Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடைகள் களையும் ஆணாதிக்க அதிகாரங்களின் நிர்வாண பாலியல் சித்திரவதைகள் (இளகிய மனம் கொண்டோர்,சிறுவர் தவிர்க்கவும் பார்ப்பதை..)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆடைகள் களையும் ஆணாதிக்க அதிகாரங்களின் நிர்வாண பாலியல் சித்திரவதைகள்

அபுகிரைப் சிறைச்சாலையில் ஈராக் மக்கள் மீது அமெரிக்கத் துருப்புக்கள் நடத்திய வக்கிரமான சித்திரவதைகள் குறித்த புகைப்படங்களும் ஒளிநாடாக்களும் சென்ற மே மாதம் முதன்முதலாகச் செய்தி ஊடகங்களின் வெளிவந்தன. உலகெங்கும் எழுந்த கண்டனங்களின் விளைவாக இந்த ஒளிநாடாக்களையும் புகைப்படங்களையும் பார்ப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுமதித்தது புஷ் அரசு. ஓரு கண்துடைப்பு விசாரணையும் நடக்கின்றது.

இன்னும் வெளியிடப்படாத படங்களில் மிகக் கொடூரமான வன்புணர்ச்சிக் காட்சிகளும் ஈராக்கியச் சிறுவர்களுடனான ஓரினச்சேர்க்கைக் காட்சிகளும் உள்ளதாகக் கூறுகின்றது நியூஸ்வீக் வார ஏடு.

"துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்படும் ஈராக் பெண்கள், நேரடியான உடலுறவுக்காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு நான் திகிலில் உறைந்து போனேன்." என்றார் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மார்டின் டி.மிகான். "நரகத்தின் படுகுழிக்குள் தள்ளப்படுவது போல இருந்தது. ஆனால் இது நாம் உருவாக்கியிருக்கும் நரகம்" என்றார் செனட்டர் ரிச்சர்டு ஜே. டர்பின்.

இவ்விதழில் வெளியிடப்பட்டிருப்பவை அமெரிக்க அரசால் இருட்டடிப்பு செய்யப்பட்ட படங்கள். இவற்றை வெளியிட்டிருக்கும் வலைத்தளங்களைத் தேடிப்பிடித்துச் சீர்குலைக்கின்றது (Hacking) புஷ் அரசின் கூலிப்படை. "அமெரிக்காவின் மீது வளைகுடா மக்களுக்கு வெறுப்பைத் தோற்றுவிற்பதற்காகவே பரப்பப்படும் போலிப் புகைப்படங்கள் இவை" என்று கேலிக்குரிய ஒரு பொய்யையும் பரப்பி வருகின்றது புஷ் அரசு.

பொய், புனைசுருட்டுக்கள் அனைத்துக்குமான அறிவுச்சொத்துடமையைத் தனது மரபு உரிமையாக வரித்துக்கொண்டுள்ள அமெரிக்க அரசுக்கு நாம் விளக்கம் தரத்தேவையில்லை. நம்மிடையே பெருகிவரும் அமெரிக்க மோகிகளுக்கும் அமெரிக்க தாசர்களுக்கும் தான் விளக்கம் தேவைப்படுகின்றது. அவர்களது தடித்த தோலையும், இலவம் பஞ்சு மூளையையும் ஊடுருவும் வகையிலான விளக்கம் தேவைப்படுகின்றது. எனவேதான் இப்படங்களை வெளியிடுகின்றோம். சொற்கள் தீண்டமுடியாத சொறணையை இந்த விகாரமான படங்கள் தீண்டக் கூடும் என்பதால் வெளியிடுகின்றோம்.

02.JPG03.JPG04.JPG05.JPG07.JPG08.JPG10.JPG14.JPG16.JPG17.JPG09.JPG12.JPG13.JPG01.JPG

இந்தப் படங்களைக் கண்டு ஒழுக்கவாதக் கண்ணோட்டத்தில் யாரும் முகம் சுளிக்கக் கூடுமெனில் அத்தகையோருக்கு தமது போராட்டத்தின் வாயிலாக மணிப்பூர் பெண்கள் ஏற்கனவே பதிலளித்து விட்டார்கள். இராணுவத்துக்கு மட்டுமல்ல, பெண்ணை உடலாக மட்டுமே உணர்ந்து கிளர்ச்சி கொள்ளும் ஒவ்வொரு ஆண் மனதுக்கும் வழங்கப்பட்ட செருப்படி அந்தப்போராட்டம். இந்தப் புகைப்படங்களும் தான்.

