Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிவேக பேரழிவு ஆயுதத்தை பரிசோதித்த அமெரிக்கா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பயணித்து தொலைதூர இலக்குகளை மிக துல்லியமாக தாக்கவல்லது என்று அமெரிக்க பென்ரகனால் வர்ணிக்கப்படும் அணு ஆயுதங்கள் உட்பட பேரழிவாயுதங்களை தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணையை அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

இந்த ஏவுகணை.. அமெரிக்க ஹவாயில் இருந்து பசுபிக்கின் அடுத்த முனையில் உள்ள ஒரு இலக்கை சுமார் 3700 கிலோமீற்றர்கள் தூரத்தை வெறும் 30 நிமிடங்களுள் பயணித்து தாக்கி அழித்து இந்தப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவியுள்ளது.

அண்மையில் தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பில் சீனாவும் அமெரிக்காவும் நேரடியாக முறுகிக் கொண்டுள்ள நிலையில் இந்தப் பரிசோதனை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிற நாடுகள் பேரழிவு ஆயுதங்களையும்.. ஏவுகணைகளையும் தயாரிப்பதாகச் சொல்லி ஜனநாயகம் காக்கிறோம் என்ற போர்வையில்.. அமெரிக்கா அவற்றின் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து வருவதும். குறிப்பிடத்தக்கது..!

Pentagon tests long-range hypersonic weapon

_56794223_5040f535-9cf7-498b-96c3-48b8be4ab174.jpg

The US has test-fired a new weapon which can travel at five times the speed of sound, the Pentagon says.

The missile was launched from Hawaii and reached its target on a Pacific atoll 2,300 miles (3,700km) away in less than half an hour.

http://www.bbc.co.uk...canada-15790620

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திலை இருக்கிற ஒவ்வொருத்தனும் டாக்குத்தர் எண்டால்....நோயாளிக்கு எங்கைபோறது? வாற எல்லாரும் வாத்தியார் வேலை பாத்தால்!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டாக்குத்தரையே நோயாளியாக்கி படுக்க வைச்சு வெட்டிக் கொத்த வேண்டியது தான். வேற வழி..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஈரானை சொன்னனான்...ஈரானுக்கு அணுவாயுதம் தேவையில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஈரானை சொன்னனான்...ஈரானுக்கு அணுவாயுதம் தேவையில்லை.

அமெரிக்கா வைச்சிருக்கலாம் என்றால் ஏன் ஈரான் கூடாது. ஈரானை விட அமெரிக்கா தான் எமக்கு எதிராக அதிகம் செயற்பட்டு இருக்கிறது.. செயற்பட்டும் கொண்டிருக்கிறது..! அமெரிக்கா நம்ப வைச்சு கழுத்தறுப்பதில் முதன்மையான நாடு. ஜே ஆருடன் இணைந்து அமெரிக்காவும் மொசாட்டும் செய்த தமிழர் விரோத செயற்பாடுகள் அவ்வளவு இலகுவில் மறக்கக் கூடியவை அல்ல. அது முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது.. இன்றும் தொடர்கிறது. :(:o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா வைச்சிருக்கலாம் என்றால் ஏன் ஈரான் கூடாது. ஈரானை விட அமெரிக்கா தான் எமக்கு எதிராக அதிகம் செயற்பட்டு இருக்கிறது.. செயற்பட்டும் கொண்டிருக்கிறது..! அமெரிக்கா நம்ப வைச்சு கழுத்தறுப்பதில் முதன்மையான நாடு. ஜே ஆருடன் இணைந்து அமெரிக்காவும் மொசாட்டும் செய்த தமிழர் விரோத செயற்பாடுகள் அவ்வளவு இலகுவில் மறக்கக் கூடியவை அல்ல. அது முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது.. இன்றும் தொடர்கிறது. :(:o

உதாரணத்திற்கு அமெரிக்கா எங்களுக்கு நல்லது செய்தால்...இல்லை..செய்ய வெளிக்கிட்டால்...ஈரான்...வைச்சிருக்கலாது....வைச்சிருக்கலாம்..இல்லை...எக்ஸ்சற்ரா...

அமெரிக்க் அதிவேக ஏவுகணை உலக நாடுகள் கெடிக்கலக்கம் !

ஆசியாவில் இனி ஆயுதப் போர் நடைபெறக்கூடாது.. அமெரிக்கா..!!

சிறுபான்மை மக்கள் படுகொலைகள் முடிவுக்கு வரவேண்டும்..

.

மணிக்கு 6000 கி.மீ வேகத்தில் சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் அமெரிக்காவின் புதிய அதிவேக ஏவுகணை கடந்த வியாழனன்று வெற்றிகரமாக பரிசீலிக்கப்பட்டது. உலகத்தின் முக்கிய இலக்குகளை ஒரு மணி நேரத்தில் தொட்டுவிடக்கூடிய மேற்கண்ட ஏவுகணை அமெரிக்க இராணுவ பிரிவான பென்ரகனின் இன்னொரு இமாலய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது.

