Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் வாழ்வியல் கருவூலம் [கருத்துக்கள்]

Featured Replies

விரைவில் அறத்துப்பால் முடிவுக்கு வருகின்றது . பொருட்பாலை வாழ்வியல் கருவூலம் பாகம் 2 என்று தொடருவதா ?? அல்லதுஒரே தொடராகக் கொண்டு செல்வதா ?? இது பற்றிய உங்களின் ஆலோசனைகள எதிர் பார்க்கின்றேன் :) :) .

Edited by கோமகன்

  • Replies 179
  • Views 20.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருவூலம் பாகம் 2 எனத்தொடர்வது சிறப்பாக இருக்கும் என்பது கருத்து. வேண்டும் என்றால் பாகம் ஒன்றின் இணைப்பையும் குடுக்கலாம். இதுவே பல பங்களை தாண்டிச்செல்வதால் புதிதாக திறப்பது வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும்.

அத்தோடு உறவுகளின்,கருத்தையும்,விளக்கங்களையும்,கேள்விகளையும் குறளுக்கு கீழே ஒருதிரியில் கேட்பது இலகுவாகவும்

வாசகர்களும் தனிய திரியில் சென்று கருத்துக்களை பார்வையிடாமல் இதிலே எல்லாவற்றையும் பார்ப்பது கூடுதல் தகவல்களாய் இருக்கும். அரட்டையை தவிர்த்து,குறளோடு தொடர்புபட்ட கருத்துக்களையும் எழுத அனுமதித்தால் நன்றாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே.

நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் அறத்துப்பால் முடிவுக்கு வருகின்றது . பொருட்பாலை வாழ்வியல் கருவூலம் பாகம் 2 என்று தொடருவதா ?? அல்லதுஒரே தொடராகக் கொண்டு செல்வதா ?? இது பற்றிய உங்களின் ஆலோசனைகள எதிர் பார்க்கின்றேன் :) :) .

என்னைக் கேட்டால், காமத்துப் பாலை, ஒரு தடவல் தடவி விட்டுப், பொருட்பாலைத் தொடர்வது நல்லம் போல இருக்கு!

வாசகர்களின் ஆர்வத்தைக் கொஞ்சம் திரியை நோக்கி இழுத்த மாதிரியும் இருக்கும்!

ஒரு கசப்பான குளிசைக்குக் கொஞ்சம், தேன் தடவி விட்டது மாதிரியும் இருக்கும்! :D

இதுக்கு நிச்சயம் வள்ளுவர் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்!

கருவூலம் பாகம் 2 எனத்தொடர்வது சிறப்பாக இருக்கும் என்பது கருத்து. வேண்டும் என்றால் பாகம் ஒன்றின் இணைப்பையும் குடுக்கலாம். இதுவே பல பங்களை தாண்டிச்செல்வதால் புதிதாக திறப்பது வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும்.

அத்தோடு உறவுகளின்,கருத்தையும்,விளக்கங்களையும்,கேள்விகளையும் குறளுக்கு கீழே ஒருதிரியில் கேட்பது இலகுவாகவும்

வாசகர்களும் தனிய திரியில் சென்று கருத்துக்களை பார்வையிடாமல் இதிலே எல்லாவற்றையும் பார்ப்பது கூடுதல் தகவல்களாய் இருக்கும். அரட்டையை தவிர்த்து,குறளோடு தொடர்புபட்ட கருத்துக்களையும் எழுத அனுமதித்தால் நன்றாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே.

நன்றி. :)

உங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றிகள் ஜீவா . இதை யாழின் ஆவணமாக மாற்றுவதால் , இதற்கான கருத்துகளை வேறு ஒரு பதிவிலேயே வைப்பது நல்லது என நினைக்கின்றேன் . கள உறவுகளது அரட்டைச் சுதந்திரத்தை தடை போடும் உரிமை எமக்கு இல்லைத்தானே ?? எனினும் உங்கள் ஆலோசனைகளை கவனத்தில் எடுக்கின்றேன் :) :) .

என்னைக் கேட்டால், காமத்துப் பாலை, ஒரு தடவல் தடவி விட்டுப், பொருட்பாலைத் தொடர்வது நல்லம் போல இருக்கு!

