Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோடாக்கின் உயர்ச்சியும் வீழ்ச்சியும்

Featured Replies

கோடாக்கின் உயர்ச்சியும் வீழ்ச்சியும்

புகைப்படைத்துறையில் ஒரு காலத்தில், நீண்டகாலமாக கொடிகட்டிப்பறந்த ஒரு நிறுவனம் இன்று வங்குரோத்து நிலையில் உள்ளது.

Kodak-logo.jpg

கோடாக்கின் புகைப்படச்சுருளை தெரியாவர்கள் ஒரு காலத்தில் இருக்கவில்லை. அது புகைப்படத்துறையில் பெரிய ஒரு அத்தியாயத்தை தொடக்கி, சாதாரண மக்கள் வரை புகைப்படத்துறையை எடுத்து சென்றது. இதனால் ஒருவித புரட்சியை கூட அது உருவாக்கியது. மேலும், பல ஆயிரம் பேரை வேலையில் அமர்த்தியது.

இவ்வாறு சரித்திரத்தை எழுதிய கோடாக் மாறும் உலகத்திற்கு ஏற்ப தன்னை மாற்றுவதில் சிரமப்பட்டது. புதிய தொழில்நுட்பம் ஊடாக இலத்திரனியல் முறையால் புகைப்படங்களை எடுக்கும் கருவிகள் அறிமுகப்பட்டத்தப்பட்டன. அத்துடன் அந்த தொழில்நுட்பம் மலிந்து, சாதாராண கைத்தொலைபேசிகள் மடிக்கணனிகள் என எல்லோர் கையிலும் எல்லா இடத்திலும் உலாவுகின்றது இன்று. அத்துடன் கோடாக் சுருள் போன்று அதை கழுவும் தேவை இல்லை, உடனடியாகவே படத்தை பார்க்கலாம், அனுப்பலாம், பதியலாம் இல்லை அழிக்கலாம்.

இவ்வாறான மாற்றங்களுக்கு மாற்றத்தவறிய கோடாக் இன்று முகவரி அற்று போகும் நிலையில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நூறு வருடங்களுக்கு முன்பு எடுத்த, எமது முன்னோர்களின் கறுப்பு, வெள்ளைப் படத்தை எடுத்துப் பார்த்தால்... பின் பக்கம் "கோடாக்" (Kodak) என்று, மெல்லிய எழுத்துக்களில் எழுதியிருக்கும். அந்தப் படங்களை... இன்று பார்க்க, முன்னைய தொழில் நுட்பமே சிறந்தது.

இப்போ... டிஜிற்றல் புகைப்படக் கருவியால்.... படமெடுத்து, கணனியில் பதிந்து விடுவதால்... எடுக்கும் படங்களை, அல்பத்தில் போட்டுப் பார்க்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது. நாளை கணனி, வைரஸ் தாக்கி.... படங்கள் அழிந்து விட்டால், அரோகரா தான்...

Edited by தமிழ் சிறி

கணணியில் உள்ள புகைப்படங்களையும் அல்பமாக்க முடியும். இருந்த இடத்தில் ;ருந்து கொண்டே எமது விருப்பத்திற்கேற்றால் போல் எமது அல்பத்தை நாமே வடிவமைத்து எடுக்க முடியும்.

உதாரணம்: திருமண கொண்டாட்டங்கள்.

மற்றும் வைரஸ் தாக்குதல் எல்லாம் ஒரு விடயமே அல்ல. இது எமது அக்கறையின்மையால் ஏற்படுகிறது. சீடி அல்லது வேறு ஏதாவது ஒரு பதிவு கருவியிலோ பதிந்து வைக்கலாம்.

பழைய முறைகள் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அது சீக்கிரத்தில் பழுதடைந்து விடும். ஆனால் இந்த பழமையில் ஒரு முக்கியமான விடயம் உள்ளது. எவ்வளவு பழைமையான போட்டோ எம்மிடம் உள்ளதோ அவ்வளவிற்க்கு அதன் பெறுமதி அதிகரிக்கும்.

  • தொடங்கியவர்

புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மாறாவிடால் யானைக்கும் அடி சறுக்கும் என்பதே உண்மை. அது அரசியலிலும் கூட உண்மை. ஐ.பி.எம். போன்ற நிறுவனங்கள் காலத்திற்கு ஏற்ப தம்மை மாற்றி வெற்றிகரமாக வடைபோடுகின்றன. அதேவேளை சோனி போன்ற நிறுவனம் தடுமாறுகின்றது. ..

