Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்...

Featured Replies

எம்ஜிஆர் ஐப் பற்றிய பதிவிற்கு நன்றி சிறுத்தை.

ஈழப் போராட்டத்திற்கு நிறைய உதவிகள் செய்தவர். வெற்றுப் பேச்சுக்கள் இல்லாமல் செயலில் காட்டியவர். மாநில முதல்வருக்கான அதிகார வரம்புகளையும் மீறிச் செயற்பட்டவர். புலிகளின் அனுதாபியாக இருந்தும் கூட மற்றைய இயக்கங்களுக்கு தொல்லை கொடுக்கவில்லை.

  • Replies 167
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எம் ஜி ஆர் பற்றிய பதிவிற்கு நன்றி சிறுத்தை

  • தொடங்கியவர்

மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்:

நெஞ்சை தொடும் சம்பவம்

mullai-covai-1.jpgmullai-covai-2.jpgmullai-covai-3.jpgmullai-covai-4.jpgmullai-covai-5.jpgmullai-covai-6.jpgமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையால் கேரள வாழ் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு பெரும் காட்டு வழிகளில் இருட்டு நேரங்களில் நடையாய் நடந்து தமிழகத்திற்குள் வருவதைப் பார்த்து கொந்தளித்துப் போயிருக்கின்றனர் தமிழக மக்கள்.

இந்த முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையையும், தமிழகத்தை நம்பியே கேரளா இருப்பதை கேரள மக்களுக்கு உணர்த்தவும் வேண்டி கேரளா செல்லும் 13 வழித் தடங்களை மறிக்கும் போராட்டத்தை முன்னின்று நடத்தியது ம.தி.மு.க

வாளையாறு வழித் தடத்தில் க.க சாவடியில் நடந்த உணர்ச்சி மிகப் பெருங் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது... கேரள ரெஜிஸ்ட்ரேஷன் கொண்ட ஆம்புலன்ஸ் வேன் சைரன் எழுப்பிக் கொண்டு வர…உயிர் காக்க போகும் அந்த வாகனத்திற்கு வழி விடுங்கள் என்று மைக்கில் குரலொலிக்க.. சாலையை மறித்து நின்ற மொத்தக் கூட்டமும் வழி விட்டு நிற்க அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பின்னாலயே கேரளா ரெஜிஸ்ட்ரேசன் கொண்ட ஒரு டூ வீலரில் ஒரு மலையாளி வேகமெடுப்பதை பார்த்து டூ வீலரை தடுத்து விட்டனர் போராட்டக்காரர்கள். ஒரு கும்பல் வண்டி சாவியைப் பிடுங்கப் போக.

அடிடா அந்த மலையாளத்துக்காரன என இன்னொரு கும்பல் பாய வெல வெலத்துப் போன அந்த மலையாளிக்கு போலீஸ்காரர்கள் உதவப் போனாலும் யாரும் கேட்பதாயில்லை. ஆனால் அந்த மலையளியோ..என்டச்சன் மரிச்சுப் போயி. ஆம்புலன்ஸ்ல ஏற்றி;க் கொண்டு போகுனுண்டு..என உயிருக்குப் பயந்து பதறுவதைப் பார்த்தவர்கள்…விட்ருங்கப்பா அந்த ஆளை... இறுதிக் காரியத்துக்காக போற ஒரு மனுஷன நிறுத்துனதே தப்பு.  கேரளாக்காரனுகளுக்கு  தான் உணர்ச்சி இல்லாம நம்ம மக்கள அடிச்சு துரத்துறனுகன்னா நாமளும் அதையே செய்யறதுல என்ன உணர்வு இருக்கு.? மலையாளிக்கும் தமிழனுக்கும் வித்தியாசமிருக்கு .அதை அவுங்க உணர்றதுக்கான சம்பவமா கூட  இது இருக்கலாம். அந்தாள விட்ருங்க..என கூட்டத்தை விலக்கி ஒருவர் அனுப்பி வைக்க... அந்த மலையாளி கண்ணீர் விட்ட படியே அங்கிருந்து நகர்ந்து போனார்.

கோவை அருள்குமார்

நன்றி தெரிவித்த தோழர்களுக்கு நன்றி .. ஏன் இந்த பதிவுக்கு நன்றி சொல்ல மாட்டியளா ? போகட்டும் பச்சை புள்ளி வழங்காமல் செல்லும் அனைத்து தோழர்களையும் வன்மையாக கண்டிக்கிறேன்.. :D

  • தொடங்கியவர்

ஒட்டல் சப்ளையர் பயல்கள் காமெடி - 2 நாய்கறி கொமெடி...

http://www.youtube.com/watch?v=7J49VIUyX9g

மாதர் சங்க தலைவி பெண்ணுரிமை லில்லி காமெடி - 1

http://www.padangal.com/free-live-tamil-movies-watch-online/porantha-veeda-puguntha-veeda-video_841e8b746.html#

சிறுத்தை

  • தொடங்கியவர்

நாம் இருவர் நமக்கு இருவர்..