அட்வாண்ஸ் கைப்பசொனிக் வெப்பன்ஸ் என்று இது அழைக்கப்படுகிறது. கடந்த வியாழனன்று அதிகாலை 13.30 மணிக்கு ஹவாயில் இருந்து ஏவப்பட்டது. சுமார் அரை மணி நேர இடைவெளியில் பசுப்பிக்சமுத்திரத்தில் உள்ள 3700 கி.மீ தூர இலக்கை இது தகர்த்துத்தள்ளியது. இந்த ஏவுகணையானது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிக வேகத்தில் பறக்கக் கூடியது. உலகத்தில் இன்று பாவனையில் உள்ள அத்தனை ஏவுகணைகளையும்விட இது அதிவேகமானது. இந்த ஏவுகணையின் தலைப்பகுதியில் அணு குண்டை பொருத்த முடியும். இந்தப் பரிசோதனை மூலம் தொடர்ந்தும் உலக இராணுவ பலத்தில் அமெரிக்காவே முதலிடம் என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது இவ்விதமிருக்க கடந்த வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்களும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். எதிர் காலத்தில் ஆசியா கண்டமானது அமைதி, நாடுகளோடு நாடுகள் சேர்ந்தியங்கும் ஒற்றுமைப் பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற ரக் பிரேரணை பற்றிய பேச்சுக்களை விபரமாக நடாத்தியுள்ளார்.

சிறீலங்காவில் நடந்தது போன்ற இன்னொரு உள்நாட்டுப் போர் இனி ஆசியாவில் இல்லை என்ற விவகாரத்தை அமெரிக்க அதிபரின் சந்திப்பு அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்துள்ளது. சிறீலங்கா, இந்தியா போன்ற நாடுகள் தமது சிறுபான்மை இனங்கள் மீதான போரை நிறுத்த வேண்டிய பருவம் இதுவாகும். மறுத்தால் புதிய ஏவுகணை பதில் சொல்லும் என்ற மெல்லிய எச்சரிக்கை இதில் தேநீரில் பால் போலக் கலந்துள்ளது. மேலும் வல்லாதிக்க சக்திகளுடன் இணைந்து, அனுமதி பெற்றே வன்னிப் படுகொலைகளும் நடந்துள்ளன என்ற உண்மையையும் இந்த சந்திப்புக்கள் சொல்லாமல் சொல்லுகின்றன.

இருந்தாலும் புதிய உலக ஏற்பாடு இனவாத சிங்களத்தைவிட தமிழருக்கே அதிக வாய்ப்பாக உள்ளது. சர்வதேச நிகழ்ச்சித்திட்டத்தை அறிந்து தமிழர்களும் நாடகத்தை ஆடினால் பல அரசியல் இலக்குகளை எட்டித்தொட முடியும்.

http://www.alaikal.com/news/?p=88603

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிற்கு வெளில இருந்து அச்சுறுத்தல் இல்லையேல் அது கண்டபடிக்கு ஆடும். அதனால் நமக்கு நன்மைகள் விளையா. ஈரானிடம்.. என்ன அமெரிக்க எதிரிகள் எல்லோரிடமும் அணு ஆயுதம் இருப்பதுதான் நல்லது. அப்பதான் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இருக்கும்.. அடுத்தவன் சொல்லுறதை கேட்கனும் என்ற தேவையாவது வரும்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்ககொள்கைகளை தழுவிய நாடுகள் ஓரளவு அமைதியாகவும் இன்றைய காலகட்டத்திற்கேற்ப அமைதியாக வாழ்கின்றன.....ரஸ்சிய சார்பு நாடுகள் அன்றும் இன்றும் பஞ்சம் பட்னி......வெளியுலகம் தெரியாத வாழ்க்கை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு ரஷ்சிய தளத்தில் படித்தேன் அண்மையில் ரஷ்சியா இதே வகை ஏவுகணை ஒன்றை மணிக்கு 10,800 மைல் வேகத்தில் செல்லத்தக்க வகையிலும் ரடார்களில் சிக்காமலும் தயாரித்து பரிசோதித்திருந்தது. இதன் மூலம் அமெரிக்க புஷ்சின் ஏவுகணை பாதுகாப்பு கவசத்திட்டம் சுக்கு நூறாகியுள்ளது. இப்போ அதைப்பற்றி எல்லாம் அமெரிக்கா கதைப்பது கிடையாது. இந்தத் தகவலை அறியாதவர்கள்.. அமெரிக்காவே இதனை முதலில் செய்துள்ளதாக செய்தி வெளியிடுகின்றனர் என்று நினைக்கிறேன்.

Hypersonic Missile Topol SS-27 இது ரஷ்சிய ஏவுகணை..!

http://www.thetruthseeker.co.uk/?p=4157

அமெரிக்ககொள்கைகளை தழுவிய நாடுகள் ஓரளவு அமைதியாகவும் இன்றைய காலகட்டத்திற்கேற்ப அமைதியாக வாழ்கின்றன.....ரஸ்சிய சார்பு நாடுகள் அன்றும் இன்றும் பஞ்சம் பட்னி......வெளியுலகம் தெரியாத வாழ்க்கை.

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் ரஷ்சிய ஆதரவு நாடுகள் எழுந்து நிற்கின்றதை காணலாம். கியூபா மீது பல ஆண்டுத் தடைகள் இருந்தும்.. அது நிமிர்ந்து நிற்கிறது. சீனா அப்படி. அமெரிக்காவின் செல்லப்பிள்ளைகள் அமெரிக்காவாலேயே தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவலம்.. ஈராக்.. ஆப்கானிஸ்தான்.. லிபியா என்று தொடர்கிறது..! :):lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.