ஓரு பெண்ணின் மீதும் கைதிகளின் மீதும் ஏவப்படும் பாலியல் வன்முறையை மட்டும் சித்தரிப்பவையல்ல இந்தப்படங்கள். ஒரு தேசம் அதன் சுதந்திரம், இறையாண்மை, கலாச்சாரம் ஆகிய அனைத்தின் மீதும் ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்தும் பாலியல் வல்லுறவின் உருவகம் இது. எண்ணைக்கான யுத்தம், டொலருக்கான யுத்தம் என்று மட்டும் இந்த ஆக்கிரமிப்பை புரிந்து கொள்ளும் பொருளாதார சவங்களுக்கு, உயிரின் துடிப்பை உணர்த்தும் படங்கள் இவை. "இந்தப் பாவத்தின் சம்பளம் தான் நீங்கள் அடைய விரும்பும் தங்கம்" என்ற உண்மையை அமெரிக்காவில் கரைசேரத் துடிக்கும் ஒவ்வொரு மைதாசுக்கும் உணர்த்தும் படங்கள் இவை.

ag10.jpgag11.jpgag12.jpg

தம்மை நாகரிக உலகம் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு ஓநாய் கூட்டம், மனிதநாகரிகத்தின் உண்மையான தொட்டிலின் மீதும், அதன் குழந்தைகளின் மீதும் நாம் பேசும் மொழியை, எழுத்தை, சுதந்திரம் எனும் சொல்லை முதன்முதலில் உச்சரித்த அந்த மழலைகள் மீதும் நடத்தும் தாக்குதல் - உன் மீதும் என் மீதும் நடத்தப்படும் தாக்குதல் தான் என்பதை உறைக்கச் செய்வதற்கான படங்கள் இவை.

அமெரிக்கா தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தின் கொடூரத்தை, காலனியாதிக்கத்தின் அநீதியை நிரூபிப்பதற்கு இந்தப்படங்கள் தேவையில்லை. ஆனால் தோற்கடிக்கப்பட்ட மக்களின் கையில் வெற்றியாளர்கள் படும் பாட்டை, உடலால் அடக்கப்பட்டாலும் உள்ளத்தால் பணிய மறுக்கும் ஒரு தேசத்தை, அத்தேசத்தின் ஆன்மாவை, அடக்கியாள முடியாமல் வெறிகொண்டு துடிக்கும் அமெரிக்க வல்லரசின் கையாலாகாத்தனத்தை நிரூபிப்பதற்க்கு இந்தப்படங்கள் தேவை.

அமெரிக்க கொடும்கோலர்களின் பிடியிலிருந்து விடுபடத்துடிக்கும் இந்தச் சுதந்திரப் பறவைகளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் தகுதி நமக்கில்லை. நம் கையறுநிலைக்காக அவர்கள் வேண்டுமானால் நம்மீது அனுதாபப்படலாம். அமெரிக்க ஓநாய்களின் கோரப்பிடியில் இந்த உலகம் சிக்கி விடாமல் தன்னந்தனியே தடுத்து நின்று கொண்டிருக்கும் ஈராக் மக்களின் வீரத்தைப் போற்றுவோம்.

அபு கிரைப் சிறைச்சாலையில் நடைபெறும் கொடுமைகளை முதன்முதலில் தெரிவித்தவை மே மாதம் வெளியான புகைப்படங்கள் அல்ல. டிசம்பர் 2003-இல் சிறையிலிருந்து கடத்தப்பட்ட நூர் என்ற ஈராக்கியப் பெண்ணின் கடிதம். (கார்டியன், மே--20-2004)

"ஒவ்வொரு நாளும் ஆண் கைதிகள் மற்றும் அமெரிக்க இராணுவத்தினரின் முன் எங்களை அம்மணமாக நடக்க வைக்கின்றார்கள். உங்களுடைய தாயோ, சகோதரியோ இந்தச் சிறையில் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் அமெரிக்கச் சிப்பாய்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கருத்தரித்திருக்கிறார்கள் என்பது உறுதி. தயவு செய்து எங்கள் மீது குண்டு வீசுங்கள். இந்தச் சிறையின் மீது அணுக்குண்டைக் கூட வீசுங்கள். எங்களைக் கொன்று விடுங்கள்" இவ்வாறு அமெரிக்க இராணுவத்தை எதிர்த்துப் போராடும் ஈராக் போராளிகளிடம் மன்றாடுகின்றது அந்தக் கடிதம். (கிறிஸ்டியன் சைன்ஸ் மானிட்டர்)

இக்கடிதம் குறித்த செய்தி ஈராக் மக்களிடையே பரவத்தொடங்கியவுடனே இதனைப் பொய்யென்று நிராகரித்தது அமெரிக்க அரசு. ஆனால் அமெரிக்க இராணுவம் அமைத்த இரகசிய விசாரணைக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் அந்தோணி தகுபாவின் அறிக்கையோ அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளவையனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை என்கின்றது.

ஓபெக் (opec) தலைமையகத்தின் எரிபொருள் ஆய்வுத்துறைத் தலைவராக இருந்த சதல்லா அல்பாத்திகல்;ப் நியூஸ் (GULF NEWS) எனும் பிரபல பத்திரிகையில் எழுதுகிறார்.

