Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னொரு டைடானிக்.. 2012.. இத்தாலியில் மக்கள் பரிதவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு டைடானிக்.. 2012.. இத்தாலியில் மக்கள் பரிதவிப்பு.

Costa_Concordia.JPG

டைடானிக் பாணியில்.. கடலில் பாறைத் திட்டில் மோதி.. கிட்டத்தட்ட மூழ்கும் நிலைக்கு வந்துள்ளது சுமார் 4000 பேரைக் காவிக் கொண்டு உல்லாசம் வந்த ஆடம்பர பல அடக்கு பிரயாணக் கப்பலான கொஸ்டா கொன்கோடியா (Costa Concordia) என்ற குரூஸ் (cruise ship ) வகை இத்தாலிய கப்பல்.!

இத்தாலியில் உள்ள Giglio என்ற இடத்துக்கு அருகில் நடந்துள்ள இவ்விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள கப்பலுள் நீர் புகுந்து கப்பல் தற்போது பக்கவாட்டுக்கு சரிந்து மூழ்கியுள்ளது. இந்தக் கப்பல் விபத்தின் வேளையில் இத்தாலியில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணித்துக் கொண்டிருந்துள்ளது.

மேலும்.. பயணிகள் மற்றும் பணியாளர்களை அப்புறுப்படுத்தி கப்பலை உடனடியாக வெறுமையாக்க கேட்கப்பட்டுள்ளதால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதுடன்.. உயிர் காப்புப் படகுகளையும் போதிய அளவிற்கு சேவையில் ஈடுபடுத்த முடியாமல் மீட்புப் படைகள் திண்டாடும் நிலையில் மக்கள் உயிரைக் காக்க அடுத்தவர் என்றும் பாராமல் போட்டா போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். இது அப்படியே டைடானிக் கப்பலுக்குள் நேர்ந்த நிலையை நினைவூட்டுகிறது.

மீட்கப்பட்ட மக்கள் பத்திரமாக உலங்குவானூர்திகள் மற்றும் கடற்கலங்கள் மூலம் தரைக்கு கொண்டு வரப்பட்டு விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனராம்.

இந்த விபத்தில் இதுவரை 6 மரணங்கள் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு: http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

120114102527-italy-ship-5-horizontal-gallery.jpg

120114103016-italy-ship-2-horizontal-gallery.jpg

  • கருத்துக்கள உறவுகள்
:o :o

கப்பலின் கேப்டன் கைது செய்யப்பட்டார் : கொலைக் குற்றம்

நேற்று முன்தினம் இத்தாலிய கரையில் கவிழ்ந்துபோன கோஸ்ரா கொன்கோடியா என்ற இந்தப் பிரமாண்டமான கப்பல் விபத்து தொடர்பான விபரங்கள் வெளியாகி வருகின்றன. மேற்கண்ட கப்பலை அதன் தலைமைமாலுமி மடைத்தனமான முறையில் ஆழம் குறைந்த கடல் பகுதிக்குள் நுழைத்து சென்றதே விபத்து ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது.

கப்பலின் கேப்டன் பிரான்சிஸ்கோ ஸெற்றினோ கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளார். நேற்று இவர் போலீசாரால் கைதும் செய்யப்பட்டுள்ளார். இது இவ்விதமிருக்க இதுவரை 17 பேர் தேடப்படுகிறார்கள். ஆனால் கடலடித்தளத்தைக் காட்டும் வரைபடத்தில் இப்பகுதியில் திட்டு இருப்பதாக வரையப்படவில்லை என்று கேப்டன் தெரிவிக்கிறார். திட்டமிடாத மனிதப் படுகொலை குற்றம் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

http://www.youtube.com/watch?v=Ownv5cMYDkg

http://www.alaikal.com/news/?p=94050

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் சரிந்துள்ள இடம், 30 மீட்டர் ஆழமான பகுதி என்றும்,

இப்போது அது கீழே.. உள்ள திட்டுக்களில் முட்டுப் பட்டு நிற்கலாம்...

கப்பல் முழுவதுமாக மூழ்க சந்தர்ப்பங்கள் உள்ளது.

அது முழுவதுமாக தாண்டிருந்தால்... பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து, ரிட்டானிக் உயிர்ச்சேதத்தை மிஞ்சி இருக்கும்.

சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு 1912ல் ரிட்டானிக் கப்பல், பனி மலையில் மோதி தாழ்ந்த பின் நடந்த 2012ல் உல்லாசக் கப்பல் விபத்து இது.

இளம் பெண்ணுக்கு கைகாட்டப் போய் கப்பலை கவிழ்த்தார்..

ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அவலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி..

