Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவில் உடையில் வந்த சிப்பாய் வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றது- நாவற்குழியில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

army1-150x150.jpg

யாழ் நாவற்குழி பகுதி வீ ட்டில் இருந்த மேட்டார் சயிக்கிளை இராணுவ சிப்பாய் வலுக்கட்டாயமாக பெற்றுச் சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை காலை நாவற்குழியிலுள்ள வீட்டிற்றுச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் மோட்டார் சைக்கிளைத் தருமாறு கோரி மோட்டார் சைக்கிளை பெற்றுச் சென்றதாகவும், காலை கொண்டு சென்றவர் நேற்று மாலை வரை மீளக் கொண்டுவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராணுவ வீரர் சிவில் உடையில் வந்து மோட்டார் சைக்கிளை வேண்டிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இராணுவச் சிப்பாய் மோட்டார் சைக்கிள் வாங்கிச் சென்றதற்கும், நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்றவரை இராணுவத்தினர் இடைமறித்து சுட்டுக் கொலை செய்ததற்கும் தொடர்புகள் இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த சிப்பாய் சிவில் உடையணிந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றபோதே நேற்றைய துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றிப்பதாக் தெரியவருகிறது.

http://www.saritham.com/?p=45800

breaking_news_animated-150x150.gif

பூநகரி சங்குப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இடைமறித்த இராணுவம் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிக்க முற்பட்டு மோட்டார் சைக்கிள் சாரதியைப் படுகொலை செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வீதியில் நின்றிருந்த இராணுவம், வீதியில் பயணித்த குறித்த நபரை இடைமறித்து மோட்டார் சைக்கிளைத் தருமாறு கேட்டிருக்கின்றது. இந் நிலையில் அவர் அதற்கு உடன்பட மறுத்திருக்கின்றார். சம்பத்தினை அடுத்து குறித்த நபர் மீது இராணுவம் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கின்றது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அருகில் இருந்த இராணுவத்தினரால் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், குறித்த சிப்பாயை சுட்டுக்கொல்லுமாறு குறித்த அதிகாரி ஏனைய சிப்பாய்களுக்கு அறிவித்த நிலையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய இராணுவச் சிப்பாயும் அருகில் இருந்த சிப்பாய்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக சரிதத்துக்கு கிடைத்த பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் சிப்பாயும் கொல்லப்பட்ட நிலையில் குறித்த சம்பவத்திற்கு வேறு காரணங்களைச் சாட்டுவதற்கு படைத்தரப்பு முற்படலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

படைத்தரப்பு வெளியிட்ட தகவலின்படி குறித்த நபர் இராணுவம் எனவும், அவர் தப்பியோட முயற்சித்த போதே மேற்படி சம்பவம் இடம் பெற்றதாக தெரிவித்துள்ளனர். இதில் ஒருவரே கொல்லப்பட்டதாகவும் மற்றையவர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

http://www.saritham.com/?p=45698

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு இராணுவம் செத்தது சந்தோசம்.

இனியாவது, அந்த மோட்டார் சைக்கிளை, உரியவரிடம் கொடுத்தால்.... நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு இராணுவம் செத்தது சந்தோசம்.

இனியாவது, அந்த மோட்டார் சைக்கிளை, உரியவரிடம் கொடுத்தால்.... நல்லது.

சிங்களவன் முள்ளிவாக்காளில் எங்கள் சொந்தங்களிடம் எடுத்த இலட்சக்கணக்கான மோட்டார் சைக்கிள்களுக்கு என்ன நடந்தது என்பது தெரிந்த நீங்கள் எப்படி எதிர்பார்ப்பீர்கள் இந்த மோட்டார் சைக்கிள் கொடுப்பார்கள் என்று சும்மா காமடி பண்ணாதீர்கள் :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு இராணுவம் செத்தது சந்தோசம்.

இனியாவது, அந்த மோட்டார் சைக்கிளை, உரியவரிடம் கொடுத்தால்.... நல்லது.

திருப்பிக் கொடுத்தாலும் தேவைப்படும் போது எடுத்துக் கொள்வார்கள்

திருப்பிக் கொடுத்தாலும் தேவைப்படும் போது எடுத்துக் கொள்வார்கள்

கொடுக்காட்டிலும் யாருக்கு திருப்பிக்கேட்க்க தையிரியம் இருக்கின்றது? :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.