நாம் இருவர் நமக்கு ஒருவர்..

நாம் இருவர் நமக்கேன் ஒருவர்..?(பிள்ளையே இங்க மட்டும் பெத்துக்கபடாது)

(சொன்னது 30 வய்சுக்கு மேல் மோனபாஸ் குறைய ஆரம்பிக்கும்)

இதெல்லாம் நாம் கவர்மெண்டு ஆஸ்பதிரி முன்பும் அனைத்து தமிழர்நாடு பஸ்களின் பின்புறமும் கண்டுள்ளேன்... போக கவர் மெண்டு வயசு வித்தியாசம் ஆண்களுக்கு 23 பெண்களுக்கு 18 என ஒதுக்கி உள்ளார்கள்.. எனிவே வயது கூடினவரே அல்லது குறைவானவரை கலியாணம் கட்டலாம்.. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் ... அது குறித்து வாழ்க இவ்வயையகம் என அதற்கும் இடைப்பட்ட்வர்கள் கருத்து எழுதும் போதும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது...

  • தொடங்கியவர்

தோழர்களுக்கு பிரியும்...... சிகண்டிகளுக்கு பல பிலிங்கிஸ் புரியாது.. எனிவே...

ஐயாம் சிலீப்பிங்கு... சிறுத்தை :D

  • தொடங்கியவர்

கருப்புக் கொடிகளுடன் தயாராகும் வைகோ, விஜயகாந்த்- பதட்டத்தில் தமிழக போலீஸ்!

25-vaiko-pm-vijayakanth300.jpg

சென்னை : சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாளை கருப்புக் கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், அவரைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் அறிவித்திருப்பதால் சென்னை போலீஸார் படபடப்புடன் உள்ளனர். எந்த இடத்திலும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டு விடக் கூடாதே என்ற பதட்டத்துடன் அவர்கள் பாதுகாப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு மத்திய அரசு ஆதரவாக செயல்படுகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் வைகோ. மேலும், பிரதமருக்கு நாளை கருப்புக் கொடி காட்டப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதேபோல விஜயகாந்த்தும் தனது தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று அறிவித்துள்ளார். எந்த முகத்தை வைத்துக் கொண்டு பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார் என்றும் அவர் காட்டமாக கேட்டுள்ளார்.

இதேபோல, காரைக்குடிக்கு பிரதமர் வரும்போது அங்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று விவசாய அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் அறிவித்துள்ளன. மேலும், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் சென்னை, காரைக்குடி, திருச்சி போலீஸார் கடும் பதட்டத்துடன் உள்ளனர். எந்த இடத்திலும் கருப்புக் கொடி காட்டப்பட்டு விடக் கூடாதே என்ற படபடப்புடன் உள்ளனர். இதனால் பிரதமர் செல்லும் வழியெல்லாம் பெருமளவில் போலீஸார் குவிக்கப்படவுள்ளனர். பலத்த பாதுகாப்பும் போடப்படுகிறது.

சென்னை ராஜ்பவனிலிருந்து பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை ரகசிய கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்படுகின்றன. ஆயுதப் படை போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்து ஏற்கனவே வந்து விட்ட 6 உறுப்பினர்களைக் கொண்ட பிரதமரின் பாதுகாப்பு்ப் படை நிபுணர்களும் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்துள்ளனர்.

இதேபோல திருச்சி, காரைக்குடி ஆகிய இடங்களிலும் பெருமளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் காரைக்குடியில் ஆயிரக்கணக்கில் விவசாயிகளைத் திரட்டிக் கொண்டு வர பல்வேறு விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதால் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

http://tamil.oneindia.in/news/2011/12/25/tamilnadu-farmers-mdmk-dmdk-cadres-ready-black-flag-pm-aid0091.html

டிஸ்கி:

தலைவர் வைக்கோ கருப்பு கொடி காட்டுவது சரி .. இவர் விஜயகாந்து என்னதிற்கு காட்டவேண்டும்.. ? பிரதமர் செல்லும் சாலையில் இவர் நடந்து போனாலே கருப்பு கொடி காட்டின மாறி தானே.. ? ஒரே டமாஸ்தான்...

215.gif

சிறுத்தை

  • தொடங்கியவர்

2meztar.jpg

Dear friend,

2011 was another busy year for Act Now! At the beginning of the year we unveiled our Strategy promoting our solution to the Sri Lankan conflict: A UN supervised Referendum. Some of our other highlights: In February, Tim Martin confronted Secretary General Ban Ki Moon in Oxford and put him on the spot and asked him why he wasn't investigating Sri Lankan war crimes and in March Tim did the same to Sonia Gandhi! Our GAP boycotts were relaunched in conjunction with US boycotters but lack of physical support from the global Tamil diaspora made this hard to sustain throughout the year but we also took part in a boycott of the SL cricket team whilst they were on tour!

