Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தின் கூட்டாளி மலையாளியும் தமிழனை அடிக்கிறான்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைப் பெரியாறு அணையச் சாட்டு வைச்சு கேரள மாநிலத்தில் (தமிழ் மூவேந்தர் ஆண்ட பூமி) வாழ்ந்து வரும் மற்றும் பிரயாணம் செய்யும் தமிழக உறவுகள் மீது மலையாள கொலைவெறிக் கும்பல்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக தமிழக - கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள இடங்களில் கேரள வர்த்த நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்தான.. கேரள மாநிலம் நோக்கிய லாரி போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.

மலையாளிகள் நீண்ட காலமாகவே தமிழர் விரோதப் போக்கோடு செயற்பட்டு வருவதோடு மலையாளிகளாக இருந்தவர்களாலேயே ஈழத்தமிழர் மீதான 2009 இனப்படுகொலை உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு சிங்களத்தால் நடந்தேறச் செய்யப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எப்போது மாறும் மலையாளிகளின் இந்த தமிழர் விரோதப் போக்கு..???!

காவிரி நதி நீர் பிரச்சனையிலும்.. தமிழர்கள்.. கர்நாடகத்தில் அடி வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

=======================================================

கேரளாவில் தமிழக பஸ் மீது கல்வீச்சு

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள கணேசபுரம் அருகேயுள்ள குருக்கங்பாளையம் பகுதியை சேர்ந்த 50க்கும்மேற்பட்டோர் சபரிமலைக்கு மாலையணிந்து கடந்த சனிக்கிழமை சென்றனர்.

சாமி தரிசனம் முடித்து விட்டு தேக்கடி திரும்பும் வழியில் வண்டி பெரியார் அருகே பேருந்து வந்த போது பைக்கில் வந்த ஒரு சிலர் கற்களை கொண்டு தாக்கினர்.

இதில் டிரைவர் பக்கமுள்ள கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து குமுளி போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்தால் திமுக செயற்குழு உரிய முடிவு எடுக்கும்: கலைஞர் எச்சரிக்கை

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்தால் திமுக செயற்குழு கூடி உரிய முடிவு எடுக்கும் என திமுக தலைவர் கலைஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாடு குறித்து நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழுவிற்கு அவசரக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் வேண்டுகோளை ஒருபோதும் ஏற்கக்கூடாது. நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கேரள அரசுக்கு 2006ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

அணைப் பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் திமுக கூறியுள்ளது.

தமிழக மக்களுக்கு விரோதமாக நடைபெறும் வன்முறைச் செயல்களை தடுத்து நிறுத்த கேரள அரசும், மத்திய அரசும் முன்வரவில்லை. இந்த நிலைமை அங்கே தொடருமேயானால் அதுபற்றி திமுக செயற்குழு கூடி உரிய முடிவு எடுக்கும் என்று கலைஞர் கூறியுள்ளார்.

கேரளாவுக்கு வேலைக்கு சென்ற பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு!

தேனி மற்றும் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு சென்ற பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தனியார் பண்ணையில் வேலை பார்த்து வந்த 500க்கும் மேற்பட்ட பெண்களை அடிமைகளாக அடைத்து வைத்து பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் தேனி மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் திருமாவளவன் உண்ணாவிரதம்

முல்லை பெரியாறு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவனவன் டில்லியில் பார்மென்ட் வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

கேரளாவில் தமிழக ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லோக்சபாவில் விவாதம் எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வெளிநடப்பு செய்தார்.

கேரள வியாபாரிகளின் கடைகள் மீது தாக்குதல்

தஞ்சையில் உள்ள கேரள வியாபாரிகள் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ராயல் காஃபி பார், குளிர்பான கடைகள் மீது தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். தாக்குதலை தொடர்ந்து ஆலுக்காஸ் நகைக்கடை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் கேரள மாநிலத்தவரின் நகைக்கடைகள் அடித்து உடைப்பு

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள கேரள மாநிலத்தவரின் நகைக்கடைகளை தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சியினர் அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