"இதுநாள் வரை நான் எண்ணெய் வணிகம் தொடர்பான கட்டுரைகளை மட்டுமே எழுதியிருக்கிறேன். இதோ, இதை எழுதும்போதே நான் அழுகின்றேன்... என் தேசத்தில் நடந்ததற்காகவும், நடந்துகொண்டிருப்பதற்காகவும் மட்டுமல்ல, அபுகிரைப் கொடூரங்கள் பற்றிப் பல வாரங்கள் முன்பே கேள்விப்பட்ட போதும், அதை நம்ப மறுத்தேனே, அதற்காக அழுகிறேன்."

"நான் மேல்நாடுகளில் படித்தவன்; வாழ்க்கையின் பெரும்பகுதியை அங்கேயே கழித்தவன்;. ~நாகரிகம் பொருந்திய மேலைநாட்டு அரசுகள் இவ்வாறெல்லாம் நடப்பதை அனுமதிக்கவே மாட்டார்கள்| என்று இத்தனைக் காலம் நம்பியிருந்தேனே, அதற்காக அழுகிறேன்."

"எங்களைக் கொன்று விடுங்கள்" என்று அபுகிரைப் சிறைச்சாலையின் பெண் கைதிகள் அனுப்பும் கடிதங்களைப் பற்றி நான் கடந்த மார்ச் மாதமே அறிந்தேன். அப்போதும் அதை நான் நம்ப மறுத்தேன். அது உண்மையல்ல என்பதனால் அல்ல, அந்த உண்மை தோற்றுவிக்கும் மன உளைச்சலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அதை நம்ப மறுத்தேன்."

"அடுத்த சில நாட்களில் பாக்தாத்திருந்து வந்த என் நண்பர் சொன்னார்.

"பக்கத்து வீட்டுப் பெண்கள் இருவர் சில வாரங்கள் சிறையிலிருந்தனர். விடுவிக்கப்பட்டபின் அவர்களைச் சந்தித்து என்ன நடந்ததென்று அறிய முனைந்தேன். கண்ணீர் தான் அவர்கள் தந்த விடை. நீண்ட நேரத்திற்குப் பின் விசும்பியபடியே ஒரு பெண் சொன்னாள், என்னைத் தொட்டுவிட்டார்கள்."

"இப்போதும் நான் நம்பமறுக்கிறேன். சில நேரங்களில் உண்மை எனத் தெரிந்தும் அதை நம்புவதற்கு நாம் விரும்புவதில்லை அல்லவா? அப்படித்தான் நானும் இந்த உண்மையை நம்ப மறுக்கிறேன்."

நாதியா இப்போது விடுவிக்கப்பட்டுவிட்டாள். ஆனால் தனது கன்னிமை சூறையாடப்பட்ட அந்த இருண்ட நாட்களின் கொடிய நினைவுகளிலிருந்து அவள் விடுபடவே முடியாது. இலண்டனிலிருந்து வெளிவரும் அல்கியாத் நாளேட்டிற்கு அவள் அளித்த பேட்டியிலிருந்து.

"ஆயுதங்களைத் தேடுவதாக கூறி அமெரிக்கத் துருப்புக்கள் என் வீட்டில் நுழைந்தார்கள். என்னைத் தூக்கிச்சென்றார்கள். சிறையில் வைத்து என்னைத் துகிலுரிந்து நிர்வாணமாக்கி ஆணும் பெண்ணுமாக அமெரிக்கச் சிப்பாய்கள் சுற்றி நின்று கொண்டார்கள். பெண் ஆயுத வியாபாரிகளும் ஈராக்கில் உண்டு என்று இப்போதுதான் கேள்விப்படுகிறேன்" என்று நக்கலடித்தாள் ஒரு பெண் சிப்பாய். நான் மறுத்துப் பேச முற்பட்டவுடன் தாக்கத் தொடங்கினாள். நான் செயலிழந்தேன். ஒரு குவளை தண்ணீர் கொடுத்தாள். ஓரு மிடறு விழுங்கியவுடனே சுயநினைவை இழந்தேன். நினைவு திரும்பிய போது நான் வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன்".

"அடுத்த சில நாட்களில் 5 சிப்பாய்கள் கும்பலாக வந்தார்கள். காமவெறியைத் தூண்டும் இரைச்சலான இசையை அலறவிட்டு அதனை ரசித்தபடியே மாறிமாறி என்னை வேட்டையாடினார்கள்."

"ஒரு மாதத்திற்குப் பின் ஒரு சிப்பாய் வந்தான் என்னைக் குளிக்கச் சொன்னான். குளித்துக் கொண்டிருக்கும்போதே குளியலறைக்கதவை உதைத்துத் திறந்தான். நான் அவனை அறைந்தேன். அவனோ மிருகங்கள் புணர்வதைப் போல என்னைப் புணர்ந்தான். இன்னும் இரண்டு பேரையும் என் மீது ஏவிவிட்டான்."

"நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரு பெண் சிப்பாய் நான்கு ஆண்களுடன் வந்தாள். அவர்கள் கையில் டிஜிடல் கமெரா. என்னை அம்மணமாக்கி என் மீது ஒரு ஆணைப் போல அவள் நடந்து கொண்டாள். மற்ற ஆண்கள் கைகொட்டிச் சிரித்தபடியே இதனைப் படமெடுத்தனர். அவளிடமிருந்து என்னைப் விடுவித்துக் கொள்ள போராடினேன். அவள் ஆத்திரமடைந்து என்னை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டாள். தோட்டாக்கள் தலையை உரசிச் சென்றதால் நான் திகிலில் உறைந்தேன். உடனே நான்கு ஆண்களும் என்மீது விழுந்து குதறத் தொடங்கினார்கள். நான் நினைவிழந்தேன்.

"நினைவு திரும்பிக் கண்விழித்தபோது என்னை அவர்கள் குதறிய காட்சி வீடியோத் திரையில் ஓடிக் கொண்டிருந்தது. கண்ணை மூடிக்கொண்டேன். எங்களை மகிழ்விக்கத்தான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள்! கண்ணைத் திற, பார், பார் என்று அவள் மிரட்டினாள்."

"ஆறு மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டேன். ஒரு நெடுஞ்சாலையில் பொட்டல் வெளியில் என்னை இறக்கி விட்டு கையில் கொஞ்சம் காசு கொடுத்து "போ, போய் புதிய வாழ்க்கையைத் தொடங்கிக் கொள்" என்று விரட்டிவிட்டான் ஒரு அமெரிக்கச் சிப்பாய்."

நாதியா என்ற புனைபெயரில் வாழும் இந்தப் பெண் அவமானத்தால் வீடு திரும்பவில்லை. சொந்த ஊரை விட்டு ஈராக்கின் வேறொரு மூலையில் வீட்டு வேலை செய்து வயிற்றைக் கழுவுகிறாள்.

நாதியா ஒரு அதிசயம். அபு கிரைப் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் பெண்களில் பலர் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர். கருத்தரித்த பெண்களோ அமெரிக்க நாய்கள் கொடுத்த பிள்ளையைச் சுமக்க மறுத்துத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாத குடும்பத்தினரே பெண்ணைக் கொல்ல முயல்கின்றனர். அதைத் தடுத்து நிறுத்திய ஒரு சம்பவத்தை நினைவு கூறுகின்றார் பாக்தாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியையும், அம்னாஸ்டி இன்டர்நேசனலின் பிரதிநிதியுமான நுவாய்ய்மி.

"எங்களைக் குண்டு வீசிக் கொன்றுவிடுங்கள்" என்று கடிதம் அனுப்பி அபுகிரைப் சிறையின் கொடுமைகளை உலகிற்கு அறிவித்த பெண் யார் என்பதைக் கண்டுபிடித்து, பாக்தாத் நகரில் அந்தப் பெண்ணின் வீட்டைத் தேடிச் சென்றார் பேராசிரியை நுவாய்மி. நூர் என்ற அந்தப் பெண்ணின் குடும்பமே ஊரை விட்டுப்போய்விட்டது. 'அவள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை" என்கின்றார் நுவாய்மி.

ஆஸ்வாய் இருபது வயதுப் பெண் திடீரென்று ஒருநாள் அவளுடைய தாய் காணாமல் போய்விட்டாள். ஓருவேளை கைது செய்யப்பட்டிருப்பாளோ என்று அஞ்சி அபு கிரைப் சிறைக்கு நடையாய் நடக்கிறாள் ஆஸ்வாய். " அப்படியாரும் இங்கே இல்லை" என்று கூறி விரட்டுகிறார்கள் அமெரிக்க சிறையதிகாரிகள்.

அபுகிரைப் சிறையின் வீடியோ காட்சிகள் என்ற குறுந்தகடு மர்மமான முறையில் பாக்தாக்கில் புழங்கக் தொடங்குகிறது. அதில் தன்னுடைய தாயின் படத்தை பார்த்த ஆஸ்வாய் "இது உண்மையாய் இருக்க முடியாது" என்று கதறுகிறாள்.

அடுத்த சில நாட்களில் செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து வந்த கடிதம். "உங்கள் தாய் அபுகிரைப் சிறையில் இருக்கிறார் " என்று தெரிவிக்கிறது. என் அம்மாவுக்கு எதுவும் நேராமல் கூட இருக்கலாம். ஆனால் யார் நம்புவார்கள்? என்று கூறி விசும்புகின்றாள் ஆஸ்வாய்.

அபு கிரைப் படங்கள் வெளிவந்ததையொட்டி அமெரிக்கக் கட்சிகளும் ஊடகங்களும் வெளியிட்டு வரும் அதிர்ச்சியும் கண்டனங்களும் அயோக்கியத்தனமான மோசடிகள் என்கின்றார் பிரண்ட் லைன் இதழின் அமெரிக்கச் செய்தியாளர் விஜய் பிரசாத்.