At the Tamil Mullivaikal Remembrance event in London in May we launched a celebrity backed global petition to the UN Human Rights Council, asking members to ask the Security Council to back an independent investigation on war crimes at http://www.act-now.info/Site1/War_Crimes_Appeal.html The campaign continues.

We also provided support to Cullum Macrae whilst he was making Sri Lanka's Killing fields and we used the UN report and 'Killing Fields' documentary to put pressure on the UK Government asking them to take sides, our side! This included campaigning in MP Liam Fox's constituency given his pro-Sri Lankan Government stance. His resignation from the Defence Ministry was greeted with delight!

Finally, we have been campaigning via lobbying, demonstration and petitioning to prevent Tamil refugees from being sent back to torture and worse in Sri Lanka. Whilst some have been saved we must keep up the pressure on the Government by pointing out Sri Lanka's appalling human rights record. This included a campaign in Theresa May's constituency (The Home Secretary).

Next year, we will continue to fight for Justice for the Tamil community so that one day they will be able to live in peace in their own state in Sri Lanka. So please help us in that quest?

Until then Act Now Directors Tim, Graham, Yogi and the Act Now team wish you a Merry Christmas and New Year, we thank those that have continued to support Act Now financially, all staff at Act Now are volunteers but without the generosity from our supporters none of our work would have been possible!

Act Now: www.act-now.info and info.actnow@gmail.com

டிஸ்கி:

இவர்கள் யாரு நல்லவர்களா? கெட்டவர்களா? கருணா ஆட்களா ? ஏன் எனக்கு மெயில் அனுப்பினார்கள்..? அங்கிட்டு வெளிநாட்டிலே சேரமான் கோஸ்டி உருத்திரகுமார் கோஸ்டி.. இமானுவேல் கோஸ்டி என பல பிரிவுகள் உள்ளன இவர்கள் யாரு..? எந்த பிரிவை சார்ந்தவர்கள்..? தோழர் அகூதா வந்து விளக்கவேண்டும்..

சிறுத்தை

  • தொடங்கியவர்

விஜய காந்து காமெடி தொன்னை கவுண்டர் -- 1

விஜய காந்து காமெடி தொன்னை கவுண்டர் -- 2

விஜய காந்து காமெடி தொன்னை கவுண்டர் -- 3

சிறுத்தை

எம்ஜிஆர்... ஒரு நிகரில்லா மனிதரின் நினைவு நாள்!

24-mgr-5-300.jpg

உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?'

'போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.

உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!

அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்... கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.

அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. இன்றும் அந்தப் பெரியவர் இருக்கிறார். அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!

இன்றைக்கு ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா... அல்லது இதையெல்லாம் அனுமதிக்கும் பெரிய மனசுதான் யாருக்காவது வருமா?

மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!

அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!

'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.

பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!

புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.

எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!

எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!

வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!

(இன்று டிசம்பர் 24 புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவு நாள்)

http://tamil.oneindi...ry-aid0136.html

Ivory-Candles-Animated-candles-8001706-550-537.gif

நன்றி தோழா. புரட்சித் தலைவனை நினைவுகூர்ந்த புரட்சிச் சிறுத்தைக்கு ஒரு பச்சை

நன்றி தெரிவித்த தோழர்களுக்கு நன்றி .. ஏன் இந்த பதிவுக்கு நன்றி சொல்ல மாட்டியளா ? போகட்டும் பச்சை புள்ளி வழங்காமல் செல்லும் அனைத்து தோழர்களையும் வன்மையாக கண்டிக்கிறேன்.. :D

பாக்கிறவுண்டில நம்ம வை.கோ படம் இருக்கிறது எதையோ சொல்லவருது.

தமிழனுக்கு உள்ள தன்மானத்தைக்காட்டிலும் அவனிடமுள்ள மனிதாபிமானம் பெரிது என்பதனை இந்த சம்பவம் வெளிப்படையாகச் சொல்லி நிற்கின்றது.

இதற்கும் ஒரு பச்சை. :)

  • தொடங்கியவர்

பாக்கிறவுண்டில நம்ம வை.கோ படம் இருக்கிறது எதையோ சொல்லவருது.

தமிழனுக்கு உள்ள தன்மானத்தைக்காட்டிலும் அவனிடமுள்ள மனிதாபிமானம் பெரிது என்பதனை இந்த சம்பவம் வெளிப்படையாகச் சொல்லி நிற்கின்றது.

இதற்கும் ஒரு பச்சை.

