Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு

Featured Replies

  • தொடங்கியவர்

இதில் வருந்தத்தக்கது என்னவெனில் இந்த இரண்டாம் வகையானவர்களிற்கு நாம் சரியான விளக்கம் கொடுத்தாலும் அதை எற்றுக்கொள்ளுவதென்பது அவர்களால் முடியாமல் ஊள்ளது. இப்படியானவர்களுக்கு எப்படி நாம் விளங்க வைப்பது.

பாண்டியன், வர்ணன், வெங்காய ஆரூரான் போன்றவர்கள் குட்டையைக் குழப்பாமல் இருந்தாலே போதுமானது....

காவடி, வசம்பு போன்று யதார்த்தத்தை உணர்ந்து தங்கள் மேல் குறையிருந்தால் ஒத்துக்கொள்ளும் உயர்ந்தவர்களால் தான் தமிழ் ஈழத்துக்கு எதிர்காலம் இருக்க முடியும் என நம்புகிறேன்.....

  • Replies 186
  • Views 15.4k
  • Created
  • Last Reply

ம்.. இரண்டு வகையானோர் எமது போராட்டம் குறித்து தவறான புரிந்துணர்வும் விளக்கமின்றியும் அதனால் தவறான அபிப்பிராயமும் கொண்டு இருக்கின்றனர்.

ஒரு வகையானோர் ஏற்கனவே மனதளவில் புலியெதிர்ப்பை ஏற்படுத்திவிட்டு பின்னர் கதைப்பவர்கள். மற்றொருவகையினர் உண்மையிலேயே தெளிவில்லாமல், (உண்மையில் ஒரு பிறநாட்டைச் சேர்ந்தவரிடம் இயல்பில் அந்த தெளிவை நாம் எதிர்பார்க்க முடியாது.)தமது சந்தேகங்களை முன் வைப்பவர்கள். இரண்டாம் வகையினருக்கு தெளிவு படுத்த வேண்டியது நமது பொறுப்பே. அவர்களது ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஆணித்தரமாக ஆதார புூர்வமாக பதில்களை சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் அவர் எந்தப் பிரிவிi சேர்ந்தவர் என்று தெரிந்து விடும். அவர் முதலாமவர் எனில் பேசிப் பயனில்லை. இரண்டாமவர் எனில் சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டும். இங்கே லக்கி லுக் மற்றும் ராஜா ஆகியோர் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களாக இருக்க கூடும் என நான் இந்தக் கணம் வரை நம்புகிறேன். அதனால்த்தான் பொறுமையாக பதில் சொல்லி கொண்டிருக்கிறேன்.

நீங்கள் குறிப்பிடுபவர்கள் தம்மைச்சுற்றி ஒரு வேலிபோட்டுவிட்டு அதைத்தாண்ட மாட்டோம் என்று அடம்பிடிப்பவர்கள். நீங்கள் தலையால் நடந்தாலும் அவர்களை மாற்றப்போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயாக்களுக்கு வணக்கம்! யாழ் களத்தில் இந்தியர் என நம்புகின்ற மக்களின் அவர்களின் தேசியம் சார் உணர்வகளை கொச்சைப்படுத்தி கருத்துக்கள் வந்தன தான். மறுப்பதற்கில்லை. ஆயினும் அதுபற்றி பேசினால் இருதரப்பிடமும் உள்ள பதில் நாமாகத் தொடங்கவில்லை என்பது தான்.

லக்கிலுக், மற்றும் ராஜா ஆகியோரின் போராட்டம் தொடர்பான கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். சில கேள்விகளுக்கான பதில்களில் தனக்கு திருப்பி இருப்பதாக லக்கிலுக் போன்றவர்களும் சொல்லியிருந்தனர்.

லக்கி, உங்களைச் சீண்டும் நடவடிக்கைகளால்தான் நீங்களும் பதிலுக்கு சீண்டுவது போன்ற கருத்துக்களை வைக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

  • தொடங்கியவர்

நிச்சயமாக... என்னைப் பொறுத்தவரை ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதோ அல்லது புலிகள் எதிர்ப்போ என் நோக்கம் அல்ல....

என் தாய்நாடு அவமானப்படுத்தப்படும் போது தான் என் எதிர்ப்புகளை 'வாதத்துக்கு வாதம்' என்ற வகையில் வைக்க வேண்டியதாகிறது....

இங்கு சிலரும் அதைத்தான் விரும்புகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வந்துள்ளது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்களை நீங்களே மீண்டும் படித்துப்பாருங்கள் அப்போதெரியும். எங்க படிக்கிறது அதில தான் பல நீக்கப்பட்டிருக்கே

உங்கள் கருத்துக்களை நீங்களே மீண்டும் படித்துப்பாருங்கள் அப்போதெரியும். எங்க படிக்கிறது அதில தான் பல நீக்கப்பட்டிருக்கே

அதைத்தான் நிர்வாகம் அகற்றி விட்டதே பிறகு என்னத்தை படிக்க.!

அவர்கள் வந்து வம்புக்கு இளுப்பார்கள் பிறகு எங்களில பிழை எண்டு ஒப்பாரி.

இங்கு காவடி கருத்து சொல்லும் போது நாங்கள் அமைதியாக இருந்தோம் காரணம் கருத்து சொல்லமுடியாமல் அல்ல, அவரை ஆதரித்ததால்.

அடிக்கு அடிதான் சரியான பதில் அமைதிக்கு அமைதி, அவ்வளவுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி.. உந்தப் பேச்சுவார்ததை எப்ப முடிவுக்கு வரும்? எப்ப கூட்டறிக்கை விடுவீர் காவடி.. ? சண்டையோ சமாதானமோ கெதியில சொல்லும் காவடி? எங்கட பொடியள் றெடியா நிக்கிறாங்கள்..

