Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய நீதிமன்றால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் மன்மோகன்சிங்குடன் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Douglas-%20Manmohan%20Singh.jpg

தேடப்படும் குற்றவாளியாக சென்னை நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளார்.

சார்க் மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபருடன், பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்துறை அமைச்சரும், ஈபிடிபி பொதுச்செயலருமான டக்ளஸ் தேவானந்தாவும் மாலைதீவு சென்றுள்ளார்.

நேற்று சங்கிரி-லா விடுதியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இணைந்து இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தபோது டக்ளஸ் தேவானந்தா, ஜி.எல்.பீரிஸ், சம்பிக்க ரணவக்க, சஜின் வாஸ் குணவர்த்தன, ஏ.எச்.எம்.அஸ்வர், லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்திய நீதிமன்றம் ஒன்றில், கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் புதுடெல்லியில் சந்தித்தது குறித்து ஏற்கனவே சர்ச்சைகள் உருவாகியிருந்தன.

இந்தநிலையில் நேற்று டக்ளஸ் தேவானந்தா மீண்டும் இந்தியப் பிரதமரை சந்தித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா சிறிலங்காவின் அமைச்சராக இருப்பதாலும், இரு நாடுகளுக்கும் இடையில் குற்றவாளிகளை பரிமாற்றம் செய்யும் உடன்பாடு இல்லை என்பதாலும், டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்ய முடியாது என்று இந்திய மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

ஆனால் கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திரவின் படுகொலையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை சிறிலங்கா அரசின் வேண்டுகோளின் பேரில், இந்திய அதிகாரிகள் மும்பையில் கைது செய்து சிறிலங்கா அரசிடம் ஒப்படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinapp...?20111111105025

ஒரு விஷயத்தை தமிழ்நாட்டில் இருக்கும் எனது அன்புறவுகள் புரிந்து கொள்ளவேண்டும் டக்ளசால் கொல்லப்பட்டவர் ஒரு அப்பாவி தமிழன் அனாலேயே இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை இதே ஒரு கிந்திக்காரனாக இருந்தால் நிலைமை வேறு தமிழ்நாட்டில் வைத்து ஒரு கிந்திக்காரன் கொல்லப்பட்டான் என்பதற்காக இன்றுவரை ஈழத்தமிழினத்தை கருவருக்கின்றார்கள் இதுவே இதற்க்கான சிறந்த உதாரணமாகும்.

இந்தியா ஒரு வல்லரசு, உண்மையான ஜனநாயக நாடு இல்லை என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.

மேற்குலக அதிபர்கள் ஏன் சீனா கூட இப்படி செய்யாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக அரசியலில் காங்கிரசை இன்னும் நசுக்க இந்த படம் உதவும்.

ஆனால் அண்ணல் பங்கர் அமைச்சர் சிங்காரின் ராவின் கைப்பாவை என்பதால் தான் இவ்வளவு மரியாதை.

  • கருத்துக்கள உறவுகள்

மாவட்ட கவுன்சிலர் 340 ஓட்டு..

ஒன்றிய கவுன்சிலர் 24 ஓட்டு..

வார்டு கவுன்சிலர் .. 34 ஓட்டு..

கோங்கிரஸ் கட்சிக்கு இதான் நிலமை.. நசுக்கவேண்டியதல்லாம் இல்லை .. நாக்கில் சனி உக்கார்ந்து இருக்கும் இளங்கோவன் இருக்கும் வரை சூப்பர்..

டிஸ்கி:

சட்டம் படித்த பெருமக்கள் இந்த விடயத்திலும் கொஞ்சம் மும்முரமாக இறங்கினால் கைமேல் பலன் உண்டு( வைக்கோ ஆஜாராவது இருக்கட்டும் .. புகழேந்தி ஆஜராவது இருக்கட்டும் இந்த மாதிரி கேசில் கோம் செத் கொமாளி ஆஜராக வேண்டும்) :icon_mrgreen: :icon_mrgreen:

சர்வதேச நீதிமன்றால் தேடப்படும் போர் குற்றவாளிவாயுடன் ஒட்டுக்குளு தலைவர் சந்திப்பு

Douglas-%20Manmohan%20Singh.jpg

தேடப்படும் குற்றவாளியாக சென்னை நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளார்.

இரண்டு கொலைகாரர்கள், இரண்டு குற்றவாளிகள், இரண்டு கோமாளிகள், இரண்டு பயங்கரவாதிகள் சந்திப்பதில் என்ன பிரச்சினை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.