நன்றி தோழர் புலி...வெறும் வாய்சமால் கோஸ்டிகளை விட நேரில் கோர்ட்டில் ஆஜராவதாலே வைக்கோ அவர்களை பிடிக்கும்.. அரசியல் வாதி வைக்கோவை விட லோயர் வைக்கோ MA.BL அவர்கள் சூப்பர்சிறுத்தை
  • தொடங்கியவர்

04_vaiko_772701e.jpg

சிறுத்தை

மற்றவர்களை போல ஊழல் வாதிகளை காப்பாற்ற ஒரு நிமிடம் போதாது வைக்கோ அவர்களுக்கு.. இதை போல 2ஜி 3ஜி என ஆஜராகி இருந்தால்.. இது 3வர் தூக்கு தண்டனை கேசில் ஆஜராகி விட்டு வரும் வைக்கோ.. ஆனால் எந்தனை பேர் வெளிநாட்டில் இருந்து மிஸ்டு கால் அனுப்பி இருக்கிருறீர்கள் என தெரியவில்லை... களம் திறந்தவுடம் பெரிய ரத்த களறி ரண களறி ஆக போவது நிச்சயம்...

டிஸ்கி:

இங்க கூடி கூடி கும்மியடிக்க களம் நடத்தபடவில்லை .. தமிழர் போராட்டம் தமிழீழ விடுதலை ஆகியவற்றிக்கு களம் நடத்தபடுகிறது..

  • தொடங்கியவர்

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நமது தம்பிகள்

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை இரத்து செய்ய வேண்டும்

என்பது தமிழர்களின் ஒட்டு மொத்த நியாய உணர்வாகும். அதோடு தூக்குத்

தண்டனையை நிரந்தரமாக ஒழித்திட வேண்டும் என்பது நமது மனிதாபிமான

கோரிக்கையாகும். இந்த உணர்வை ஒவ்வொரு தமிழரும் வெளிப்படுத்த 9282221212

என்ற அலைபேசி எண்ணிற்கு ஒரு தவறிய அழைப்பை (மிஸ்ட் கால்) கொடுக்குமாறு

தமிழர்கள் அனைவரையும் நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தவறிய SMS அனுப்ப என்னிடம் கோடிங்கு உள்ளது..GSM மோடம் வழியாக...NowSms வழியாக

try

{

int count=Integer.parseInt(request.getParameter("count"));

String a1="";

String a2="";

String a3="";

String a4="";

String a5="";

String a6="";

for(int i=1;i

ஏண்டா என் பதிவை பாதியில் கட் செய்து போட்டீர்கள்..இதெல்லாம் ஒரு பிழைப்பு... தூத்தேறி...

  • தொடங்கியவர்

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத

சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ )

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழர்கள் சிலர், புத்தாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, அவருடைய கணவரும், பின்னணி பாடகருமான கிரிஷ் ஆகியோர் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது.

அந்த விழாவில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூன்று பேரும் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளரான கருணா கோஷ்டியினர் அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூவரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜீவா தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார்.

இதுகுறித்து ஜீவா, அந்த விழா சர்ச்சையாகி இருக்கிறது. தமிழர்கள் மனதை புண்படுத்தும் விழாவில், நான் கலந்துகொள்ள மாட்டேன். சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டேன்’’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று (26.12.2011) செய்தியாளர்களை சந்தித்த சங்கீதா -கிரிஷ் ஜோடி, யார் என்ன சொன்னாலும் சுவிஸ் போவோம். கலைஞர்களை கட்டுப்படுத்தாதீர்கள், அரசியலாக்காதீர்கள், மிரட்டாதீர்கள், எனக்கு தைரியம் இருக்கிறது, யார் தடை போட்டாலும் நாங்கள் சுவிஸ் செல்வது உறுதி என்று திமிர் பேட்டி அளித்தார்கள்.

பிரபல பின்னணிப்பாடகர் மனோ உட்பட ஏராளமான பிரபல கலைஞர்கள், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை செல்வதையோ, ராஜபக்சே சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ தவிர்த்திருக்கிறார்கள்.

தமிழர்களிடையே மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள். ஆனால் சங்கீதா - கிரிஷ் என்கிற துக்கடாக்கள், திமிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=67827

டிஸ்கி:

கொல்டி ஜீவாவுக்கு இருக்கும் உணர்வு கூட இந்த பன்னாடைகளுக்கு இல்லை..சுவிஸ் வாழ் தமிழீழ சொந்தங்கள் உடனே அங்கிட்டு ஆறு ஏதாவது இருந்தால் அல்லது ரோட்டோரம் கற்களை பொறுக்கி.. அழுகிய தக்காளி... முட்டை ஆகியவற்றை கலெக்ட் செய்து இந்த துரோகிகளை .. கருணா கைக்கூலிகளை அடித்து கலைக்க வேண்டும் இன்னும் ஒரு தடவை பாரின் டிரிப் ஆசையே வரகூடாது மற்றும் ஏனைய அரிதார கோஸ்டிகளுக்கும் இது ஒரு பாடமாக இருக்கவேண்டும்...