வாசகர்களின் ஆர்வத்தைக் கொஞ்சம் திரியை நோக்கி இழுத்த மாதிரியும் இருக்கும்!

ஒரு கசப்பான குளிசைக்குக் கொஞ்சம், தேன் தடவி விட்டது மாதிரியும் இருக்கும்! :D

இதுக்கு நிச்சயம் வள்ளுவர் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்!

பொருள் இல்லாமல் இன்பம் எவ்வாறு அனுபவிப்பது :lol: :lol: :icon_idea: ?? விளக்குக புங்கையாரே .

[size=4]இத்துடன் அறத்துப்பால் - துறவறவியில் - துறவு - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். [/size]

  • 2 weeks later...

[size=4]இத்துடன் அறத்துப்பால் - துறவறவியில் - மெய் உணர்தல் - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். [/size]

[size=4]

இத்துடன் அறத்துப்பால் - துறவறவியில் - மெய் உணர்தல் - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றிகள். [/size]

  • 2 weeks later...

இத்துடன் அறத்துப்பால் - துறவறவியில் - அவா அறுத்தல் - பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • 2 weeks later...

வணக்கம் வாசகர்களே !!  கள உறவுகளே !!

இத்துடன் தமிழர் வாழ்வியல் கருவூலம் அறத்துப்பாலில் உள்ள அனைத்து அதிகாரங்களையும் , குறள்களையும் ( 380  ) முடிவுக்கு கொண்டுவருகின்றேன் . மிகவும் நீண்ட இந்த தொடரில் மௌனசாட்சிகளாக இருந்த வாசகப் பெருமக்கள் , கருத்துக்களை வழங்கிய கள உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றிகள் .

நேசமுடன் கோமகன்

  • 2 weeks later...

இத்துடன் பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவு செய்கின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Posted Today, 11:59 AM

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு

புண்ணுடையர் கல்லா தவர். 393

கல்வி கற்றாரே உண்மையில் கண்களையுடையவர்கள் என்று உயர்த்திச் சொல்லப்படுவர் . கல்லாதவர்கள் முகத்தில் புண்கள் இரண்டு உடையவராக இழித்துக் கூறப்படவர் .

எனது கருத்து :

இதிலை கற்றவர் எண்டால் ஆர் ??? படிச்சு பட்டம் எடுதவன் கற்றவனா ?? அப்பிடி பாத்தால் இந்தக்குறள் சொல்லிற கருத்து பக்கசார்பாய் இருக்கு . இண்டைக்கு படிச்சு பட்டம் பெற்றவை எல்லாம் " அனுபவம் " எண்ட கல்வி இல்லாமல் படிச்ச கோமாளியளாய் இருக்கினம் . வாழக்கை அனுபவத்தாலை படிச்ச கல்விமான்கள் எவ்வளவோ பேரை சரித்திரம் கண்டிருக்கு . அப்ப அவையும் இந்த குறளின்படி இரண்டு புண்களை கொண்டவையோ ??

Men who learning gain have eyes, men say ;

Blockheads' faces pairs of sores display.

Ceux qui l’on dit avoir des yeux, sont les hommes instruits;

ceux qui ne sont pas instruits ont deux plaies au visage.

இந்த குறலின் கருத்து திருவள்ளுவர் எந்த மதத்தினர் என்ற விவாதத்தை தொடக்க தக்க ஆற்றல் உடையது. இப்படியான கருத்தை கூற இவர், புத்த, சமண மதக்கருத்துக்களை உள்வாங்கியிருக்கிறார் என்பது தெளிவு.

கற்றல், சமண, புத்த மதங்களில் காணப்படும் அதே பொருளில் இந்து சமயத்தில் வருவதில்லை. கம்பர் காலம், சங்க காலம் கற்றலை இந்த வகையில் வகுப்பதில்லை. களப்பிரயர் காலத்தின் பின் வந்த தேவாரங்கள் கற்றலை இந்த மாதிரி வருணிக்கின்றன. திருவள்ளுவர் காலத்திற்கு முந்தைய சங்க காலத்தில் சான்றோன், கற்றோனை விட உயர்ந்தவன். அவன் இறைவனை அடைய முயற்சிப்பவன் அல்ல. சைவசிந்தாதந்த காலம், படித்தல், இறைவனை அடைய வழிகாட்டா என்றதை தெளிவாக கூறுகின்றன.

