Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவின் மூளைச்சலவை தமிழர் தரப்பில் இனி எடுபடுமா?-- ஆர்.தயாபரன்

Featured Replies

இலங்கை இனப்பிரச்சினை, உள்நாட்டுப் பிரச்சினை, உள்நாட்டினுள்ளேயே பேசித் தீர்வு காணப்பட வேண்டுமென்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் சியாம் சரண். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், மீண்டும் ஞான உபதேசங்களை அள்ளிவிடத் தொடங்கியிருக்கிறார் இவர். மீண்டும் யுத்தம் வெடித்த 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்தவர். இழுபறிப்பட்டுச் செல்லும் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்த விவகாரத்துக்காக மன்மோகன் சிங்கின் பிரதிநிதியாக ஓடித்திரிந்தவர். இராணுவ நிர்வாகத்தின் கீழுள்ள ஆசிய நாடுகள் பலவற்றிற்கும் தூதுவராகவும் இருந்துள்ளார்.

இந்த வகையில் சியாம் சரணின் கருத்து, இந்திய மத்திய அரசினது கருத்து என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கப் போவதில்லை. மறுபுறத்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூறிவரும் கருத்துக்களுக்கு ஆதரவான கருத்தையே இந்தியாவும் கொண்டுள்ளதென்பது மீண்டுமொரு முறை அம்பலமாகியுள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு மூன்றாம் தரப்பு ஒன்றின் மத்தியிலேயே எட்டப்பட வேண்டுமென்பதே தமிழீழ விடுதலைப் புலிகளது நிலைப்பாடாக இறுதிவரை இருந்திருந்தது. மாறி மாறி ஆட்சி ஏறிய பெரும்பான்மை ஆட்சியாளர்கள், தமிழ் தலைவர்களுடனான ஒப்பந்தங்களை கிழித்துப் போட்டே வந்திருந்தமையும் அதற்கு காரணமாக இருந்தது.

கூட்டமைப்பினரும் விரும்பியோ,விரும்பாமலோ மூன்றாம் தரப்பு மத்தியிலேயே பேச்சுவார்த்தை என்னும் நிகழ்ச்சி நிரலிற்குள் வர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் வெறுமனே கூடிப் பேசுவதனால் எதுவும் நடக்கப் போவதில்லையென்பதை புரிந்து கொண்டே அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சர்வதேச அழுத்தம் மத்தியஸ்தமே தீர்வொன்றை பெற்றுத் தருமென்பதை உறுதியாக தமிழ் மக்கள் நம்பவும் செய்கின்றனர்.

சியாம் சரணின் வருகை, குறிப்பாக யாழ். பல்கலைக் கழகத்திற்கான வருகை, முன் கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலென்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதுவும் மிக நீண்டதொரு இடைவெளியின் பின்னர் கைலாசபதி அரங்கை வெளியாரது பயன்பாட்டிற்கு துணைவேந்தர் திறந்து விட்டிருந்தார். பல்கலைக்கழக சமூகம், அதிலும் குறிப்பாக மாணவ சமூகம், இன்றுவரை கூட்டமைப்பு போன்று இந்திய நலன் சார்ந்து செயற்படத் தயாராகவில்லை.

தமது நிலைப்பாட்டிலிருந்து விலகிக் கொள்ளாது, உறுதியான நிலைப்பாட்டையே மாணவ சமூகம் பேணிவரும் நிலையில், மூளைச்சலவை செய்வதற்கான நிகழ்ச்சியாகவே, சியாம் சரணின் உரை திட்டமிடப்பட்டிருந்தது. இலங்கைப் பிரச்சினை தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக இது நோக்கப்பட்டது. எனினும் துரதிஷ்டவசமாக சியாம் சரண் சொல்வதைக் கேட்க எந்தவொரு மாணவனும் அங்கு எட்டிப்பார்த்திராமை அவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருந்தது.