சிறுத்தை

  • தொடங்கியவர்

தோழர்கள் ஆன் லைனில் பெண்டு நிமிர்த்தி பிரேக் போட வேண்டிய முகவரி:

Kirsh

Address 236/8, 6th Street,

Janaki Nagar, Valasaravakkam,

Chennai 600087.

E-mail: krishsinger@yahoo.com

டிஸ்கி:

நான் ஏற்கனவே பெண்டு நிமிர்த்தும் விதமாக மெயில் அனுப்பிவிட்டேன் இப்போ பெப்சி உங்கள் சாய்ஸ்!!.... :D

சிறுத்தை

அன்புக்குரிய கிரிஷ் மற்றும் சங்கீதா அவர்களே! நான் ஈழப்போராட்டத்தில் ஆழமான ஒரு ஈடுபாடுள்ளவன் எனும் வகையில்,

தாங்கள் இந்த விழாவுக்குப் போவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இது தங்களது தொழில். இவ்வளவு எதிர்ப்புக்களைக் காட்டுபவர்கள்...... தங்களுக்கு சோறு போட மாட்டார்கள்!!! ஏற்கனவே சிறீலங்கா போய்விட்டு மீளத்திரும்பி தங்களை நிரூபித்தவர் நீங்கள்.

மனதில் எதைப்பற்றியும் யோசிக்காமல் , சந்தோசமாக போய் வாருங்கள். இதில் தப்பு எதுவுமே இல்லை என்பது என் மனதார்ந்த எண்ணம்.

வாழ்த்துக்கள்.......... தங்கள் கலைப்பயணம் தொடரட்டும்!

என்றும் அன்புடன்....

அன்புத் தம்பி,

கவிதை

இவ்வாறு மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றேன் நண்பரே...! :)

என் விருப்பமும்.... எண்ணமும்.... அதுதான்! :)

Edited by கவிதை

  • தொடங்கியவர்

அன்புக்குரிய துரோகிகள் கிரிஷ் மற்றும் சங்கீதா அவர்களே! நான் துரோக கைகூலி போராட்டத்தில் ஆழமான ஒரு ஈடுபாடுள்ளவன் எனும் வகையில்,

தாங்கள் இந்த விழாவுக்குப் போவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இது தங்களது தொழில். இவ்வளவு எதிர்ப்புக்களைக் காட்டுபவர்கள்...... தங்களுக்கு சோறு போட மாட்டார்கள்!!! நாங்கள்தான்(துரோகம்தான்) சோறு போடுவம்.. ஏற்கனவே சிறீலங்கா போய்விட்டு பயந்து மீளத்திரும்பி தங்களை நிரூபித்தவர் நீங்கள்.

இந்த முறை மனதில் எதைப்பற்றியும் யோசிக்காமல் , சந்தோசமாக போய் வாருங்கள். இதில் தப்பு எதுவுமே இல்லை என்பது என் மனதார்ந்த எண்ணம். துரோகமே சோறு போடும்..

வாழ்த்துக்கள்.......... தங்கள் துரோக கலைப்பயணம் தொடரட்டும்!

என்றும் அன்புடன்....

அன்புத் தம்பி,

சிறுத்தை

  • தொடங்கியவர்

துரோக கை கூலிகளை.. கருணா கைக்கூலிகளை உடனடியாக கண்டறிந்து விலக்க வேண்டும் என நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கபடுகிறது... ரசிகா .. பின்னர் சங்கீதா என பெயர் மாற்றி தில்லாங்கடி தனம் பண்ணூம் ஒன்னாம் நம்பர் பாப்பாத்தி சிரங்கத்துகாரி ரசிகா.. தமிழர் விரோத சக்தி ... இவளை எத்தனை புரடியுசர் பார்த்தான் என்ற லிஸ்டு நமக்குதான் தெரியும் . எனவே இந்த தமிழர் விரோத கைக்கூலிகளை ஆதரிக்கும் அத்தனை கை கூலிகளுக்கும் உடனடியாக ஒருவாராம் தடை விதிக்க வேண்டும்

டிஸ்கி:

ஏழையின் சொல் அம்பலத்தில் ஏறாது என எனக்கு தெரியும்.. ஐயாம் சிலீப்புங்கு சண்டை போட விருப்பமுள்ளவர்கள் இங்கு பதியவும் நாளை பதிலடி கொடுக்கபடும்

சிறுத்தை

டோன்ட் வொறி தோழா. மத்தவங்கட விடு. உங்களுக்கு சரி எண்ணு படுறத செய்யுப்பா. அது போதும். சீக்கிரமா உள்ள முன்னேற்றி வாற வழிய யோசிங்க. கூல் தோழா. :)

Edited by புலி

அன்புக்குரிய துரோகிகள் கிரிஷ் மற்றும் சங்கீதா அவர்களே! நான் துரோக கைகூலி போராட்டத்தில் ஆழமான ஒரு ஈடுபாடுள்ளவன் எனும் வகையில்,

தாங்கள் இந்த விழாவுக்குப் போவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இது தங்களது தொழில். இவ்வளவு எதிர்ப்புக்களைக் காட்டுபவர்கள்...... தங்களுக்கு சோறு போட மாட்டார்கள்!!! நாங்கள்தான்(துரோகம்தான்) சோறு போடுவம்.. ஏற்கனவே சிறீலங்கா போய்விட்டு பயந்து மீளத்திரும்பி தங்களை நிரூபித்தவர் நீங்கள்.

