின் சில தகவல் இணைக்கப்பட்டுள்ளது , A common account is that Bodhidharma was born a prince in the Pallava dynasty in southern India, around the year 440 AD [10]. As a youth he converted to Buddhism and became a monk,

நன்றி திரைப்பட இணைப்புக்கு , விக்கியில் நாம் அனுப்பிய புத்தகத்தின் சில தகவல் இணைக்கப்பட்டுள்ளது , A common account is that Bodhidharma was born a prince in the Pallava dynasty in southern India, around the year 440 AD [10]. As a youth he converted to Buddhism and became a monk,

உங்களது முயற்சிக்கும் கிடைத்த வெற்றிக்கும் பாராட்டுக்கள் ஹரி.

http://kalaiy.blogsp...11/11/elaa.html

போதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு!

இயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக "இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்" என்று அழைக்க முடியுமா? ஏழாம் அறிவு எனும் திரைப்படம், "போதி தர்மர் ஒரு தமிழன்" என்பதால், தமிழர்கள் எல்லோரும் பெருமைப் பட வேண்டுமென்கிறது. போதி தர்மன் என்ற புத்த பிக்குவின் பௌத்த மதப் பின்னணியை மறைத்து, அவனை ஒரு தமிழனாக மட்டும் பார்க்க வேண்டும் என்று கோருகின்றது. மதத்தை விட, மொழியே முக்கியம் என்று கருதும் தமிழ் இன உணர்வாளர்களுக்கு, போதி தர்மன் ஒரு தமிழ்- பௌத்தன் என்பதை ஏற்றுக் கொள்ள தயக்கம் ஏன்? தமிழ் இன உணர்வு என்ற போர்வையின் கீழ் மறைந்திருக்கும், இந்து மத உணர்வு இங்கே வெளிப்படுகின்றது.

இது மதமாற்ற வெறி கொண்டுள்ள ஒருவரின் தளத்தில் இருக்கும் செய்தி. தமிழரின் வரலாற்றை சிதைப்பதால், தமிழரைக் குழப்புவதால் அவருக்கு நன்மை கிடைக்கும் என்ற ஆதங்கம் எங்கும் உள்ளது.

இங்கு பௌத்த மதம், பௌத்த பிக்கு என்ற பதங்கள் தவறு. ஏனெனில் மிக நீண்டகாலமாக புத்தரின் போதனைகள் ஒரு கருத்தாக மட்டுமே இருந்தது.

எனவே போதிவர்மன் ஒரு பௌத்த பிக்குவாக மாறினான் அல்லது பௌத்த பிக்கு என்பது தவறு.

சமகால உதாரணமாக, ராமகிருஷ்ணர் ஒரு இந்துவாக இருந்தார். சில நல்ல கருத்துக்களை முன்வைத்தார். அவரைப் போல விவேகானந்தரின் பலம் வாய்ந்த கருத்துக்கள் அனைவரையும் கவர்பவை. இவர்களின் பெயர்களில் சேவை செய்யும் நோக்கத்துடன் செயற்பட்ட ராமகிருஷ்ண மிசன், 100 வருடங்களாக சேவை என்ற பெயரில் பெருந்தொகை பணத்தை சேகரித்தது. 100 வருடங்களின் பின்னர் இப்போது 1000 கணக்கான சாமியார்களை (கள்ளச்சாமி நித்தியானந்தா உம் ராமகிருஷ்ண மிசனில் உருவானவர் தானாம்) கொண்டுள்ள ராமகிருஷ்ண மிசன், சேவை நோக்கத்தை கைவிட்டு, ராமகிருஷ்ணர் வழிபாட்டை முன்னெடுத்து செல்வதில் அக்கறை கொண்டுள்ளதாக பலர் கூறுகின்றனர். சேவை செய்கிறோம் என்று தமிழனிடம் கொள்ளையடித்த காசை வைத்து சென்னையில் பெரும் கோயிலைக் கட்டி வைத்துள்ளார்களாம். இன்னும் நூற்றுக் கணக்கான கோயில்களை கட்டி வருகிறார்களாம். இன்னும் சில நூறு வருடங்களில் இந்து இல்லை தனி மதம் என்று சொன்னாலும் ஆச்சரியப் பட முடியாது. புத்த மதமும் இப்படி உருவான ஒன்றுதான் என்கிறார்கள் இவைபற்றி ஆய்வு செய்பவர்கள். .

ஹரி, அகூதாவின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.

இது போல் விடுதலைப் புலிகளின் தளத்துக்குச் சென்று பிழையானவற்றை அழிக்கலாம் தானே. எப்படிச் செய்வது என்று சொன்னால் இன்னும் சிலர் (நான் உட்பட) முயற்சிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி திரைப்பட இணைப்புக்கு , விக்கியில் நாம் அனுப்பிய புத்தகத்தின் சில தகவல் இணைக்கப்பட்டுள்ளது , A common account is that Bodhidharma was born a prince in the Pallava dynasty in southern India, around the year 440 AD [10]. As a youth he converted to Buddhism and became a monk,

நன்றி ஹரி.எனக்கும் மேலும் தகவல்கள் கிடைக்கும் போது சேர்த்து விடுகின்றேன்.

7 ஆம் அறிவு தெலுங்கு டப்பிங்கில் போதிதர்மரை தெலுங்கராக நாங்கள் காட்டவில்லை

இணையதளங்களில் 7 ஆம் அறிவையும் வேலாயுதத்தையும் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்களும் எழுத்தாளர்களும். இதில் 7 ஆம் அறிவு பற்றி அவர்கள் எழுப்பி வரும் வினாக்களுக்கு சில வரிகளில் விடையளித்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.

7 ஆம் அறிவு தெலுங்கில் டப்பிங் செய்திருக்கிறார்கள். அதில் போதிதர்மரை கடப்பாவில் பிறந்தவராகவோ, ராயலசீமாவில் வளர்ந்தவராகவோ காட்டுவார்களோ என்று அவர்கள் சந்தேகத்தை எழுப்பியிருந்தார்கள். இதற்கெல்லாம்தான் சுருக்கென்று பதில் சொல்லி, லொட லொடக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் உதயநிதி.

என்னவாம்? சிலர் வதந்திகளை கிளப்புவது போல, தெலுங்கு டப்பிங்கில் அவரை தெலுங்கராக நாங்கள் காட்டவில்லை. அதிலும் அவர் காஞ்சிபுரத்தில் பிறந்த தமிழர் என்றே சித்தரித்திருக்கிறோம். இனிமேலாவது இதுபற்றி வதந்திகள் எழாமலிருக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.

சொல்லியாச்சுல்ல? உடைஞ்சா முருங்கை, வளைஞ்சா நாணல்னு போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்.

bodhidharma_and_the_martial_arts8d75b87604b4e088b5a3.jpg

http://www.vivasaayi.com/2011/11/7_06.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.