அகிலன் அருவி, காவடியின் முயற்சியில் புரிந்துணர்விற்கு இன்னொரு சந்தர்ப்பத்தை குடுங்கோவன்?

கைச்சாத்திட்டு 4 வருடத்திற்கு பிறகு அமுல்படுத்தல் பற்றி கதைக்க ஒரு சுற்று அல்ல இரண்டாம் சுற்றுக்கும் சம்மதிக்கிறார்கள். நீங்கள் அந்த பொறுமை விட்டுக் கொடுப்பில் ஒரு பகுதியை இங்கே?

அகிலன் அருவி, காவடியின் முயற்சியில் புரிந்துணர்விற்கு இன்னொரு சந்தர்ப்பத்தை குடுங்கோவன்?

கைச்சாத்திட்டு 4 வருடத்திற்கு பிறகு அமுல்படுத்தல் பற்றி கதைக்க ஒரு சுற்று அல்ல இரண்டாம் சுற்றுக்கும் சம்மதிக்கிறார்கள். நீங்கள் அந்த பொறுமை விட்டுக் கொடுப்பில் ஒரு பகுதியை இங்கே?

நீங்கள் சொன்ன மாத்துக் கருத்துக்காக ஒதுங்கீட்டன். :idea: நண்றி வணக்கம்.!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சுவார்த்தைக்கு 2 நாட்கள் விடுமுறை. மீண்டும் திங்கள் 2ம் சுற்றுக்கள் ஆரம்பமாகும். கூட்டறிக்கைகள் இப்போ விடமுடியாது இவோன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. இரண்டு வகையானோர் எமது போராட்டம் குறித்து தவறான புரிந்துணர்வும் விளக்கமின்றியும் அதனால் தவறான அபிப்பிராயமும் கொண்டு இருக்கின்றனர்.

ஒரு வகையானோர் ஏற்கனவே மனதளவில் புலியெதிர்ப்பை ஏற்படுத்திவிட்டு பின்னர் கதைப்பவர்கள். மற்றொருவகையினர் உண்மையிலேயே தெளிவில்லாமல், (உண்மையில் ஒரு பிறநாட்டைச் சேர்ந்தவரிடம் இயல்பில் அந்த தெளிவை நாம் எதிர்பார்க்க முடியாது.)தமது சந்தேகங்களை முன் வைப்பவர்கள். இரண்டாம் வகையினருக்கு தெளிவு படுத்த வேண்டியது நமது பொறுப்பே. அவர்களது ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஆணித்தரமாக ஆதார புூர்வமாக பதில்களை சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் அவர் எந்தப் பிரிவிஇ சேர்ந்தவர் என்று தெரிந்து விடும். அவர் முதலாமவர் எனில் பேசிப் பயனில்லை. இரண்டாமவர் எனில் சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டும். இங்கே லக்கி லுக் மற்றும் ராஜா ஆகியோர் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களாக இருக்க கூடும் என நான் இந்தக் கணம் வரை நம்புகிறேன். அதனால்த்தான் பொறுமையாக பதில் சொல்லி கொண்டிருக்கிறேன்.

கிட்டத்தட்ட எல்லோரும் ஒரு நேர்கோட்டிற்கு வந்து விட்டார்கள் என்று நினைகின்றேன்.

தமிழீழ தமிழர்கள் தமிழீழத்தின் மேலுள்ள அதீத பற்றும் இந்திய தமிழர்கள் இந்தியாவின் மேலுள்ள அதீதபற்றும் ஈழ-இந்திய தமிழர்களின் புரிந்துணர்வின்மையுமே பிரச்சினைகள் என்று நினக்கின்றேன். காவடியின் முயற்சி வெற்றி பெற வேண்டும். தனித்தனியாக இல்லாமல் அடுத்த சுற்றூ பேச்சில் மூன்று தரப்பும் கூட்டறிக்கை விடுமாறு கேட்டு கொள்கிறேன். [இடையில் ஒட்டுக்குழுக்களால் பிரச்சினை வராமல் இருந்தால் சரி.]

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனித்தனியாக இல்லாமல் அடுத்த சுற்றூ பேச்சில் மூன்று தரப்பும் கூட்டறிக்கை விடுமாறு கேட்டு கொள்கிறேன்

ம்.. கிட்டத்தட்ட சரிவரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறவுகளே.. புலிகளின் அரசியல் ஆலோசகர் ஜெனிவா பேச்சுவார்த்தைகளின் பின்னர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியிலிருந்து ஒரு பகுதியினை கீழே இடுகிறேன். புலிகள் எந்த அளவிற்கு இந்தியாவுடனான உறவை விரும்புகிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி..

இந்தியா எமது தாயகப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள மிகப் பெரிய வல்லரசு. தமிழர் தாயகத்தில் அமைதியும் ஆனந்தமான சுூழ்நிலையும் நிலவினால் தான் இந்தியாவின் ஸ்திரமான நிலைக்கு அது ஏதுவாக அமையும்.

இந்தியா எமது பிரச்சினையில் நீண்ட காலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. சில கால கட்டத்தில் மிகவும் தீவிரமான அக்கறையை காட்டியது. அவர்கள் இராஜதந்திர, அரசியல் ரீதியாகவும் இராணுவ அழுத்தங்கள் மூலமாகவும் அக்கறை காட்டினார்கள். இப்பொழுதும் அவர்கள் அக்கறையோடு தான் செயற்பட்டு வருகின்றனர்.

இந்திய அரசைப் பொறுத்தவரை நோர்வே ஊடாக எமக்கு தரப்படும் தகவல்களைப் பொறுத்தவரை இந்தியா எமக்கு சொல்லியுள்ளது என்னவென்றால், நீங்கள் தொடர்ந்தும் இச் சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அரசியல் ரீதியாக ஒரு தீர்வைப் பெற முயற்சி செய்யுங்கள். தமிழ் மக்களுக்கு நாங்கள் உதவியாய் இருப்போம். தமிழர்களின் அபிலாசைகளை ஆதரிப்போம். தமிழர் தாயகத்தில் ஒரு பிரதேச சுயாட்சி ஏற்படுவதை இந்தியா விரும்புகிறது.