திருவள்ளுவர் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கித்தான் வார்த்திருக்கிறார்.

நாம் நான்கு வகையையும் பிரித்தறிய பழகிவிட்டோம்.

1.சான்றோன்: பண்பானவன், கருணையானவன்,  சமூகத்தை வழிநடத்தும் உதாரணமானவன்.

2.கற்றோன்: படித்திருக்கிறான். பலதடவைவைகளில், சுயமாக சிந்திப்பவன். குணத்தை பற்றி கூற முடியாது. ஆனால் தனக்கு தேவைப்படும் போது பழைய விதிகளை உடைக்க வேண்டும் என்ற கருத்துள்ளவன். நல்லவனாக பலதடவை காணப்படாலம். சில தடவைகளில் சுயநலமியும் கூட.

3:பண்டிதன்: படித்தும், படிக்காமலும் பலவற்றை தெரிந்து வைத்திருப்பவன். பழைய விதிகளை விரும்பி கடைப்பிடிப்பவன். தன்னை நல்லவன் என மற்ற்வர்கள் உணருவதை விரும்புபவன். சான்றோன் போலல்லாது, மனித உணர்வுகளை,தேவைகளை மதிக்க முன்னிற்பதில்லை. இதனால் சுயநலமியாகவும், போலியாகவும் இருக்கலாம்.

4:ஞானி: இறை ஆராச்சியில் மட்டும் மினக்கெடுபவன். துறவறத்தை விரும்புவன்.

இந்த குறளின் பொருளை சான்றோனையும், பண்டிதனையும் கலந்துதான் விளங்க வைக்கவேண்டும். நமது காலத்து அறிவியல் கல்வியை கணக்கில் எடுக்க முடியாது. மேலும் இன்றைய காலத்தில், எல்லா மதம்சார் கல்வியும் நல்ல கண்களுடன் கற்க போவனின்  கண்களைத்தான் குத்தி புண்களாக்கி அனுப்பிவைக்கின்றன.

கற்றவன் என்கின்ற நான்குவகையான  பகுப்புகளை தந்தமைக்கு நான் மிகவும் நன்றி உடையவனாவேன் மல்லையூரான் . மேலும் என்னைப் பொறுத்தவரையில் " கற்றோன் " என்பது கேலிக்குரியதாகி விட்டது . ஏனெனில் இன்றைய கல்வி நிறுவனங்கள் குறுகிய காலத்தில் பணம் தயாரிக்கும் மாணவ இயந்திரங்களையே உற்பத்தி செய்கின்றன . இவர்களே இன்றய வாழ்க்கை அனுபவம் இல்லாத படித்த கோமாளிகள் . உங்கள் கருத்தின்படி வள்ளுவர் ஒருகட்டத்தில் பௌத்தமத கோட்பாடுகளை உள்வாங்கினார் என்பது நம்ப கடினமாக உள்ளது .  அவரது காலத்தில் சமணமே மேலோங்கி இருந்தது . ஒருகாலத்தில் திருநாவுக்கரசர் சமணத்திற்கு மாறி இருந்தார் . இப்படி வள்ளுவர் மாறினாரா ?? ஏதாவது வரலாற்று ஆதாரங்கள் உள்ளனவா ??

வள்ளுவர் தெளிவாக நாலடியார் போன்ற சமண நீதி நூல்களை ஒத்து திருக்குறளை அமைத்திருப்பதும், தமிழில் அது போல ஒரு இந்து சமய நூல் காணப்படாமையும் அவர் இந்து அல்ல என்று பலரை நம்ப வைக்கிறது.

வள்ளுவரை பௌத்தன் என்பார் உளர். (நிறுவப்பட்டத்தல்ல. நியாயமான சந்தேகங்கள் எழுப்பப்படிருக்கிறது.) பல்லவர்கள் பௌத்ததையும் வளர்த்தார்கள். போதி தர்மன் ஒரு பல்லவ இளவரசன். சமணத்தின் "மேர்வின் சில்வா பாணி வன்முறை ஜீவகாருண்ணியம்" தமிழரால் பெரிதும் எதிர்க்கப்பட்டது. பௌத்தம், துறவறத்தில் மட்டும்தான் வன்முறையை காட்டியமையால் தமிழ் நாட்டில் அதிகம் எதிர்க்கப்படவில்லை. ஆனால் 8000 சமணர்களையும் களுவேற்றிய பின்னர் பௌத்ததுறவிகள் இலங்கைக்கு போய்விட்டார்கள். இந்த காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து வந்த துறவிகளால்த்தான் இ்ங்கையில் பௌத்த-இந்து துவேசம் தூண்டப்பட்டது. இவர்களேதான் மகா வம்சத்தை கர்ணபரம்பரை கதைகளில் இருந்து தொகுத்தார்கள். சிங்களவர் எழுதவில்லை.

