Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

maaveerarkal_20111211_1749687635.jpg

11.12.2001 அன்று திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும் வாழைச்சேனை செற்றடி காவல்துறை நிலையம் மற்றும் படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 10 மாவீரர்களினதும் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

பாலத்தோப்பூர் சிறிலங்கா படை முகாம் தாக்குதலில் லெப்.கேணல் மனோஜ் (பாலசிங்கம் வந்தகுமார் - உவர்மலை. திருகோணமலை), மேஜர் குமாரவேல் (செல்வராசா ஆனந்தன் - மாமாங்கம், மட்டக்களப்பு), லெப். கலைமதி (செல்வநாயகம் தர்சினி - மூதூர், திருகோணமலை). 2ம் லெப்.தேவன் (கென்றி செபஸ்ரியான் - மூதூர், திருகோணமலை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

maaveerarkal_20111211_1749687635.jpgmaaveerarkal_20111211_1104815231.jpg

இதேபோன்று மட்டக்களப்பு வாழைச்சேனை செற்றடி சிறிலங்கா காவல்துறை நிலையம் மற்றும் படைமுகாம் மீதான தாக்குதலின் போது

கப்டன் சற்குணராஜ் (தம்பிப்பிள்ளை மதியழகன் - மத்தியமுகாம், அம்பாறை)

கப்டன் பிரதாவரன் (இராசையா சற்குணம் - மல்வத்தை 2, அம்பாறை)

கப்டன் மணிராஜ் (சிங்காரவேல் கமலேந்திரராசா - வாகரை, மட்டக்களப்பு)

லெப்.மணியரசன் (குமாரசூரியம் ரவிச்சந்திரன் - சித்தாண்டி, மட்டக்களப்பு)

லெப். முகுந்தன் (நடராசா யோகேஸ்வரன் - விநாயகபுரம், அம்பாறை)

2ம் லெப். உமாகரன் (சிவசம்பு சசிக்குமார் - கரடியனாறு, மட்டக்களப்பு)

2ம் லெப். வினோகரன் (சதாசிவம் சௌந்தராஜன் - நெடியமடு, மட்டக்களப்பு)

2ம் லெப். மணிகண்ணன் (கணேஸ் சண்முகநாதன் - சந்திவெளி, மட்டக்களப்பு)

2ம் லெப். முகுந்தனன் (அழகப்பொடி ஜெயகாந்தன் - புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)

2ம் லெப். மணிப்பிறை மகேந்திரன் மகேஸ்வரன் - கரடியனாறு, மட்டக்களப்பு)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

போராளிகளின் இந்த இரு தாக்குதல்களில் சிறிலங்கா காவல்துறை மற்றும் படையினர் 10ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். பெருமளவான போர்க்கருவிகள், வெடி பொருட்களும் விடுதலைப் புலிகளால் இதன்போது கைப்பற்றப்பட்டமை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழீழ தாய் மண்ணை வல்வளைப்பாளர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கம்

http://www.eeladhesa...ndex.php?option

ஈழ விடுதலை என்னும் புனித இலட்சியத்த்க்காக இந்நாளில் தம் இன்னுயிரை ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Posted

லெப்.கேணல். மனோஜ் உட்பட தாயக விடுதலைக்கு தம்மை ஈகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Posted

தாயக விடுதலைக்கு தம்மை ஈகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.