சுமார் அறுநூறு பேர் வரையில் கொள்ளக் கூடிய அம்மண்டபம் பெரும்பாலும் வெறுமையாகவே காணப்பட்டது. வழமைபோல எந்த உழைப்பிற்கும் முன் வரிசையில் வந்து குந்தும் உள்ளூர் பிரபலங்கள் மட்டுமே சொல்லிக் கொள்ளத்தக்கதாக வந்திருந்தனர். வழமைக்கு மாறாக, முதல் தடவையாக நூற்றுக்கும் குறையாத படை அதிகாரிகளும், சமூகமளித்திருந்த நிகழ்வாக இது அமைந்திருந்தது. அதிலும் சமூகமளித்திருந்த படை அதிகாரிகள் பலரும் வெவ்வேறு படைப்பிரிவுகளையும் சேர்ந்தவர்களாகவும் சிரேஷ்ட அதிகாரிகளாகவும் இருந்திருந்தனர்.

நடந்து முடிந்த அரசு புலிகளுக்கிடையேயான பல சுற்று தோல்விகரமான பேச்சுவார்த்தைகள் திட்டமிட்ட வகையில், இந்திய உளவு அமைப்பாலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது என்பதை நோர்வே ஒத்துக் கொண்டுள்ளது. எனினும் இதன் பின்னணியில் இந்திய புலனாய்வு கூட்டமைப்பு இருந்திருந்தமை புலிகள் தலைமை அறிந்திருக்கவில்லையெனும் அர்த்தப்படுத்தலில் எரிக் சொல்ஹெய்ம் அண்மையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

புலனாய்வு கட்டமைப்பு பொறுப்பாளராக இருந்த பொட்டு அம்மானின் புதுக்குடியிருப்பு தளத்தில் எதிர்பாராத அந்தச் சந்திப்பு நடந்திருந்தது. தமிழ்ச்செல்வன், நடேசன் போன்றோருடன் கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த ஓரிரண்டு தமிழ் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

சமாதானப் பேச்சு ஏற்பாடுகளில் இந்திய உளவு கட்டமைப்பின் பின்னணி செயற்பாடுகளை ஆராய்வதற்கு அல்லது விவாதிப்பதற்கு பொட்டு அம்மான் விரும்பியிருந்தார். ஆனாலும் அழையா விருந்தாளியாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்.

எடுத்த எடுப்பிலேயே சமாதானப் பேச்சு ஏற்பாடுகளூடாக புதியதொரு பொதியை தமக்கெதிராக வைத்து வருவது தொடர்பாக கருத்துக்களை பிரபாகரன் முன் வைத்திருந்தார். குறிப்பாக நோர்வே அமெரிக்காவிடம், இந்தியாவிடம் தகவல்களை எடுத்துச் செல்லவும், அங்கு சொல்லப்படுபவற்றை கேட்டு இங்கு வந்து சொல்லும் புறோக்கர் வேலையினை மட்டுமே செய்து வருவது பற்றியெல்லாம் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு கலந்து கொண்ட தெற்கிலிருந்து வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள், அவ்வாறான திட்டமிட்ட பொறி பற்றி விரிவாக அறிந்துள்ள நிலையில் ஒப்பந்தத்தில் பிரபாகரனால் ஒப்பமிடப்பட்டமை பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு மிக தெளிவாகவே பதிலளித்திருந்தபோது அவர் பிரபாகரன் சமாதான நடவடிக்கைகளில் ஆர்வமற்றவரென பிரசாரம் செய்யப்படுகின்றது. இது திட்டமிட்டதோர் பொறி, இதன் பின்னணியிலுள்ளவர்கள் பற்றியும் நான் அறிவேன். எனினும் சமாதான நடவடிக்கைகளும் எனக்கு உடன்பாடானது என்பதைக் காண்பிக்கவே ஒப்பந்தத்தில் நானே கைச்சாத்திட்டேன் என்றார்.