"கலிபோர்னியா சிறையில் கைதிகளை கிளாடியேட்டர் பாணியில் ரத்தம் சொட்டச் சொட்ட மோதவிட்டு இந்த விளையாட்டைக் கண்டு களித்தனர் சிறையதிகாரிகள். விசாரணைக்குப் பின் யூன் 2001-இல் இந்த அதிகாரிகளைக் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்தது அரசு."

"பெண்கள் சிறையில் 16 பெண் கைதிகளை வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய குற்றத்துக்காக 11 அதிகாரிகள் 1999 இல் தண்டிக்கப்பட்டனர்."

"இளம் பெண்களுக்கான சீர்திருத்தப்பள்ளியொன்றில், அப்பெண்களை நிர்வாணமாக்கி கைகளை அகலவிரித்து விலங்கிட்டு, உடலெங்கும் மிளகாய் பொடியைத் தடவி ஒவ்வொருநாளும் 23 மணிநேரம் தனிமைச்சிறையில் வைத்தனர் சிறையதிகாரிகள்" என்று அமெரிக்கச் சிறைகளின் யோக்கியதையைப் பட்டியலிடும் பிரசாத், "அமெரிக்கச் சிறைகளின் நீட்சிதான் அபுகிரைப். இது விதிவிலக்கல்ல" என்று நிறுவுகிறார்.

தன் சொந்தமக்களையே விலங்குகள் போல நடத்தும் அரசு, ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தை எப்படி நடத்தும் என்பதை புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.

"எங்களை மகிழ்விப்பதற்காகதான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள்" என்று நாதியாவிடம் சொன்னாளே அந்தப் பெண் சிப்பாய், அது அவளுடைய தனிப்பட்ட கருத்தல்ல, அமெரிக்க அரசின் கொள்கை. தாங்கள் சுகிக்கவும், சூறையாடவும், கசக்கிப் பிழியவும், பருகவும் தான் இந்த உலகம் தேவனால் உண்டுபண்ணப்பட்டிருக்கிறது என்பதே அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளிகளின் கருத்து.

சமூக உணர்வற்ற தனிநபர்களாய் நொறுக்கிச் சிதறடிக்கப்பட்ட அந்தச் சமூகமோ "தானும் தன் இன்பமுமே ஜீவன், அதை வழங்கவல்ல டாலரே சத்தியம்" என்று நம்புகிறது. காதல், அன்பு, பாசம், நட்பு, இரக்கம் போன்ற மனிதனுக்குரியவை அனைத்தையும் துறந்து, நாக்கும் வயிறும் குறியுமே இன்பத்தின் திறவுகோல்கள் என்று கொண்டாடுகிறது. ஏனவே, துடிக்கும் புழுவைப் புணரவும், விம்மி வெடிக்கும் கண்ணீரைச் சுவைக்கவும் அமெரிக்கப் படையினரால் இயலும். நிறவெறி மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும் "பண்பாட்டு" விழுமியம்.

அரசுப் படையைக் காட்டினும் கூலிப்படைச் சிப்பாய்களுக்குச் சம்பளம் அதிகமென்பதால், இராணுவத்திலிருந்து ராஜீனாமா செய்து கூலிப்படையில் சேருகின்றார்களாம் அமெரிக்க வீரர்கள். அமெரிக்காவால் புதிதாகப் பயிற்றுவிக்கப்பட்ட ஈராக்கிய வீரர்களோ, சொந்தமக்களைச் சுட மறுத்து போராளிகளின் அணியில் போய்ச்சேருகின்றார்கள்.

கூலிக்குத் தம் உயிரை விலை பேசியிருக்கும் அமெரிக்கக் கூலிப்படைதான் ஈராக்கில் ஜனநாயகத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்படும் உற்பத்தி இலக்கைப் போலவே. கூலிப்படையினருக்கும் "இலக்குகளை" நிர்ணயிக்கின்றது புஷ் அரசு.

கொல்லப்படவேண்டிய போராளிகள், கைப்பற்றப்பட வேண்டிய ஆயுதங்கள், சதாம் அரசின் அதிகாரிகள், உருவாக்கப்பட வேண்டிய உளவாளிகள் - அனைத்திற்கும் இலக்கு தீர்மானிக்கப்படுகின்றது. இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகளுக்கு வரம்பு இல்லை, முழுசுதந்திரம்! அந்தச் சுதந்திரத்தின் விளைவை அனுபவிக்கிறாள் இந்த ஈராக்கியப் பெண். (பின் அட்டை)

அவள் ஒரு போராளியின் மனைவியாக இருக்கக் கூடும், பிணைக்கைதியாக பிடித்து வரப்பட்ட சகோதரியாக இருக்கக் கூடும், சும்மா முகர்ந்துவிட்டு எறிவதற்காகக் கடைவீதியிலிருந்து இராணுவ வண்டியில் தூக்கிப் போடப்பட்ட யாரோ ஒரு பெண்ணாக இருக்கக் கூடும்;, அல்லது உளவாளியாக மாற மறுக்கும் போராளியாகவும் இருக்கக் கூடும்.