இத்தாலிக்கு அருகே உல்லாசப்பயணக் கப்பல் கோஸ்ரா கொன்கோடியாவை கவிழ்த்தடித்த தலைமை மாலுமி மீதான புதிய குற்றச்சாட்டுக்களை இத்தாலிய பத்திரிகைகள் முன் வைத்துள்ளன. கடல் ஆழம் குறைந்த பகுதி என்று தெரிந்தும், ஒரு குத்து மதிப்பில் இவர் கப்பலை ஓட்டிச் சென்றுள்ளார். கப்பல் விபத்துக்குள்ளான கிக்லியோ தீவுப்பகுதியில் இவருக்கு தெரிந்த 25 வயதுடைய மோல்டா நாட்டு பெண்மணி ஒருவர் நின்றிருக்கிறார். இவருக்கு கை காட்டுவதற்காக கப்பலை தீவுக்கு மிக அருகே விட்டுள்ளார். இளம் பெண் ஒருவருடன் சேர்ந்து கப்பல் டெக்கில் நின்று கைகாட்டியபோது நிலமை மோசமடைந்தது. திடுக்கிட்டு தானே கப்பல் தலைமை மாலுமி என்பதை உணர்ந்து கொண்டவர் கப்பலை திருப்பும்படி உத்தரவிட்டுள்ளார். ஆனால் இவருடைய தகவல் கப்பலை செலுத்தியவர்களுக்குக் கிடைக்க தாமதித்தால், கப்பல் திடலில் மாட்டிக் கொண்டது. கடலில் இருந்த பாறை கப்பலை கிழித்து தாழ்த்தது.

இவர் தன்னை மறந்து கைகாட்டிய பெண்மணி முன்னர் இவருடைய கடல் பயண நண்பி என்று கூறப்படுகிறது.

கண்பார்வைக்கு கடல் ஆழம்போல தெரிந்தாலும் உண்மை நிலை அப்படி இருக்கவில்லை. இந்தக் கப்பல் கவிழ்ந்ததும் தலைமை மாலுமி தப்பி ஓட ஆரம்பித்தார். கப்பல் தரைதட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்னரே இவர் இன்னொரு படகில் ஓடித்தப்பிவிட்டார். இளம்பெண்ணுடன் சல்லாபித்து கப்பலை கவிழ்த்த முட்டாளென மற்றவர் தர்மஅடி போடுவதில் இருந்து தப்பிக்கவே இப்படி ஓடினாரா என்பது முக்கிய கேள்வியாகும்.

இவர் கப்பலில் சிக்கிய 4200 பயணிகள் பற்றிய யாதொரு கவலையும் இல்லாமலே ஓட்டமெடுத்தாக இத்தாலிய மீட்பு பணியாளர் தெரிவிக்கிறார்கள். ஆனால் மரணிக்க இருந்த பல நூற்றுக்கணக்கானவரை தான் காப்பாற்றியதாக கேப்டன் கூறுகிறார். முன்னதாக கருத்துரைத்த இவர் கடல் ஆழத்தைக் காட்டும் வரைபடத்தில் கப்பல் கவிழ்ந்த பகுதி ஆழம் குறைந்த பகுதியாக காட்டப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விபத்தில் இதுவரை 11 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் 20 பேர் தேடப்பட்டு வருகிறார்கள். இவர்கள் கடலில் மூழ்கிக் கிடக்கும் கப்பலின் அறைகளில் சிக்குண்டுள்ளார்கள். நீர் நிறைந்தால் பூட்டிய கதவைத் திறக்க முடியாதபடி நீர் அழுத்தமாக இருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

இவ்வளவு பிரமாண்டமான கப்பலுக்கு தலைமை மாலுமியாக நியமிக்கப்படும் ஒருவர் நடக்க வேண்டிய நடத்தையும், பொறுப்புணர்வும் எத்தகையது என்பதைப் புரியாமல் நடந்தால் கடமை உணர்வு மிக்க உலகளாவிய மாலுமிகளுக்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2011 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி இதே தீவுக்கு 230 மீட்டர் அருகாமையில் இந்தக் கப்பலை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவருடைய உல்லாச வாழ்வும், லீலைகளும் மேலும் அம்பலமாகும் என்று தெரியவருகிறது.

இத்தாலி என்ற நாட்டை ஓட்டிச் சென்ற தலைமை மாலுமியான சில்வியோ பலர்ஸ்கோனி பெண்களுடன் ஆடிய கூத்தில் நாட்டின் பொருளாதாரத்தையே கவிழ்த்தடித்தது பழைய கதை, இப்போது அவர் பாணியில் இன்னொரு இத்தாலியர் ஆடிய கூத்து உலகில் சிரிப்பார் சிரிக்கிறது. இதன் பொருட்டு விசாரணைக் கமிசன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக டெய்லி ரெலிகிராப் எழுதியுள்ளது.

http://www.alaikal.com/news/?p=94397

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.