அதே பொறிகளை திட்டமிட்டு வைத்து வெற்றி பெற்ற இந்திய தரப்புக்களோ இப்போது உள்ளுக்குள்ளேயே பேசி தீர்வு காண ஆலோசனை கூறுகின்றனர். இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரையில் தமது நாட்டிலுள்ள மாநிலங்களுக்கான அதிகார எல்லையை தாண்டிவிடக் கூடிய எந்தவொரு தீர்வும், வடக்கு கிழக்கிற்கு கிடைத்து விடக் கூடாதென்பதில் உறுதியாகவே உள்ளது. அந்த வகையிலேயே அவர்களது செல்லப்பிள்ளைகளான கூட்டமைப்பினரும், இப்போது மாகாண சபைக்கான அதிகாரங்கள் பற்றி சுற்றிச் சுற்றி பேசத் தொடங்கியுள்ளனர். 13 இற்கும் இப்பாலா, அப்பாலா என்பதிலேயே இப்போது அவர்களுக்கு நேரம் போய் விடுகின்றது. சமஷ்டி என்றால் கிலோ என்ன விலையென்கின்றனர்.

அடுத்து வரும் ஆண்டின் முற்பகுதியினுள், வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை எப்படியேனும் நடத்தி முடித்துவிடவே இலங்கை அரசு முற்பட்டுள்ளது. அத் தேர்தலில் முதலமைச்சர் யாரென்ற உள்குத்துகளுக்கப்பால்,மாகாண சபைக்கான அதிகாரங்கள் பற்றி பேசித் தீர்த்தே வருகின்றோமென்ற தோற்றப்பாட்டை காண்பிக்க கூட்டமைப்பு முற்படுகின்றது.

ஏற்கனவே ஏதோ வகையில் அழைத்தோ, அழைக்காமலோ அமெரிக்கா, பிரிட்டன், கனடாவென, புலிகளது தலைமை தவறவிட்ட நாட்டுத் தலைநகரங்களில் சந்திப்புக்களையும் நடத்தி கூட்டமைப்பு திரும்பியிருக்கின்றது.

எனினும் இந்தியாவின் விருப்ப எல்லையை தாண்டி சுதந்திரமாக, கூட்டமைப்பு மேற்குலக நாடுகளுக்கு சென்றிருக்குமென்பதில்லை. எவருக்குமே நம்பிக்கையிருக்கப் போவதில்லை. இந்திய அரசின் பின் நிகழ்ச்சி நிரலொன்று இப்பயணங்களில் நிச்சயமாக இருந்திருக்குமென்பதும் கடந்த கால வரலாறு. ஏற்கனவே இந்திய புலனாய்வு பிரிவு முதுகில் குத்திவிட்டதாக எரிக் சொல்ஹெய்ம் போன்றோர். கருத்துக்களை முன்வைத்துள்ளனர். நோர்வே கூட்டத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனது அரசியல் பார்வை பற்றி, எரிக் சொல்ஹெய்ம் முன் வைத்த குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலும் கண்டு கொள்ளப்பட்டிருக்கவில்லை.

எது எவ்வாறாக இருப்பினும் இலங்கை மீதான தனது, ஆளுமையைப் பலப்படுத்த இந்தியா தொடர்ந்தும் பாடுபட்டே வருகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான தீர்வொன்றை பெற்றுத் தருவதென்பதற்கப்பால், தெற்கு ஆட்சியாளர்களுக்கு சேதம் விளைவிக்காத அரசியல் நகர்வுகளையே இந்தியா முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையிலேயே சியாம் சரண் போன்றவர்களை அனுப்பி, ஒத்துவராத தரப்புகளுக்கு மூளைச் சலவை செய்ய இந்தியா முற்படுகின்றது.

ஆனாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசு, இந்தியாவிற்கு நண்பனாக இருக்கப் போவதில்லையென்பதை இந்திய அரசுத் தரப்பு ஏற்க மறுத்தே வருகின்றது. சீன சார்பு நிலைப்பாட்டை இலங்கை அரசு எடுத்து விடக் கூடாதென, உதவுகின்றோம் என்ற பேரில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு குழி பறிப்பதிலேயே இந்திய அரசு முற்பட்டுள்ளது. சியாம் சரணின் உரையை ஒட்டுமொத்த குடாநாட்டு சமூகம், ஊடகங்களும் நிராகத்திருந்தமை, தமிழ் மக்களும் இனியும் நம்பி நட்டாற்றில் நிற்கப் போவதில்லையென்பதை வெளிப்படுத்தியே நிற்கின்றது.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

Good article !!!

