Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா? மு.ஐஸ்வர்யா, திருப்பாச்சேத்தி.

ஆமாம். மூளையில் பற்பல மன உணர்வுகளுக்கென்று கெமிக்கல்கள் உள்ளன. அழுது முடியும்போது இந்த கெமிக்கல்கள் மறைவதால் ஒரு நிம்மதி கிடைக்கிறது. வேறு ஒரு நிகழ்ச்சியால், வேறு ஏதாவது மன உணர்வு தோன்றும் வரை அந்த நிம்மதி நீடிக்கும். நம் மனதில் பொங்கித் ததும்பி அலை மோதும் உணர்வுகள் யாவும் எண்ணங்களால் தூண்டப்படும் கெமிக்கல்களின் தாக்கங்களால் ஏற்படுபவையே கோபம் என்ற உணர்வு வசத்திலிருக்கும் போது உண்மையில் மூளையில் அதற்கான கெமிக்கலின் ஆதிக்கம் நிலவுகிறது. அதன் ஆதிக்கம் நீடிக்கும் வரை மனதில் கோபம் தணியாது மனம் சமாதானமடையாது. கெமிக்கல்களின் அளவு, நீடித்திருக்கும் நேரம் பொறுத்து ஒருவரது சோகம், கோபம் முதலான உணர்வுகள் நிலைக்கும்.

http://www.dinamalar.com/

Posted

ஆமாம். எனது அனுபவத்தில் கண்ட உண்மையும் கூட. மனதில் வைத்திருந்து கொதிப்பதை விட அதை அழுது தீர்த்து விட்டால் மனம் பெரிய பாரம் குறைந்தது போல் இருக்கும் என்பது உண்மை.

Posted

ம்ம்ம் ரொம்ப உண்மை. மனதில் வைக்காமல் அழுது தீர்த்தால் பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இணைப்புக்கு நன்றி சங்கர்லால். என்ன ரஸ் ரூ மச்சா அழாதேங்கோ அப்புறம் தலைடியும் செர்ந்து வந்து இம்சை படுத்தும் :wink: :P

Posted

நிச்சயமா குறையும்..! அழுதுதான் பாருங்களன்..!

சும்மா கண்ணைக் கசக்க வாறதில்ல... மனது உருகி அழ வேண்டும்..! அது மட்டுமில்லாம..கண்ணைச் சுத்திகரிக்க கண்ட கெமிக்கலையும் பாவிக்கிறதை விட கண்ணீர்..மிக நல்லது..! என்ன கன நேரம் அழுதா கண் நோகும் வீங்கும் சிவக்கும்..தலையிடிக்கும்..!

என்ன குருவிகள் அழுமா என்றுதானே சந்தேகம்...அழுங்க.. சோகம், கவலை என்றால்..! :wink: :P :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அழுவதனால் மட்டுமல்ல தமது கவலைகளை தமக்கு நெருங்கியவர்களுடன் பகிர்வதன் மூலமும் பாரத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.

Posted

அழுதால் கவலை குறையும் என்பது உண்மைதான்! ஆனால் எத்தனை காலங்கள் தான் அழமுடியும் கவலைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது

Posted

அழுவதால் மனப்பாரம் குறையும். ஆனால் அதற்குரிய பிரச்சனை தீருமா?

Posted

முதலில் மனதை இயல்புக்கு கொண்டு வர வேண்டும்..அழுத்தம் தரும் விடயங்களை அதற்குள் பூட்டி வைத்து வேகிறதிலும் அழுது தீர்த்துட்டால் கொஞ்சத்துக்கு என்றாலும் மனம் அமைதி பெறும்..! அப்புறம் பிரச்சனைக்கு தீர்வு தேடலாம்...! நிச்சயமா கவலை வேதனைகளைச் சுமந்து கொண்டு...முறையான தீர்வு தேட முடியாது..சிந்திச்சு...! அதற்கு மனம் இயல்பில் அமைதியாக இருக்க வேண்டும்..! :( :idea:

Posted

ஆமாம். எனது அனுபவத்தில் கண்ட உண்மையும் கூட. மனதில் வைத்திருந்து கொதிப்பதை விட அதை அழுது தீர்த்து விட்டால் மனம் பெரிய பாரம் குறைந்தது

மனதில் வைக்காமல் அழுது தீர்த்தால் பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும்

பெண்கள் நீங்கள் சொல்லுறீங்கள் அழுவதால் பாரம் குறையுது எண்டு ஆனா அதோடை அழுது சில காரியங்களையும் சாதிச்சு விடுகிறீங்களே.................. எங்களை போல் திடமான(மன்னிக்கவும்) ஆண்கள் அழுதால் சொல்லுறீங்கள் கோழையள் மாதிரி அழுவதாக எங்களுக்கு என்ன வழி மனச்சுமையை குறைப்பதுக்கு வீட்டிலை மனுசி அழுதா........... ஏதோ நான்தான் மனுசியை கொடுமைப்படுத்திவிட்டதாக மாமானர் முறைச்சுப் பாக்கிறார் ...........உண்மேலை ஆண்கள் பாவம்தான்..........(சப்போட்டுக்கு ஆராவது கதையுங்கோவன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வந்திட்டன்.. :lol: சப்போட்டுக்கு கதைக்க..அது சரி நான் இப்ப என்ன கதைக்கனும்..... :roll:

Posted

ஒண்டும் கதைக்கவேண்டாம்.............போய் கலியாணத்தைக் கட்டிக் கொண்டு இஞ்சாலை வாரும் கதை தன்ரைபாட்டிலை வரும்

Posted

பெண்கள் நீங்கள் சொல்லுறீங்கள் அழுவதால் பாரம் குறையுது எண்டு ஆனா அதோடை அழுது சில காரியங்களையும் சாதிச்சு விடுகிறீங்களே.................. எங்களை போல் திடமான(மன்னிக்கவும்) ஆண்கள் அழுதால் சொல்லுறீங்கள் கோழையள் மாதிரி அழுவதாக எங்களுக்கு என்ன வழி மனச்சுமையை குறைப்பதுக்கு வீட்டிலை மனுசி அழுதா........... ஏதோ நான்தான் மனுசியை கொடுமைப்படுத்திவிட்டதாக மாமானர் முறைச்சுப் பாக்கிறார் ...........உண்மேலை ஆண்கள் பாவம்தான்..........(சப்போட்டுக்கு ஆராவது கதையுங்கோவன்)

நீங்களும் அழுங்கோ அங்கிள் யாரு உங்களை அழ வேண்டாம் என்டா?? என்ன பெண்கள் அழுது காரியம் சாதித்து விடுகிறார்களா? எங்கள் வீட்டில் அழுதாலும் நினைச்சது கிடைக்காது பட் ஒன்று மட்டும் தாரளமாக கிடைக்கும் :cry:

Posted

:lol::):lol:

தேவையா உமக்கு நிதர்சன்?

Posted

நீங்களும் அழுங்கோ அங்கிள் யாரு உங்களை அழ வேண்டாம் என்டா?? என்ன பெண்கள் அழுது காரியம் சாதித்து விடுகிறார்களா? எங்கள் வீட்டில் அழுதாலும் நினைச்சது கிடைக்காது பட் ஒன்று மட்டும் தாரளமாக கிடைக்கும் :cry:

உண்மைதான்...அழுதால் தான் கூட அடிப்பேன் என்று அம்மா முந்தி பேசுவா.. :cry: :cry:

அழுவதால்..மனசுமை குறையும் ஆனால் தலை இடி வரும்.