இந்த முறை மனதில் எதைப்பற்றியும் யோசிக்காமல் , சந்தோசமாக போய் வாருங்கள். இதில் தப்பு எதுவுமே இல்லை என்பது என் மனதார்ந்த எண்ணம். துரோகமே சோறு போடும்..

வாழ்த்துக்கள்.......... தங்கள் துரோக கலைப்பயணம் தொடரட்டும்!

என்றும் அன்புடன்....

அன்புத் தம்பி,

சிறுத்தை

:lol: :lol: :lol:

எனக்கு விழுந்து விழுந்து சிரிக்கோணும் போல இருக்கு. அதுக்கு முதல்..... இந்த காணொளியினைப் பாருங்கள்!

ஏனென்று புரியும்....! :lol:

  • தொடங்கியவர்

:lol: :lol: :lol:

எனக்கு விழுந்து விழுந்து சிரிக்கோணும் போல இருக்கு. அதுக்கு முதல்..... இந்த காணொளியினைப் பாருங்கள்!

ஏனென்று புரியும்....! :lol:

2e0myiq.jpg

உரைய டைப் பண்ணி முடிச்சதும் முதலில் லாகின் பண்ண அடிச்சு வந்திருந்த சிறுத்தை என்ற பயனர் பெயரை கவனிக்கவே இல்லை மொத்தமாக காப்பி பட்டனை அழுத்தியதும் அதும் சேர்ந்து வந்துட்டுது..நான் யார் என்னா எனறு கள தோழர்களுக்கு தெளிவாக தெரியும்..

டிஸ்கி:

http://www.youtube.com/watch?v=LcZKkpqF-iA

பொட்டி கடலை வேர் கடலை.. நிலக் கடலை..

ஆள் இல்லாத நேரத்தில் ஆராவாரம் செய்யும் நீ

இணைத்த காமெடி பார்த்தால் சிரிப்பே வரல

  • தொடங்கியவர்

இது ராஜபாட்டை அல்ல

Podi-Paiyan-Polave-Rajapattai-Tamil-song-lyrics.jpg

மாஸ் ஹீரோ யாருடைய பெயர் போஸ்ட‌ரில் இருந்தாலும் முதல் மூன்று நாட்களுக்கு சென்னை தியேட்ட‌ரில் கூட்டம் அம்மும். படம் வெற்றியா இல்லை மட்டையா என்பதை இந்த ஓபனிங்கை வைத்து கணிக்க முடியாது என்பதால் ஒரு மாறுதலுக்கு தென் கோடிக்கு ஜூட். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு, முல்லைப் பெ‌ரியாறு.

அணை பிரச்சனையால் கேரளாவுக்கு செல்லும் முக்கிய சாலையெல்லாம் மூடப்பட்ட நிலையில் சில பாதைகள் மட்டுமே பிரச்சனையிலிருந்து ஒதுங்கியிருக்கிறது. அதில் ஒன்று என்ஹெச் 47. நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலை. ஒருகாலத்தில் திருவிதாங்கூர் மகாராஜாக்கள் செல்லும் ராஜபாட்டையாக இருந்ததாம் இது. களியக்காவிளை தமிழ்நாடும், கேரளாவும் பி‌ரியும் எல்லை. தேனிக்கு நேர்மாறாக இங்கு எந்த பதற்றமும் இல்லை. ஆனாலும் மலையாளிகள் உள்ளேவர பயப்படத்தான் செய்கிறார்கள். அதேபோல் தமிழர்களும். விளைவு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு பொருள்கள் வாங்கவரும் மலையாளிகள் யாரும் எல்லைக் கோட்டை தாண்டவில்லை. வியாபாரம் டல் என்ற குரலை எங்கும் கேட்க முடிகிறது. மலையாளிகளுக்கும் சிரமம்தான். பச்சைக் கறிக்கு ஆட்டுக்கறி விலை கொடுப்பது என்றால் சும்மாவா?