கிராஸ்கட் சாலையில் அமைந்துள்ள 4 நகைக்கடைகளை தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சியினர் அடித்து உடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழர்கள் தாக்கப்படுவதை கேரளா வேடிக்கை பார்ப்பதா? விஜயகாந்த் கண்டனம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை கேரள சமூக விரோதிகள் அடித்து துன்புறுத்துகிறார்கள் என்றும், அதனால் அய்யப்ப பக்தர்கள் பாதிப்புக்கும், தவிப்புக்கும் உள்ளாகி உள்ளனர். அதோடு பஸ் பயணிகளும் தாக்கப்படுகிறார்கள் என்றும் அறிய வருகிறேன். இது மிகுந்த வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. இது தமிழ்நாடு, கேரளாவுக்கும் இடையே நிலவி வரும் உறவுக்கு நல்லதல்ல.

மக்களுடைய உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசின் கடமையாகும். பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்தாலும் கேரளாவைச் சேர்ந்த காவல்துறையினர் கண்டு கொள்ளாமல், அங்குள்ள சமூக விரோதிகளுக்கு அவர்கள் உடந்தையாகவும் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பதாகும்.இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசோ மௌனம் காக்கிறது. பிரச்சினை இந்த அளவுக்கு வளர மத்திய அரசுதான் காரணம். 2006 ஆம் ஆண்டே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை இந்திய அரசு நிறைவேற்றி இருந்தால் இன்று இந்த கலவரம் ஏற்பட்டு இருக்காது.

இந்திய அரசும் காங்கிரஸ் கட்சியின் கையில் தான் உள்ளது. கேரளாவிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கின்றன. இருப்பினும் அப்பாவித் தமிழ் மக்கள் கேரளாவில் தாக்கப்படுவதை இந்திய, கேரள அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கேரளாவைச் சேர்ந்த சமூக விரோதிகள் மீதும், இப்பிரச்சினைக்கு காரணமானவர்கள் மீதும் இந்திய அரசும், கேரள அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழக மக்கள் தாக்கப்படுவதை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பலவீனம் அணையில் இல்லை, கேரள அரசியல் வாதிகளிடம்தான் உள்ளதோ என்று சந்தேகம் எனக்கு வருகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

தமிழகம் எரிமலையாக வெடிக்கும்:

மதுரையை விட்டு கிளம்பும் முன் வைகோ ஆவேசம்

vaiko.jpg

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வு பிரச்சாரத்தை இன்று காலை 9 மணிக்கு மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கினார். தனது டெம்போ வானத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

தொடக்க விழா முடிந்து காலை 11.30 மணிக்கு கிளம்பிய வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,

முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தப்போகிறோம் என்று பொய்யான தகவலை கூறிவிட்டு, முல்லைப் பெரியாறு அணையை உடைக்க சதி செய்கிறது கேரள அரசு. பேபி அணையை வலுப்படுத்தப்போகிறோம் என்று சொல்லிவிட்டு ஒட்டுமொத்த அணையையும் உடைப்பதற்காக கடந்த 2006ம் ஆண்டு 1200 கிலோ வெடிபொருளை தயாராக வைத்துள்ள கேரள அரசு.

இந்த சதியை முறியடிக்க மத்திய ரிசர்வ் போலீசை பாதுகாப்புக்கு போட வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நிலைப்பாடுகளும் சரியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு கொந்தளிப்பை உருவாக்க வேண்டும் என்று கேரள அரசு ஒரு நாடகத்தை நடத்தியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழ்நாட்டில் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவில் மூன்று இடங்களில் மட்டுமே அந்த தடை உத்தரவு உள்ளது. கேரள மக்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இதற்கு ஆதரவு கரம் நீட்டாதீர்கள். கேரள அரசு தமிழன் தலையில் கல்லை போட நினைத்தால், 15 நாட்கள் கூட ஆகாது. ஒட்டுமொத்த கேரளாவுக்கு செல்லும் உணவு பொருட்களை தடுத்துவிட்டால் உங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். நான் முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்த வைகோவாக இருந்தால் ஆவேசமாக பேசிவிட்டு போயிருப்பேன். அடிக்கு அடி, உதைக்கு உதை. குண்டுக்கு குண்டு. ஆனால் தற்போது அப்படி பேசபோவதில்லை. நான் நல்லது செய்தால் யாரையும் பாராட்டுவேன். ஆனால் தப்பு

செய்தால் யாரையும் எதிர்க்க தயங்க மாட்டேன்.