இதேவேளை, இந்தியாவின் பங்களிப்பை நாமும் விரும்புகிறோம். ஆனால், இந்தியாவின் இந்த பங்களிப்பு தமிழ் மக்களுக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்கக்கூடிய ஒரு பங்களிப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.

இந்திய அரசுடன் எமக்கு மறைமுகமான தொடர்புகள் இருக்கிறது என்பதை மட்டும் தான் இப்போதைக்கு சொல்லமுடியும் எனவும் பாலசிங்கம் தெரிவித்தார்.

ஆகவே.. ம்... நான் என்ன சொல்வது..?

காவடி

பாலசிங்கமென்ன பிரபாகரன் இப்படிச் சொன்னாலும் பிரைச்சினைகளை உருவாக்க வேண்டுமென்று கருத்தெழுத வருவோர்களுக்கு இவை காதில் ஏறாது.

காவடி

பாலசிங்கமென்ன பிரபாகரன் இப்படிச் சொன்னாலும் பிரைச்சினைகளை உருவாக்க வேண்டுமென்று கருத்தெழுத வருவோர்களுக்கு இவை காதில் ஏறாது.

ஆக மொத்தம் நாங்கள் எழுதும் கருத்து தான் இந்தியாவை எங்களுக்கு எதிராக வேலை செய்ய வைக்குது அப்படி தானே வசம்பு :P :P :P :P

வினித் கொஞ்சம் விட்டுபிடியுங்கோவன் இந்த முறை. ஜேவிபி மாதிரி கூட்டறிக்கையை குழப்பிறன் எண்டு அடம்பிடிக்கிறீங்களே அய்யா?

அகிலன் அருவி, காவடியின் முயற்சியில் புரிந்துணர்விற்கு இன்னொரு சந்தர்ப்பத்தை குடுங்கோவன்?

கைச்சாத்திட்டு 4 வருடத்திற்கு பிறகு அமுல்படுத்தல் பற்றி கதைக்க ஒரு சுற்று அல்ல இரண்டாம் சுற்றுக்கும் சம்மதிக்கிறார்கள். நீங்கள் அந்த பொறுமை விட்டுக் கொடுப்பில் ஒரு பகுதியை இங்கே?

காவடி

பாலசிங்கமென்ன பிரபாகரன் இப்படிச் சொன்னாலும் பிரைச்சினைகளை உருவாக்க வேண்டுமென்று கருத்தெழுத வருவோர்களுக்கு இவை காதில் ஏறாது.

குறுக்ஸ் இப்ப புரிதா

நாங்க அமைதியா இருந்தாலும் விடமாட்டன் எண்டுகொண்டு.

:roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அரசு என்ன செய்யப் போகிறது?

* இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக குமுதம் ரிப்போர்ட்டர் இழுதில் சோலை என்பவர் எழுதிய கட்டுரை

* அமெரிக்கா அமைக்கும் ஆயுத வலைப்பின்னல் இந்தியாவுக்கும் ஆபத்தானதாகலாம்

மீண்டும் ஈழத் தமிழர்கள் அகதிகளாக, ஊமை மனிதர்களாக இராமேஸ்வரம் வரத் தொடங்கிவிட்டனர். இப்போது ஈழம் அமைதியாகத்தானே இருக்கிறது? ஏன் புலம் பெயர்ந்து வருகிறீர்கள்? என்று இங்குள்ளவர்கள் விசாரிக்கிறார்கள்.

`இப்போது போர் மூளவில்லைத்தான். ஆனால், போர்ச் சூழலை சிங்கள இராணுவம் வெகு வேகமாக உருவாக்கி வருகிறது. ஆங்காங்கே தமிழ் இளைஞர்களை சிங்கள இராணுவம் பிடித்துச் செல்கிறது. பலர் வீடு திரும்புவதேயில்லை. பாடசாலைகளை மூடுகிறார்கள். மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் எப்போதுமே ஆபத்தில்தான் இருக்கிறார்கள். பிள்ளைகளையாவது படிக்க வைக்க வேண்டும் என்றுதான் இரவோடு இரவாக இங்கு வருகிறோம்' என்று அவர்கள் சோகத்தைப் பிழிகிறார்கள்.

இன்னொரு பக்கம் ஈழப் போராளிகளுக்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் பாடுபடுகிற பலர், சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அந்தக் கொலைகார முகமூடி மனிதர்கள் யார் என்பது சிங்கள இராணுவத்துக்குத் தெரியும். அவர்கள் எந்தக் கூண்டிற்குள் இருந்து திறந்து விடப்படுகிறார்கள் என்பது ஈழத்து மக்களுக்குத் தெரியும்.

ஈழப் போராளிகளுக்கு எதிராக ஏற்கனவே இலங்கை அரசும் இராணுவமும் சில குழுக்களை உருவாக்கின. இப்போது இன்னொரு குழுவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட குழுக்கள் முடமாகிவிட்டன. புதிய குழு மட்டும் தீட்டிய மரத்தையே பதம் பார்க்கத் துடிக்கிறது.

அந்தக் குழு எங்கிருந்து செயற்படுகிறது என்று கேட்டால், `அப்படி ஒரு குழு இருக்கிறதா?' என்று இலங்கை அரசு திரும்பக் கேட்கிறது. `இரைபோடும் மனிதனுக்குப் பருந்தை அடையாளம் தெரியவில்லை' என்று சொன்னால் யார் நம்புவார்கள்?

இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் `கருணா குழு எங்கிருக்கிறது?' என்று இலங்கை அரசைக் கேட்டார். சாமி சத்தியமாய் தங்களுக்குத் தெரியாது என்று புத்தர்மீது அரசு சத்தியம் செய்தது.

ஆனால், கிழக்கு மாகாணத்துக்கு அவர் சென்றார். `கருணா குழு எங்கிருக்கிறது?' என்று இலங்கை இராணுவத்தைக் கேட்டார். சரியான பாதையை இராணுவம் தெளிவாக அடையாளம் காட்டியது. அங்கே எப்படிப் போகவேண்டும் என்றும் கூறியது.

ஆயுதம் ஏந்திய சிறிய சிறிய குழுக்களைக் கலைக்க வேண்டும் என்பது போர் நிறுத்த உடன்பாட்டின் ஓர் அம்சமாகும். ஆனால், அப்படி எந்தக் குழுவையும் இலங்கை அரசோ, இராணுவமோ கலைக்கவில்லை. அதற்கு மாறாக, நொண்டிகளுக்குத் தீனி போட்டு வளர்க்கின்றன. இதயத்தை இழந்துவிட்ட இன்னொரு தமிழனே, ஈழத் தமிழனைப் படுகொலை செய்ய வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். வாடகை மனிதர்களுக்கு வீரம் என்பது எள் முனை அளவும் இருக்காது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. சர்வ ஆயுதங்களையும் தரித்த இலங்கை இராணுவம் சாதிக்க முடியாததை இந்தச் சப்பாணிகளா சாதிக்க முடியும்?

இலங்கை இராணுவம் தர்மக்கோடுகளை தார்பூசி அழித்துவிட்டது. போர் நிறுத்த உடன்பாட்டை மதிப்பதே இல்லை. சப்பாத்துக் கால்களால் மிதிக்கிறது. இதனை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறிவிட்டனர்.

அந்த அரசு என்ன செய்கிறது? பாராளுமன்றத்தை ஈழப் போராளிகள் தாக்குகிறார்கள் என்று கூட்டத்தையே தள்ளி வைத்துவிட்டது. பரிதாபம், கண்ணாடியில் தெரிகிற தங்கள் உருவங்களைப் பார்த்தே கிலி கொள்கிறார்கள்.

வட, கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் வன்முறைகளை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அங்கே போர் நிறுத்த உடன்பாட்டைச் சீர்குலைக்கின்ற சக்திகளை அடக்க வேண்டும். இல்லையெனில், மீண்டும் போர் மூள்வதைத் தடுக்க முடியாது என்று கண்காணிப்புக் குழுப் பேச்சாளர் எச்சரித்திருக்கிறார்.

இன்றைக்கு இலங்கை எரிமலையின் முகட்டில் அமர்ந்திருப்பதற்கு இலங்கை இராணுவமும் அந்த இராணுவம் தயார்படுத்தும் சிற்சில குழுக்களும்தான் காரணம் என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு கூறுகிறது.

இன்றுவரை, ஈழப் போராளிகளை அந்தக் குழு குற்றம் சாட்டவில்லை. தங்கள்மீது பழி படிந்துவிடக் கூடாது என்பதற்காக, துரோகிகளின் தாக்குதலையும் போராளிகள் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையைப் போர் விளிம்பில் நிறுத்தியவர்களை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்று இராணுவமும் பொலிஸும் கூறுகிறது. அவர்களே வளர்த்த நாகபாம்புகளை அவர்களுக்கே அடையாளம் தெரியவில்லை என்பதனை உலகம் நம்பத் தயாராக இல்லை.

ஒருபக்கம், `பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று இலங்கை அரசு கூறுகிறது. இன்னொரு பக்கம், `போர் நிறுத்த உடன்பாடு மனநிறைவு அளிக்கவில்லை' என்று சிங்கள இனவாத அமைச்சர்கள் கூறுகிறார்கள். இவர்கள் சமரசத்திற்கும் தயாராக இல்லை. இவர்களுடைய இராணுவம் போருக்கும் தயாராகவில்லை. தனித்தனியாக இயங்கும் சில தமிழ்க் குழுக்களை ஏவிவிட்டே ஈழப் போராளிகளை அழித்துவிடலாம் என்று தவறாகக் கணக்குப் போடுகிறார்கள்.

போர்நிறுத்த உடன்பாட்டுக்குப் பின்னர் தொடர்ந்து ஈழ மக்களும் போராளிகளும் தான் தாக்கப்படுகிறார்கள். கடற்பரப்பில் தங்கள் சக்தி என்ன? வான்வெளியில் தங்கள் வல்லமை என்ன? என்பதனை போராளிகள் மெய்ப்பித்த பின்னர், உடன்பாட்டை ஈழம் ஏற்றுக்கொண்டது. தோல்வி முனையில் நின்று உடன்பாட்டுக்குத் தலை அசைக்கவில்லை.

இராணுவமும் அதன் பொம்மைக் குழுக்களும், அவ்வப்போது சீண்டுவதைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கவனத்துக்கு ஈழப் போராளிகள் கொண்டு வருகிறார்கள். அதனை அந்தக் குழு இலங்கை அரசிடம் கேட்கிறது. அந்த அரசோ எரிச்சல் கொள்கிறது. இப்போது நோர்வே மீதே நம்பிக்கை இல்லை. `போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தேவையில்லை' என்று சிங்கள இனவாதிகள் சீறுகிறார்கள்.

அதே சமயத்தில், நோர்வே மீதோ போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் மீதோ இன்றுவரை இலங்கை அரசு நேரடியாக குற்றம்சாட்டவில்லை. அந்தக் குழு மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று இரு தரப்பும் தெரிவித்தால்தான் அந்தக் குழு வெளியேறும். இலங்கை இராணுவத்தின் குட்டிச்சாத்தான் வேலைகளை அந்தக் குழு மூலம்தான் ஈழப் போராளிகள் அம்பலத்துக்குக் கொண்டு வருகிறார்கள்.