சாம்சங் பாரிய முன்னேற்றம் கண்டு சோனி மற்றும் ஆப்பிளுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

டிஜிரல் உலகத்தை கொடாக் புரிந்துகொள்ளக் காலம் பிந்தியிருந்தது. அவர்கள் பிற டிஜிரல் கமரா தயாரிக்கும் நிறுவனங்களை Copyright Infringement வழக்குப் போட்டுக் காசு சம்பாதிக்கப் பார்த்தார்கள். அதுவும் பெரிதாக வெற்றியடையவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் கணணித்துறையில் கொடிகட்டிப் பறந்த IBM இன்று அதன் வியாபார தந்திரத்தை மாற்றி சந்தையில் கணணித்துறையில் உள்ள போட்டியை வேறு ரூபத்தில் சந்திக்கிறது. அதேபோல் அப்பிளும்.. கணணிச் சந்தையில் இருந்து.. ஒரு மந்த நிலைக்குப் பின்.. மியூசிக் சந்தையில்.. ஐபொட் மூலம் நுழைந்து.. அப்புறம் ஐபோன் மூலம்.. தொடர்பாடல் சந்தைக்குள் நுழைந்து மீண்டும் அதன் புராதன கணணி வர்த்தகத்துக்குள் ஐபாட் மூலம் நுழைந்து வலுவான நிலையில் உள்ளது. கொடாக் இதனை செய்யத் தவறிவிட்டதன் விளைவு... ??!

இப்போ 10 15 ஆண்டுகளுக்கு முந்தைய வர்த்தக.. தந்திரோபாயங்கள்.. விரைந்து மாறி வரும் போட்டி மிகு சந்தையில் தொடர்ந்து நிலைத்து நிற்க உதவாது. அப்பிள் போன்று நிலைமையை புதிய innovative வர்த்தக மயப்படுத்தல் மூலமே சமாளிக்க முடியும். கொடாக் அதை செய்யத் தவறிவிட்டது.

இதில் விடுதலைப் புலிகள் அமைப்பையும் கொடாக்கோடு ஒப்பிட முடியும். நவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கும் போது 1992/3 இல் என்று நினைக்கிறேன்.. அது விடுதலைப்புலிகளுக்கு ஆபத்தாக முடியலாம் என்று ஒரு கருத்து நிலவியது. இறுதியில் விடுதலைப்புலிகளின் அனைத்து நகர்வுகளையும் அவர்கள் சமாளிக்க முடியாதபடிக்கு அவர்களின் நவீன தொழில்நுட்பமும் காட்டிக் கொடுத்துவிட்டது. புலிகள் நவீனத்தை எல்லா இடமும் பரப்பி ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். கொடாக் நவீனத்தை சரியாக இனங்கண்டு சரியான நேரத்தில் புகுத்தாததால் இன்று சந்தையில் போட்டியை சமாளிக்க முடியாது திணறுகிறது..! டிஜிற்றல் உலகு சாதகமான சூழ்நிலைகளையும் பாதகமான சூழ்நிலைகளையும் நிறையவே கொண்டுள்ளது. எவர் ஒரு innovative strategy ஓட இதனைக் கையாள்கிறாரோ அவர் வெல்கிறார்.. எவர் அது இன்றி கையாள்கிறாரோ அவர் மாள்கிறார்..!

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களும் பிழைத்துபோகட்டுமே....

  • தொடங்கியவர்

உலகத்தின் முதல் மூன்று செல்வந்தர்களில் ஒருவரான அமெரிக்கர் வரன் பபெட் (Warren Buffet) தனக்கு விளங்கிய துறைகளை ஆராய்ந்து அவற்றில் காலத்திற்கு ஏற்ப மாறும் நிறுவனங்களில் முதலீடு இவ்வாறு செல்வந்தர் ஆனார்.

தனது ஆரம்ப நாட்களில் அமெரிக்காவின் வால் மார்ட் (Wall Mart) கடைகளின் முன்னால் நின்று யார் என்ன பொருட்களை வாங்கி செல்கிறனர் என அவதானித்து பின்னர் அந்த நிறுவனங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து தனது நண்பர்களிடம் கடன் வேண்டி முதலீடு செய்தவர்.

நெடுக்கர் சொன்னது போலவே வரன் செய்துள்ளார்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இன்று தனது கடனாளிகளிடமிருந்து பாதுகாக்க கேட்டு நீதிமன்றத்தில் கோடாக் வழக்கு தாக்கல் செய்யும்.

- 500மில்லியனுக்கு மேலாக கடன் உள்ளது

- தன்னிடம் 11000 காப்புரிமைகள் உள்ளதாக சொல்லுகின்றது

- தன்னை மறுசீரமைப்பு செய்ய கால அவகாசம் கேட்க உள்ளது

Kodak said it had obtained $950 million in debtor-in-possession financing from Citigroup Citigroup Latest from The Business Journals Kodak files for Chapter 11 bankruptcy Kodak files for Chapter 11 bankruptcyKodak files for bankruptcy and will continue to operate as it reorganizes. Rochester, N.Y.-based Kodak wants to continue to try and find a buyer for its portfolio of 1,100 digital imaging patents to raise cash, according to the bankruptcy filing.

http://www.bizjourna....html?ana=yfcpc

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.