Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மாணவி கற்பழிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாண்டிச்சேரி ஜிப்மரில் இலங்கை மாணவி பாலியல் வல்லுறவு

பிப்ரவரி 08, 2006

பாண்டிச்சேரி:

பிரபலமான புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் இலங்கை மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த மீனா என்ற மாணவி புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். அவரும் அவருடன் படிக்கும் அனந்து என்ற மாணவரும், கல்லூரி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது.

மாணவர் அனந்துவை அடித்து அங்கிருந்த ஒரு மரத்தில் அக்கும்பல் கட்டிப் போட்டது. பின்னர் அந்த மாணவர் கண் முன்பாகவே, மீனாவை அக்கும்பல் கற்பழித்துள்ளது. பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

படுகாயம் அடைந்த மாணவர் அனந்து மற்றும் மீனாவை சக மாணவர்கள் அங்கிருந்து மீட்டு கல்லூரி விடுதிக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாலியல் வல்லுறவு சம்பவத்தில் முக்கியப் பிரமுகர்களின் மகன்கள் அடங்கியுள்ளதால் இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்யத் தயங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரபலமான ஜிப்மர் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது மருத்துவக் கல்லூரியிலும், புதுவையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தட்ஸ்தமிழிலிருந்து செய்தி

  • Replies 52
  • Views 8k
  • Created
  • Last Reply

மாணவி மீதான காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாக கண்டிப்பதோடு இது தொடர்பில் சிறீலங்கா அரசு உயர்மட்ட விசாரணைக்கு இந்திய மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்..!

முன்னரும் தமிழகத்தில் இலங்கை தமிழ் மாணவியர் பாலிய வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்..! அண்மையில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் தாய்லாந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதுக்கு பிரித்தானிய அரசின் அழுத்தத்தில் தாய்லாந்து உயர்மட்ட விசாரணைகளை முடுக்கி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த முடிவு செய்தது..! ஆனால் இலங்கை மாணவியருக்கோ இது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு சிறீலங்கா அரசின் மெத்தனப் போக்கும் காரணமாகும்..! காட்டுமிராண்டிகளுக்கு மனித குலத்தில் இடமளிக்கக் கூடாது எனியும்..! :idea: :shock: :idea:

இலங்கை அரசு நடவடிக்கை எடுக்குமோ இல்லையோ புதுவை அரசு குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும். :oops: :oops:

என்னையா இவ்வளவு தொடர் நாடகங்கள், படங்களை பார்த்தபின்பும் அவர்களை நடவடிக்கை எடுக்கச் சொல்கிறீர்களே :P :P இதெல்லாம் அங்கு நடக்கிற கதையா :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்ம்.... பாரதமாதாவின் புதல்வர்களின் அற்புதங்களில் இன்னொன்று .....

என்ன இலங்கை அரசு இந்திய அரசை விசாரணைக்கு நிர்ப்பந்திக்க வேண்டுமா????

எந்த யுகத்தில் நாமிருக்கிறோம்???? இலங்கைத்தீவில் சிங்களக் காடையர்கள்/இராணுவங்களினால் எத்தனை கற்பளிப்புகள், எத்தனை கொலைகள் தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவிட்டன!! எத்தனை கொலைகளுக்கு, கற்பளிப்புகளுக்கு விசாரனை நடாத்தினார்கள்??? எத்தனைபேர் தண்டிக்கப்பட்டார்கள்???

விடிய விடிய ராமர் கதையாம்!! விடிச்சாப்பின் ராமர் ...... :shock:

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தான் நீ சவுதியிலை பாத்திருப்பாய்தானே, உங்க குடுக்கிற தண்டனையினைத்தான் உந்தப்படுபாவிகளுக்குக் கொடுக்கவேண்டும்.

இந்த சம்பவம் பற்றி இன்னமும் முறையான தகவல் வெளியுலகத்துக்கு கிடைக்கவில்லை.... பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரைப் பற்றியச் செய்திகளை காவல்துறை பகிரங்கமாக வெளியிடவில்லை.....

