Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த சிந்தனையில் அப்துல் கலாம் !

Featured Replies

மகிந்த சிந்தனையில் அப்துல் கலாம் !

சமாதானத்தைக் கட்டியெழுப்புவதே எனது சிறிலங்காவுக்கான பயணத்தின் நோக்கமென, இந்தியாவின் முன்னார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிந்தனை முழக்கத்தின் வடிவமாக, சிங்களம்- தமிழ் – ஆங்கிலம் மொழியை யைப்படுத்தி, மும்மொழி ஆண்டாக 2012ஐ சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

பிரகடனத்த்தின் உத்தியோகபூர்வ நிகழ்வில் இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கெடுத்துள்ளார்.

http://naathamnews.c...21/abdul-kalam/

தமிழர்களை அழிப்பதில் முக்கிய பங்கு தமிழர்களாலேயே தெரிந்தும் தெரியாமலும் செய்யப்படுகின்றது. அதில் கலாமும் சேர்ந்து விட்டாரா என எண்ணத்தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மஹிந்த சிந்தனையில் அப்துல் "நான் மனித உரிமை பேசி ஏமாற்றி அரசியல்  வந்தேன், இவன்  அணுவை பற்றி அறுத்து  அரசியல்   வந்தவன்.  பார்த்து நடக்கோணும்.  தமிழனை நம்ப கூடாது."

ஈழத் தமிழர் முகாம்களுக்குச் செல்வேன் கலாம் பேட்டி

kalam4.jpg

இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் 4 நாள் பயணமாக இலங்கை செல்கிறார். கொழும்புக்கு புறப்படும் முன்னதாக அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் மாணவர்களைச் சந்தித்து உரையாடவுள்ளேன். ஈழத் தமிழர் முகாம்களுக்குச் செல்லவுள்ளேன் என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது…

“எந்த ஒரு பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காண முடியாது. இதுவரை எந்த ஒரு போரும் மோதல்களுக்கான தீர்வாக அமையவில்லை.

தற்போது இலங்கையில் போர் முடிந்து விட்டது. எனவே போருக்குப் பிறகு மக்களிடம் நம்பிக்கையையும் உண்மையையும் தட்டி எழுப்ப வேண்டியது இலங்கை அரசின் கடமை. இலங்கையில் அமைதியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன்தான் நான் பயணம் மேற்கொண்டுள்ளேன். இந்த நல்லெண்ண பயணத்தைக்கூட சிலர் விமர்சிக்கலாம். அது அவர்களது ஜனநாயக உரிமை.

இலங்கையில் எல்லா தரப்பு மக்களும் செழிப்புடனும், மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.

அதற்காகத்தான் நான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன். இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவேன். நம்பிக்கையின் அடிப்படையில் இரு தரப்பினரும் அமைதியுடன் வாழும் சூழ்நிலையை உருவாக்க முயலுவேன்.

போரில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் இன்னும் முகாம்களில் உள்ளனர். அவர்களை சந்தித்து பேச முகாம்களுக்கு செல்ல விரும்புகிறேன். முகாம்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யுமாறு இலங்கை அரசிடம் நான் கேட்டுள்ளேன். இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்னும் மும்மொழி கல்வித் திட்டத்தை நான் தொடங்கி வைக்க உள்ளேன்.

இந்த கல்வித் திட்டம் இலங்கையை மீட்டு எடுத்து மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இருக்கும். யாழ்ப்பாணத்தில் பல் கலைக்கழக மாணவர்களையும், இந்துக் கல்லூரி மாணவர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன்.

இந்தியாவை 2020-ம் ஆண்டு ஆற்றல்மிக்க வல்லரசு நாடாக மாற்றுவதற்கான திட்டம் பற்றி அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன். எனது அனுபவங்களை இலங்கை மக்களுடன் பகிர்ந்து கொள்வதை மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன். – இவ்வாறு அப்துல்கலாம் கூறினார்.

http://www.alaikal.com/news/?p=94567

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை 2020-ம் ஆண்டு ஆற்றல்மிக்க வல்லரசு நாடாக மாற்றுவதற்கான திட்டம் பற்றி அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன். எனது அனுபவங்களை இலங்கை மக்களுடன் பகிர்ந்து கொள்வதை மிகவும்

இலங்கை இந்தியாவுக்கு சொந்தமில்லையே பிறகு ஏன் அவர்களுடன் வல்லரசு பற்றி புலம்புவான்....இந்தியர்களுடன் உங்கள்2020 ஆண்டாம் வல்லரசு நிகச்சியை பற்றி புலபுங்கோ....

20..20 .கிரிகட் விளையாடுங்கோ ஆனால் 2020 வல்லரசு கனவு நிஜமாகாது....

405713_10150520420962881_657307880_8960437_2077160826_n.jpg

Ramanitharan Kandiah

Abdul Rajapakse

X-President

"On a missile to promote piece in sri lanka"

Kalam thaan pathil solla vendum

403074_365061636842026_100000145796525_1579071_1790465112_n.jpg

403074_365061636842026_100000145796525_1579071_1790465112_n.jpg

யாழ்ப்பாணத்துல , காட்டுறாங்களோ இல்லியோ..........

யாழ்ல கறுப்புக்கொடி ,முதல்ல காட்டின......

தமிழ்சிறியின் கருத்துதான்,,, சிங்களவன் , அவனுங்க ஜால்ரா...

எல்லோருக்கும்,, புலம்பெயர் த்மிழர் பதில்!

-----------------------------------------------------------------------------------------

விடுதலைப் புலிகளுடனான போரை மிகக் கொடூரமாக முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்து தமிழர் பகுதிகளை சுடுகாடாக்கி, தமிழர்களை பிச்சைக்காரர்களாக மாற்றிய பின்னர், எழுந்துள்ள மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச்சாட்டுக்ளிலிருந்து மீள பல்வேறு அறிவிப்புளையும், நடவடிக்கைகளையும் எடுத்து சர்வதேச சமுதாயத்தின் கண்களில் தான் நல்லவன் என்பதை வெளிக்காட்ட பல்வேறு பாவ்லாக்களை செய்து வருகிறார் ராஜபக்சே.

அதில் ஒன்றுதான் 2012ம் ஆண்டை மும்மொழி கல்வித் திட்ட ஆண்டு என்று அவர் அறிவித்தது. இத்திட்டத்தின்படி இந்த ஆண்டு முதல் இலங்கையில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழில் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாம். இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவுக்கு அப்துல் கலாமை ராஜபக்சே அரசு வரவழைத்துள்ளது.

http://tamil.oneindia.in/news/2012/01/22/srilanka-ready-help-develop-rural-sri-lanka-kalam-aid0091.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் வல்லரசுக்கனவை உடையாமல பாதுகாத்துக்கொள்ள இலங்கையின் உதவி பாரியபங்கு. சீனாவை அப்புறப்படுத்துதல் தான். ராஜபக்ஸவின் காலைப் பிடிக்கவும் இவர்கள் தயார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.