பழைய ராஜபாட்டையில் ஏழு கிலோ மீட்டருக்குள் மூன்று தியேட்டர்களில் விக்ரமின் ராஜபாட்டையை ‌ரிலீஸ் செய்திருக்கிறார்கள். முதல்நாள் ஈவ்னிங் ஷோவுக்கு அரக்கப்பரக்க ஓடி வந்தால் தியேட்டர் வெறிச். உள்ளே நுழைந்தால் பின்பக்கம் நாலு வ‌ரிசையில் சுமார் நாற்பது ஆட்கள். இதுவே லக்கி பிரைஸ் என்பது போல் ச‌ரியாக ஆறேகாலுக்கெல்லாம் படத்தைப் போட்டார்கள்.

விக்ரம் ‌ஜிம் பாய். தாடைவரை கிருதா வைத்து சர்க்கஸ் வித்தைக்காரனாக ஒரு கெட்டப். முதல் கால்மணி நேரம் நிஜம் எது, சினிமா ஷூட்டிங் எது என்று கொஞ்சம் குழம்பித்தான் போகிறோம். இந்த குழப்பம் காரணமாக நிஜமான வில்லன்களைப் பார்த்தாலும் ஷூட்டிங்கோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த ஹேங்ஓவ‌ரிலிருந்து மீண்டு வரும்போது கதைக்குள் நுழைகிறார் இயக்குனர்.

நில மோசடி செய்யும் ஒரு பெண் மினிஸ்டர். அவருக்கு பக்கபலமாக இருக்கும் வாப்பா எனும் சக்திவாய்ந்த தாதா. மினிஸ்ட‌ரின் பார்வை அனாதை ஆசிரமம் ஒன்றின் மீது விழுகிறது. மினிஸ்ட‌ரின் ஆசைக்கு ஆசிரமம் வைத்து நடத்தும் பெ‌ரியவ‌ரின் மகனே உடந்தையாக இருக்கிறான். இந்நிலையில் விக்ரம் ரவுடிகளிடமிருந்து பெ‌ரியவரை காப்பாற்றி பாதுகாக்க, வில்லன்களுடன் நேரடி மோதல். மற்றவற்றை நடுராத்தி‌ரி எழுப்பி கேட்டாலும் நாலு வயசு குழந்தை ஒப்பிக்கும்.

நில மோசடின்னு பக்கா சப்ஜெக்டை வைத்து விளையாடி இருக்க வேண்டாமா? ம்ஹும்... பேப்ப‌ரில் நில மோசடி பற்றிப் படிக்கிற சுவாரஸியம்கூட இல்லை. பெ‌ரியவர் அவரது பிளாஷ்பேக்கை சொன்னதும், ரொம்ப சாதாரணமா என்கூட வந்திடு என்கிறார் விக்ரம். அதைவிட சாதாரணமா அவருடன் பெ‌ரியவர் கிளம்பிப் போகிறார். படம் பார்க்கிற நாமும் ரொம்ப சாதாரணமா இதை எடுத்துக்கிறோம். ராஜபாட்டையின் பிரச்சனையே இதுதான். உணர்ச்சிங்கிற விஷயம் படம் நெடுகில் பொங்கவேயில்லை. பொங்குற ஒரே விஷயம் ஆக்சன். அதுவும் வாப்பாவுடன் விக்ரம் போடுற சண்டை ரொம்பவே ஸ்பெஷல். அதுக்காக மசூதிப் பின்னணியில் முஸ்லீம்கள் கத்தி கபடாக்களுடன் கும்பலாக தாக்க வருவதெல்லாம் ஓவர் கற்பனை.

சாலிகிராமம் ஸ்டுடியோவில் செட் போட்டு படம் எடுத்தது பக்காவாக தெ‌ரிகிறது. ஒரு டீக்கடை, ரெண்டு மூணு பேன்சி கடை பின்னணியில் சர்புர்னு பல்ச‌ரில் மூணு நாலு பேர் போனால் அது தெருவாயிடுமா? போர் பாஸ். ஹீரோயினுக்காகக்கூட இயக்குனர் பக்கத்துத் தெருவுக்கு போகவில்லை. எதுத்தாப்பிலேயே லேடீஸ் ஹாஸ்டல். அதில் அங்கேயும் இங்கேயும் நடக்கும் ஹீரோயின்.

img1111228050_1_1.jpg

பலபேரை இயக்கிய ஜாம்பவனாயிற்றே, பெ‌ரியவராக வரும் இயக்குனர் கே.விஸ்வநாத்தின் தளர்ந்த ச‌‌ரீரத்திலும் சமுத்திரமா நடிப்பு அலையடிக்கிறது. பெண்ணை எப்படி கரெக்ட் பண்றதுன்னு அவர் தருகிற ஐடியாக்கள் சொத்தைன்னாலும் சொல்றவிதம் வித்தை. லேடீஸ் ஹாஸ்டல் தீக்சா சேத் முகத்தில் காம்னா, வனப்பில் ஹன்சிகா. நடிப்பில், அட போங்கண்ணா. பொண்ணுக்கு அது மட்டும் வரவே மாட்டேங்குது.