பெண்கள் முடிந்தவரை தனிமையான இடங்களில் காதலர்களையோ, நண்பர்களையோ சந்திப்பதை தவிர்க்க வேண்டும்..... கலாச்சாரத்தை காக்க பெண்களால் மட்டுமே முடியும் என்று கருதுகிறேன்.....

லக்கிலுக் கின்ர கதையைப்பார்த்தால் பெண் தனியாக எங்கையும் போக ஏலாது , :twisted: எப்பவும் ஒரு பாதுகாவலர் வேணும் என்ற கருத்தை முன்வைக்க நினைக்கிறார் ..........

:evil: :evil: அட இதுதான் அவர் இமயமாக நில்லடா என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். .... :x :x :?:

.....

பெண்கள் முடிந்தவரை தனிமையான இடங்களில் காதலர்களையோ, நண்பர்களையோ சந்திப்பதை தவிர்க்க வேண்டும்..... கலாச்சாரத்தை காக்க பெண்களால் மட்டுமே முடியும் என்று கருதுகிறேன்.....

ஒருகை தட்டி ஓசை வராது. இரண்டு கைகளும் சேர்ந்து தட்டப்படவேண்டும். கலாச்சாரத்தை பாதுகாக்கும் பொறுப்பை பெண்களின் தலையில் சுமத்திவிட்டு தப்பிக்கும் எண்ணம் வேண்டாம். கற்பு என்றால் பெண்ணிற்கு மட்டும், கலாச்சாரப் பாதுகாப்பு என்றால் பெண்ணிற்கு மட்டும் ஆனால் சுதந்திரம் ஆண்களிற்குத் தான் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு அனைவரும் பங்கேற்க வேண்டும்.

அய்யா,

அந்தப் பெண் தனிமையில் அவள் காதலனுடன் 'குரூப் ஸ்டடி' செய்தாளாம்.... இப்படி ஒரு கேவலமான செயல் செய்ததற்காகத்தான் அவளுக்கு இந்த கொடூரம் நேர்ந்திருக்கிறது.....

உடனே பெண் சுதந்திரம் அது இது என்று வேலைக்காகாத கதைகள் வேண்டாம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலன் கண்முன் அட்டூழியம், ஜிப்மர் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்

புதுச்சேரி, பிப். 9- காதலனை கட்டிப் போட்டுவிட்டு மருத்துவக் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. காமுகர்களிடம் இருந்து தப்பி நிர்வாணமாக ஓடிவந்த மாணவிக்கு, தன் லுங்கியைக் கொடுத்து காப்பாற்றினார் மருத்துவமனை செக்யூரிட்டி. இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூயில் வெளிநாட்டைச் சேர்ந்த மீனா இறுதி ஆண்டு படித்து வருகிறhர். தன்னுடன் படிக்கும் புதுவையைச் சேர்ந்த சுரேஷை (பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன) காதலிக்கிறார். தேர்வில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் இருவருக்கும் இருந்தது. இதற்காக, காதல் ஜோடியினர் எந்த நேரமும் புத்தகமும் கையுமாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்வார்கள். ஜிப்மர் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகே உள்ள தண்ணீர் தொட்டி பக்கத்தில் தொந்தரவு அதிகம் இருக்காது என்பதால் அதுதான் இவர்களின் படிப்பகமாக இருந்தது.

கடந்த 2-ம் தேதி ஜிப்மரில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதனால் மாணவ, மாணவிகள் எல்லாரும் அதில் பிஸியாக இருந்தனர், ஆனால் காதல் ஜோடியான மீனா-சுரேஷ் மட்டும் வழக்கமான இடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந் தனர். தங்களை மறந்து படித்து கொண்டிருந்த போது மாண விக்கு சோதனை ஏற்பட்டது,அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் ஒன்று மாணவி மீனா விடம் கலாட்டா செய்து சில் மிஷம் செய்யத் தொடங்கினர். இதை தட்டிக்கேட்ட சுரேஷை அடித்து உதைத்தனர். மயங்கி விழுந்தவாpன் வாயில் துணியை வைத்து மரத்தில் கட்டிப்போட்டனர். காமவெறி கொண்ட அந்த கும்பல், காதலன் சுரேஷ் கண் முன்னாலேயே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். காமுகர்களிடம் இருந்து தப்பிக்க மாணவி எவ்வளவோ முயற்சித்தார், அலறி துடித்து சத்தம் போட்டார். ஆனால் அவரது அலறல், பட்டமளிப்பு விழாவின் சத்ததில் யார் காதிலும் விழவில்லை.

பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. மயங்கிக் கிடந்த மீனா, சிறிது நேரம் கழித்து கண் விழித்தார். அப்போது இரவு 11 மணி இருக்கும். தான் முழு நிர்வாண மாக்கப்பட்டு சிதைக்கப்பட்டதை உணர்ந்து கதறினார். பயந்து அலறியபடி மருத்துவக் கல்லூ அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியை நோக்கி ஓடி வந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செக்யூரிட்டி ஒருவர், தன் அறையில் வைத்திருந்த லுங்கியை எடுத்து வந்து மாணவியின் உடலில் போர்த்தியுள்ளார். பின்னர், அவரை அவசர சிகிச்சைப் பிhpவில் சேர்த்து உள்ளனர்.

இதுபற்றி ஜிப்மர் டைரக்டர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு தகவல் தொpவிக்கப்பட்டது. மாணவியிடம் விசாரித்தபோது, எதுவும் புரியாத மனநிலையில் பேசி யுள்ளார். மனநல பெண் மருத்துவர் வரவழைக்கப்பட்டு அந்த மாணவிக்கு சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் அளித்துள்ளனர்.

கொஞ்சம் தௌp வடைந்ததும் காதலன் சுரேஷை பற்றி மீனா கூறியுள்ளார். அதன்பிறகே மரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த சுரேஷை தூக்கி வந்து சிகிச்சை அளித்துள்ளனர். விஷயம் வெளியே தொpய கூடாது கூடாது என்பதற்காக இருவருக்கும் இப்போது ஹாஸ்டலில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து ஜிப்மர் தொழிற்சங்க தலைவர் ஒருவர் கூறுகையில், …சம்பவம் நடந்தது உண்மை தான். அந்த செக்யூரிட்டி மனிதநேய மிக்கவர். அந்த பெண்ணின் பரிதாபத்தை பார்த்து தன்னால் முடிந்த உதவியை செய்து மானம் காத்துள்ளார். விஷயம் வெளியே தொpந்தால் அவமானமாகி விடும் என அந்த மாணவி கேட்டுக் கொண்டதால் தான் வெளியே சொல்லவில்லை. மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு விஷயத்தில் டைரக்டர் தனி கவனம் செலுத்து வேண்டும்† என்றhர்.

ஜிப்மர் மாணவர்கள் சிலரிடம் கேட்ட போது, …மாலை 6 மணிக்குமேல் விடுதியிலும், டாக்டர்கள் குடியிருப்பு பகுதியிலும் யாரும் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடு பெயரளவில் மட்டுமே உள்ளது. சமூக விரோதி கள் ஜிப்மர் வளாகத்தில் திரிவது குறித்து டைரக்ட்ரிடம் புகார் அளித்தோம். அதன் பிறகும் நிலைமை மாறவில்லை† என்றனர்.

இச்செய்தி நேற்று தமிழ்முரசில் வெளியான பிறகு ஜpப்மர் மருத்துவ கல்லூரி மாணவர், மாணவியர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அத்துமீறி உள்ளே நுழைந்த சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோhp மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இயக்குநரை சந்திந்த்து புகார் மனுவை கொடுத்தனர். இச்சம்பவம் பற்றி சீனியர் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த் கேட்டதற்கு, என்னிடமோ, கோரிமேடு போலீஸ் சரகத்திற்கோ எந்த விதமான புகார் ஒன்றும் வரவில்லை† என்றார்.

தினகரனிலிருந்து

அய்யா,

அந்தப் பெண் தனிமையில் அவள் காதலனுடன் 'குரூப் ஸ்டடி' செய்தாளாம்.... இப்படி ஒரு கேவலமான செயல் செய்ததற்காகத்தான் அவளுக்கு இந்த கொடூரம் நேர்ந்திருக்கிறது.....