  • கருத்துக்கள உறவுகள்
2041Nali22.jpg
  • கருத்துக்கள உறவுகள்

2041Thulai26_small.jpg

Edited by nunavilan

தனது கட்டுப்பாட்டை, செல்வாக்கை தாண்டி கூட்டமைப்பு செல்வதை புதுடெல்லி விரும்பாது. அண்மைய மேற்குலக பயணம் டெல்லிக்கு ஒரு அவமானமே. அதிலிருந்து மீள எடுக்கப்படும் செயல்களில் ஒன்றே சியாமின் வரவு. அவர் மக்களின் மனங்களை மாற்ற எண்ணி வந்திருந்தார், அதில் வெற்றி பெறவில்லை என்ற எண்ணமே உள்ளது.

நீண்டகால நோக்கில், மூன்றாம் தரப்பு ஊடாக தமிழர்கள் தீர்வை பெறவிரும்புவது, இந்தியாவுக்கு அதன் பாதுகாப்புக்கு நன்மையே.

  • கருத்துக்கள உறவுகள்
OgAAAEhlnJTbRrgtINQQAOz0po60-G3F7jNqcluGCUz68Q7A5x-kjim6eCtxi5-oqnO__Ab1R7DS40Z-xMP8R1OU40AAm1T1UNLy7yUKvw-1Ft2fIeYd__8GFjoI.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2041Nali22.jpg

புரட்சிகர தமிழ்தேசியன்,

இந்த பாரசீக கொங்கிரஸ் வானரங்கள் எல்லாம் தமிழ் ஈழம் வந்தால் தமிழ் நாட்டின் கை உயர்ந்து, பின் தென்னிந்திய திராவிடர்கள் வளர்ந்துவிடுவார்கள் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். தென்னிந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்க எங்களை அறுபது வருடமாக பலி கொடுத்து வருகிறார்கள்.

பார்சி கொங்கிரசின் சில்லறை அரசியல் எல்லாம் எங்களிடம் எடுபடாது. நாங்களும் முப்பது வருசமா உலகத்தை சுத்தி அலைஞ்சு கொஞ்சம் தேறிட்டம்.

வேங்கைகள் தமிழ் நாட்டில் களமாடுவதை கண்டு சந்தோசத்த அடக்கமுடியாமல் ஒரு பச்சை குத்திவிட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2041Thulai26_small.jpg

நுனாவிலான், உங்களுக்கும் ஒரு பச்சை.

மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியென்று இது ஒரு இரானிய குடும்ப கார்பரேசன்.

ஒரு டிரில்லியன் டாலருக்கு மேல் இவர்கள் குடும்ப சொத்து இருக்கும்.

இந்தியாவை நூறுவருடங்களுக்கு மேலாகா சுரண்டிவருபவர்கள். இவர்களிடம் தீர்ப்பு எல்லாம் எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

OgAAAEhlnJTbRrgtINQQAOz0po60-G3F7jNqcluGCUz68Q7A5x-kjim6eCtxi5-oqnO__Ab1R7DS40Z-xMP8R1OU40AAm1T1UNLy7yUKvw-1Ft2fIeYd__8GFjoI.jpg

அது சரி. மன்மோகன் சிங்கர்ட மகளே டாடி உங்கட பிச்சைகார நாட்டில் இருக்கமாடேன் என்று அமெரிக்காவில் இருந்து லாயராக அமெரிக்கர்களுக்கு சேவை செய்கிறார்.

இதையே கிளிண்டனின் மகளோ, அல்லது புஷ்ஷின் மகளோ செய்திருந்தால் அவர்களின் பதவி அங்கே போயிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.