உளவாளிகளை உருவாக்கும் "கலை" யில் அமெரிக்க இராணுவத்தைப் பயிற்றுவித்து வருகிறார்கள் இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரிகள். கைது செய்யப்படும் பலஸ்தீனப் பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியும், நிர்வாணப் படமெடுத்தும் வைத்துக்கொண்டு அவர்களை விடுவிப்பது சில ஆண்டுகளுக்குப் பின் இந்தப் படங்களைக் காட்டி ஜந்தாம்படை வேலை செய்யச் சொல்லி நிர்பந்திப்பது, இல்லையேல் உன் குடும்ப வாழ்க்கையைச் சீர் குலைப்போம் என மிரட்டுவது.... இது இஸ்ரேலின் மொசாத் உளவுப்படை கையாண்டு வரும் வழிமுறை. இந்த வழிமுறைதான் ஈராக்கிலும் இன்று பின்பற்றப்படுகின்றது.

எனவே கற்பழிப்பைப் படம் பிடித்ததென்பது சிப்பாய்களின் வக்கிரம் மட்டுமல்ல, இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தில் அமெரிக்க இராணுவம் கடைபிடித்துக் கொண்டிருக்கும் அதிகாரபூர்வமான போர்த்தந்திரம்.

"ஒன்று அராபியர்களுக்கு புரியக்கூடிய ஓரே மொழி வன்முறை, இரண்டு அவர்களுடைய மிகப் பெரிய பலவீனம் அவர்களது மான உணர்ச்சி" என்று "அராபிய மனம்" (The Arab Mind 1973) எனும் நூலில் குறிப்பிடுகிறான் ரபேல் பதாய் என்ற அமெரிக்க ஆய்வாளன்.

"இந்த நூல் தான் இன்றைய புஷ் அரசின் வேதப்புத்தகமாக பயன்படுகின்றது" என்று அபு கிரைப் கொடுமைகளை விளக்குகிறார் "நியூயாக்கர்" நாளேட்டின் செய்தியாளர் செய்மர் கொர்ஷ்.

மானத்தைத் துணியில் தேடும் தேசமா ஆயிரம் சவப்பெட்டிகளை அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்கும்? தமது வீரத்தை கவசவண்டிக்குள் ஒளித்துகொண்ட அமெரிக்க சிப்பாய்களிடம் "கால்செருப்பில் இருக்குதடா வீரம்" என்று கற்பித்தவர்கள் ஈராக்கின் சிறுவர்கள். தெருவோரக் கல்லும் தீக்குண்டாகும் என்று இஸ்ரேலுக்கு நிரூபித்து வருபவர்கள் பலஸ்தீன இளைஞர்கள்.

உரியப்படும் ஆடை ஒவ்வொன்றுக்கும் ஓர் உடலைப் பரிசளிப்பார்கள் ஈராக் மக்கள். சவப்பெட்டிகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பை டில்லியை ஆளும் சவங்கள் கணக்கிடட்டும். அமெரிக்கச் சொர்க்கத்தை அடைவதற்காக விரதமிருக்கும் சவங்கள் இந்த படங்களைப் பார்த்த பின்னராவது உயிர் பெறட்டும்.

சூரியன்.

அபு கிரைப்; மிச்சமிருக்கிறது மனச்சாட்சி!

சென்ற யூன் 22ம் திகதி அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் நகரில் ஜெப்ரி லுசி என்ற 23 வயது இளைஞன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான். அவன் ஈராக்கிலிருந்து திரும்பிய அமெரிக்க இராணுவச் சிப்பாய்.

மார்ச்.2003-இல் ஈராக்கின் நசிரியா நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிராயுதபாணிகளான ஈராக் மக்களைத் "தன்னுடைய" இராணுவம் கொலை செய்வதைக் கண்டு தவித்தான் லூசி. 'நான் இங்கே அறநெறியற்ற அநீதிகளைச் செய்து கொண்டிருக்கிறேன்" என்று தன் காதலிக்கு கடிதம் எழுதினான்.

அமெரிக்கா திரும்பியவுடன் தன் தந்தையிடம் பேசினான், "நாங்கள் குழந்தைகளையும் முதியவர்களையும் ஒவ்வொரு நாளும் கொன்றிருக்கிறோம். என் வயதையொத்த இரண்டு இளைஞர்களை நெற்றியில் சுட்டுக் கொல்லுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். அவர்கள் கண்களைப் பார்த்தேன், அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்காதா? தடுமாறினேன், சுட்டுவிட்டேன்" என்று கூறி அழுதான்.