இன்றுவரை ஈழப் போராளிகளை போர் நிறுத்தக் குழு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை. ஆனால், இலங்கை இனப்பிரச்சினைக்கு ஈழப் போராளிகள்தான் காரணமென எச்சரிக்கை விடுகிறார் சர்வதேச சட்டாம்பிள்ளை. சர்வதேச கசாப்புக் கடைக்காரர் சைவம் பேசுகிறார்.

ஈழத்து மக்களையும் போராளிகளையும் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் இப்படிக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார். அது அவருடைய வேலை அல்ல. ஆனாலும், தமது வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த தமது தூதுவர்களையே அமெரிக்கா ஏவிவிடுகிறது.

இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதுவர். மத்திய அரசையே எச்சரிக்கிறார். எந்தப் பிரச்சினையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறார். இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவரோ ஈழத்து மக்களின் உரிமைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார். நரிகள் நாட்டாண்மை செய்கின்றன.

திருகோணமலையில் தமது இராணுவத் தளத்தை அமைக்கத் தொடர்ந்து அமெரிக்கா முயற்சித்து வருகிறது. அதற்கு எதிராக இருப்பவர்கள் ஈழப் போராளிகள்தான்.

எனவே, சிங்கள இனவாதத்துக்கு ஆதரவாக, ஈழமக்களுக்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுக்கிறது. ஈழப் போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா, சிங்கள இராணுவத்துக்கு ஆயுதங்களை அள்ளித் தருகிறது. முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர, நேபாளத்தில் போராடும் மக்களுக்கு எதிராக தமது ஆயுதக் கிடங்கை மன்னருக்காகத் திறந்துவிடுகிறது. இன்றுவரை, இராணுவத்தின் கோரக் கால்களில் விழிபிதுங்கி நிற்கும் மியான்மார் (பர்மா) மக்களுக்கு எதிராக இராணுவத்துக்கு துப்பாக்கிகளைத் தூக்கித் தருகிறது.

அமெரிக்கா நம்மைச் சுற்றி அமைக்கும் இந்த ஆயுத வலைப் பின்னல், ஓர் நாள் இந்தியாவை அச்சுறுத்துவதற்குப் பயன்படும்.

இந்திய அரசு என்ன செய்யப்போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுறுத்தினருக்கும்....

சக யாழ்கள உறப்பினருக்கும.;.....

நியாயத்தின் பக்கம் நிற்க விரும்பும் இந்திய உறவுகளுக்கும்!

நான் எனது சின்னம் சிறு அறிவில் படுவதை எழுதுகிறேன். இந்த பகுதிக்கு தேவையென நினைக்கிறேன். தேவையில்லையென மட்டறுத்னர்கள் நினைத்தால் அகற்றிவிடுங்கள்.

ஈழவிடதலைப்போராட்டத்திற்கு தொன்று தொட்டு இந்திய அரசு துரோம் இழைத்தது என்பது உலகறிந்த உண்மை..... இது இன்னமும் தொடர்கிறதை அன்றாடம் நாம் பத்திரிகை செய்திகளில் படித்துக்கொண்டே இருக்கிறோம். ஏன் என்று கேட்கும் ஈழ தமிழருக்கு காலத்துக்கு காலம் மாறிய விடைகள்தான் கிடைக்கின்றன உண்மை எதுவானாலும் சரி

ஈழம் வெல்வது எங்களின் கடமை.... எங்களின் உரிமை இதை யார் எதிர்த்தாலும்...

பங்கம் விளைவித்தாலும்....

எமை எப்படி துற்றினாலும்...

ஈழம் வரும் வரை நாம் ஓய்வதில்லை! இது புலிகளின் நிலைப்பாடு.