பாடல் காட்சியில் ஹாலிவுட் வில்லன்கள் கெட்டப்புகளில் வருகிறார் விக்ரம். விடியற்காலை மூணு மணிக்கெல்லாம் சாப்பிடாம மேக்கப் போட்டேன்னு சொல்றார். ரசிகனை ஆச்ச‌ரியப்படுத்தணும்னு நினைத்துப் போட்டிருந்தா அய்யோ பாவம். எலி பிடிக்க மலையை கொடஞ்ச கதைதான். வாப்பாவை பேச வைக்க இவர் போடுற வேஷம் படத்தின் டெம்போவை பட்டுன்னு போட்டு தள்ளுவது இன்னொரு சோக காவியம். அக்கான்னு ஒரு பக்கா ஆ‌ண்‌ட்டியை காட்டுகிறார்கள். முட்டை கண்ணால் அவர் முறைக்கிற போது ரசிகன் கிளுகிளுத்துப் போகிறான்.

படத்தில் காமெடி இல்லாத குறையை போக்குவது அந்த தாடிக்கார வில்லன். என்னா ஃபெர்பாமென்ஸ். இவர் அ‌ரிவாளை எடுத்து வெட்டப் போகும் போதெல்லாம் தியேட்டர் குலுங்க ஆரம்பிக்குது. தனியாக கேட்டால் இனிக்கிற பாடல்களும் படத்தோடு பார்க்கிறபோது நெ‌‌‌ளிய வைக்கிறது. ராங் பிலே‌ஸ்மெண்ட். ஒளிப்பதிவு மட்டும் பேஷ்.

படம்விட்டு வெளியே வரும்போது கேண்டீன்காரர் இன்னொருவ‌ரிடம், ஏதோ தெலுங்குப் படமாம் என்று ராஜபாட்டை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஆறடி அகல போஸ்ட‌ரில் அதைவிட நீள கத்தியுடன் விக்ரம் நிற்பதைப் பார்த்தால் யாருக்கும் அப்படிதான் தோன்றும்.

சுசீந்திரன் சுசீந்திரன்னு ஒரு நல்ல டைரக்டர் தமிழ் சினிமாவுல இருந்தார். ராஜபாட்டையில் அவரை மட்டும் காணலை.

http://tamil.webdunia.com/entertainment/film/article/1112/28/1111228050_1.htm

  • தொடங்கியவர்

கோர்ட் மாடியில் ஏறி, வக்கீல்கள் தற்கொலை முயற்சி:

கலெக்டர் சமாதான பேச்சுவார்த்தை

madurai-1.jpg

madurai-2.jpg

madurai-3.jpg

madurai-4.jpg

முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டுவோம் என்ற கேரள அரசின் முடிவை எதிர்த்து மதுரை மாவட்ட வக்கீல்கள் சாலை மறியல், ரெயில் மறியல், பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம், கேரள நிறுவனங்களை மூடக்கோரி போராட்டம் போன்ற பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் 27.12.2011 அன்று காலை 11.30 மணிக்கு மதுரை மாவட்ட கோர்ட்டு வக்கீல்கள் பூசைத்துரை, சேகர் ஆகியோர் மாவட்ட கோர்ட்டு கட்டிடத்தின் மாடியில் ஏறி உச்சியில் நின்று கொண்டு முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி செயல்படும் கேரள அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும், தமிழகத்தில் உள்ள கேரள நிறுவனங்களுக்கு தமிழக போலீசார் பாதுகாப்பு அளிப்பதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினர். இதை தொடர்ந்து மதுரை மாவட்ட வக்கீல் சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி, தமிழ்நாடு வக்கீல்கள் சங்க மாநில செயலாளர் ஆர்.வெங்கடேசன், மாவட்ட செயலாளர் கருணாநிதி, இணை செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் தற்கொலைக்கு முயன்ற வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்கள், கலெக்டர் நேரில் வந்து எங்களது கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவித்தால் மட்டுமே தற்கொலை முயற்சியை கைவிடுவோம் என்றனர். கலெக்டர் வெளியூர் பயணத்தில் இருந்ததால் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேஷ், மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி(பொறுப்பு) தட்சிணாமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்பு மதியம் 1.30 மணிக்கு அவர்கள் 2 பேரும் மாடியில் இருந்து இறங்கி வந்தனர். இதற்கிடையே கலெக்டர் சகாயம் மாவட்ட கோர்ட்டுக்கு வந்தார். மாவட்ட நீதிபதிகள் அறையில் வக்கீல்களுடன் பேச்சுவாத்தை நடந்தது. அப்போது கலெக்டர், வக்கீல்களின் கோரிக்கையை உடனடியாக அரசுக்கு தெரிவிப்பதாக கூறினார். இதை தொடர்ந்து வக்கீல்கள் சமாதானமாக சென்றனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=67925

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.