தமிழ் சரித்திரத்தில் காணப்படும் முதல் சமணன் இளங்கோ (இவரையும் பௌத்தன் என்பார் உளர்). கடைசிச் சமணன் திருநாவுக்கரசர். (வெளியே குறிப்பிடும் படியாக). இடைக்காலத்தில் பௌத்த, சமணய மதங்கள் ஆட்சியில் இருந்தன. திருஞான சம்பந்தர் "குண்டிகை கைகளரோடு, சாக்கியர் கூட்டமும்" என்பது பௌத்த,சமண மதங்களையேயாகும்.

Edited by மல்லையூரான்

தமிழரின் மறையான திருக்குறள் நெடுகிலும் இந்துத்துவ எதிர்ப்புக் கருத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே வள்ளுவர் ஓர் இந்துவாக நிச்சயம் இருக்க முடியாது. வள்ளுவர் ஏதாவது ஒரு சமயத்தைத் தழுவி இருந்திருப்பாரேயானால் அது பெரும்பாலும் சமண சமயமாகத்தான் இருந்திருக்க முடியும். ஏனெனில் வள்ளுவரின் ஆரிய எதிர்ப்புக் கருத்துக்களும் அவர் வலியுறுத்திய அறக் கோட்பாடுகளும் சமணம் மற்றும் பௌத்தக் கருத்துக்களோடு ஒன்றியே காணப்படுகின்றன. பௌத்தத்தைக் காட்டிலும் வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தமிழோடு அதிகம் தொடர்பு கொண்டிருந்த சமயம் சமணமாகவே கருதப் படுகிறது. திருக்குறளுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் போற்றப் படும் நீதி நூலான நாலடியாரை எழுதிய நூற்றுவரும் சமணத் துறவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திய இளங்கோவடிகள் ஒரு சமணத் துறவி என்பது சிலப்பதிகாரக் காப்பியத்தைப் படிக்கும்போது தெரிகிறது. ஆனால் வள்ளுவப் பெருந்தகையோ தன்னை ஒரு சமணர் என்று எந்த இடத்திலும் காட்டிக் கொள்ளவில்லை. அவர் மதச்சார்பற்றவர். மனிதர், மானுடம் போற்றியவர் அதுவே அவரது சிறப்பு.

http://www.webeelam.net/archives/84

இத்துடன் பொருட்பால் - அரசியல் - கல்வி பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவு செய்கின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • 2 weeks later...

இத்துடன் பொருட்பால் - அரசியல் - கல்லாமை பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவு செய்கின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • 2 weeks later...

இத்துடன் பொருட்பால் - அரசியல் -  கேள்வி பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவு செய்கின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • 2 weeks later...

இத்துடன் பொருட்பால் - அரசியல் -  அறிவுடமை பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவு செய்கின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • 2 weeks later...

இத்துடன் பொருட்பால் - அரசியல் -  குற்றம் கடிதல் பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவு செய்கின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • 2 weeks later...

இத்துடன் பொருட்பால் - அரசியல் -  பெரியாரைத் துணைக்கோடல் பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவு செய்கின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • 2 weeks later...

இத்துடன் பொருட்பால் - அரசியல் -   சிற்றினம் சேராமை பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவு செய்கின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • 2 weeks later...

இத்துடன் பொருட்பால் - அரசியல் -  தெரிந்துசெயல்வகை  பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவு செய்கின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • 2 weeks later...

இத்துடன் பொருட்பால் - அரசியல் -   வலி அறிதல் பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவு செய்கின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • 3 months later...

இத்துடன் பொருட்பால் - அரசியல் -   காலம் அறிதல் பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவு செய்கின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.