வரும் 21ஆம் தேதி பொருளாதார முற்றுகை போராட்டம் நிச்சயமாக கம்பத்தில் கேரள செல்லும் நடத்தியே தீருவேன். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், கட்சி பாகுபாடின்றி ஒன்று சேர வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த 40 கோடி ரூபாயும், புதிய அணையை கட்ட 600 கோடி ரூபாயும் கேரள அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கேரளாவில் என்னுடைய கொடும்பாவியை 32 இடங்களில் எரிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி நான் கவலைப்படபோவதில்லை என்றார்.

நன்றி நக்கீரன்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை வெளியேற்றுவோம்: ததே.பொ.க.

mullaiperiyaru-arpattam-6-1.jpg

mullaiperiyaru-arpattam-6-2.jpg

mullaiperiyaru-arpattam-6-3.jpg

தமிழகத்திற்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை தமிழகத்திலிருந்து வெளியெற்றுவோம் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம் என வலியுறுத்தி (03.12.2011) மாலை, மதுரை காளவாசல் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கு அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்,

“கேரள அரசின் தலைமை வழக்கறிஞர் தண்டபாணி கேரள உயர்நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவும், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் இல்லையென்றும், ஒருவேளை அணை உடைந்தாலும் அத்தண்ணீர் முழுவதையும் முல்லை பெரியாறு அணைக்கு கீழ்ப்பகுதியில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை உள்வாங்கிக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். அணை பலவீனமடைந்திருப்பதாக அச்சம் ஏற்படுத்தும் பரைப்புரையை ஊடகங்கள் தான் செய்கின்றன என்றும் அவர் கூறினார். இது தான் உண்மை நிலை.

ஊடகங்கள் மட்டுமின்றி, இதற்கு நேர் மாறாக காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தமிழனப்பகை வெறியைப் பரப்புகின்றன. முல்லைப் பெரியாறு அணையை விட இடுக்கி அணையின் கொள்ளளவு 7 மடங்கு பெரியது. எனவே எந்த நிலையிலும் அங்கு அச்சப்படுவதற்கு அடிப்படையே இல்லை. வேண்டுமென்றே தமிழினப் பகைப் பரப்புரை கேரளத்தில் நடக்கிறது.

கேரளத்தின் அடிப்படை உணவுத்தேவையை தமிழகமே நிறைவு செய்கிறது. நாள் தோறும் 700 டன் அரிசி தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்கிறது. கேரளத்தின் முழு இறைச்சித் தேவையையும், காய்கறி, முட்டை ஆகியவற்றின் தேவையையும் தமிழ்நாடு தான் நிறைவு செய்கிறது. நெய்வேலி இரண்டாம் அனல் மின்நிலையத்திலிருந்து நாள்தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்திலிருந்து கேரளா செல்கின்றது. தமிழ்நாட்டில் வாழும் 30 இலட்சம் மலையாளிகள் வணிக அரசர்களாகவும், உயர் பதவிகளிலும் கோலோச்சுகிறார்கள். ஆனால், இதற்கான நன்றியுணர்ச்சி சிறிதும் இல்லாமல் தமிழினப் பகையோடு மலையாளிகள், முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து தமிழ்நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.

குமுளியில் தமிழர்களின் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. இது தொடருமேயானால், தமிழகத்திலிருந்து மலையாளிகள் அனைவரையும் வெளியெற்றும் போராட்டத்தை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் கேரளத்திற்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்து பொருள் போக்குவரத்தை முடக்க வேண்டும். நெய்வேலி மின்சாரம் கேரளாவிற்கு செல்வதைத் தடுக்க வேண்டும். தமிழர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று பேசினார்.

நன்றி நக்கீரன்.