ஆனால்..அழுதால் கண்ணுக்கு நல்லதாமே..கண்ணில் தெரியாமல் விழுந்த அழுக்குகள் எடுபடுமாமே..உண்மையா? :roll:

Posted

:lol::lol::lol:

தேவையா உமக்கு நிதர்சன்?

தேவை தான் ரசி அக்கா..தேவை என்று தானே மு.அங்கிளுக்கு சப்போர்ட்டுக்கு வந்தவர்.. :lol::D:D அதுவும் என்ன கதைக்கவென்று அவரட்டையே கேள்வி வேறு.. :P

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சமூக வலைத்தளங்களிருந்து அறிவை பெறலாம் என நான் எங்கும் குறிப்பிடவில்லை. இணைய வலைத்தளங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கு முக்கிய இடம் வகிக்கின்றது என்பதை மட்டுமே கூறினேன். சொல்வது புரியவில்லையென்றால் பழி மற்றவர்கள் மீது...😎 ஆசானுக்கு பிடித்த...
    • கோவண கப்பிதனுக்கு சிந்தனைக் குறைபாடு உள்ளது என்பது ஏற்கனவே தெரியும். இங்கு யார் கொண்டாடினார்கள்? உங்களால் ஒன்றும் புடுங்க முடியாது..🤣
    • நான் எள்ளி நகையாடவில்லை. தவறான முடிவு என்ற என் கருத்தை எழுதுகிறேன். வாக்காளரை எள்ளி நகையாடினேன் என்பதற்கு ஆதாரம் தரவும் அல்லது மன்னிப்பு கேட்கவும். நான் சுமந்திரனை தூக்கி எறிய வேண்டும் என யாழில் கடந்த தேர்தலுக்கு முன் இருந்தே எழுதுகிறேன். ஆனால் உங்கள் கொள்கை வங்குரோத்தை பார்க்க சிரிப்பாக உள்ளது. தமிழர் உரிமையை வெல்லவில்லை என சுமனை கழுவி ஊத்திய நீங்கள், எதுவுமே தரமாட்டோம் என வெளிப்படையாக சொல்லும் அனுரவின் காலில் நெடுஞ்சாண்டையாக கிடக்கிறீர்கள்.
    • இவர் முன்னர் இனவாதம் பேசியிருந்தாலும் இந்த தேர்தல் களத்தில் எந்தவொரு இனவாத கருத்துக்களையும் மேடையில் பேசி வாக்கு சேகரிக்கவில்லை என நினைக்கின்றேன்.இலங்கை அபிவிருத்தியை மட்டும் முன்னணியாக வைத்து வாக்கு சேகரித்துள்ளார்.  அது மட்டுமில்லாமல் தமிழர் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற அர்த்தத்திலும் வடகிழக்கு பிரதேசங்களில்  பிரச்சாரம் செய்துள்ளார். இதே மாதிரி சிங்கள பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தாரா என எனக்கு தெரியாது. இருந்தாலும் ஒன்றை மட்டும் சொல்கிறேன் இலங்கை நிம்மதியாக இருந்தால் பக்கத்து நாட்டுக்காரனுக்கு துண்டற பிடிக்காது எண்டுது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம். சீரழிக்க என்னவும் செய்வான். சொந்த மக்களுக்கே கெட்டவன் பக்கத்து நாட்டுக்கு எப்பிடி நல்லவனாய் இருப்பான்?
    • அனுரவின் மனைவியின் படத்தை வீடியோவை இங்கே பதியவும். வாசகர் பார்த்து ஒரு முடிவுக்கு வரட்டும். முறைபாட்டை விசாரிக்க நான் மனு நீதி சோழனும் இல்லை… நீங்கள் கோமாதாவும் இல்லை🤣. ஆனால் ஒரு காலத்தில் நான் சம், சும், விக்கிக்கு கூவியதை விட ஒரு மடங்கு அதிகமாகவே அனுரவுக்கு கூவுகிறீர்கள்… காத்திருக்கிறேன்….🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.