ஆகவேதான் புலிகள் இதுபற்றி ஒருபோதும் அலட்டுவதில்லை

நடந்தவைகளை அனுபவங்களாக கொண்டு அவர்கள் தமது அடுத்த இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஈழம் எட்டா கனியாக இருந்தது வெறும் கனவாகவே இருந்தது...... இப்போது ஒரு குறிப்பிட்ட பகுதியிலேனும் அது மெய்யாகிவிட்டது. கனவாக இருந்த காலத்தில் சிங்கள அரசின் ஓசி சோற்றில் வயிறு வளர்க்க விரும்பிய சில ஈழ அரசியல் வாதிகள் உந்த வேலையில்லா பெடியளின்ர கதையை கேட்டு வீணாக சொந்தபிள்ளைகளை கொலைகளத்துக்கு அனுப்புவதை ஒருபோதும் எண்ணாதீர்கள் என்று கூக்குரல் போட்டனர்...... அதற்காகத்தான் சிங்கள அரசு அவர்களுக்க சோறு போட்டது. எமது ஈழவிடுதலை போராட்டம் என்று தொடங்தியதோ. அன்றே துரோகிகளும் பிறப்பெடுத்துவிட்டார்கள் இவர்களில் சுயநலவாதிகள் பணபித்தர்கள் பெண்ணாசைபிடித்தவர்கள் பதவி ஆசைபிடித்தவர்கள் (இவர்களுக்குளும் ஓரு அபாவி கூட்டம் இருக்கிறது இவர்கள் தமிழ்ஈழம் என்பதே என்னவென்று தெரியாமல் போரடபோனவர்கள் பின்பு முரண்பாடுகளால் புலிகளை வெறுப்பவர்கள் ஆனால் ஏன் எதற்கு என்ற காரணம் தெரியாது) மதுஅடிமைகள் என்றுபல. சமூகத்துக்குள் சேர்ந்துவாழ்வதற்கு தாமாகவே அஞ்சி சமூகத்தில் இருந்து விலகி சுயஇன்பங்களுக்காக எதையும் செய்ய தயாரானவர்கள். இப்படியானவர்களை தமிழ் சமூதாயத்திற்குள் தேடி வலைவிரிப்பதுதான் இந்திய உளவுதறையினரினதும் சிறீலங்கா இராணுவ புலனாய்வுபிரிவினதும் முதல் கட்ட நடவடிக்கையாக இருந்தது. அதில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியும் கண்டார்கள். இந்தியாவின் தலையீடும் துரோகிகளின் துரோகமும் இல்லாவிடின் ஈழ விடுதலைப்போராட்டம் என்பது என்றோ வென்றிருக்ம். இதை இந்திய நண்பர்கள் மறுக்கலாம் ஆனால் இது உண்மை என்பது இந்திய அரசுக்கு தெரியும். இரண்டாவது உலகமகா யுத்தம் முடிந்த காலத்தில் இந்திய அரசில் பொதுநலவாதிகளே அரசியல்வாதிகளே இருந்தனர். அணிசேரா நாடுகளின் தலைநாடு எனும் hPதியிலும். அடிமைதனத்திற்கு எதிரா போராடியவர்கள் என்றாPதியில் உலகம் புூராகவும் நடந்த விடுதலைப் போர்களுக்கும் இந்தியா தனது முளுமையான ஆதரவை வழங்கி வந்தது என்பது யாராலும் மறக்க முடியாததே. இருப்பினும் பின்னாளில் சொத்து சுகம் சேர்க்க ஆசைப்பட்டவர்கள் பலரும் ஆட்சிபீடம் ஏற இந்தியாவின் நிலைப்பாடு மாறியது. சொல்லப்போனால் இந்தியாவின் எதிர்காலமே தள்ளாட தொடங்கியது. தன்னிறைவு கொண்ட நாடான இந்தியாவின் வறுமைக்கு அரசியல்வாதிகளின் கொள்ளையே காரணம். ஏழைகளிடம் சேரவேண்டியது எல்லாம் அரசியல்வாதிகளின் வங்கி கணக்குகளை நிரப்ப தொடங்கியது. இந்தியாவின் சுதந்திர போராட்டம் முடிவுற்றபின் மிக சிலரே இந்தியாவின் நலனனுக்காக படுபட்டார்கள் அனேகர் நான்பெரிது நீபெரிது எனும் சாதியத்தினுள் வீழ்ந்துவிட்டனர். அத்தருணத்தில் தம்மை உயர்சாதி என எண்ணிய ஒரு கூட்டமே அதிகாரங்களை தனது கைக்குள் போட்டுக்கொள்ள திட்டம்தீட்டியது........ அதில் வெற்றியும் கண்டது. அக்கூட்டத்தினரின் அதிகாரம் அரசியலிலும் இருந்தது என்பது உண்மையே.

மேலே சில இந்திய நண்பர்கள் பங்களாதேசத்திற்கு இந்தியா போராடி சுதந்திரம் பெற்றுகொடுத்தது என்று சொன்னார்கள்........

அதில் இனனொரு விடயம் மறைந்திருப்பதை கவனிக்க வேண்டும் அதாவது பகிஸ்த்தானின் ஒருபகுதி பிரிக்கப்பட்டு தனிநாடக்கப்பட்டது இது இந்தியாவிற்கு தோலைஉரித்து பழத்தை வாயில்வைத்ததுபோல.... இப்போதும் பாகிஸ்தானின் ஓருபகுதி பிரிகிறது என்றால் இந்தியாவிற்கு இன்னொரு தீபாவளி. ஆகவே அதை ஒரு உதவியாக எடுக்கமுடியாது. ஈழப்போரட்டத்திற்கும் இந்தியா உதவியதுதானே..........