செத்துப்போன லூசியின் கழுத்தில் இரண்டு அடையாள அட்டைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவனால் கொலைசெய்யப்பட்ட இளைஞர்களின் படங்கள்.

சென்ற யூலை மாதம் மட்டும் ஈராக்கிலேயே 24 அமெரிக்கர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஈராக் சென்று திரும்பிய சிப்பாய்களில் 17சதவீதம் பேர் தற்கொலைக்குச் செல்லும் அளவிற்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது இங்கிலாந்தின் மருத்துவ ஆய்வுப் பத்திரிகை.

ஈராக்கிலிருந்து திரும்பிய அமெரிக்கச் சிப்பாய்கள் அமைப்பாகத் திரண்டு (VAW) இது ஏகாதிபத்திய யுத்தம் என்று பிரகடனம் செய்கிறார்கள்.

"என் கணவன் போருக்குச் சென்றிருக்கிறான் என்று பெருமை பேசாதே... சாதனையாளர்களை எண்ணித்தான் பெருமைப்பட முடியும். வேறு வழியில்லாமல் சிக்கிக் கொண்டவர்களைப் பார்த்து யாராவது பெருமை கொள்ள முடியுமா? எங்களுக்காக அனுதாபப்படுங்கள், கண்ணீர் விடுங்கள்" என்று ஈராக்கிலிருந்து கடிதம் எழுதுகிறார் ஒரு சிப்பாய். 2000 அமெரிக்கச் சிப்பாய்களின் குடும்பத்தினர் "இராணுவத்தை திரும்பப்பெறு" என புஷ்சை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

ஈராக்கிலிருந்து திரும்பிய சார்ஜென்ட் காமிலோ மெஜியோ மீண்டும் ஈராக் சென்று போரிட மறுத்துச் சிறை சென்றிருக்கிறார். கடும் தண்டனை விதித்தால் சிப்பாய்களிடையே கலகம் தோன்றுமோ என்று அஞ்சி ஓராண்டு மட்டுமே தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

"இராணுவத்தில் சேர்ந்து ஈராக் செல்லும் மாணவர்களுக்கு உயர் கல்வி இலவசம்" என்று ஏழை இளைஞர்களுக்குத் தூண்டில் வீசுகின்றது புஷ் அரசு. "எங்களுடைய போர், களத்தில் துவங்கவில்லை, கல்விக் கூடத்தில் தொடங்குகின்றது" என்று கண்டிக்கிறார் இராணுவ ஆளெடுப்பு மையத்தின் அதிகாரி.

ராபின் பான்டன் என்ற 13 வயதுச் சிறுமி... ஈராக் சென்றிருக்கும் சிப்பாயின் மகள் - அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் தன்னந்தனியே மறியல் செய்கிறாள். "என் தந்தையை எனக்குத் திருப்பிக் கொடு. ஓரு பொய்க்காக அவர் உயிரை விடுவதை நான் அனுமதிக்க மாட்டேன்" என்கிறது அவள் ஏந்தியிருக்கும் முழக்க அட்டை.

அபு கிரைப்: நாடகம் கூறும் உண்மை

அபு கிரைப் கொல்கத்தாவில் நாடகமாக்கப்பட்டுள்ளது. " இது கற்பனைக் கதையல்ல, அபு கிரைப் குறித்த மனித உரிமைக் குழுவின் ஆய்வறிக்கை, இராணுவ அதிகாரி அந்தோனியோ தகுபாவின் விசாரணை அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந் நாடகம் தயாரிக்கப்பட்டுள்ளது. கதைமாந்தர்களும் உண்மையானவர்களே" என்கின்றார் நாடகாசிரியர் சங்க்ராம் குகா.

ஒரு நீதிமன்ற விசாரணையைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்நாடகம், வெறுமனே சித்திரவதையினை மட்டும் சித்தரிக்கவில்லை. "சித்திரவதையின் நோக்கமென்ன?" என்ற கேள்வியை எழுப்பிக் கீழ்க்கண்டவாறு விடைசொல்கின்றது.

"அபு கிரைப் சிறையில் கைதிகள் அனைவரும் சோதனைச் சாலை எலிகள். சித்திரவதையின் எந்தக் கட்டத்தில் ஒரு கைதி நொறுங்கிப்போய்ச் சரணடைகிறான் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு, அந்தத் தருணத்தில் அவனுடைய இரத்தத் துளிகள் சோதனைக்கு எடுக்கப்படுகின்றன. இரத்தத்தின் மரபணுக் கட்டுமானத்தில் (Genetic structure) சித்திரவதை செய்யப்பட்ட மனிதனின் மனதில் உருவான பீதி என்ன விதமான மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றது என்பது கண்டுபிடிக்கப்படுகின்றது. சித்திரவதை தோற்றுவிக்கும் இந்தப் பீதியை, மரபணுக் கட்டுமானத்தில் மாற்றம் ஏற்படுத்துவதன் வாயிலாகவே ஒரு கைதியின் மனதில் தோற்றுவித்து விட முடியுமா என்பது அமெரிக்காவில் ஆராயப்படுகிறது. "இதுதான் நாடகம் சுமத்தும் குற்றச்சாட்டு." புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டம்" என்று அழைக்கப்படும் உலக மேலாதிக்கத் திட்டத்தின் ஒரு அங்கம் தான் அபுகிரைப் சித்திரவதைகள் என்று நிறுவுகிறது நாடகம்.