உடனே பெண் சுதந்திரம் அது இது என்று வேலைக்காகாத கதைகள் வேண்டாம்.....

அவர்கள் காதலர்கள் சேர்ந்து படிச்சதில தப்பில்லை..! அது அவங்கட சுதந்திரம். ஆனா அதை அவங்க கிரிமினல்கள் உலா வரும் ஒரு கல்லூரியில் தவறான இடத்தில் தவறான நேரத்தில இருந்து செய்ததுதான் கிரிமினல்களுக்கு கிறைம் பண்ண வாய்ப்பாயிட்டு..! சிறீலங்காவில் கூட ஒரு இந்தியப் பெண்மணி கணவனின் முன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்..அதைச் செய்தது சிங்களக் காடையர்கள்..! இந்திய அரசின் அழுத்தத்தின் பெயரில் அதை கண்டித்து சிறீலங்காவில் பெண்கள் ஆர்ப்பாட்டமே செய்தனர்..இந்தியாவில் இது நடக்குமா..??! ஊர் நினைத்தால் காடையர்களின் கொட்டத்தை அடக்கலாம்...! ஊரே காடைத்தனமா இருந்தா...???! எப்படி அடக்கிறது..! :shock: :idea:

லக்கிலுக் கின்ர கதையைப்பார்த்தால் பெண் தனியாக எங்கையும் போக ஏலாது , :twisted: எப்பவும் ஒரு பாதுகாவலர் வேணும் என்ற கருத்தை முன்வைக்க நினைக்கிறார் ..........

:evil: :evil: அட இதுதான் அவர் இமயமாக நில்லடா என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். .... :x :x :?:

ஏன் லக்கி அப்படிச் சொல்லறார் எண்டு தெரியுமா அவங்க ஊரில பெண்களுக்கான பாதுகாப்பு அந்தளவு தான் போல :roll: :roll:

அதென்ன பெண்கள்தான் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் அப்ப அவங்களை பர்தா போட்டு கிச்சனில சமைக்க சொன்னா பிரச்சனை முடிஞ்சிடுமே :evil:

அந்தப் பெண் தனிமையில் அவள் காதலனுடன் 'குரூப் ஸ்டடி' செய்தாளாம்.... இப்படி ஒரு கேவலமான செயல் செய்ததற்காகத்தான் அவளுக்கு இந்த கொடூரம் நேர்ந்திருக்கிறது.....

þó¾¢Â¡¾¡ý ±ýÈ¢ø¨Ä ¯Ä¦¸íÌõ ¦Àñ¸û Á£¾¡É À¡Ä¢Âø ÅýÓ¨È Á¢¸×õ ¸Å¨ÄÂÇ¢ìÌõ Åñ½Á¡¸§Å ¯ûÇÐ. :lol::lol::lol:

பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு வீட்டில் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதே என் வாதம்.... காதலரை சந்திக்க எவ்வளவோ பொது இடங்கள் இருக்கிறது.... அது என்ன தனிமையில் தான் சந்திக்க வேண்டுமா? பிரச்சினை வரும் என்று தெரிந்தே நெருப்போடு விளையாடலாமா? அந்த காதலனின் மனமே கூட தனிமையின் காரணமாக சஞ்சலப்பட வாய்ப்பிருக்கிறதே?

பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு வீட்டில் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதே என் வாதம்.... காதலரை சந்திக்க எவ்வளவோ பொது இடங்கள் இருக்கிறது.... அது என்ன தனிமையில் தான் சந்திக்க வேண்டுமா? பிரச்சினை வரும் என்று தெரிந்தே நெருப்போடு விளையாடலாமா? அந்த காதலனின் மனமே கூட தனிமையின் காரணமாக சஞ்சலப்பட வாய்ப்பிருக்கிறதே?

அது ஏன் பெண்களிற்கு மட்டும் கட்டுப்பாடு போட நினைக்கிறீர்கள். அதுதான் புரியாத புதிராக இருக்கிறது. :roll: :roll: :roll:

¦À¡Ð þ¼ò¾¢ø ºó¾¢ôÀÐ §À÷ ¸¡¾Ä¡?