ஏன் இப்போது அது முடியவில்லை???? காரணம் இருக்கிறது! 1970 துகளில் சோவித்யுூனியனுடன் நட்ப்பு வைத்திருந்த இந்தியா மீது அமெரிக்கா ஒரு கண்வைத்திருந்தது. பாகிஸ்தானின் நட்ப்பை வைத்து இந்துசமுத்திரத்திற்குள் நுழைய அமெரிக்கா முயன்றது. அப்போதைய இந்திய பிரதமரான இந்திராகாந்தியின் பதில் அமெரிக்காவின் கப்பல் இந்தியாவால் தாக்கியழிக்கபடும் என்பது. அப்போதுதான் அமெரிக்காவின் கடைகண் இலங்கை மீது பட்டது. அதனால் அப்போதைய இலங்கை சிங்கள அரசு இந்தியாவை தட்டிகளித்தது. இப்போதுதான் இந்திராகாந்தியின் கண்ணில் இலங்கையின் உள்வீட்டு விவகாரம் தட்டுபட்டது. ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்திய உளவுபடையின் உதவி இதனால்தான் கிடைக்கபெற்றது. 'றோ' பயிற்சி அளிக்க தயாரான போது ..... முதலில் ரெலோ என்ற அமைப்புடன்தான் தொடர்பை ஏற்படுத்தியது. அந்நாளில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோரால் உருப்பெற்றெதனால். அவர்கள் கைது செய்யப்பட்ட போது ஈழத்தில் பெரும் அதிர்சி அலையொன்று அடித்ததையும் 'றோ' அறிந்திருந்தது. அதனாலேயே 'றோ" ரெலோவை அணுகியது. புலிகள் அப்போது இந்தியாவில் அவ்வளவாக கால் ஊன்றவில்லை. காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்ய தமிழக பொலிஸார் தேடிக்கொண்டிருந்தனர். புலிகளை பொறுத்த மட்டில் அன்ரன் பாலசிங்கம் அவர்களே றோ வுடன் தொடர்பை ஏற்படுத்தி இந்தியாவின் உதவி புலிகளுக்கு கிடைக்க வழிசெய்தார் எனலாம். அப்போதும் கூட உதவி எனும் பெயரில் தன்னை கைது செய்ய இந்தியா திட்டம் தீட்டுகிறது என்றே தலைவர் எண்ணினார். றோ உதவி செய்து கொண்டிருந்த நேரத்திலும் புலிகள் "றோ' வுடன் அதிகமாக நெருங்க விரும்பவில்லை. காரணம் உள்நோக்கம் இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்தே இருந்தார்கள். ஆனால் தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆர் ருடன் நெருங்கி பழகினார்கள். இந்திய இராணுவ வீரர்கள் புலிகளுக்கு பயிற்சி அளித்த போது;ம் தலைவர் பிரபாகரன் தமது எல்லா பலத்தையும் றோ அறிவதை விரும்பியிருக்கவில்லை. அதனால் பொன்னாம்மானின் தலைமயில் புலிகளுக்கு வேறாகவும் பயிற்சி அழிக்கப்பட்டது. பின்பு 3வது பிரிவில் பயிற்சி பெற்ற லெப் கேணல் ராதா புலிகளுக்கு பயிற்சி வழஙிகினார் மொத்தம் 10 பிரிவுகளே புலிகள் இயக்கத்தில் இந்தியாவில் பயிற்சிபெற்றன. இந்த கணக்கே றோ விற்கு தெரிந்திருந்தது. ஆனால் இதர ஈழவிடுதலை இயக்கங்களோ றோ வை முழுதாக நம்பிவிட்டார்கள். அதனால் ஆயிர கணக்கில் ஈழத்து இளைஞர்களை இந்தியா கொண்டு போனார்கள். ரெலோவும் ஈபிர்ல்வ் வும் எதுவித முன்னேற்பாடுகளும் இன்றி திட்டங்களும் இன்றி பெண்களையும் கொண்டு போய் சேர்த்தார்கள். இவர்கள் சரியான இடத்தில் தங்கவைக்க படாததினாலும் அவர்களிடம் பெண்கள் அமைப்பு பற்றி முன்திட்டம் எதுவும் இல்லையென்பது தெரிந்ததனாலேயும் விரக்த்தி அடைந்தனர். அவர்களில் சிலர் புலிகளிடம் தொடர்பை ஏற்படுத்தி ஈழம் திரும்ப முயற்சி செய்தனர். அவர்களுக்கு உதவுவதற்கு விரும்பிய புலிகள் அவர்களை அழைத்து வந்து திருமதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் தங்கவைத்தனர். தீலிபன் பெண்களை போரட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் ஈழத்தில் வியட்னாம் போன்று அனைவரும் சிங்கள அடக்குமுறை இராணுவதடதுக்கு எதிராக போரவேண்டும் என்றும் எண்ணம் கொண்டிருந்தார். தீலிபனின் எண்ணத்தி;ன் கருவாகவே மகளிர் படையணி உருவாக்கம் பெற்றது அப்போது பிற இயக்கங்களால் கைவிடபட்ட பெண்கள் அனைவரும் புலிகளுடன் இணைந்து கொண்டனர். புலிகளின் மகளிர் படையணியின் முதலாவது தலைவி சோதியா அவ்வாறே வந்து சேர்ந்தார்.

(ஜெயதேவனின் பாஸையில்)) அ'றோ"கரா!!!!!!

இந்தியாவின் (றோவின); முதலாவது துரோகம்.

1986ம் ஆண்டு ஐ.நா பொது கூட்டத்திற்கான நாள் நெருங்கிகொண்டிருந்தது. இதுக்காக இலங்கை ஜனாதிபதி ஜே.

ஆர். ஜெயவர்த்தனா காத்திக்கொண்டிருக்கிறார் என்பதும் இந்தியாவுக்கு தெரியும். பயங்கரவாதி என்று உலகமே கூறிவந்த வேளையிலே ஜாசீர் அரபாத்தை ஐ.நா கூட்டிசென்று இவர்களது போராட்டம் நியாயமானது என்று அடையாளம் காட்டியவர் இந்திராகாந்தியே. அதனால் இஸ்ரேலுடன் கூட்டுவைத்திருந்த மேலைநாடுகளுடன் பகைமை உணர்வு கொஞ்சம் தோண்றியது. இவ்வேளையில் இலங்கை ஜனாதிபதியும் ஐ.நா வில் வைத்து தமது நாட்டுக்குள் பயங்கரவாதிகளை இந்தியா உருவாக்குகிறது என்று சாடினால். உலக நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கமே திரும்பும் என்பது உண்மை. இவ் இக்கட்டான நிலையில்தான் இந்தியா தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் நாடகம் ஒன்றை அரங்கேற்றியது. ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா உதவியபேர்து ஒர் தப்பு கணக்கை போட்டிருந்தது அதாவது இவ்யிக்கங்கள் ஓரு போதும் இந்தியாவை மீறாது என்று அதாவது இந்தியாவின் பாட்டுக்கு இவர்கள் எப்போதும் ஆடுவார்கள் என்று. 1985-1986 பகுதியிலே இந்தியாவிடம் உதவிபெற்று வந்த இயக்கங்களில் புளட் என்ற அமைப்பு மற்ற இயக்கங்களுடன் ஒரு போதும் நெருங்கியதில்லை அத்தோடு லெபனான் பலஸ்தீனம் போன்ற நாடுகளுக்கு போராளிகளை அனுப்பி பயிற்சி பெறுவதிலும் அதிக அளவு ஆர்வம் காட்டிவந்தது. அதனால் றோ புளட்டுடன் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி நெருங்க முடிவு செய்தது. கூடுதல் நட்பு போன்ற ஒர் நிலையையும் தோற்றுவிது;தது. அதலால் முதலாவது துரேகத்திற்கு புளட் இலகுவான இலக்கானது. நெருக்கமாக இருந்த புளட்டிற்கு இந்தியா தந்திரம் வய்ந்த அதே நேரம் ஐ.நா செல்ல இருந்த இந்திராகாந்தி மேலைநாடுகளுக்கு மந்திரம் சொல்ல கூடியதுமான ஒரு ஆலோசனையை கூறியது. புளட்டும் இந்தியாவின் உள்நோக்கம் அறியாது தலையாட்டியது. திட்டம் இதுதான் மாலைதீவை முளுமையாக கைப்பற்றி வைத்துகொண்டு உலக நாடுகளின் உடாக இலங்கையுடன் சமரசம் பேசி தமிழ் ஈழம் பெற்று அதை புளட்டே ஆளுவது. இந்தியா திட்டத்தை கூறியபோது புளட்டிற்கு உள் மனதெல்லாம் ஒரே குளிர்ச்சி. மனம் குளிர்ந்த புளட் திட்டத்தின் படியே மாலைதீவை கைப்பறற் பெரிய படையணியுடன் படகு ஏறி பயணத்தை தொடர்ந்தது இந்து சமுத்திரத்தினில் இரு வேறு நாட்டு படைகள் மாலைதீவை நோக்கி பயணித்தன ஒன்று புளட் மற்றது இந்தியா. புளட் சென்றது மாலைதீவை கைப்பற்றவெனில் இந்திய கடல்படையோ புளட்டை கைப்பெற்ற. திட்டத்தின்படி புளட் அமைப்பு மாலைதீவில் தரையிறங்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்க்க தொடர்ந்து சென்ற இந்தியா அவர்களை சிறைபிடித்து சென்று இந்தியாவில் சிறையிட்டது. திட்டத்தின் பிரகாரம் பிரச்சாரம் தொடங்கியது. ஈழ விடுதலைப் போராளிகள் மாலைதீவை கைப்பற்ற முயன்ற போது இந்தியா வெற்றிகரமாக அதை முறியடித்து அவர்களை சிறையில் அடைத்துள்ளது...............!!!!!!!

