Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.தீவகப்பகுதியில் இருந்து 9 ஈழத்தமிழ் அகதிகள் தமிழகத்தில் தஞ்சம்புகுந்துள்ளனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

akathikal1.jpg

இன்று 9 ஈழத்தமிழ் அகதிகள் கடல் வழியாக தமிழகம் மண்டபத்தை வந்தடைந்துள்ளதாக சற்று முன் ஈழதேசத்தின் தமிழக செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வாறு பல இன்னல்களுக்கு மத்தியில் கடல் வழியாக தமிழகத்தை வந்தடைந்துள்ள 9 ஈழத்தமிழ் அகதிகளையும் தமிழக கரையோர காவல் துறையினர் சிறப்பு முகாம் ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இவர்கள் அங்கு கடும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருவதோடு,இவர்களை தொடர்ந்தும் தனிமையில் ஒரு சிறப்பு முகாம் ஒன்றிலேயே வைக்கவுள்ளதாக உள்ளிருந்து ஈழதேசம் செய்தியாளருக்கு இரகசியமாக கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான செய்தி இன்னும் எந்த ஊடகங்களிலும் வெளிவராததோடு இவர்களை இவ்வாறு சிறப்பு முகாம் ஒன்றில் வைப்பதன் மூலம் இனி வரும் காலங்களில் இவ்வாறு ஈழத்திலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருபவர்களை தடுத்து நிறுத்த முடியும் என்றும் தமிழக கரையோர காவல்படையினர் கருதுவதாகவும் எமக்கு கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

போர் முடிவு பெற்று விட்டதாகவும் இனி இலங்கையில் இருந்து அகதிகள் என்று சொல்லி எவரும் எந்த நாட்டிற்கும் செல்லத்தேயையில்லை என்றும் அவ்வாறு அகதிகள் என்று எவரும் எந்த நாடுகளிலும் தஞ்சம் புகுந்தால் அவர்களுக்கு அங்கு வாழ்வதற்கான அனுமதி வழங்கத்தேவையில்லை என்றும் சிங்கள அரசு அறிவித்திருந்த நிலையில் தொடர்ந்தும் ஈழத்தமிழர்கள் தமது உயிரை பாதுகாக்கும் நோக்குடன் அகதிகளாக அலையும் துரதிஷ்டமான நிலமை தொடர்ந்துகொண்டே செல்கிறதென்பது குறிப்பிடத்தக்கது.

http://www.eeladhesa...ndex.php?option

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளசின் ஆட்சி பிடிக்காமல் மக்கள் வெளியேறுகிறார்களா? . என்னடா தீவகத்துக்கு வந்த சோதனை??Angry%20Icon.jpg

தமது சொந்தப் பிரதேசங்களில் வாழ அனுமதிக்கவில்லையென்றால் எங்காவது செல்லத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் படைகளின் இருப்பு தமிழர் தேசத்தில் இருப்பதனால் தான் அகதிகளாக தமிழ் மக்கள் வெளியேறினர்.. இன்றும் வெளியேறுகின்றனர். போரோ விடுதலைப் புலிகளோ.. அல்ல.. அதற்குக் காரணம். இதனை தெளிவாக இந்தியா உணர்ந்துள்ள போதும்.. 1987 இதே காரணங்களைக் காட்டி விமானம் மூலம் பொட்டனி போட்ட இந்தியா.. இன்று.. அதனை நிராகரித்து நிற்பது.. அதன் பூகோள தேவைகள் கருதி அது தமிழ் மக்களை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்துள்ளதையே இனங்காட்டுகிறது. இதனை சர்வதேசத்தின் முன்னும் சீனாவின் முன்னும் தெளிவாக இனங்காட்டி.. தமிழ் மக்கள் மேற்குலக.. மற்றும் சீன உறவை வலுவாக வலுப்படுத்தி இந்தியாவிற்கு எதிராக மேற்குலகம்.. சீனா செயற்பட தமிழீழ மண்ணில் இடமளிக்க வேண்டும்..! சீனாவை விட இந்தியாவே எமது மோசமான எதிரி..! அதன் மூலமே சிங்களம் எம்மை அழித்து வருகிறது..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

83 ல் ஈழம் பெற இந்தியாவை நம்பினோம் இந்தியா முதுகில் குத்தியது.இன்று மேற்குலகை நம்புகிறோம்........?மீண்டும் மீண்டும் அதே தவறு.

எவராக இருந்தாலும் அவரவர் நலனையே முன் நிறுத்திதான் செயல்படுவார்கள் நாம் ஏன் யாரையும் நம்பவேண்டும் எமது பிரச்சனையை நாம்தான் தீர்க்க வேண்டும் அதை முன்னிறுத்தியே எமது வேலைத்திட்டம் அமையவேண்டும்.

ஓடினால் ஓடிக்கொண்டே போகவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.