Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணிப்பதிவுகளால் புலம் பெயர் மக்களின் காணிகளை பறிக்க இயலாது

Featured Replies

காணிப்பதிவுகளால் புலம் பெயர் மக்களின் காணிகளை பறிக்க இயலாது

சிறீலங்காவில் காணிப்பதிவு முறையானது புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் பாரிய பீதியை கிளப்பி விட்டுள்ளது. பலர் தமது காணிகளை காப்பாற்றுவதற்காக தற்போது சிறீலங்கா சென்றுள்ளார்கள். ஆனால் காணிகளை பதிவது உடமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று நேற்று டென்மார்க் வந்த சிறீலங்காவின் சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார்.

டென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள தமிழர்களை சந்தித்து பேசியபோது இவர் மேற்கண்ட விளக்கத்தை தந்தார். காணி பதியும் சட்டமூலமானது போருக்கு பின்னர் இயற்றப்பட்ட புதிய சட்டமல்ல, அது கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இயற்றப்பட்ட சட்டமாகும். இப்போது போர் முடிவடைந்துள்ள காரணத்தால் ஒவ்வொரு காரியாதிகாரி பிரிவிலும் உள்ள காணிகளின் விபரங்கள் பதியப்பட அந்தச் சட்டமூலம் பயன்படுத்தப்படுகிறது அவ்வளவுதான்.

தற்போது காணி பதிவுக்கான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருவர் சிறீலங்கா போய்த்தான் காணியை பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கான விண்ணப்பம் இணையத்தில் வெளியாகியுள்ளது. எனவே காணி உறுதி வைத்திருப்போர் முறைப்படி அந்த விபரங்களை படிவத்தில் பதிந்து, அப்படிவத்தை சிறீலங்காவில் உள்ள ஒருவரிடம் கொடுத்தால் காணிக்கந்தோரில் அது பதிவாகிவிடும்.

வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடைய காணியை 30 வருடங்களாக இன்னொருவர் பயன்படுத்தியிருந்தால், அக்காணியில் இருப்பவர் அதற்கான உரிமையை சட்டப்படி கோரினால் மட்டுமே காணிக்கு பிரச்சனை வரும். ஆகவே வெறுமனே காணிகளை பதிவதன் மூலம் புலம் பெயர் தமிழ் மக்களின் காணிகளை பறித்து மற்றவருக்கு கொடுக்க சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவித்தார்.

காணிப்பதிவானது தனியே தமிழ் பகுதிகளில் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை, சிங்கள பகுதிக்கும் இது பொருந்தும். பரீட்சார்த்தமாக சிங்கள பகுதி ஒன்றுக்கும், நல்லூரிலும் முதல் தடவையாக இது மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்தார். உலகில் எந்த நாடானாலும் நாட்டை நிர்வகிக்கும் ஓர் அரசு தனது உடமைகளை முறைப்படி பதிவு செய்வது இயல்பான வழமை என்ற கோணத்தில் பார்ப்பது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், புலம் பெயர் மக்கள் அதிகமான அச்சமடையாமல் இங்கிருந்தபடியே அதை பதிவு செய்வது நல்லது என்றார்.

http://www.alaikal.com/news/?p=88306

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்று தான், வெளிநாடுகள் வாழும் ஓய்வூதியர்களின் விபரங்களைத் திரட்டும் போதும் சொல்லப் படுத்து, அகூதா!

இப்போது புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் என்று (பயங்கரவாதம்) அவர்கள் ஓய்வூதியத்தை வைத்து சிங்களப் படைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்க எண்ணுகின்றது சிங்களம்!

எல்லா விதமான திட்டங்களும், தமிழன் பணத்தையும், தமிழன் நிலத்தையும் சிங்கலவனுக்குக் கொடுக்கும் விதமாகவே சிங்களத்தில் அமுல் படுத்தப்படுகின்றன!

  • தொடங்கியவர்

சிங்களம் ஒரு முதலீடுகளை ஒரு கையால் கேட்கிறது மறு கையால் சுவீகரிக்கிறது. புலம்பெயர்ந்த மக்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு முயலவேண்டும், துணியவேண்டும்.

பாரத் லக்ஸ்மன் கொல்லப்பட்டதற்கு அவரின் கனடாவில் வாழும் சகோதரி கனேடிய பிரதமரையே அணுகியுள்ளார். அவர் போல நாமும் துணிவுடன் செயல்பட வேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்று தான், வெளிநாடுகள் வாழும் ஓய்வூதியர்களின் விபரங்களைத் திரட்டும் போதும் சொல்லப் படுத்து, அகூதா!

இப்போது புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் என்று (பயங்கரவாதம்) அவர்கள் ஓய்வூதியத்தை வைத்து சிங்களப் படைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்க எண்ணுகின்றது சிங்களம்!

எல்லா விதமான திட்டங்களும், தமிழன் பணத்தையும், தமிழன் நிலத்தையும் சிங்கலவனுக்குக் கொடுக்கும் விதமாகவே சிங்களத்தில் அமுல் படுத்தப்படுகின்றன!

சரியாகச் சொன்னீர்கள் புங்கையூரான் சிங்களம் மெல்ல மெல்ல எல்லாவற்றையும் செய்து முடிக்கின்றான். நாங்கள் தான் இன்னும் 40 வருடங்கள் பின்னுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.