துரோகங்கள் தொடரும்........ (3-4 நாட்களின் பின்பு)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எல்லாம் இவர்களுக்கு தெரியுமோ தெரியாது.

இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பிளேனில் சோற்று பார்சல் கொண்டு வந்து கொட்டியது தான்.

அதையே இப்பவும் சொல்லி திரிகிறார்கள். அந்த நன்றியை மறந்து வேற ஏதோ பெரிசா செய்திட்டம் என்று.

  • தொடங்கியவர்

இந்தியாவை புழுதி வாரித் தூற்றும் கருத்துகள் மட்டுமே இங்கே இடம் பெறும்.... அதற்கு பதில் சொன்னாலோ அல்லது மாற்றுக் கருத்துகள் சொன்னாலோ வெட்டப்படும்... நன்றி வலைஞன்....

பிளெனில் பார்சல் போட்டது எமக்கு தெரியாது, இன்று வரை எங்களுக்கு சிரமங்கள் பல நேர்ந்தாலும் உங்கள் அனைவரையும் அடைகலம் குடுப்பது இந்தியாவில் இருக்கும் தமிழ் நாடு தான். புலனாய்வு துறை சம்பந்தமான எந்த விழங்களும் வெளியே தெரியாது. இவ்வவள்வு எழுதியவர் ஒன்று கதை விடுவராக இருக்க வேண்டும் அல்லது அங்கு வேலை பார்த்தவராக இருக்க வேண்டும்

[ஃஉஒடெ="றகுவரன்"]இது எல்லாம் இவர்களுக்கு தெரியுமோ தெரியாது.

இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பிளேனில் சோற்று பார்சல் கொண்டு வந்து கொட்டியது தான்.

அதையே இப்பவும் சொல்லி திரிகிறார்கள். அந்த நன்றியை மறந்து வேற ஏதோ பெரிசா செய்திட்டம் என்று.[/ஃஉஒடெ]

  • தொடங்கியவர்

ராஜா,

உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்... உங்கள் பதிலும் கூட இன்னும் கொஞ்ச நேரத்தில் வெட்டப்பட்டு விடும்.....

பிளெனில் பார்சல் போட்டது எமக்கு தெரியாது, இன்று வரை எங்களுக்கு சிரமங்கள் பல நேர்ந்தாலும் உங்கள் அனைவரையும் அடைகலம் குடுப்பது இந்தியாவில் இருக்கும் தமிழ் நாடு தான். புலனாய்வு துறை சம்பந்தமான எந்த விழங்களும் வெளியே தெரியாது. இவ்வவள்வு எழுதியவர் ஒன்று கதை விடுவராக இருக்க வேண்டும் அல்லது அங்கு வேலை பார்த்தவராக இருக்க வேண்டும்

ராஜா அது பொய்யான விடையம் இல்லை...! எனது நண்பனின் அண்ணா PLOT யில் ஆயுதப்பயிற்சியை, பலஸ்தீனத்தில் பெற்றவர்... புளொட் பல பிரிவாக பிரிந்த போது பிரிந்து சென்ற "தீப்பொறி" குழுவோடு பிரிந்து போனவர். பின்னர் அவர் இந்தியா போய்.. கர்நாடகா பங்களூரில் இருந்தார். இப்போ அவர் ஜேர்மனியில் இருக்கிறார்.

அவர் இதை முதலிலேயே சொன்னார். நல்ல வேலை மாலைதீவு போன குழுவில் அவர் இருக்கவில்லை. ஆனால் போனவர்களையும் ஏன் போனார்கள் எண்ற விபரம் தெரிந்தவர்.. CIA யுடனும். இருந்த தொடர்பு என்ன என்பதை அறிந்தவர் அவர்...... இது கதை அல்ல.

¿øÄ ¸ðΨÃ, ¦¾¡¼Õí¸û ........Maruthankerny

என்னை தன்னிச்சையாக எப்போதும் உள்நுளைய அனுமதிக்கவும்.:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.