இந்தக் கொந்தளிப்புச் சூழலில்.. சிங்கள.. கேரள கூட்டுச் செயற்பாடுகளை இனம் காட்டி.. ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கு துணை போன.. மலையாளி... நம்பியார்.. எம் கே நாராயணன் போன்றவர்களின் செயற்பாடுகளையும் தமிழகத்தில் வெளிக்கொணர்ந்து.. இந்திய மத்திய அரசின் தமிழர் விரோத செயற்பாட்டின் நீண்ட செயற்பாட்டை முன்னுறுத்தி.. ஈழத்தமிழர்கள் மீதான போர்க்குற்றவாளிகளை தண்டிக்க தமிழகத்தில் நல்ல விழிப்புணர்வையும் பலமான ஆதரவுக் குரல்களையும் ஏற்படுத்த வேண்டும். பட்டிதொட்டி எங்கும்.. தமிழர்களை இது விடயத்தில் அறிவூட்டி.. ஒற்றுமைப்படுத்த வேண்டும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களை அழித்ததில் ருசி கண்ட மலையாளிகள்,

தமிழகத் தமிழனையும் அழிக்க முயற்சிக்கின்றான்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு ஆரம்பத்திலேயே... கேரளா மீது நடவடிக்கை எடுத்திருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் உள்ள ஆறு கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் அவர்களிடம் நல்ல தமிழ் உணர்வும் வீரமும் விவேகமும் இருக்கின்றது ஆனால் அவர்களுக்கு ஒரு நல்ல தலைவன் கிடைக்கவில்லை எமக்கு தேசியத்தலைவர் கிடைத்ததுபோல் அவர்களுக்கு அப்படியொரு தலைவன் கிடைத்திருந்தால் டில்லியின் அடக்கு முறைக்கும் காவிரி நீர் பிரச்சனைக்கும் முல்லை பெரியார் அணைக்கட்டு பிரச்சனைகளுக்கு எதிரான வலுவான ஒருபோராட்டம் நடைபெற்று தமிழன் தன் தனித்துவத்தை உலகறிய வைத்திருப்பான் என்ன துரதிஷ்டம் என்னவெனில் தமிழருக்கு கிடைத்த பெரும் பாலான தலைவர்கள் டில்லிக்கு விலை போவபர்களாக இருந்திருக்கின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மையும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களே தமிழர்களை ஆளக்கூடிய சூழ்நிலை தமிழகத்துக்குப் பெரிதும் வாய்த்ததில்லை..! :unsure:

தமிழ் நாட்டில் உள்ள ஆறு கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் அவர்களிடம் நல்ல தமிழ் உணர்வும் வீரமும் விவேகமும் இருக்கின்றது ஆனால் அவர்களுக்கு ஒரு நல்ல தலைவன் கிடைக்கவில்லை எமக்கு தேசியத்தலைவர் கிடைத்ததுபோல் அவர்களுக்கு அப்படியொரு தலைவன் கிடைத்திருந்தால் டில்லியின் அடக்கு முறைக்கும் காவிரி நீர் பிரச்சனைக்கும் முல்லை பெரியார் அணைக்கட்டு பிரச்சனைகளுக்கு எதிரான வலுவான ஒருபோராட்டம் நடைபெற்று தமிழன் தன் தனித்துவத்தை உலகறிய வைத்திருப்பான் என்ன துரதிஷ்டம் என்னவெனில் தமிழருக்கு கிடைத்த பெரும் பாலான தலைவர்கள் டில்லிக்கு விலை போவபர்களாக இருந்திருக்கின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மையும்.

சிங்கள அரசின் அடக்கு முறையை விட மிக மோசமான மறைமுகமான அடக்கு முறையை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது இதைக்கூட புரிய விடாது பாதுகாத்து வருவதே தமிழ்நாட்டு முதல்வர்கள்தான் இந்த நிலையில் மக்களை வழி நடத்த சிறந்த தலைவர் ஒருவர் வருவாரா ?

உலகத்தமிழர்கள் அழிவில் இன்பம் காண்பது - காங்கிரஸ்.

அவர்களாலேயே ஈழத்தமிழன், தமிழகத்தமிழன், உலகத்தமிழன் அழிக்கப்படுகின்றான்.

Edited by akootha

383115_255416944517495_100001475754965_740155_1344310719_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.