அது ஏன் பெண்களிற்கு மட்டும் கட்டுப்பாடு போட நினைக்கிறீர்கள். அதுதான் புரியாத புதிராக இருக்கிறது. :roll: :roll: :roll:

ஆண்களை யாரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது இல்லையே.... அதனால் தான்.....

¦À¡Ð þ¼ò¾¢ø ºó¾¢ôÀÐ §À÷ ¸¡¾Ä¡?

காதல் எந்த இடத்தில் சந்திக்கிறோம் என்பதில் இல்லை.....

பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு வீட்டில் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதே என் வாதம்.... காதலரை சந்திக்க எவ்வளவோ பொது இடங்கள் இருக்கிறது.... அது என்ன தனிமையில் தான் சந்திக்க வேண்டுமா? பிரச்சினை வரும் என்று தெரிந்தே நெருப்போடு விளையாடலாமா? அந்த காதலனின் மனமே கூட தனிமையின் காரணமாக சஞ்சலப்பட வாய்ப்பிருக்கிறதே?

பெண்களுக்கு யார் சுதந்திரம் கொடுக்க வேண்டும்..அவங்களுக்கு இயல்பா எல்லா சுதந்திரமும் எல்லா மனிதரைப் போலவும் இருக்கு..! அதை தடுக்க முடியாது. ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல...எல்லோருக்கும் அவசியமானது கட்டாயமானது. அதைப் பெண்கள் மீறினும் சரி ஆண்கள் மீறினும் சரி கண்டிக்க வேண்டும்..! ஆனால் காதலியோடு மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் தனிமையான இடத்தில் என்ன சொர்க்கத்தில் இருந்தாலும் சஞ்சலப்பட வேண்டிய அவசியமில்லை ஒழுக்கமுள்ள காதலனுக்கு..! காதலியே சஞ்சலப்படாத போது இவர்களுக்கு என்ன சஞ்சலம்..! காதல் என்ற பெயரில் கருமாந்திரம் பண்ண நினைப்பவர்கள் சஞ்சலப்படலாம்..அப்படியானவர்க

குருவிகள்,

அந்தப் பெண்ணின் நடவடிக்கை சரி இல்லாததால் அவள் இவ்வளவு பெரிய இன்னலுக்கு ஆளாக நேரிட்டது.... பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண் யாரும் போகத் தயங்கும் இடத்துக்கு சென்றது அந்தப் பெண்ணின் முட்டாள் தனம்.... வேலியில் போற ஓணானை எடுத்து மடியில் விட்டுக்கொண்டு குத்துதே, குடையுதே என்பது முட்டாள்தனம்..... வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்.....

குருவிகள்,

அந்தப் பெண்ணின் நடவடிக்கை சரி இல்லாததால் அவள் இவ்வளவு பெரிய இன்னலுக்கு ஆளாக நேரிட்டது.... பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண் யாரும் போகத் தயங்கும் இடத்துக்கு சென்றது அந்தப் பெண்ணின் முட்டாள் தனம்.... வேலியில் போற ஓணானை எடுத்து மடியில் விட்டுக்கொண்டு குத்துதே, குடையுதே என்பது முட்டாள்தனம்..... வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்.....

சரி அந்தக் காதலர்களின் நடவடிக்கை அந்த இடத்தில் சரியில்லை என்றால் அவர்களை கண்டித்து சீர்படுத்துவதைச் செய்யாமல் இன்னும் மூன்று பேர் போய் அவளைச் சீரழிப்பதுதான் நியாயமா..???! உண்மையில் அவர்கள் தவறாக நடந்து கொண்டதாக தகவல்கள் இல்லை. பரீட்சைக்கு படித்ததாகத்தான் தகவல்..! எப்படி இருப்பினும் காதலர்களின் தவறுக்கு காடைத்தனமாக தண்டனை கொடுக்க காடையர்களுக்கு உரிமையில்லை..! :idea: :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.