இந்நாடகம் எழுப்பும் கேள்வி அதீதமானதோ, கற்பனையானதோ அல்ல, கைது செய்யப்பட்ட சீன மக்களைக் குறுக்கு நெடுக்காகப் பிளந்து பார்த்து அறிவியல் ஆய்வு நடத்தியது ஜப்பான் இராணுவம். மருத்துவ விஞ்ஞானிகளைப் பயன்படுத்தி கிட்லர் நடத்திய ஆய்வுகளை அம்பலப்படுத்தியது 'மருத்துவர்கள்" என்ற ஜெர்மன் நாடகம்.

அமெரிக்கா நடத்தும் உயிரியல் யுத்தம் என்பது விஞ்ஞானக் கதையல்ல, எதார்த்தம். நேற்று வியத்நாம்-- இன்று ஈராக்.

நன்றி : புதிய கலாச்சாரம்

மேலும் படங்கள்...

ag13.jpgag16.jpgag18.jpg

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விஷயத்திலை.... ஸ்ரீலங்கா, இந்திய ராணுவங்களும் லேசுப் பட்ட ஆக்களில்லை.

இதொண்ணும் பெரிய மேட்டராவே தெரியல நேக்கு ...

ஏன்னா... ராணுவம்னு வந்துட்டா எல்லாருமே சாக்கடைதான்..&. நாஸ்ரி!

ஒழுக்கமான ஒரு இராணுவ கட்டமைப்பை வைத்திருந்திருக்க,,, அவர்கள் என்ன,,

புலிகளா? ஈராக்க்கு எதிரா அமெரிக்கன் போனதாலதான் ... ஈராக் மேல எங்களுக்கு அனுதாபம் வருது...

நல்லவேளை ..அமெரிக்காவை எதிர்த்து ஈராக் .....யுத்ததுல ஜெயிச்சிருந்தா........

சதாம்கூட வன்னி இறுதிப்போருக்கு எங்கள கொல்ல ஆயுதம் கப்பல் கப்பலா சிங்களவனுக்கு கொடுத்திருப்பார்...

ஏன்னா இலங்கையின் தேயிலை வர்த்தகத்தின் ......முதல் பங்காளீ அவங்கதானே..!

அதுக்காக... ஈராக் பீப்பிள் படுற துன்பத்தை நியாயபடுத்துறேன்னு அர்த்தம் ஆவுமா?

இல்லவே இல்ல சுபேஸ் சகோதரம்!

நாங்க எங்க நிக்குறோம்ன தெளிவு ..அம்புட்டுதேன்!

பைத வே- சுபேஸ் நீங்க அந்த படங்களுக்கு தனியா லிங்க் கொடுத்து இருக்கலாம்!!

ஏன்னா... யாழ பார்க்குறதில சில குழந்தைகளும் இருக்கலாம்....!! :)

  • கருத்துக்கள உறவுகள்

:(

இது கேடுகெட்ட உலகம் எல்லா இடத்திலும் இராணுவம் இப்படித்தான்..

  • கருத்துக்கள உறவுகள்

<p>

இது கேடுகெட்ட உலகம் எல்லா இடத்திலும் இராணுவம் இப்படித்தான்..

உலகத்தில் உள்ள எல்லா ஆமியும் அப்படித் தான் ஆனால் அமெரிக்காவுக்கு மட்டும் தான் தாங்கள் தான் கட‌வுள்,தாங்கள் தான் இந்த உலகை ஆட்டிப் படைக்க வேண்டும் என்ட‌ எண்ணம்...அமெரிக்கா எப்ப அழியுதோ அப்ப உலகம் சந்தோச‌மாய்,அமைதியாய் இருக்கும்

அறிவிலியின் கருத்துக்களுடன் என் எண்ணங்களும் ஒத்துப்போகின்றன. அதனால் அவருக்கும் ஒரு பாராட்டு. 1

இலங்கை நேரடியாக மிரட்டும் அளவுக்கு..... அமெரிக்கா பல யுத்தக் குற்றங்களைப் புரிந்துள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகின்ற விடயந்தான். அதனால்தால் தனக்குத் தேவையான இலங்கையை சீனாவிடம் விட்டுவிட்டு அல்லாடுகின்றது அமெரிக்கா. இப்போது இந்தியாவோடு கூட்டுச் சேர்ந்து புதுசா திட்டம் போடுது! மொத்தத்தில... ஆப்பு எங்கட பக்காம் திரும்பாமல் இருந்தாலே பெரும் புண்ணியம். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.